Followers

Thursday, January 2, 2014

ஒரு சில வார்த்தைகள்


வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் என்னை சந்திக்கும்பொழுது அவர்களின் பேச்சில் தென்படுவதை மற்றும் அவர்கள் சொல்லுவதை வைத்து பார்க்கும்பொழுது ஒரு விசயம் எனக்கு தென்ப்பட்டது. அதனைப்பற்றி உங்களுக்கு ஒரு சில செய்திகளை சொல்லவேண்டும் என்பதற்க்காக இந்த பதிவு.

ஏதாவது ஒரு சோதிடர் சொல்லும் வார்த்தை மட்டும் நீங்கள் பின்பற்றி வருவது நல்லது. அனைத்து சோதிடர்களிடமும் செனறு நீங்கள் சோதிடம் கேட்டு அனைத்தையும் பின்பற்றி வந்தால் உங்களின் வாழ்க்கை பிரச்சினையை மட்டுமே சந்திக்கும் என்பதில் எவ்விதம் ஐயம் இல்லை. 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பரிகாரம் மற்றும் பலன்களை சொல்லிவருவார்கள். அனைத்தையும் நீங்கள் பின்பற்றினால் கடவுள் கூட குழம்பிபோய்விடுவார். உங்களுக்கு நல்லது நடைபெறாது.

அனைத்து சோதிட பதிவு மற்றும் ஆன்மீகபதிவையும் விடாமல் படிப்பதும் ஒரு பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி படிப்பது ஒன்றும் தவறு இல்லை ஆனால் படித்த அனைத்து விசயத்தையும் மனதில் போட்டு குழப்பிக்கொண்டால் பிரச்சினை மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடும். அனைத்தையும் படித்தாலும் தேவையானவற்றை மட்டும் உள்வாங்கவேண்டும் தேவையற்ற மேட்டர் எல்லாம் உள்வாங்கினால் பைத்தியம் பிடிக்குமே தவிர வேறு ஒன்றும் நடைபெறாது.

யார் என்ன சொன்னாலும் அந்த பரிகாரத்தை அப்படியே பின்பற்றுவதும் ஒரு தவறு தான். ஒவ்வொருவருக்கும் எப்படி ஜாதகமும் வித்தியாசப்படுகிறதோ அதேப்போல் பரிகாரமும் வித்தியாசப்படும். யாராவது ஒரு நபரை மட்டும் வைத்துக்கொண்டு அவர் சொல்லும் கருத்து பின்பற்றி வருவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                      எனது வாழ்க்கை மிகப்பெரிய பல சிக்கல் ஏற்பட்டது என்பதை ஏற்கனவே உங்களுக்கு சொல்லியுள்ளேன். அப்படி சிக்கல் எல்லாம் வந்தபொழுதும் நான் சுயபரிசோதனை செய்துக்கொள்ள ஆரம்பித்தேன் அபபொழுது பிடிப்பட்டது தான் சோதிடம் எல்லாம். நமக்கு நடப்பது எதுவும் நம்மால் நமக்கு ஏற்பட்டது என்பது மிக குறைவாகவே எனக்கு இருந்தது. அனைததும் யாரோ ஒருவர் திட்டமிட்டு நடத்தும் செயலாகவே அது இருந்தது. 

பல சோதிடர்களிடம் காட்டி ஒன்றும் பலன் இல்லை காரணம் அவர்கள் பலன் சொலலுவதோடு  சரி அதன் பிறகு ஒன்றும் நடைபெறாது.  அதன் பிறகு நானே படித்து தெரிந்துக்கொண்டேன். படித்த பிறகு தான் தெரிந்து நமது ஜாதகத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது.

நம்மால் ஒரு வளர்ச்சியும் அடையமுடியாது என்பதை தெரிந்துவிட்டது. அதன் பிறகு இதனை வழிபாடு செய்து ஒன்றும் அகற்றமுடியாத ஒரு நிலை ஏற்பட்டதை நினைத்து கவலைப்பட்டேன். அப்பொழுது தான் எனது பெரியப்பாவின் பையன் எனது தம்பி சொன்ன ஐடியா. ஜாதககத்தை வைத்து எதுவும் செய்யமுடியாது சாமியாரை பிடித்தால் இதற்கு வழி கிடைக்கும் என்று சொன்னான். நான் எங்கு போய் சாமியாரை தேடுவது என்றேன். அவன் நான் பார்க்கிறேன் என்றான்.

தம்பி பல சாமியார்களை பார்த்த பிறகு தான் எனக்கு சாமியார்கள் கூட பழக்கம் ஏற்பட்டது. எங்களுக்குள் ஒரு வெறி இருந்தது. கடவுள் என்ன நமக்கு விதி விதிப்பது நம்ம விதியை நாம் கையில் எடுக்கவேண்டும் என்பது மட்டுமே. இது மிகவும் அசாத்தியமானதாக இருந்தால் கூட இதனை செய்யவேண்டும் என்பதில் இருவரும் பிடிவாதமாக இருந்தோம். 

பலநாட்கள் தூககத்தை தொலைத்து இரவு நேரத்தில் கூட சென்று தேடிய நாட்கள் உண்டு. பல துறவிகளை தம்பியும் நானும் சந்தித்து உண்டு. பல பேர்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் எங்களுக்கு ஒன்றும் உடன்பாடு ஏற்படவில்லை. கடைசியாக முதலில் எனது தம்பி சந்தித்த ஆள் எனது குரு. அதன் பிறகு நடந்த கதை உங்களுக்கு தெரியும்.

ஒரு நபரை கண்டுபிடித்துவிட்டோம் நம்ம ஜாதகத்தை கொடுத்து செய்ய சொல்லலாம் அவருக்கு என்ன வேண்டுமோ அதனை செய்துவிடுவோம் என்ற எண்ணம் மட்டுமே முதலில் இருந்தது. அதன் பிறகு இதனை இவர் நமக்கு கற்றுக்கொடுத்தால் நாம் பிறர்க்கு செய்யமுடியும் என்று எண்ணம் ஏற்ப்பட்டது. 

குரு அவர்கள் நீ கற்றுக்கொள் என்று தான் முதலில் சொன்னார். உடனே நானும் கற்றுக்கொண்டேன். கற்றுக்கொண்ட விசயங்கள் அனைத்தும் பொக்கிஷம் என்று தான் சொல்லவேண்டும்.இன்றைக்கு தேதியில் என்னை சந்திப்பவர்களுக்கு நன்மை நடைபெறுகிறது என்றால் இது மட்டுமே காரணம்.

இந்த கலையை பிறர்க்கு கொடுக்கமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது பிறர்க்கு கலையை கொடுக்கவேண்டும் என்றால் அவர் எனது துணைவராக இருப்பார். குடும்பத்தில் உள்ள நபர்களாக அந்த நபர் இருப்பார். கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காத ஒரு பொக்கிஷமாக இருக்கிறது. என்னை நாடிவரும் நபர்களுக்கு பிரச்சினை தீரும்.

பிரச்சினையை தீர்க்கும்பொழுது ஒரு சின்ன சிக்கல் ஒன்று உள்ளது. சின்ன பிரச்சினை உடனே தீர்ந்துவிடும். பெரிய பிரச்சினை என்றால் சம்பந்தப்பட்ட நபர் பல தடவை என்னை சந்திக்கவேண்டிருக்கும். 

கிரகங்கள் அதன் வேலையை நிறுத்தவே நிறுத்தாது அது வேலை செய்துக்கொண்டே இருக்கும். ஒரு ஜாதகத்தில் ஒரு வீடு பிரச்சினை என்றால் அந்த வீட்டின் வழியாக வரும் கெடுதலை தடுக்க ஒரு சாதாரணமனிதர் செய்யும் பரிகாரம் என்பது வேலை செய்யாது. ஒரு மகானை நீங்கள் தேடிச்சென்றால் அவர் செய்வார். கண்டிப்பாக அந்த வீட்டின் வழியாக நடைபெறும் கெடுதல் பலன் வரவே வராது.

நான் மகான் அல்ல .குரு மகான் அவரை வைத்து செய்துவிடுவேன்.ஒவ்வொரு மகானும் செய்யும் வேலை கிரகங்களின் இயக்கத்தை மாற்றுவது மட்டுமே. 

நம்பினால் நம்புங்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆன்மீக பயணங்கள்


வணக்கம் நண்பர்களே!
ஒரு மனிதன் வருடத்திற்க்கு ஒரு முறையாவது அவனின் குடும்பத்தை அழைத்துக்கொண்டு வெளியிடங்களுக்கு சென்று வரவேண்டும். அப்பொழுது வாழும் வாழ்க்கையில் அவன் மகிழ்வோடு வாழமுடியும்.

ஆன்மீகவழியில் பார்த்தால் ஒரே இடத்தில் இருந்துவிட்டால் அந்த வாழ்க்கையிலேயே ஒரு பற்று வந்துவிடும். பற்று வந்துவிட்டால் உங்களுக்கு கர்மம் வந்துவிடும். என் வீடு என் குடும்பம் என்று வாழஆரம்பித்துவிடுவீர்கள் அப்புறம் மரணம் என்பது உங்களுக்கு பயமுறுத்தும் ஒரு விசயமாக இருக்கும். விடைபெறமுடியாத ஒரு நிலை ஏற்படும். 

வெளியிடங்களுக்கு சென்று வரும்பொழுது உங்களின் வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும். நீங்கள் எத்தனையோ மகான்களை எல்லாம் பார்த்திருப்பீர்கள் அவர்கள் எல்லாம் ஒரு இடத்தில் இல்லாமல் அனைத்து இடங்களும் சென்று வருவார்கள். கடவுள் தன்னுள் இருக்கிறார் என்று சொல்லும் மகான்கள் கூட வெளியிடங்களை சுற்றி பாரக்கிறார்கள். மனித வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கும் நம் மாதிரி ஆட்கள் வெளியிடங்களுக்கு சென்று வருவதில்லை. ஒரே இடத்தைபிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறோம்.

இனிமேல் நீங்கள் வருடத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் உங்களுக்கு விடுப்பு கிடைக்கும்பொழுது அனைத்து இடங்களையும் சுற்றி பாருங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

காயத்ரி மந்திரம் செய்ய தொடங்கும் நாள்


வணக்கம் நண்பர்களே!
                    நமது ஜாதககதம்பத்தின் வழியாக ஒரு ஆன்மீகப்பயிற்சிக்கு மட்டும் விளக்கம் அளித்து செய்ய சொல்லுவது உங்களுக்கு தெரியும். காயத்ரி மந்திரப்பயிற்சி என்ற ஒன்று தான் அது. எனக்கு தெரிந்த வழிகளை உங்களுக்கு எளிமையாக சொல்லித்தருகிறேன். 

காயத்ரி மந்திரம் பல காலங்களாக இருந்து வருவது உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும். காயத்ரி மந்திரத்தை அனைவரும் செய்யவேண்டும் என்பதற்க்காக இதனை ஆண் பெண் என்று பாராமல் செய்ய சொல்லிக்கொள்கிறேன். பொதுவாக பெண்களுக்கு எந்த ஒரு விசயத்தையும் ஆண் சமுதாயம் அவ்வளவு எளிதில் சொல்லிதரமாட்டார்கள். இதில் ஆன்மீகவாதிகளும் விதிவிலக்கல்ல. பெண்களை அனைத்திலும் ஒதுக்கியே வைத்துவிட்டார்கள்.

ஜாதககதம்பம் யாரையும் ஒதுக்கி வைக்காது. அனைவரையும் சேர்த்து வைக்கும். மந்திரங்கள் ஆத்மாவிற்க்கு தானே தவிர உடலுக்கு அல்ல என்பதை நான் அறிவேன்.இந்த காயத்ரி மந்திரத்தை அனைவரும் செய்யலாம். நமது அம்மன் மேல் நம்பிக்கை வைத்து செய்தால் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

ஒரு சிலருக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் என்னை தொடர்புக்கொள்ளும்பொழுது அவர்களின் ஜாதகத்தை பார்த்துவிட்டு இந்த கிரகத்திற்க்கு சென்று தீபம் ஏற்றுங்கள அல்லது அர்ச்சனை செய்யுங்கள் என்று சொல்லுவேன் அவர்களும் செய்வார்கள் அவர்கள் நினைத்த காரியம் வெற்றி அடைந்துவிடும். அதற்கு காரணம் தடைகளை கொடுக்கும் கிரகத்திற்க்கு பரிகாரம் அவர்கள் செய்தவுடன் அம்மன் அவர்களுக்கு வேலையை செய்துக்கொடுத்துவிடும்.

நமது அம்மன் மேல் நம்பிக்கை வைத்து செய்யுங்கள். நாளை முதல் காயத்ரி மந்திரத்தை நீங்கள் பயிற்சி செய்ய ஆரம்பிக்கலாம். செய்ய நினைப்பவர்கள் என்னை தொடர்புக்கொண்டு வழிமுறைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Wednesday, January 1, 2014

அம்மனின் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. பல பேர்க்கு நானே போன் செய்து பேசினேன். அதற்கு காரணம் அவர்களுக்கு நமது அம்மன் துணை செய்யும் என்ற காரணத்தால் மட்டுமே. 

பெண்களுக்கும் போன் செய்து பேசினேன் அவர்கள் தவறாக நினைக்க வேண்டாம் உங்களின் பிரச்சினைக்கு அம்மன் ஒரு நல்லவழியை ஏற்படுத்தி தரும் என்ற காரணத்தால் உங்களுக்கு போன் செய்தேன். பொதுவாக பெண்களை போனில் தொடர்புக்கொண்டு பேசுவது கிடையாது. 

சம்பந்தப்பட்ட பெண்கள் நீங்கள் தொடர்புக்கொண்டு பேசலாம் என்று சொன்னால் மட்டுமே பேசுவேன். மற்றபடி தொடர்பு கொள்வது கிடையாது. நான் தொடர்புக்கொண்டு பேசிய அனைவருக்கும் அம்மன் பூரண அருளை அள்ளி தரும். இன்றும் என்னை பார்க்க ஒரு சில நண்பர்கள் வந்திருந்தனர் புத்தாண்டில் எவ்வளவோ விசயங்கள் உங்களை சுற்றி நடக்கும்பொழுது என்னை பார்க்க வரவேண்டும் என்று எண்ணி வந்த உங்களுக்கு அம்மனின் முழு சக்தியும் கிடைக்கும். 

வந்த ஒரு நபருக்கு அவர் சென்ற பதினைந்தாவது நிமிடம் வேலை செய்ய ஆரம்பித்தது குறிப்பிடதக்கது. லட்சக்கணக்கில் பணத்தை ஒரு விசயத்திற்க்காக இழந்தவர் அவர். அந்த நபரின் கண்ணீரை துடிப்பதற்க்காக அம்மனை முழுவீச்சில் இறக்கி செய்ய வைத்திருக்கிறேன். 

என்னை பார்க்க வந்த அனைத்து நண்பர்களுக்கும் விரைவாக பல நல்ல நிகழ்ச்சிகள் உங்களின் வாழ்க்கையில் நடைபெறுவதை உங்களின் கண் முன்பு தெரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 68


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். குரு தசாவில் சுக்கிரனின் புத்தியை பார்த்தோம். 

குரு தசா சுக்கிரபுத்தி 2 வருடம் 8 மாதம்.

குரு தசா சுக்கிரபுத்தியின் அந்தரநாதர்களின் காலம் எவ்வளவு என்பதையும் முதலில் பார்த்துவிடுவோம்.

அந்தரநாதர்கள்

சுக்கிரன்  5 மாதம் 10 நாள்
சூரியன்   1 மாதம் 18 நாள்
சந்திரன்  2 மாதம் 20 நாள்
செவ்வாய் 1 மாதம் 26 நாள்
ராகு 4 மாதம் 24 நாள்
குரு 4 மாதம் 8 நாள்
சனி 5 மாதம் 2 நாள்
புதன் 4 மாதம் 16 நாள்
கேது 1 மாதம் 26 நாள்

அந்தரநாதர்களையும் கணக்கிட்டு பலனை பார்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் உங்களுக்கு நலத்தையும் நல்வாழ்வையும் இந்த வருடத்தில் தரும். 

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.