Followers

Monday, November 3, 2014

கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி பகுதி 1

வணக்கம் நண்பர்களே!
                      சமீபத்தில் திருப்பூர் சென்று இருந்தப்பொழுது எனது நண்பர் ஒருவரிடம் இந்த பகுதியில் இருக்கும் கோவிலுக்கு செனறு வரலாம் என்று சொன்னேன். அவர் முதலில் சொன்னது கைத்தமலை அல்லது கதித்தமலை என்னும் சொல்லக்கூடிய ஒரு முருகன் கோவிலுக்கு சென்று வரலாம என்று சொன்னர். இடையில் ஒரு அற்புத ஆலயமான சுக்கீரிஸ்வரையும் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது என்பது நீங்கள் அறிந்த ஒன்று.

திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி வழியாக ஈரோடு செல்லும் வழியில் இந்த ஊர் இருக்கிறது. கதித்தமலையில் முருகன் வெற்றி வேலாயுதசுவாமியாக இருக்கிறார். மலையில் இருக்கும் ஒரு அற்புதமான தலம். இதனை தரிசிக்கும் வாய்ப்பும் இந்த ஜென்மத்தில் கிடைத்தற்க்கு அம்மனுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.









நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

நன்றி


வணக்கம் நண்பர்களே!
                      சுக்கீரிஸ்வரர் ஆலயத்தைப்பற்றி சொன்னவுடன் பல நண்பர்கள் அந்த கோவிலை கும்பாபிஷேகம் செய்யலாம் சொல்லுங்கள் அதற்கு எப்படி செய்யவேண்டும் சொல்லுங்கள் என்று கூட எனக்கு மெயிலிலும் போனிலும் விசாரித்தார்கள்.

நமது இந்தியாவில் பல கோவில்கள் இப்படி இருக்கின்றன. இதனை எல்லாம் அந்தந்த பகுதியில் இருக்கும் நண்பர்கள் அதனை தெரிந்துக்கொண்டு அந்த கோவிலுக்கு முறைப்படி என்ன செய்யவேண்டுமோ அதனை செய்யவேண்டும்.

நாம் ஒரு முறை சென்று அந்த கோவிலுக்கு செய்துவிட்டு வரலாம் ஆனால் தொடர்ந்து பூஜை செய்யப்படவேண்டும். கோவில் கட்டுவது பிரச்சினை இல்லை அங்கு தொடர்ந்து பூஜை செய்ய அதிக செலவு ஆகும். அதனால் தான் அந்தந்த பகுதியில் உள்ள நண்பர்களை வைத்து அந்த கோவிலை நன்கு கவனித்து வாருங்கள் என்று அவர்களுக்கு தேவையான உதவியையும் செய்து வருகிறேன்.

உங்களுக்கு நன்றியை தான் இந்த நேரத்தில் சொல்லவேண்டும். இவ்வளவு நாளாக ஜாதககதம்பத்தை படித்து வரும் நண்பர்கள் இந்தளவுக்கு எனது வார்த்தை நம்பியை இதனை எல்லாம் செய்யவேண்டும் என்று நினைக்கும் மனதிற்க்கு நன்றியை சொல்லவேண்டும் இந்த நேரத்தில் கண்டிப்பாக அம்மன் உங்களுக்கு நல்லது செய்யும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Sunday, November 2, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                      BALA said...
Sir,

How to send the contributions to the temple for the Annabishkam for purchase of rice .Thanks

நேற்று என் நண்பரிடம் சொல்லி ஒரு மூட்டை அரிசி வாங்கிக்கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டேன். பொதுவாக கோவிலுக்கு செய்யும் செலவு எல்லாம் ஜாதககதம்பத்தின் வழியாக வரும் பணத்தை வைத்து செய்துக்கொண்டிருக்கிறேன். ஜாதககதம்பத்தின் வழியாக வரும் நண்பர்கள் அம்மன் கோவிலுக்கு மட்டும் பங்குக்கொள்ள வைப்பதை தவிர வேறு எந்த தொந்தரவும் செய்வதில்லை.

ஜாதககதம்பத்திற்க்கு போதிய வருமானம் வந்துக்கொண்டிருப்பதால் நானே பல கோவிலுக்கு பல வருடங்களாக பல நல்ல பணிகளை செய்துக்கொண்டிருக்கிறேன். என்ன ஒன்று என்றால் அதனை வெளியில் காட்டிக்கொள்வதில்லை. 

பல கோவில்களுக்கு மக்கள் யாரும் செல்வதில்லை அந்த கோவிலுக்கு நம்மால் முடிந்த சிறு உதவியை அவ்வப்பொழுது செய்துக்கொண்டு வருகிறேன். ஜாதககதம்பத்தின் வழியாக வரும் பணம் எல்லாம் இப்படி தான் செல்கிறது. என்னுடைய தனிப்பட்ட செலவுக்கு கூட இதில் இருந்து அதிகம் எடுத்துக்கொள்வதில்லை. எனக்கு ஏற்படும் பெரிய செலவுகளை கூட அவ்வப்பொழுது கடன் வாங்கிக்கொண்டு செய்வது கூட உண்டு.

எந்த ஒரு கோவிலுக்கு சென்றாலும் என்னால் முடிந்தளவு உதவியை செய்துக்கொண்டு வருவது உண்டு. இந்த ஆலயத்தை கூட பாருங்கள் நான் பதிவில் தந்தவுடன் பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார். இந்த ஊரில் இருந்துக்கொண்டு எங்களுக்கு கூட தெரியவில்லை என்றார்கள். இப்படி தான் பல கோவில்கள் நம் நாட்டில் இருக்கிறது. 

நான் பல ஊர்களுக்கு செல்லும்பொழுது அந்தந்த ஊரில் உள்ள பழைமையான கோவில்களை எல்லாம் உங்களுக்கு காட்டிவிடுகிறேன். அந்த பகுதியில் நீங்கள் இருந்தால் அதற்கு தேவையான உதவியை செய்துக்கொடுத்துவிடுங்கள். தொடர்ந்து கண்காணித்து செய்துக்கொடுங்கள் அது போதும். 

என்னால் பணவசதி முடியாதப்பொழுது உங்களிடம் கேட்கிறேன். அப்பொழுது நீங்கள் உதவி செய்தால் போதும். உங்களை போல் உள்ள சில நல்ல மனதுடைய நண்பர்களால தான் இந்த உலகம் இயங்குகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Saturday, November 1, 2014

சுக்கிரீஸ்வரர் ஆலயம் பகுதி 3

வணக்கம் நண்பர்களே!
                                               பழமையான கோவில்களை நாம் கவனித்து அங்கு நம்மால் முடிந்த உதவியை செய்தாலே போதும். புது கோவில்களை கட்டவேண்டியதில்லை.
கல்வெட்டு









நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.



சுக்கிரீஸ்வரர் ஆலயம் பகுதி 2

வணக்கம் நண்பர்களே!
                     சுக்கிரிவன் சிவனை வழிப்பட்டதால் இவருக்கு சுக்கீரிஸ்வரர் என்று அழைக்கின்றனர் என்று கோவிலில் பூஜை செய்யும் ஐயர் சொன்னார். அவருக்கு என்னால் முடிந்த ஒரு சிறு தொகையை கொடுத்தேன். ஐயர் என்னோடு வந்த நபரிடம் வரும் ஐப்பசி பெளர்ணமி அன்று நடக்கும் அன்னாபிஷேகத்திற்க்கு அரிசி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு தேவையான உதவியை நாங்கள் செய்வதாக சொல்லிவிட்டு தரிசித்துவிட்டு வந்தோம்.

கன்னிமூலகணபதி


அம்மன் சந்நிதி





நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

சுக்கிரீஸ்வரர் ஆலயம் பகுதி 1

வணக்கம் நண்பர்களே!
                      திருப்பூர் தொழில் நண்பர்களோடு இன்று ஒரு சிவன் கோவிலுக்கு சென்றேன்.  ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட ஒரு கோவில் அது. 

கோவில் இந்திய தொல்லியல் துறையினரிடம் இருக்கிறது.சிவனின் பெயர் சுக்கிரீஸ்வரர். அம்மன் பெயர் ஆவுடைநாயகி. திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் சர்கார்பாளையம் என்ற இடத்தில் அந்த ஆலயம் இருக்கிறது.

இந்த ஆலயம் வெளிநபர்களுக்கு வெளியில் தெரியாது. பல்லாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்பதை ஆலயத்தை பார்க்கும்பொழுதே தெரிகிறது. பல்லாயிரம் வருடங்களாக கோவில் இருந்தால் கண்டிப்பாக அந்த கோவிலில் நாம் வழிபடும்பொழுது நமது கர்மவினை குறையும். நீங்களும் இங்கு சென்று வழிப்பட்டு வாருங்கள்.

ஆலயத்திற்க்கு செல்லும் வழித்தடம்












நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

இனிய தொடக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்கள் போனில் சனிப்பெயர்ச்சியை பற்றி எழுதுங்கள் என்றார்கள். சனிப்பெயர்ச்சி அன்று நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றும் கேட்டார்கள்.

சனிப்பெயர்ச்சிப்பற்றி திரும்பிய பக்கம் எல்லாம் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதிலும் நானும் எழுதி உங்களுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று தான் எழுதவில்லை. சனிப்பெயர்ச்சி கோச்சாரப்படி நடக்கின்ற ஒன்றாக இருந்தாலும் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை எல்லாம் ஏற்படுத்தாது.

சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சரியில்லை என்று தெரிந்ததால் சனிப்பெயர்ச்சி அன்றே நீங்கள் சனிக்கு பரிகாரம் செய்யவேண்டியதில்லை. பொறுமையாக சென்று இந்த மாதத்தில் ஒரு நாள் சென்று சனிபகவானை வணங்கிவிட்டு எள் தீபம் ஏற்றிவிட்டு வாருங்கள். 

சனிபகவானுக்கு ஒரு சிறந்த பரிகாரம் உங்களின் குலதெய்வத்தை அல்லது ஏதாவது ஒரு கிராமதேவதையாக பார்த்து ஒரு பூஜை செய்தால் போதும்.பூஜை செய்யமுடியவில்லை என்றால் சென்று வணங்கிவிட்டு வாருங்கள் உங்களுக்கு நல்லது நடக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.