Followers

Thursday, February 10, 2011

பன்னிரண்டாம் வீடு





பன்னிரண்டாம் வீடு விரய ஸ்தானம் எனப்படும். மோட்ஷம் தரும் வீடும் இதுதான். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள், துன்பங்கள், பாவங்கள் வறுமை, துரதிஷ்டம ஆகியவைகளை இந்த வீட்டை வைத்து சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஜெயில் வாழ்க்கை உள்ளதா என்று இந்த வீட்டை வைத்துதான் சொல்ல வேண்டும். அதைப்போல் ஒருவர் தன்னலம் இல்லாது பிறர் நலனுக்காக செய்யும் சேவையை குறிக்கும் வீடு தான் இந்த பன்னிரண்டாம் வீடு. நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளைக் குறிப்பதும் இந்த வீடுதான். நாம் வாங்கிய கடனை திருப்பி தருவதும் இந்த வீடுதான். நம் உடம்பில் இடது கண், பாதங்களை குறிப்பதும் இந்த வீடுதான். தனிமையான வாழ்க்கையை குறிக்கும் வீடு பன்னிரண்டாம் வீடுதான்.

பன்னிரண்டாம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று இப்பொழுது பார்க்கலாம்.

1 ம் வீட்டில் இருந்தால் நல்ல உணவுகளையும் நல்ல நித்திரையும் கொடுக்கும். நல்ல செலவு செய்து வசதி வாய்ப்புகளை பெறுவார்

2 ம் வீட்டில் இருந்தால் பேச்சிற்க்கு மதிப்பு இருக்காது தனம் ஸ்தானத்தில் இருப்பதால் தன விரையம் ஏற்படும். தேவையில்லாத பேச்சுகளை பேசுவார்கள்

3 ம் வீட்டில் இருந்தால் சொத்துகளை இழப்பார்கள் இளைய சகோதர சகோதரிகளால் செலவு ஏற்படும்.

4 ம் வீட்டில் இருந்தால் சொந்தங்களால் செலவு ஏற்படும். நண்பர்களாலும் செலவு ஏற்படும். குடும்ப செலவினங்கள் அதிகமாக இருக்கும்.

5 ம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதரர்களால் விரயம் ஏற்படும். ஆலய திருப்பணிகள், பெரிய மனிதர்கள் பிள்ளைகளால் செலவு வரும்.

6 ம் வீட்டில் இருந்தால் வியாதிகள் ஏற்படும். அதனால் மருத்துவனையில் சேர்ந்து செலவு செய்ய நேரிடும். பொருள் நஷ்டம் ஏற்படும்.

7 ம் வீட்டில் இருந்தால் மனைவி வழியில் அதிக செலவினங்கள் ஏற்படும், காமத்தால் செலவினங்கள் ஏற்படும்.

8 ம் வீட்டில் இருந்தால் சண்டைகள் ஏற்பட்டு அதனால் வழக்குகள் வந்து செலவு செய்ய நேரிடும். உடல் நோய் ஏற்பட்டு அதனால் செலவு ஏற்படும்.

9 ம் வீட்டில் இருந்தால் தகனப்பனாரின் சொத்துக்களை விற்க்க நேரிடும். சகோதரர்களால் நஷ்டமும் கஷ்டமும் ஏற்படும்.

10 ம் வீட்டில் இருந்தால் செய்கின்ற தொழிலில் முடக்கம் ஏற்படும். தொழிலில் வருமானம் இல்லாது போதும். தொழில் கை விட்டு போகும்.

11 ம் வீட்டில் இருந்தால் தான் தருமங்களில் செலவு ஏற்படும். மூத்த சகோதரர்களால் நஷ்டமும் செலவும் ஏற்படும்.

12 ம் வீட்டில் இருந்தால் உடல் நிலை சரியாக இருக்காது. நல்ல நித்திரை ஏற்படும். சொத்துக்கள் விரையமாகும்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு






Monday, January 31, 2011

பதினோராம் வீடு







பதினோராம் வீடு லாப ஸ்தானம் எனப்படும். ஒருவருடைய லாபம் மூத்த சகோதர சகோதரிகள் ஆகியவற்றைப் பற்றி கூறுவது பதினோராம் வீடு.

பதினோராம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று இப்பொழுது பார்க்கலாம்.

1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல லாபம் வரும் நல்ல படிப்பு வரும் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் நல்ல லாபங்களை பெறுவார்கள். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்

2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல வருமானம், செல்வாக்கு, அதிகாரம் கிடைக்கும்.

3 ஆம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர சகோதரிகளில் நல்ல நிலையில் இருப்பார்கள் . சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.

4 ஆம் வீட்டில் இருந்தால் தெய்வீக வழியில் செல்பவராக இருப்பார்கள் நல்ல பணி ஆட்கள் கிடைப்பார்கள். வீடு வாகனத்துடன் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை அனுபவிப்பார்கள்.

5 ஆம் வீட்டில் இருந்தால் இவர்களின் புத்திரர்களால் நல்ல வருமானம் கிடைக்கும். இவர்கள் செய்யும் தொழில்களை இவர்களின் பிள்ளைகளும் செய்வார்கள். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.

6 ஆம் வீட்டில் இருந்தால் செய்கின்ற தொழிலில் எதிரிகள் இருப்பார்கள் வரும் லாபம் எல்லாம் கடன் கட்டவே போய்விடும்.

7 ஆம் வீட்டில் இருந்தால் மனைவியின் மூலம் லாபங்கள் வரும். திருமணத்திற்க்கு முன்பு ஏழையாக இருந்தவர்கள் திருமணத்திற்க்கு பின்பு நல்ல நிலையில் இருப்பார்கள். நல்ல யோகங்கள் அமையும். வண்டி வாகனம் அமையும்.

8 ஆம் வீட்டில் இருந்தால் பல தொழில்கள் செய்ய மணம் ஈடுபடும். பல வழியில் பணம் செலவு செய்ய நேரிடும். கஷ்டத்துடனே வாழ்க்கை ஓடும்.

9 ஆம் வீட்டில் இருந்தால் வண்டி வாகனம் வரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தந்தை செய்யும் தொழிலே இவர்களுக்கு கிடைக்கும் . பெரிய தொழில்கள் செய்து நல்ல லாபங்களை பெறுவார்.

10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல வேலையில் இருப்பார்கள். அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும். தெய்வீக அருள் நிறைந்து காணப்படுவார்கள்.

11 ஆம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர சகோதரிகளின் மூலம் லாபங்கள் வரும். மூத்த சகோதர்கள் நல்ல அந்தஸ்தோடு இருப்பார்கள்.

12 ஆம் வீட்டில் இருந்தால் கடன் தொல்லைகள் வியாதிகள் ஏற்படும். செய்யும் தொழிலில் லாபங்கள் குறைந்து காணப்படும்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு
















Friday, December 31, 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்




அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களின் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள். இந்த நல்வேளையில் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நற்பயனை வழங்குமாறு ஆண்டவனை பிராத்திக்கிறேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

Wednesday, December 1, 2010

பத்தாவது வீடு






பத்தாவது வீடு ஜீவனஸ்தானம் மற்றும் கர்மஸ்தானம் எனப்படும். ஒருவருக்கு எப்படி பட்ட தொழில் அமையும் என்று பார்ப்பதற்க்கு இந்த வீட்டை வைத்துதான் முடிவு செய்யபடவேண்டும். சோதிடம் எழுதப்பட்ட காலத்தில் குறைந்த தொழில்கள்தான் இருந்தன அதனால் தொழில்களை சிறிய முயற்சியில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இன்று நிறைய தொழில்கள் வந்துவிட்டன. அதனால் கண்டுபிடிப்பது கடினம்

பத்தாவது வீட்டு ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று இப்பொழுது பார்க்கலாம்.

பத்தாவது வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தால் அதாவது 1 ம் வீட்டில் இருந்தால் சுயமுயற்சியால் முன்னேற்றம் காண்பார். செல்வம் சொத்துக்கள் கல்வி தான தருமங்களுடன் அரசாங்கத்தில் உயர்பதவிகளில் இருப்பார். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

பத்தாவது வீட்டு அதிபதி 2 ம் வீட்டில் இருந்தால் நல்ல அழகுடனும் வாக்குவன்மை திறம்பட பேசும் சக்தி செல்வ செழிப்புடனும் இருப்பார்கள். சொத்துகள் கிடைக்கும் நல்ல நண்பர்கள் அமைவார்கள்.

பத்தாவது வீட்டு அதிபதி 3 ம் வீட்டில் இருந்தால் சகோதர தோஷம் ஏற்படும். சகோதரர்கள் இருந்தாலும் செல்வாக்குடன் இருக்கமாட்டார்கள்.

பத்தாவது வீட்டு அதிபதி 4 ம் வீட்டில் இருந்தால் அழகான வீடு, செல்வ செழிப்பான வாழ்க்கை தாய் வழி ஆதரவு முதலியன உண்டாகும். வண்டி வாகனம் அமையும். பூமியிலிருந்து புதையில் போன்றவை கிடைக்கும்.

பத்தாவது வீட்டு அதிபதி 5 ம் வீட்டில் இருந்தால் புத்திரபாக்கியம் அமையும் சந்தோஷ செல்வாக்குடன் கூடின வாழ்க்கை அமையும். பெரியமனிதர்களின் நட்பை பெறுவார்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பார்கள்.

பத்தாவது வீட்டு அதிபதி 6 ம் வீட்டில் இருந்தால் பிறர் பொருளை அபகரிக்கும் குணம் இருக்கும். உடம்பு மெலிந்தாக இருக்கும்.

பத்தாவது வீட்டு அதிபதி 7 ம் வீட்டில் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும் மனைவி ஒற்றுமையுடன் இருக்கமாட்டாள். மனைவி மூலம் பொருள் சேரும்.

பத்தாவது வீட்டு அதிபதி 8 ம் வீட்டில் இருந்தால் நல்ல ஆயுள் உண்டு. புத்திர தோஷம் ஏற்படும். மனைவியுடன் திருப்தியான சந்தோஷங்களில் ஈடுபட முடியாது.

பத்தாவது வீட்டு அதிபதி 9 ம் வீட்டில் இருந்தால் தகப்பனாரின் சொத்துக்கள் விரயம் ஆகும். புத்திரவிருத்தி இருக்காது. சிரம வாழ்க்கைகளை அனுபவிக்கும்படி இருக்கும். தானதருமங்களிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும்.

பத்தாவது வீட்டு அதிபதி 10 ம் வீட்டில் இருந்தால் பெரிய மனிதர்களின் ஆதரவு இருக்கும். உறவினர்களின் ஆதரவு இருக்கும். உலக விசயங்களில் நல்ல அறிவு இருக்கும்.

பத்தாவது வீட்டு அதிபதி 11 ம் வீட்டில் இருந்தால் செய்யும் காரியங்களில் ஒவ்வொன்றிலும் லாபத்தை பெறுவார்கள். மூத்த சகோதர சகோதரிகள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

பத்தாவது வீட்டு அதிபதி 12 ம் வீட்டில் இருந்தால் பொருள் நஷ்டம் ஏற்படும். புத்திரர்களால் கஷ்டங்கள் ஏற்படும். அனாவசியமான செலவுகள் இருக்கும். சொத்துக்கள் அழியும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  


Tuesday, November 30, 2010

ஒன்பதாம் வீடு







ஒன்பதாவது வீட்டின் பலன் பிதுருக்கள் தகப்பனார் உயர்கல்வி முன்பின் தெரியாதவர்கள், தெய்வதரிசனம் போன ஜென்மத்து அதிர்ஷ்டம்,ஒருவர் செய்யும் தர்மம், நீண்ட தூர பயணம் அதாவது வெளிநாடு ஆகியவற்றை பற்றி தெரிவிப்பது இந்த வீடுதான்.

ஒன்பதாவது வீட்டுக்கிரகம் லக்கினத்தில் இருந்தால் அதாவது முதல் வீட்டில் இருந்தால் பெரியவர்களிடம் பிதா, குரு, தெய்வம் ஆகியவற்றுகளிடம் பிரியத்தை கொண்டவர்களாகவும் தான தர்மங்கள் செய்வர்களாகவும் இருப்பார்கள். பிதுர் சொத்துக்கள் கிடைக்கும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 2 ம் வீட்டில் இருந்தால் செல்வாக்குடன் முன்னோர்கள் சொத்துக்களை பெற்றவராகவும் இருப்பார்கள். அயல்நாட்டு மூலம் பணவரவு இருக்கும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 3 ம் வீட்டில் இருந்தால் இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவு இருக்கும். பிதுர் தோஷம் பெற்றவனாக இருப்பான்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 4 ம் வீட்டில் இருந்தால் தாயின் ஆதரவு இருக்கும். வண்டி வாகனம் சொத்துக்கள் கிடைக்கும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 5 ம் வீட்டில் இருந்தால் புத்திரர்கள் சகல பாக்கியத்துடன் இருப்பார்கள் அரசாங்கத்தில் பெரியபதவி கிடைக்கும. தெய்வீக வழிபாடுகள் நிறைந்து காணப்படும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 6 ம் வீட்டில் இருந்தால் வெளிநாட்டு பயணம் கிட்டும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும் . முன்னோர்களின் சொத்துக்கள் கடன்களிலால் அழியும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 7 ம் வீட்டில் இருந்தால் நல்ல தெய்வபக்தியுள்ள பெண்கிடைக்கும் அந்நிய பெண் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். தந்தையின் சொத்துக்களால் பயன் பெறுவார்கள்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 8 ம் வீட்டில் இருந்தால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்ககூடும். தந்தையார் இறந்து போக வாய்ப்பு உண்டு. புத்திர தோஷம் ஏற்படும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 9 ம் வீட்டில் இருந்தால் தகப்பனார் நீண்ட ஆயுள் உடன் இருப்பார். தகப்பனாரின் சொத்துகள் கிடைக்கும். தான தர்மங்கள் குடும்பத்தில் நிறைந்து விளங்கும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 10 ம் வீட்டில் இருந்தால் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பார். தந்தையாரின் சொத்துக்கள் விருத்தி ஆகும். பெரியவர்களிடத்தில் மரியாதையாக இருப்பார்கள்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 11 ம் வீட்டில் இருந்தால் தெய்வகாரியங்கள் வீட்டில் நடைபெறும். தந்தையால் லாபம் இருக்கும் அயல்நாட்டு தொடர்பு மூலம் வருமானம் கிடைக்கும்.

ஒன்பதாவது வீட்டு அதிபதி 12 ம் வீட்டில் இருந்தால் தந்தையாருக்கு கெடுதல் உண்டாகும். வெளிநாட்டு பயணம் கிடைக்கும். தந்தையாரின் சொத்துகள் நிலைக்காது.

ஒன்பதாவது வீட்டில் பாவக்கிரகங்கள் இருந்தால் பித்ரு தோஷம் ஏற்படும்.

பரிகாரம்

இராமேஸ்வரத்தில் திலா ஹோமம் செய்ய வேண்டும். மாத அமாவாசை விரதம் இருக்க வேண்டும். அமாவாசை அன்று பசு மாட்டிற்க்கு அகத்திகீரை கொடுக்கவேண்டும். வாழ்வில் ஒருமுறையாவது இராமேஸ்வரம், காசி சென்றுவரவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 18, 2010

எட்டாம் வீடு



எட்டாவது வீட்டைக்கொண்டு ஆயுளை நிர்ணயிக்க வேண்டும். எட்டாவது வீடு மறைவு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு மரணம் இயற்கையானதாக வருமா அல்லது துர்மரணமா என்று பார்பதற்க்கும் எட்டாம் வீட்டை வைத்துதான் பார்க்கவேண்டும். ஒருவரின் துன்பங்கள் தடைகள் தோல்விகள் வாழ்க்கையில் படபோகிற கஷ்டங்கள் ஆகியவற்றையும் எட்டாம் வீட்டை வைத்து சொல்லலாம்.மூதாயர்களின் சொத்து உயில்கள் இன்ஷீரன்ஸ். பிராவிடண்ட் பண்டு ஆகியவற்றையும் எட்டாம் வீட்டைக்கொண்டே பார்க்க வேண்டும். பெண்களுக்கு எட்டாம் வீடு மிகவும் முக்கியம் அவர்களின் மாங்கல்ய பாக்கியம் எட்டாம் வீட்டை கொண்டே கணிக்க முடியும்.

இப்பொழுது எட்டாம் வீட்டின் அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

எட்டாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் அதாவது முதல் வீட்டில் இருந்தால் கடன் வறுமை வியாதிகளுடன் இருப்பான்.

எட்டாம் வீட்டு கிரகம் இரண்டாம் வீட்டில் இருந்தால் வாக்கில் நாணயம் இருக்காது. துர்வார்த்தை உபயோகிப்பார்கள் குடும்பத்தில் சந்தோஷம் இருக்காது. உடல் பலம் குறைந்து காணப்படும். பைத்தியம் பிடித்தவன் போல் இருப்பார்கள்.

எட்டாம் வீட்டு கிரகம் 3 ம் வீட்டில் இருந்தால் சகோதரர்கள் ஒற்றுமை இருக்காது. தைர்யம் குறைந்து காணப்படும். மனதில் ஒரு வித பயம் இருந்து கொண்டே இருக்கும். பெரியவர்களால் சேர்த்துவைக்கப்பட்ட சொத்துக்கள் பலவிதங்களில் நாசமாகும்.

எட்டாம் வீட்டு கிரகம் 4 ம் வீட்டில் இருந்தால் தாயாரும் தாய்வழிமாமன் முதலானவர்களின் ஆதரவு இருக்காது. குடும்பத்தில் சதா சச்சரவுகள் தோன்றும். சிரமாக குடும்பத்தை நடத்தவேண்டி வரும். முன்னோர்களின் சொத்துக்கள் அழியும்.

எட்டாம் வீட்டு கிரகம் 5 ம் வீட்டில் இருந்தால் புத்திரர்களால் மன அமைதி இல்லாமலும் சதா பிரச்சினைகளுமாக இருக்கும். உடல் நோய் இருந்து வரும். பிள்ளைகளுடன் விரோதம் இருந்துவரும்.

எட்டாம் வீட்டு கிரகம் 6 ம் வீட்டில் இருந்தால் உடல் நலிந்து கெட்ட எண்ணங்கள் கொண்டவனாகவும் தந்திரவானகவும் பகைவர்களை வெல்ல கூடியவனாகவும் இருப்பான்.

எட்டாம் வீட்டு கிரகம் 7 ம் வீட்டில் இருந்தால் மனைவியை சதா சண்டை போட்டுக்கொண்டும் மனைவியால் கலகம். மனைவி அற்ப ஆயுள் உள்ளவராகவும் இருப்பார்கள்.

எட்டாம் வீட்டு கிரகம் 8 ம் வீட்டில் இருந்தால் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்துவான் நன்மை தீமை அறியாது நினைத்த மாத்திரத்தில் ஏதாவது செய்துவிட்டு அவமானத்தையும் அலைச்சல்களை அடைவான்.

எட்டாம் வீட்டு கிரகம் 9 ம் வீட்டில் இருந்தால் தந்தை சொத்துக்கள் நாசமாகும் பிள்ளைகளால் கடன் ஏற்படும். நண்பர்களிடம் விரோதம் ஏற்படும்.

எட்டாம் வீட்டு கிரகம் 10 ம் வீட்டில் இருந்தால் வேலையில் ஒழுங்காக இருக்கமாட்டார்கள். அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அரசாங்கத்தில் கெட்ட பெயர் எடுப்பார்கள்.

எட்டாம் வீட்டு கிரகம் 11 ம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர்கள் சகோதரிகளுக்கு கண்டம் குழந்தைகளால் வருமானம் ஏற்படும்.

எட்டாம் வீட்டு கிரகம் 12 ம் வீட்டில் எப்பொழுதும் ஊர் சுற்றும் குணம் ஏற்படும். வண்பு வழக்குகள் ஏற்படும். இன்பசுகம் ஏற்பட்டு கையில் உள்ள பணத்தை இழப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Sunday, October 3, 2010

ஏழாவது வீடு




ஏழாம் வீட்டைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். ஏழாம் வீட்டின் கிரக குணங்களை கொண்டு எப்படி பட்ட கணவன் அல்லது மனைவி வருவாள் என்று கூறலாம். ஆசை சொத்துக்கள் சேர்க்கை , மரணம் ஆகியவற்றை கூறலாம்.

இப்பொழுது ஏழாம் வீட்டின் அதிபதி ஒவ்வொரு வீட்டின் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தால் அவன் கவர்ச்சி கொண்டவனாக இருப்பான். அவனிடம் பெண்கள் அன்பு வைத்து இருப்பார்கள் பாபகாரியகள் அறியாது காமகாரியங்கள் செய்வான். இவர்களுக்கு மனைவியின் மூலம் வருமானம் இருக்கும்.

ஏழாவது வீட்டின் கிரகம் இரண்டாம் வீட்டில் இருந்தால் மனைவியின் மூலம் சொத்துக்கள் வரும். மனைவியின் மூலம் சம்பாத்தியம் இருக்கும். மனைவியின் மூலமும் உறவினர்கள் மூலமும் உதவி இருக்கும்.

ஏழாம் வீட்டு கிரகம் மூன்றாம் வீட்டில் இருந்தால் களத்திரதோஷம் மனைவிக்கு மாரகம் ஏற்பட்டு மறு விவாகம் செய்துக்கொள்ளவும் கூடும். அதைப்போல் அதிகமாக காமமோ பற்று இருக்காது.

ஏழாம் வீட்டு கிரகம் நான்காம் வீட்டில் இருந்தால் அமர்ந்திருந்தால் எதிர்பார்க்கும் இன்பத்தை அடைவான். குடும்பத்தை நடத்தும் பொறுப்பையும் யோக்கியத்தை அம்சங்களையும் அவனுக்கு வரும் மனைவி பெற்று இருப்பாள்.

ஏழாம் வீட்டு கிரகம் ஐந்தாம் வீட்டில் இருந்தால் அவருக்கு களத்திர தோஷம் பெற்றவனா இருப்பான் சினிமா போன்றவற்றில் ஈடுபாடு இருப்பான். காதல் மணம் முடிப்பான் ஆனால் திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது.

ஏழாம் வீட்டு கிரகம் ஆறாம் வீட்டில் இருந்தால் மனைவி வியாதிகள் கொண்டவளாக இருப்பாள். கணவனக்காக எதிராக கலகங்கள் விரோதங்கள் செய்வாள் மனைவியினால் ஆதரவு இருக்காது.

ஏழாம் வீட்டு கிரகம் ஏழாவது வீட்டில் இருந்தால் ஜhதகன் மனைவியின்
வீட்டில் அடிமையாக இருப்பான் மனைவியின் செல்வாக்கு அதிகமாக இருக்கும்.

ஏழாம் வீட்டு கிரகம் எட்டாவது வீட்டில் இருந்தால் அவனக்கு வரும் மனைவியினால் அவன் கஷ்டங்களை வறுமைகளை அனுபவிப்பான். குடும்பத்தை ஓழுங்காக நடத்தும் பொறுப்பு அற்றவளாகவும் வீனான ஆசை கொண்டவளாகவும் வருமான குறைவுடனும் இருப்பாள்.

ஏழாம் வீட்டு கிரகம் ஓன்பதாம் வீட்டில் இருந்தால் பெரியவர்களின் அனுக்கிரக்தாலும் பூர்வ புண்ணியத்தாலும் சிறு வயதில் திருமணம் நடைபெறும். குடும்பம் ஒற்றுமையுடன் இருக்கும்.

ஏழாம் வீட்டு கிரகம் பத்தாவது வீட்டில் இருந்தால் வரும் மனைவியால் சம்பாத்தியம் இருக்கும். சொத்துக்களும் நகைகளும் சேரும்.

ஏழாம் வீட்டு கிரகம் பதினேராவது வீட்டில் இருந்தால் நல்ல செல்வத்துடன் சொத்துகளுடனும் மனைவி வருவாள். மனைவியினால் அந்தஸ்துடன் மனைவி வருவாள். மனைவியினால் கணவனின் அந்தஸ்து உயரும்.

ஏழாம் வீட்டு கிரகம் பன்னிரேண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவியினால் அதிகமான தன சேதங்கள் ஏற்படும். மனைவி இன்ப வாழ்க்கை வாழ ஆசைபடுவாழ். கடன்கள் வாங்கியும் சொத்துக்கள் விற்றும் குடும்பத்தை நடத்த வேண்டி இருக்கும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு