Followers

Saturday, January 21, 2012

விளக்கம்



குருவைப்பற்றி பாடத்தை பதிவு இட்டபிறகு ஏகப்பட்ட கேள்விகள் வந்தன. அனைவரும் அவர்கள் ஜாதகங்களை எனக்கு அனுப்பி கேள்விகள் கேட்டுள்ளார்கள் அனைவருக்கும் நான் பதில் தருகிறேன். நேரம் கருதி சில நாட்கள் சென்று உங்களுக்கு பதில் தருகிறேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்.

குருவைப்பற்றி கேள்விகள் வந்தன. குரு ஆலங்குடியில் இருக்கிறா அல்லது திருச்செந்தூர் இருக்கிறா இப்படி கேள்விகள் வந்தன. நான் என்னிடம் வரும் வாடிக்கையாளருக்கு கொடுக்கும் பரிகாரம் என்னுடைய அனுபவத்தில் நல்ல பலனை தந்தால் மட்டும் தான் கொடுப்பேன்.

அந்த வகையில் ஆலங்குடி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. குருவுக்காக நான் கொடுத்த பரிகாரம் ஆலங்குடி சென்று வந்தவர்கள் நல்ல பலனை அனுபத்தில் உணர்ந்திருக்கிறார்கள்.அதனால் தான் பதிவில் கொடுத்திருந்தேன்.

கோவிலுக்கு செல்லும்போது இவர் இங்கு இருப்பார அல்லது வேற ஊரில் உள்ள கோவிலில் இருக்கிறா என்று சந்தேகத்துடன் சென்றால் கண்டிப்பாக உங்களுக்கு ஒன்றும் நடக்காது.

இப்பொழுது கோவிலுக்கு சென்றால் அங்கு சில மக்கள் நடந்துக்கொள்ளும் விதத்தை பார்த்தாலே நீங்கள் சாமி கும்பிடுவதையே நிறுத்திவிடுவீர்கள் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் இருந்தால் தான் உங்களால் சாமியை தரிசிக்கமுடியும்.

உங்களுக்கு உங்கள் அருகில் இருக்கும் குரு கோவில் நல்ல பலன் தரும் என்று அனுபவம் வாய்ந்தவர்கள் சொன்னால் அந்த கோவிலையை வணங்குங்கள். எந்த தவறும் இல்லை வெளிநாட்டில் உள்ளவர்கள் ஆலங்குடி வருவது என்பது மிகவும் கஷ்டம்தான் அங்கு உள்ள கோவிலையை வணங்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு


Thursday, January 19, 2012

சந்தேகங்கள்



என்னிடம் சில கேள்விகள் வந்தன அதற்காக ஒரு பதிவு

ஆகமக்கடல்

ஒருவருக்கு குரு லக்னம் மற்றும் ராசி அதிபதியாக இருக்கார்.ஆனா இரண்டாமிடமான மகரத்தில் நீசமாக உள்ளார்.லக்னாதிபதியே நீசமாக உள்ளார்.இதன் பலன் மற்றும் பரிகாரம் என்ன?

நான் எழுதுவது பொதுபலனைத்தான் எழுதுகிறேன். ஒரு ஜாதகத்துக்கு பலன் முடிவு செய்வது என்பது அந்த ஜாதகத்தை பல விதத்திலும் அலசி ஆராய்ந்த பிறகு தான் முடிவு சொல்ல வேண்டும். சிறு தகவல்களை வைத்து சொல்லமுடியாது. நீங்கள் கேட்டுவிட்டீர்கள் அதனால் சிறு தகவல் வைத்துக்கொண்டு பலன் சொல்லுகிறேன்.

தனசு லக்னம் தனுசு ராசி . ராசி அதிபன் குரு இரண்டாம் வீட்டில் இருக்கிறார். குரு இரண்டாம் வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று நான் பதிவில் இட்ட பலன்கள்

2 ஆம் வீட்டில் குரு இருந்தால் நல்ல பேசுவார்கள் இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள்.

ஆனால் மகரத்தில் குரு நீசமாக இருக்கிறார். இவருக்கு சொன்ன பலன்களில் ஏதாவது ஒன்று பாதிக்கும். இரண்டாம் வீட்டை பார்க்கும் போது இரண்டாம் அதிபதி நிலை முக்கியமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இரண்டாம் வீட்டை பார்க்கும் கிரகத்தின் நிலையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.குரு மகரத்தில் இருந்தால் உடனே நீசம் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. குரு எந்த நட்சத்திரத்தில் செல்கிறார் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்பொழுது தான் பலன்கள் சரியாக வரும்.

நீங்கள் கேள்வியை கேட்கும்போது பரிகாரத்தை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளதால் கண்டிப்பாக இரண்டாம் வீடு பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

குருவுக்கு உரிய பொதுவான பரிகாரத்தை சொல்லுகிறேன்.

ஆலங்குடி செல்லலாம். வியாழன் தோறும் விரதம் இருந்து கொண்டைகடலை மாலை அணிவித்து குரு பகவானை வணங்கி வாருங்கள்.

sujindhiran

hai sir
7m veedu 6m veedu parivarthanai
ulladhu .laknam rishabam
2m veedu guru irukkirar
manaivi patri sollunga sar.

இப்படி கேள்வி கேட்பதற்க்கு பதிலாக என்னிடம் முழு ஜாதகத்தையும் கொடுங்கள் பதில் தருகிறேன்.

என்னுடைய email id astrorajeshsubbu@gmail.com


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

குரு





குருவை பற்றி பார்க்கலாம் நவகிரங்களில் முழு சுபர் என்று அழைக்கப்படுபவர் குருபகவான் தான். இவர் ஒருவர் நல்ல நிலைமையில் இருந்தாலோ போதும் எவ்வளவு பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் நிலை கிடைக்கும். இவர் காரகம் வகிக்கும் செயல் குழந்தை பாக்கியம் திருமணம் நல்ல முறையில் பணவரவுகள் ஆகியவை ஆகும். இவரின் கருணை இருந்தால் தான் வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடைபெறும்.

1 ஆம் வீட்டில் குரு இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயுளுடன் இருப்பார்கள். சிறந்த மனைவி அமையும். இவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பாக்கியம் கிடைக்கும். இவர்களின் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் இவர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தந்தை இவருக்கு உதவி புரிவார்.

2 ஆம் வீட்டில் குரு இருந்தால் நல்ல பேசுவார்கள் இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள்.

3 ஆம் வீட்டில் குரு இருந்தால் பக்தியில் ஈடுபாடு இருக்கும் இளைய சகோதரர் நல்ல முன்னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவருக்கு நன்மை கிடைக்கும். எதிர்பாலினரிடம் மோகம் இருக்கும். அளவோடுதான் மகிழ்ச்சி இருக்கும்.

4 ஆம் வீட்டில் குரு இருந்தால் தாய் நல்ல நலத்துடன் இருப்பார். குழந்தை பாக்கியம் தாமதமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்காது. பகைவர்கள் உண்டாகுவார்கள். விவசாய சம்பந்தபட்ட குடும்பமாக இருந்தால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் இருக்கும்.

5 ஆம் வீட்டில் குரு இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திரக்களால் நல்ல நிலைக்கு வரலாம். நுண்ணிய அறிவு இருக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும்.

6 ஆம் வீட்டில் குரு இருந்தால் பகைவரை வெற்றி கொள்ளலாம். சமுதாயத்தில் மதிப்பு இருக்காது. குழந்தை பாக்கியம் தடை ஏற்படுத்துவார். மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தாமதம் ஆகும். உடம்பு பலம் இழந்து காணப்படும்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

Saturday, January 14, 2012



அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

Tuesday, January 10, 2012

சோதிட அனுபவ தொடர் 4




பித்ரு தோஷத்திற்க்கு பரிகாரம் என்ன என்று கடந்த பதிவில் கேட்டு இருந்தேன்.

திரு வேலு அவர்கள் சொன்ன பரிகாரம்

காளஹாஸ்தி சென்று பரிகாரம் செய்யலாம். பூர்வ புண்ணியம் கெட்டு இருப்பதால் ராமேஸ்வரம் காசி மற்றும் கய சென்று வரலாம்.
குலதெய்வ வழிபாடு அமாவாசை அன்று செய்யலாம்.

என்று சொன்னார் .

இந்த 5 ஆம் வீட்டை தொட்டவுடன் பதிவு ஒரே நீண்டு கொண்டு செல்கிறது இருந்தாலும் பார்க்கலாம் பித்ரு தோஷத்தை பொருத்தவரை முற்பிறவி பற்றிதான் அதிகமாக பேச வேண்டியுள்ளது.

ஒருவர் முற்பிறவியில் கெடுதல் செய்தால் இப்பிறவியில் கண்டிப்பாக அனுபவித்து தீரவேண்டும். இந்த தோஷத்திற்க்கு நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் இராமேஸ்வரத்தில் பித்ரு கடனை தீர்ப்பது தான். அல்லது ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருப்பது. முன்னோர்களுக்கு தர்பனம் கொடுக்கலாம்.

தர்பனம் கொடுப்பதில் இரண்டு வகை உண்டு ஒன்று நம் முன்னோர்களுக்கு கொடுப்பது அடுத்தது காருணிய தர்பனம். நம்முடன் வாழ்ந்த உயிர்களுக்கு அதாவது உங்களுக்கு பாடம் சொல்லி தந்த ஆசிரியர்களுக்கு உங்களுடன் வாழ்ந்த அண்டை அயலார் மற்றும் உயிரினங்களுக்கு என அனைத்துக்கும் தர்பனம் தருவது தான் காருணிய தர்பனம் எனப்படும். அனைத்து உயிர்களுக்கும் கொடுப்படவேண்டும் என்பது எவ்வளவு உயர்ந்த செயல் என்று பாருங்கள்.

தர்பனம் செய்வதில் ஒரு சிக்கல் உள்ளது அது என்ன என்றால் ஒருவர் தர்பனம் செய்யவேண்டும் என்றால் அவருக்கு தாய் அல்லது தந்தை ஒருவர் உயிரோடு இருக்ககூடாது. இருவரும் உயிரோடு இருக்கும் பையனுக்கு என்ன செய்வது?

உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் ஒரு ஜாதககத்ததை எடுத்தாலே போதும் உங்கள் வீட்டில் அனைவருக்கும் போதுமான பலன்களை சொல்லிவிடலாம். ஏன் உங்கள் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கும் சொல்லலாம்.

இந்த சமுதாயத்தில் வாழ்பவர்கள் ஒன்றோடு ஒன்றாக பிணைந்து இருப்பதாக ஜாதகங்கள் தெரிவிக்கின்றன. உங்களுடைய ஜாதகத்ததை எடுத்தாலே உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஜாதகங்களில் உள்ள பலன்கள் தெரியவரும். ஏன் அடுத்த வீட்டை பற்றி கூட சொல்லாம். ஜாதகங்கள் தெரிவிப்பது அடுத்தவருக்கு தீமை செய்தால் கண்டிப்பாக பாவங்கள் ஏற்படும்.

ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அடுத்தவருக்கு பலன் சொல்லுவது எப்படி என்று எதிர்காலத்தில் பார்க்கலாம்.

இவருடைய ஜாதகத்தில் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டை பார்க்கிறது.இரத்த காயத்தை வரவழைக்கும். இதனால் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
ஐந்தாம் வீட்டின் பலன்களை இவருடைய ஜாதகத்தை வைத்து போதுமான அளவு பார்த்துவிட்டோம்.


ஆறாம் வீடு சத்ரு ஸ்தானம் என அழைக்கப்படுகிறது.ஆறாம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டில் இருப்பதால் இவருடைய எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இவர் இருக்கவேண்டும். ஆறாம் வீட்டில் குரு நீசமாக இருக்கிறார் அதனால் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தடை ஏற்படுகிறது. பொதுவாக கெட்ட அல்லது மறைவு ஸ்தானத்தில் சுபகிரகங்கள் நிற்பது அவ்வளவு நல்லதல்ல. வேலையாட்களை வைத்து வேலை வாங்கலாம்.

களத்திர ஸ்தானம் என அழைக்கப்படுகிற 7 ஆம் வீட்டு பலன். 7 ஆம் வீட்டு அதிபதி 10 ஆம் வீட்டில் இருக்கிறார். 7 ஆம் வீட்டு அதிபதி சனி. சனியின் வீட்டில் சூரியன் சந்திரன் மற்றும் சுக்கிரன். 7 ஆம் வீட்டில் சூரியன் இருந்தாலே மணவாழ்க்கை பிரச்சினையை தரும் மூன்று கிரகம் ஒரு வீட்டில் இருக்கிறது அதுவும் ஏழாம் வீட்டில் இருக்கிறது இவருக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை. இப்பொழுது இவர் எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறுகிறார்.

**********************************************************************************
திரு மணி அவர்கள் சில கேள்வி கேட்டார்

கேள்வி

தாங்கள் தொழில்முறை ஜோதிடரா? பல ஜாதகங்களில் ஜோதிட விதிகளை நாம் அப்ளை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. விதிகள், விதிவிலக்குகள் என்று எவற்றிற்கும் புலனாகாத ஜாதகங்களும் உண்டு.

உதாரணமாக குழந்தை பாக்கியத்திற்கு நாம் 5ம் வீட்டை கொண்டு கணக்கிடுகிறோம்.

சில ஜாதகங்களில் 5 ம் மிடம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆனாலும் வேறு சில விதிகளால் குழந்தைபாக்கியம் இருக்கும், சில ஜாதகங்களில் இருவருக்கும் யாதொரு பாதிப்பும் இருக்காது. ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும்.

இது போன்ற சமயங்களில் நாம் தடுமாறி ஏழரை சனி, குருபெயர்ச்சி முதலியவற்றை வைத்து சமாளிக்க வேண்டிய நிலை.

உங்கள் அனுபவத்தில் இதை தவிர்க்க எதாவது வழிமுறைகளை கண்டிருக்கிறீர்களா? நண்பரே.

பதில்

நான் தொழில்முறை சோதிடர் தான்.

நீங்கள் சொல்லுவது போல் இருக்கலாம். நானும் இந்த மாதிரி தவறுகளை செய்கிறேன். அந்த நேரத்தில் நான் நினைப்பது நான் இன்னும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எனது தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

அனைத்து விதிகளையும் போட்டு கணித்துபார்க்க எவ்வளவு நேரம் ஆகும் அது வரை சோதிடம் பார்க்க வந்தவர்கள் பொறுமையாக இருப்பார்களா? நீண்ட நேரத்தை செலவிட நாம் தான் தயாராக இருக்கிறோமா? அப்படியே பார்த்தாலும் அதற்கு தேவையான பணத்தை அவர்கள் கொடுப்பதற்க்கு தயாரா இருப்பார்களா ?
இந்த மாதிரியான பிரச்சினைகளும் உள்ளன.

ஆனால் சோதிடத்தில் நமது முன்னோர்கள் கணித்தது அனைத்தும் சரியாகவே இருக்கிறது. இன்று அமாவாசை பௌர்ணமி என்று கூறுகிறார்கள் அனைத்தும் சரியாக அவர்கள் சொல்லும் நேரத்தில் நடைபெறும் போது நமது பலன்கள் மாறுவது ஏன்?

நாம் செய்யும் கணக்கீடு தான் தவறுதலாக இருக்கிறது. ஏதோ ஒரு சில புத்தகங்களை மட்டும் படித்துக்கொண்டு சோதிடம் பார்க்க வந்துவிடுகிறோம்.
சோதிடத்தில் பல பிரிவுகள் உள்ளன அனைத்து பிரிவுகளையும் நாம் படிப்பது இயலாத காரியம் அல்லது மேலோட்டமாகவும் படித்து இருக்க வேண்டும்.அப்பொழுது நாம் கணிக்க முடியும்.

99 % பலன்கள் சரியாக சொல்லமுடியும். ஏன் 100% எழுத வேண்டியது தானே என்று நினைக்கலாம். அந்த 1% கடவுள் நம் மூலம் சொல்ல வைப்பார். சோதிட கலையில் தெய்வபலன் மிக முக்கியம் அது இல்லையேன்றால் சோதிடம் 100 % சொல்லுவது கஷ்டம் தான். நீங்கள் சோதிடம் பார்ப்பதில் புதியவர் என்றால் இந்த பதில் திருப்தி அளிக்காது. அனுபவத்தில் இதை நீங்கள் நன்கு உணரலாம்.

எங்கள் ஊர் பகுதியில் (எங்கள் ஊர் தஞ்சாவூர்). சில சோதிடர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் நீங்கள் இறந்தவரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு காட்டி பலன் கூறுங்கள் என்று காண்பித்தால் அவர்கள் உடனே இவர் இறந்துவிட்டார் என்று ஜாதகத்தை திருப்பிகொடுத்துவிடுவார்கள். இதை நான் ஏன் கூறுகிறேன் என்று சொன்னால் தெய்வபலத்திற்க்கு ஒரு எடுத்துக்காட்டு இது எனது அனுபவ உண்மை.

நானும் இந்த முழுமையான தெய்வ பலனை பெற முயற்சி செய்கிறேன் இன்னும் கிடைக்கவில்லை.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு


Monday, January 9, 2012

சோதிட அனுபவ தொடர் 3



ஒரு நாள் முழுவதும் எத்தனை ஜாதகங்கள் பார்த்தேன் தெரியுமா ?

1474 ஜாதகங்களைப் பார்த்தேன்.என்ன இது இத்தனை ஜாதகங்கள் எடுத்து வெறும் ஐந்து ஜாதகங்கள் மட்டும் தான் நல்ல இருந்ததா என்று கேட்க தோன்றும். மீதி ஜாதகங்களில் உள்ள பெண்களுக்கு திருமணம் ஆகாதா என்று கேட்கலாம் ஆகும் ஆனால் திருமணத்திற்க்கு உரிய வயதில் திருமணம் ஆகாது. அப்படியே திருமணம் ஆனாலும் திருமண நடைபெற்ற பின் குழந்தை பிறக்க தாமதம் ஆகும்.

பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் 5 ஆம் வீடு 7 ஆம் வீடு 8 ஆம் வீடு சுத்தமாக இருந்தால் நல்லது. திருமணத்தை தடுத்து நிறுத்துவதில் 5 ஆம் வீடு முக்கிய பங்கு ஏற்கிறது. அந்த வீடு கெட்டாலும் திருமணத்தில் சிக்கல் தான்.

இப்படி எல்லாம் திருமணம் பார்த்து செய்வது என்றால் நீங்கள் 21 வயதில் இருந்து ஆரம்பித்தால் தான் திருமணம் சரியான வயதில் நடைபெறும் இல்லை நான் 30 வயதில் இந்த மாதிரி கண்டிஷன் போட்டு திருமணத்திற்க்கு பெண்ணே அல்லது மாப்பிள்ளையோ பார்ப்பேன் என்றால் இந்த ஜன்மத்தில் திருமணம் நடைபெறாது.அதை கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.

இவருடைய ஜாதகத்தில் செவ்வாய்யும் ராகுவும் புத்திர தோஷத்தை ஏற்படுத்துகிறது. முதலில் நாம் செவ்வாய் எடுத்துக்கொள்வோம் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருந்தால் இவரிடம் ரொம்ப ஜாக்கிரத்தையாக பழக வேண்டும். வில்லங்க பேர்வழி. எடுத்தவுடனே கோபம் வரும். ராகு ஐந்தில் இருப்பதால் இவரும் கடுமையான புத்திரதோஷத்தை தருவார்.

ராகு ஐந்தில் நின்றதால் ஏற்படும் தோஷத்தைப்பற்றி பார்க்கலாம்?

20 வருடத்திற்க்கு முன்பு சோதிடர்களிடம் சென்றால் ராகு தோஷத்திற்க்கு அவர்கள் சொல்லும் காரணம் பாம்பை அடித்ததால் ஏற்பட்ட தோஷம் என்ற கூறுவார்கள். 20 வருடத்திற்க்கு முன்பு பாம்பை அடிக்காதவர்கள் ஒரு கிராமத்தில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். பாம்பை அடிக்கவில்லை என்றால் இவர்கள் உயிருடனே வாழ்வது சாத்தியமில்லை. பாம்பினால் இந்த தோஷம் ஏற்பட வழி குறைவுதான்.

ராகு ஐந்தில் நின்றால் கடுமையான பித்ரு தோஷத்தை ஏற்படுத்தும். பித்ரு தோஷத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர்களில் வாழ்வு மிகவும் கடுமையாக பாதிக்கப்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் தடைகளாக தான் இருக்கும்.வீட்டை விட்டு வெளியில் ஒரு கடைக்கு செல்லவேண்டும் என்றாலும் கூட தடைகள் ஏற்படும். இது எதனால் ஏற்படுகிறது என்றால் முன்ஜென்மத்தில் நாம் செய்த பாபங்களில்தான் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள்.

அவர்கள் எப்படி வாழ்க்கையை எதிர்நோக்குவது ?

இதற்கு பரிகாரம் சொல்ல வேண்டும் என்றால் என்ன சொல்லுவீர்கள் ?


அன்புடன்

ராஜேஷ்சுப்பு


Saturday, January 7, 2012

சோதிட அனுபவ தொடர் 2



வணக்கம் சோதிட அனுபவம் தொடரில் ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பார்த்து வருகிறோம்.

சென்ற பிறவியைப் பற்றி எப்படி தெரிந்துகொள்வது?

சென்ற பிறவியில் பாவம் செய்திருக்கிறா என்று பார்க்கலாம் ஆனால் எந்த மாதிரி பிறப்பு எடுத்திருக்கறார் என்று பார்ப்பது மிக கடினம். ஒரு சிலர் மட்டும் கூறுவதிற்க்கு வாய்ப்பு இருக்கிறது சாதாரான சோதிடர்களால் முடியாத காரியம். ஜாதகம் என்பதே சென்ற பிறவியில் என்ன செய்து இப்பிறவியில் பிறப்பு எடுத்திருக்கிறார் என்று பார்க்கதானே.

பூர்வ புண்ணியஸ்தானம் என அழைக்கப்படுகிற 5 ஆம் வீட்டைக்கொண்டும். பாக்கிய ஸ்தானம் என அழைக்கப்படுகிற 9 ஆம் வீட்டைக்கொண்டும் அறியலாம். நாம் இப்பொழுது இந்த ஜாதகத்தில் பார்க்கபோவது 5 ஆம் வீடு. இந்த வீடு தனுசு வீடாக வருகிறது இதன் அதிபதி குரு. அவர் 6 ஆம் வீட்டில் போய் அமர்ந்திருக்கிறார் எப்படி என்றால் நீசமாக இருக்கிறார்.

5 ஆம் வீட்டு அதிபதி 6 ஆம் வீட்டில் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். ஏதோ நல்ல திசையில் இருந்து புத்திரபாக்கியம் கிடைத்தாலும் இவர்களுக்கு எதிரி வேறு யாரும் இருக்கமுடியாது இவரின் பிள்ளைகள் தான் இவருக்கு எதிரி.

பூர்வ புண்ணிய வீடாக இருப்பதால் பெரியவர்களிடம் எதிரியாக இருப்பார்கள். அறிவு சம்பந்தப்பட்ட வீடு ஐந்தாம் வீடாக இருப்பதால் ஞாபகம் மறதி இவர்களிடம் இருக்கும். இது அனைத்தும் இவருடைய ஜாதகத்தில் இருக்கிறது. நடைமுறை வாழ்க்கையிலும் இவர் இப்படி தான் இருக்கிறார்.

ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகத்தைப் பற்றி பார்க்கலாம். இவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் செவ்வாய் ராகு கூட இணைந்து அமைந்துள்ளது. பொதுவாக 5 ஆம் வீட்டில் ஒரு கிரகமும் இருக்ககூடாது. திருமண ஜாதக பொருத்தம் பார்க்கும் போது 5 ஆம் வீட்டில் நிலையை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண்களின் கர்ப்ப பயை குறிக்கும் வீடு 5 ஆம் வீடு. 5 ஆம் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். திருமணம் நிகழம் போது வெறும் திருமண பொருத்தத்தை மட்டும் பார்க்க கூடாது ஜாதகத்தையும் பார்க்க வேண்டும் அப்பொழுது தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

இப்பொழுது எல்லாம் சோதிடர்களிடம் சென்றால் மாப்பிள்ளை மற்றும் பெண் எந்த நட்சத்திரம் என்று கேட்பார்கள் உடனே இத்தனை பொருத்தம் இருக்கிறது திருமணம் செய்யலாம் என்று சொல்லிவிடுவார்கள். அவ்வாறு பார்ப்பது தவறாகும்.

ஜாதகத்தை பார்க்க வேண்டும்.முழுமையாக ஆராய்ந்து பார்த்தால் தான் அனைத்து தகவலும் தெரியவரும். இப்பொழுது உள்ள ஜாதகங்களில் பலபேருடைய ஜாதகங்கள் 5 ஆம் வீடு கெட்டு உள்ளது. இப்பொழுது எல்லாம் இந்த துறையில் மருத்துவம் படித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது தெருவிற்க்கு தெரு ஒரு மருத்துவமனையாவது இத்துறையில் இருக்கிறது. அப்படி என்றால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். 5 ஆம் வீடு கெட்டும் குழந்தை பாக்கியம் இருக்கும். அது வேறு கிரகங்களை வைத்து இருக்கும். என்ன ஒரு குறையென்றால் தாமதமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இந்த மாதிரி ஒரு வாரத்திற்க்கு முன்பு ஒரு ஜாதகர் என்னிடம் வந்து தன் மகனுக்கு ஒரு வரன் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு பிரபல Matrimony யின் ID யை என்னிடம் கொடுத்தார். அதில் எந்த ஜாதகம் நல்ல இருக்கு என்று பார்த்து அவரிடம் நான் அந்த ஜாதகியின் விபரங்களை எடுத்துக்கொடுக்க வேண்டும். நான் அதிகாலையில் இருந்து கணினியின் முன்பு உட்கார்ந்து பெண்ணின் ஜாதகத்தை பார்த்துதேன்.ஒரு நாள் முழுவதும் அவருக்காக கணினியின் முன்பு உட்கார்ந்து தேடினேன். பையனின் தகப்பனார் அடுத்த நாள் காலையில் என்னை பார்க்க வந்தார். நான் அவரிடம் 5 பெண்ணின் ஜாதகங்களை மட்டும் கொடுத்தேன்.



ஒரு நாள் முழுவதும் எத்தனை ஜாதகங்கள் பார்த்தேன் தெரியுமா ?

அடுத்த பதிவு வரை காத்திருங்கள் ...

நாம் பார்த்துக்கொண்டு இருப்பதை தவிர்த்து எங்கையோ பாடம் செல்கிறது என்று நினைக்க வேண்டாம். பாடத்துடன் சம்பந்தபட்ட விஷயம் அதனால் தான்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.