Followers

Saturday, August 2, 2014

ஆன்மீக அனுபவங்கள் பகுதி 169


வணக்கம் நண்பர்களே!
                    நிறைய நண்பர்கள் ஆத்மாவைப்பற்றி உணரவேண்டும் என்று நினைப்பார்கள் அதனால் இந்த பதிவை உங்களுக்கு தருகிறேன். ஆத்மாவைப்பற்றி நிறைய எழுதியிருந்தாலும் இந்த தகவலும் உங்களுக்கு பயன்படும்.

தனியாக உங்களின் வீட்டில் அமருங்கள். இரவில் யாரும் உங்களின் வீட்டில் இல்லாத நேரத்தில் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு தனியாக அமருங்கள். அப்பொழுது உங்களை கவனித்து பாருங்கள். உங்களுக்குள் ஒன்று திரு திருவென்று விழித்துக்கொண்டு இருக்கும். அது உங்களின் கண்கள் கிடையாது அது உங்களின் ஆத்மா. இது ஒரு எளிய முறை.

ஆத்மாவின் ஒளி என்ன என்று பார்க்க ஒரு வழியை சொல்லுகிறேன். தனியாக எங்காவது இருட்டில் செல்லுங்கள். உங்களின் உடலில் உள்ள ஆத்மாவே உங்களுக்கு ஒரு வழியை காட்டும். அதாவது ஒரு சிறிய ஒளிப்போல் காட்ட ஆரம்பிக்கும். முதலில் இது தெரியவராது. இருட்டில் செல்ல செல்ல இது தெரிய வரும். இது வானத்தில் இருந்து வரும் ஒளி கிடையாது. வானத்தில் இருந்தும் ஒளி வரும் அதே நேரத்தில் உங்களுக்குள் இருக்கும் ஆத்மாவின் ஒளியும் தெரியும்.

இதனை முதல் தடவையே அறியமுடியும் ஆனால் உங்களின் மனது பலதரப்பட்ட பழக்கவழக்கத்தில் சிக்கி இருப்பதால் உடனே இதனை அறியமுடியாது. மனது ஆன்மீகத்தைப்பற்றி அதிகம் சிந்திக்கும்பொழுது இந்த பயிற்சி நன்றாக உங்களுக்கு கை கொடுக்கும்.

இன்றே நீங்கள் செய்து பாருங்கள். நீங்கள் ஆன்மீகத்தில் இருந்தால் இதனைப்பற்றி நன்றாக தெரியவரும். இது எளிதான ஒரு வழி. உங்களின் ஆத்மாவை நீங்களே தரிசிப்பது ஒரு பெரிய பாக்கியம். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் ஒரு கேள்வி கேட்டு அனுப்பியிருந்தார் அந்த கேள்வி இது நீங்கள் நிறைய எங்களுக்காக எழுதியுள்ளீர்கள். உங்களை சந்திக்கவும் விடுவதில்லை. எழுதுவதும் எங்களை விரட்டி அடிப்பது போல் எழுதியுள்ளீர்கள். ஆன்மீகவாதிகள் அன்பாக இருப்பார்கள் என்று பார்த்தால் நீங்கள் விரட்டி அடிக்கிறீர்கள். உங்களைப்பற்றி புரிந்துக்கொள்ளமுடியவில்லை.

பொதுவாக என்னை புகழ்வது பிடிக்காது. என்னை வெளிகாட்டிக்கொள்ளவும் நான் விரும்புவதில்லை. ஆன்மீகம் என்பது ஒரு பெரிய விசயம் கிடையாது. அனைவராலும் எளிதில் பயிலக்கூடிய ஒன்று தான். அதனை ஏன் பெரிய அளவில் நாம் விளம்பரம்படுத்த வேண்டும். நீங்களே என்னைப்பாேல் செய்ய முடியும் என்கிறபொழுது வீணாக நாம் ஏன் அலட்டிக்கொள்ளவேண்டும்.

சந்தித்து என்ன செய்ய போகிறீர்கள். காலத்தை வீணடிக்காமல் உங்களின் வேலையில் ஈடுபடும்பொழுது நீங்கள் பெரிய அளவில் உயரமுடியும். அந்த ஒரு காரணத்தால் மட்டுமே நான் யாரையும் சந்திக்கவிரும்புவதில்லை.

ஆன்மீகவாதிகள் அன்பாக இருப்பார்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் யாரிடமும் அன்பாக இருக்கமாட்டேன். ஒவ்வொரு நாட்டின் மக்களைப்பற்றி நான் நிறைய விசயங்கள் தெரிந்துவைத்திருக்கிறேன். இந்தியனின் மிகப்பெரிய விசயம் என்ன என்றால் சென்டிமெண்டில் உங்களை அடிப்பார்கள். 

இந்தியனின் மிகப்பெரிய ஆயுதம் சென்டிமெண்ட் அதனால் நான் உஷாராக இருப்பேன். அன்பு என்பதை இவர்கள் பயன்படுத்துவதே அடுத்தவர்களை அடித்து கீழே தள்ளுவதற்க்கு தான். உங்களிடம் ஆன்மீகவாதிகள் அன்பாக இருக்கலாம் நான் இருக்கமாட்டேன். இங்கு அன்பு என்பது ஏமாற்றுவது என்பதின் மறுபெயர் தான் அன்பு. 

உங்களின் சக்தி அதிகரிக்கும்பொழுது நான் சொல்லுவது உங்களுக்கு புரியும். நானே சக்தியோடு தான் இருக்கிறேன். இதில் எதற்கு அடுத்தவனை தேடிச்சென்றேன் என்று நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள். அந்த நேரத்தில் என்னை பற்றி உங்களுக்கு புரியும். 

உலகத்தில் கீழ்தரமான ஒரு செயல் எது என்றால் ஆன்மீகத்திற்க்காக அடுத்தவனை தேடிச்செல்வது மட்டுமே. நீங்களே என்னைப்போல் வரலாம். நம்பிக்கையோடு வழிபாட்டை செய்யுங்கள். 

நீங்கள் எல்லாம் புத்திசாலிகள் என்று நான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன். யாராவது எதையாவது சொல்லுகிறார்கள் என்று போய் நிற்காதீர்கள். உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்கொள்வது போல் தான் அது. ஒவ்வொரு ஆன்மீகவாதியும் அவனுக்கு என்ன தேவையோ அதற்காக தான் எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள். 

உங்களின் பூஜை அறையில் இருந்தே நீங்கள் அனைத்தையும் சாதித்துக்கொள்ளமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

விரைய தசா பகுதி 36


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சிலருக்கு லக்கினாதிபதி பனிரெண்டாவது வீட்டில் இருந்து தசா நடைபெறும்பொழுது அவருக்கு மரணத்தை சம்பவிக்கவேண்டும் அல்லது மரணத்திற்க்கு ஒப்பான கண்டத்தை சந்திப்பார்.

லக்கினாதிபதியின் தசா தானே என்று இருந்துவிடகூடாது. லக்கினாதிபதி விரையத்தில் இருந்து தசா நடக்கும்பொழுது மரணம் வரும். விரையாதிபதி என்றால் உயிர் விரையமும் நடைபெறும்.

ஒரு சிலருக்கு கேது சூரியன் பனிரெண்டில் இருந்து தசா நடைபெறும்பொழுதும் உயிர் விரையம் வரும். சூரியனும் ஆத்மாக்காரனாக இருப்பதால் இந்த தசாவில் மரணத்தை தருவார்.

ஒரு சிலருக்கு இரண்டாவது வீட்டு அதிபதி அல்லது ஏழாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் இருந்து தசாவை நடத்தும்பொழுது அவருக்கு மரணத்தை கொடுத்துவிடும்.

விரையாதிபதி தசா தானே செலவை மட்டும் விரையம் செய்துவிடும் என்று நினைக்காமல் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருந்து தகுந்த பரிகாரம் செய்துக்கொள்வது நல்லது.

பனிரெண்டாவது வீட்டில் அமரும் கிரகத்திற்க்கு தகுந்தவாறு பரிகாரத்தை செய்துக்கொள்வது நல்லது. அந்த கிரகத்தின் அதிதேவதைக்கும் பரிகாரம் செய்யலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                              நான் ஒருவரை சந்திக்க சென்று இருந்தேன். அவர் ஒரு யோகா வகுப்பு எடுத்துக்கொண்டு இருக்கிறார். ஜாதகத்தில் எல்லாம் அந்தளவுக்கு நம்பிக்கையில்லை. அவர் நல்ல வசதியான வாழ்க்கையை வாழ்கிறார். அப்படி இருந்தும் ஒரு சில பிரச்சினைகள் அவரின் குடும்பத்தில் இருக்கிறது.

அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஒரு யோகா ஆசிரியர் அவருக்கு யோகாவைப்பற்றி வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனை தவிர ஆன்மீகத்தைப்பற்றி அந்தளவுக்கு தெரியவில்லை. அவரிடம் உங்களுக்கு இருக்கும் பிரச்சினையை உங்களின் யோகாவால் தீர்க்கமுடியாது. அதனால் ஆன்மீகத்தைப்பற்றி ஒரளவு படியுங்கள் அதன் பிறகு நாம் இருவரும் சந்தித்து பேசிக்கொள்ளலாம் என்று சொன்னேன்.

இதனை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் நாம் கடவுளை எல்லாம் நம்பாமல் இருக்கலாம் ஆனால் நமது குடும்பத்திற்க்கு என்ன என்ன குறைகள் இருக்கின்றன அதனை எப்படி சரி செய்யமுடியும் என்பதை ஆன்மீகத்தின் துணைக்கொண்டு தான் நாம் அறியமுடியும்.

கடவுள் மறுப்புக்கொள்ளை எல்லாம் வெளியில் காட்டிக்கொண்டாலும் உங்களின் குடும்பத்திற்க்குள் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தின் பிரச்சினையை தீர்க்க ஆன்மீகம் பயன்படுகிறதா என்று பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு ஆன்மீக வழி மட்டும் இல்லை என்றால் நமது குடும்பம் பின்தங்கிய குடும்பமாக மாறிவிடும். ஆன்மீகவழியை பயன்படுத்தி உங்களின் குடும்பத்தின் உள்ள பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆன்மீகம் ஆன்மீகம் என்று சொல்லுகிறார்களே அதில் என்ன தான் இருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டால் உங்களின் குடும்பத்தில் உள்ள பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம். அவரிடம் நமது ஜாதககதம்பத்தின் முகவரியை தந்து இதனை படியுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


Friday, August 1, 2014

விரைய தசா பகுதி 35


வணக்கம் நண்பர்களே!
                    விரைய தசாவைப்பற்றி பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. இப்பொழுது பார்க்கலாம். ஒருவருக்கு சனியும் சூரியனும் சேர்ந்து பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து இருந்தது.

சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சூரியனின் தசா ஆரம்பித்தது. அவர் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தால். சூரியன் தசா ஆரம்பித்தவுடன் அவர் அரசாங்கத்தில் வேலைக்கு சேர்ந்தார். 

அவர் வேலைக்கு சேர்ந்த காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. இரண்டு வருடங்கள் சென்ற பிறகு அவருக்கு பிரச்சினை ஆரம்பித்தது. எப்படி பிரச்சினை வந்தது என்றால் இவர் நிலம் வைத்திருந்தார். அந்த நிலம் விவசாய நிலம். அதில் வேலைக்கு என்று வைத்திருந்த ஆளுக்கு இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

வேலையாட்கள் எல்லாம் சனிக்காரத்துவம் வகிப்பார். சனிக்கிரகம் இவருக்கு வேலையாட்கள் வழியாக பிரச்சினையை ஏற்படுத்தினார். இவருக்கும் இவரின் வேலையாட்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு அது பெரிய தகராறாக மாறி அவரை அடித்துவிட்டார். அது போலிஸ் கேஸ்யாக மாறி இவரின் வேலைக்கே பிரச்சினையாகிவிட்டது. அப்பொழுது இவரை சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள்.

சூரியன் இவருக்கு வேலையை கொடுத்தது. அதனோடு இருந்த சனி இவருக்கு வேறு மாதிரியான பிரச்சினையை கொடுத்தது. விரைய வீட்டில் அமர்ந்து தசாவை நடத்தும்பொழுது அந்த கிரகத்தோடு ஒரு தீமையான கிரகம் அமர்ந்து தசா நடைபெற்றால் நல்லதும் கெட்டதும் மாறிமாறி வரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    திருவாரூர் சரவணன் அவர்கள் அம்மன் பூஜைக்கு பூக்களுக்கு செய்யும் செலவே பத்தாயிரத்தை தாண்டும் என நினைக்கிறேன். என்னுடைய பங்களிப்பை செலுத்த வைத்தற்க்கு நன்றி என்று சொல்லிருந்தார்.

அம்மனுடைய பூஜைக்கு செய்யும் செலவு பத்தாயிரத்தை தாண்டும். வரும் பணத்தை முழுவதும் இதற்கே செலவு செய்கிறேன். இந்த மாதம் கூடுதலாக செலவு செய்தேன். நிறைய பேர்களின் உழைப்பு இதில் இருக்கிறது.

அம்மன் நம்மை வாழ வைக்கிறது. அதற்கு நாம் செய்கிறோம். நாம் எந்தளவுக்கு செய்கிறோமோ அந்தளவுக்கு நமக்கு அம்மன் கொடுக்கும். நான் பூஜை செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். விதவிதமாக பூஜையை செய்துக்கொண்டே இருப்பேன். அதனால் தான் என்னால் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைய முடிந்தது.

நமக்கு கொடுக்கும் அம்மனுக்கு நாம் கணக்கு பார்க்காமல் செய்துக்கொண்டு இருப்பதால் இன்றளவை வரை நாம் பிரச்சினை இல்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். அதனை நீங்களே உணர்வீர்கள். உங்களின் வாழ்க்கையில் நடக்கும் அதிசயத்தை வைத்து நீங்களே பார்த்துக்கொள்ளலாம்.

இந்த பூஜையை முதன் முதலில் ஆரம்பித்தப்பொழுது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பணம் என்னிடம் அதிகம் இல்லை. அப்பொழுது கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள் அனுப்பிய பணம் பெரும்மளவு உதவி புரிந்தது. இன்று பல நண்பர்கள் அனுப்ப தொடங்கிவிட்டார்கள். நன்றியை அவருக்கு தான் நீங்கள் முதலில் சொல்லவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இனிய தொடக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    கடந்த மாதம் குறைந்த பதிவுகளை தரமுடிந்தது. கொஞ்சம் வேலை அதிகமானதால் குறைந்த பதிவுகளை தரமுடிந்தது. இந்த மாதம் அம்மனின் அருளால் உங்களுக்கு நிறைய பதிவுகளை தருகிறேன்.

அம்மன் பூஜை முடிந்து இன்று காலை சென்னை திரும்பிவிட்டேன். ஒவ்வொருவராக இனி மேல் தொடர்புக்கொண்டு பேசுகிறேன். பல பேர்கள் ஜாதகபலனுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இனிமேல் பலன்களை பார்க்கலாம்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு பச்சை பரப்புதல் நீங்கள் செய்யும்பொழுது உங்களின் குலதெய்வத்திற்க்கு உகந்த நாளாக பார்த்து செய்யலாம். குலதெய்வம் தெரியாதவர்கள் அவர்களின் இஷ்டதெய்வத்தை வணங்கலாம். இஷ்டதெய்வத்திற்க்கும் பச்சை பரப்புதல் செய்யலாம்.

ஒவ்வொரு நண்பர்களும் அவர் அவர்களின் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து கடைபிடித்தாலே போதுமான ஒன்று. எப்படிப்பட்ட கிரக தோஷத்தையும் நீக்கும் உங்களின் குலதெய்வம்.

உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு குலதெய்வ வழிப்பாட்டைப்பற்றி சொல்லிவிடுங்கள். அவர்களும் நன்றாக இருக்கவேண்டும். பலர் குலதெய்வ வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள் தான் ஆனால் அவர்களுக்கு எப்படி வழிபாட்டை செய்வது என்பது தெரியாது. அதனால் அவர்களுக்கு சொல்லி கொடுத்து நீங்கள் புண்ணியத்தை பெற்றுவிடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு