Followers

Sunday, February 2, 2014

அம்மா என்ற அன்பு


வணக்கம் நண்பர்களே!
                       உங்களைப்பெற்ற தாயைப்பற்றி ஒன்றை சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். அன்று ஒரு நண்பருக்கு சொன்ன அறிவுரையை உங்களுக்கு சொல்லுகிறேன். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் வேலை தேடி நகரத்திற்க்கு வருகின்றனர். அவர்களுக்கு ஒரு வேலை கிடைத்தாலும் அவர்கள் என்ன செய்கின்றனர் என்றால் நமது அம்மா நீண்ட காலம் இருப்பார்கள் அவர்களுக்கு செய்யவேண்டியது எல்லாம் பிறகு செய்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடுகின்றனர்.

ஒரு சிலருக்கு வேலை கிடைக்காமலும் இருக்கின்றனர். அவர்களால் உண்மையில் செய்யமுடியவில்லை. அது யாராக இருந்தாலும் சரி நகரத்திற்க்கு என்று வேலை தேடி வந்துவிட்டால் உங்களின் கையில் கிடைக்கும் ஒரு சிறிய தொகையாவது உங்களின் தாயிற்க்கு கொடுங்கள் அல்லது ஒரு சிறிய தொகையில் உள்ள ஒரு புடவையை அம்மாவிற்க்கு என்று வாங்கிக்கொடுங்கள்.

இதனை நீங்கள் செய்யும்பொழுது அவர்கள் மறுத்தாலும் அவர்களின் இதயம் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அவர்களின் மனது தனது மகன் அல்லது மகள் உழைப்பால் எடுத்து கொடுத்ததை பல பேர்களிடம் காட்டி மகிழ்வு கொள்வார்கள். வாழ்க்கையில் நாம் செய்யும் இந்த சின்ன விசயம் நிறைந்த மகிழ்ச்சியை கொடுக்கும்.

தனது அம்மாவிற்க்கு இன்னமும் காலம் இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு இருந்தால் வாழ்க்கையில் முடிவு என்பது எப்பொழுது வேண்டுமானாலும் நடைபெறலாம். அம்மா இல்லாமல் போய்விட்டால் அப்புறம் நாம் எத்தனை கோடி சம்பாதித்தாலும் அந்த வாழ்க்கை என்பது வீண். கோடி பணம் இருக்கும் நான் முன்னூறு ரூபாய் செலவு செய்து புடவை வாங்கிக்கொடுக்க தாய் இருக்காது.

காலத்தை தள்ளிபோடாமல் அனைவரும் செய்துவிடுவது நல்லது. நீங்கள் வேலை தேடும் இளைஞர்களாக இருந்தாலும் கூட பரவாயில்லை. நீங்கள் ஒரு உணவு விடுதியில் வேலை செய்தாவது அந்த பணத்தை முதலில் எடுக்க பாருங்கள். உங்களின் உழைப்பில் எடுத்ததாக அது இருக்கட்டும். உங்களை பெற்றது உண்மை அதனால் உங்களின் உண்மை உழைப்பில் இருந்து எடுத்தால் அது நன்றாக இருக்கும். இதுவரை யாரும் செய்யாமல் இருந்தால் உடனே செய்துவிடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மன் தரும் வாய்ப்பு


வணக்கம் நண்பர்களே!
                    இப்பொழுது பல பேர்களுக்கு அம்மன் நல்லது செய்துக்கொண்டிருக்கிறது. கலியுகத்தில் நம்பமுடியாத விசயங்களை செய்து தருகிறது. அப்படி அம்மன் செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கும்பொழுது அது கொடுக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தும்பொழுது மட்டும் மீண்டும் மீண்டும் வாய்ப்பு வரும். 

அம்மன் வாய்ப்பை கொடுக்கும்பொழுது சரியாக பயன்படுத்தவேண்டும். ஒரு நிகழ்ச்சி ஒன்றை சொல்லுகிறேன். ஒருவர் என்னிடம் வந்தார் அவர் உதவி கேட்டு வந்தார். உதவி கேட்டு வரும்பொழுது நான் அவரின் வியாபாரத்தின் அளவு என்ன என்று கேட்டுப்பார்த்தேன். பல கோடிகளை தாண்டுகிறது. பல கோடி போட்டு அந்த வியாபாரம் இன்னமும் பல கோடிகளை போட்டால் தான் வியாபாரம் செய்யமுடியும் என்ற சூழ்நிலை நிலவுகிறது.அப்படியே விட்டுவிட்டாலும் போட்ட முதல் வீணாகபோய்விடும்.

அவரிடம் ஒன்றும் இல்லை நீங்கள் அம்மனின் கோவிலுக்கு வந்து ஒரு பூஜை செய்யுங்கள் என்று சொன்னேன். குறைந்தது மூன்று ஆயிரம் செலவாகும் என்று சொன்னேன். அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. நான் விடாமல் மீண்டும் மீண்டும் அதேயே சொல்லிக்கொண்டே இருந்தேன். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் அவரை சோதனை செய்வதற்க்கு இது தான் சரியான ஒரு வாய்ப்பு.

பல கோடி ரூபாய் வீணாக போட்டவருக்கு குறைந்தது சென்று வர பூஜை செலவு எல்லாம் சேர்த்து ஐந்தாயிரம் தான் தேவைப்படும் ஆனால் அதனை செய்ய அவரின் மனம் இடம் தரவில்லை.அவர் என்னிடம் நீங்கள் மாதாந்திர பூஜை செய்வீர்கள் அல்லவா அதற்கு பணம் தருகிறேன் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட பணத்தை தந்தார். பூஜைக்கு  பணத்தை கொடுப்பதை நாம் மறுக்ககூடாது என்று வாங்கிக்கொண்டேன். என்னுடைய கணிப்பு நான் தொடர்ந்து கேட்டதால் அதனை கொடுத்து இருக்கவேண்டும்.அவர் கொடுத்த பணத்திற்க்கு ஒரளவு நடைபெறும்.

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் பல கோடி செலவு செய்து ஒரு தொழிலை தொடங்கும்பொழுது ஆயிரம் ரூபாய் ஒரு தெய்வத்திற்க்கு செலவு செய்தால் அந்த பல கோடி காப்பாற்றப்படும். இதனை தெரியாமலேயே பல பேர்கள் நஷ்டத்தை அடைகின்றனர்.

என்னிடம் ஒருவர் பணம் கொடுத்தால் கண்டிப்பாக அந்த பணத்தை பல மடங்கு திருப்பிக்கொடுப்பதற்க்கு என்ன செய்யவேண்டுமோ அதனை செய்யாமல் இருக்கவே மாட்டேன். எப்படியும் அது திரும்பி பல மடங்கு வரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

பயம் வேண்டாம்


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று ஒரு நண்பர் என்னை தேடி வந்து சோதிடம் பார்த்தார். அவரின் குடும்ப ஜாதகம் அனைத்தையும் என்னிடம் காட்டி சோதிடம் பார்த்தார். நானும் அவருக்கு பலனை சொன்னேன். நீண்ட நேரம் பேசிவிட்டு கடைசியில் அவருடைய ஜாதகத்தையும் அவரின் காதலி ஜாதகத்தையும் காண்பித்தார்.

ஏன் கடைசியில் அவரின் காதலி ஜாதகத்தை காண்பித்தார் என்றால் நான் எதுவும் திட்டுவேன் என்ற காரணத்தால் அப்படி செய்திருக்கிறார். என்னை பொருத்தவரை காதல் செய்வது தவறு என்று எல்லாம் நான் சொல்லுவது கிடையாது. நீங்கள் உங்களின் காதலின் தனிப்பட்ட விசயங்களில் நான் என்ன செய்யபோகிறேன். உங்களின் தனிப்பட்ட விசயம் அது. பதிவில் திட்டுவது எல்லாம் பிரிந்த காதலியை சேர்த்து தாருங்கள் என்று கேட்பதால் திட்டுவது உண்டு.

உங்களை எல்லாம் நான் காதல் விசயத்தில் திட்டுவது எதற்க்காக என்றால் இருவரும் காதல் செய்துவிட்டு பிரிந்த பிறகு தெய்வத்தை நாடுவது தவறு. காதலிக்கும்பொழுதே தெய்வபக்தி இருக்க வேண்டும். அந்த தெய்வபக்தி இருந்தால் உங்களை சேர்த்து வைக்கும். பிரிந்த பிறகு தெய்வத்தை நீங்கள் தான் வேண்டவேண்டும் எங்களை நாடுவது தவறு.

அதே மாதிரி என்னை பார்த்து நீங்கள் பயப்படதேவையில்லை ஏதாவது செய்துவிடுவார் என்று பயம்கொள்ளவேண்டாம். உங்களை வைத்து நான் சம்பாதிக்கவேண்டும் என்றால் அங்கு வாருங்கள் சித்தரை காட்டுகிறேன். இங்கு வாருங்கள் சிவனை காட்டுகிறேன் என்று சொல்லி ஏமாற்றலாம். அப்படி ஒன்றும் செய்வதில்லை. ஒரு நண்பராக வந்து சந்தித்துவிடடு பேசிவிட்டு செல்லலாம். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

தொட்டு பழகுதல்


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைய உலகம் நாகரீக உலகம் என்று சொல்லிக்கொண்டு மனிதர்கள் நிறைய தவறு செய்கின்றனர். அப்படி ஒரு தவறைப்பற்றி இப்பதிவில் பார்க்கபோகிறோம்.

ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமம் என்று சொல்லிக்கொண்டு ஆண்களும் பெண்களும் சகஜமாக பழகஆரம்பித்துவிட்டனர் அதில் தவறு இல்லை ஆனால் ஒருவரை ஒருவர் தொட்டு பழககூடாது. ஆண்களும் ஆண்களும் கூட இப்படி தொட்டு பழககூடாது. என்ன செய்வது காலத்தின் கோலம் மாறிவிட்டது. 

ஒருவரின் உடலை நாம் தொட்டால் அவரிடம் இருக்கும் கெட்ட எண்ணங்களும் நம்மை தாக்கும் இதனை ஆராய்ச்சி எல்லாம் செய்யகூடாது நம்பி தான் ஆகவேண்டும்.

மனதின் வழியாக தம்மை தாக்குவதை விட அவர்களின் உடலில் இருந்து தாக்குவது எளிதில் நம்மை வந்து அடையும். நம்மோடு பழகும் மனிதர்கள் நம்மிடம் வெளிவேஷம் போட்டுக்கொண்டு பழகலாம் ஆனால் உள்மனதில் தவறான எண்ணங்கள் இருக்கலாம். அப்படி அவர்கள் எதிர்போடு நம்மை தொடும்பொழுது அது நமது உடலை தொட்டு நமது ஆத்மாவையும் காயப்படுத்தும்.

பேருந்தில் பயணம் செய்யும்பொழுது கூட்டமாக தான் இருக்கும் ஆனாலும் அவர்களுக்கும் நமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் இருக்கும். அவர்களின் எண்ணங்கள் நம்மீது கிடையாது. அந்தளவுக்கு நம்மை தாக்காது. நம்மோடு பழகுபவர்களின் எண்ணங்கள் என்ன் என்று சொல்லமுடியாது அல்லவா. பொதுவாக உங்களின் மீது அடுத்தவர்கள் தொட்ட பேசுவதை தவிர்க்க பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, February 1, 2014

அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    பழைய பதிவுகளில் நிறைய உபநிடங்கள் மற்றும் பகவத்கீதை எல்லாம் சொல்லி எழுதிவந்தேன். அதோடு பல புத்தங்களில் உள்ள கருத்தை சொல்லி எழுதினேன். எனக்கு பல பேர்களிடம் இருந்து இதனைப்பற்றி எல்லாம் எழுதுகிறீர்களே உங்களுக்கு நல்ல ஞானம் இருக்கின்றது என்று சொன்னார்கள்.

ஒரு நாள் குரு வந்து பார்த்துவிட்டு உன்னுடைய பதிவில் இராமாயணம் பேசுகிறது பகவத்கீதை பேசுகிறது இன்னும் பல புத்தகங்கள் பேசுகின்றன ஆனால் உன்னுடைய அனுபவம் பேசவில்லை என்று சொன்னார். அப்பொழுது தான் எனக்கு புரிந்தது. 

எல்லாவற்றையும் சொல்லுகிறோம் நாம் என்ன சொல்லுகிறோம் என்பதை சொல்லவே இல்லை என்று நினைத்துக்கொண்டு அன்று முதல் எனது சொந்த அனுபவத்தில் இருந்து மட்டுமே எழுதுகிறேன். எனக்கு அனுபவமாக இருக்கும் சில விசயங்கள் உங்களுக்கு அனுபவமாக இருக்காது.

இனிப்பு என்பதை என்ன தான் நாம் சொன்னாலும் அதனை சாப்பிட்டவர்களுக்கு தான் அதன் சுவை தெரியும். அதுபோல் நான் என்ன தான் ஆன்மீகம் மற்றும் சோதிடத்தைப்பற்றி எழுதினாலும் அதில் நீங்கள் செல்லும்பொழுது மட்டுமே அதன் அருமையை நீங்கள் தெரிந்துக்கொள்ளமுடியும்.

ஜாதககதம்பத்தில் வரும் அனைத்தும் சொந்த அனுபவம். அந்த அனுபவம் ஒருவருக்கு நடந்திருக்கும்பொழுது உங்களுக்கும் நடைபெறும் என்று எண்ணிக்கொண்டு நீங்கள் செய்தால் அந்த அனுபவம் தான் தெய்வீகம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குரு தசா பலன்கள் பகுதி 84


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் ராகு புத்தியைப்பற்றி பார்த்து வந்தோம். ராகு கிரகம் நல்ல நிலைமையில் இருந்தால் மிகப்பெரிய அளவில் பணவரவை எதிர்பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் எளிதாக பணம் கிடைக்கவேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஒரே வருடத்தில் கோடிஸ்வரர் ஆகிவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள் அல்லவா. அவர்களு்ககு இந்த புத்தியில் நடைபெறும்.

இந்த நேரத்தில் நீங்கள் லாட்டரி சீட்டு அல்லது திடிர் பணவரவுகள் வரும் விசயத்தில் கவனத்தை செலுத்தினால் பணவரவு இருக்கும். குரு என்பது அதிர்ஷ்டத்தையும் குறிக்கும் கிரகம் தான் அதனால் செய்வார்.

ஒரு சிலருக்கு திருமணமும் நடைபெறும். ராகுவின் புத்தியில் ஒரு சிலர் திருமணம் செய்யகூடாது என்று கூட சொல்லுவார்கள் ஆனால் ராகு நன்றாக இருககும்பட்சத்தில் திருமணம் செய்வதில் பிரச்சினை இல்லை.திருமணம் நடைபெறும்.

ஒரு சிலர் யாத்திரை செல்வார்கள். தீர்த்தங்களில் நீராட செல்வார்கள்.எங்கு எல்லாம் புனிததலங்கள் இருககின்றனவோ அங்கு எல்லாம் செல்ல வைக்கும். நாம் நினைத்து கூட பார்க்கமுடியாது அந்த இடத்திற்க்கு எல்லாம் செல்லமுடியும்.

காடுகளில் இருக்கும் கோவில் மற்றும் தீர்த்தங்களில் நீராட வைக்கும். சித்தர்களின் கோவிலுக்கு எல்லாம் செல்ல வைக்கும்.ராகு நன்றாக இருந்து புத்தி நடைபெறும் காலத்தில் நல்ல பலனை அனுபவிக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

குழந்தையும் தெய்வமும்


வணக்கம் நண்பர்களே!
                    மாதத்தின் முதல் தேதி நீண்ட நாட்களாகவிட்டது ஜாதககதம்பத்தில் காபி வித் ஜாதககதம்பம்  படித்து நீண்ட நாள்களாகவிட்டது என்று நினைப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். கொஞ்சம் வேலை அதிகம் அதே நேரத்தில் பதிவுகள் எப்படி இருந்தாலும் குறைந்தது ஒரு நாள் மூன்று பதிவாவது தருவது என்து வழக்கம். இதனை கூட அதிகப்படுத்தி தரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். 

பல நண்பர்கள் கூட நான் வெளியூர் சென்று இருக்கும்பொழுது சார் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் பதிவு வராமல் போரடிக்கிறது என்பார்கள் ஏதோ என்னுள் இருக்கும் அம்மன் இத்தனை பேரையாவது திருப்த்திபடுத்துகிறதே என்று நினைத்துக்கொள்வது உண்டு.

நான் வெளியூரில் இருக்கும்பொழுது கூட எனக்கு அந்த வேலையில் அதிக பணம் வரும் ஆனால் எதையோ மிஸ் பண்ணிட்டோம் என்ற ஒரு உறுத்தல் இருக்கும் அது என்னடா என்றால் உங்களுக்கு பதிவு தரவில்லை என்ற உறுத்தல். எப்படியும் சென்னை சென்றுவிடவேண்டும் என்றே நினைப்பேன். நமது நண்பர்களிடம் கூட இதனைப்பற்றி சொல்லியுள்ளேன். அது பக்கம் இருக்கட்டும். சொல்ல வந்த விசயத்தைப்பற்றி சொல்லிவிடுகிறேன். 

ஒரு மனிதனி்டம் தெய்வம் இருக்கின்றது என்பதை நீங்கள் பார்க்கவேண்டும் என்றால் உங்களின் வீட்டில் இரண்டு வயதுக்குள் உள்ள குழந்தை இருந்தால் அந்த மனிதனிடம் கொண்டுகீழே விட்டாலே போதும் அந்த குழந்தை அந்த மனிதனிடம் அவ்வளவு அன்பாக பழக ஆரம்பித்துவிடும். முதல் முறை என்று பார்க்காது குழந்தை. அவ்வளவு அன்போடு பழகும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.