Followers
Thursday, January 15, 2015
Wednesday, January 14, 2015
நீச குரு
வணக்கம் நண்பர்களே!
நீசத்தைப்பற்றி நேற்றைய பதிவில் சொல்லிருந்தேன். ஒரு கிரகம் நீசம் என்று மட்டும் பார்க்ககூடாது அது எந்த நட்சத்திரத்தில் செல்லுகிறது என்று பார்த்து பலனை சொல்லவேண்டும்.
ஒரு முறை ஒருவர் சோதிடம் பார்க்க வந்திருந்தார். அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கேட்டு வந்திருந்தார். அவரின் ஜாதகத்தை பார்த்தேன். ஐந்தாவது வீட்டு அதிபதி பிரச்சினையில் இருந்தது.குரு கிரகம் மகரத்தில் இருந்தது. குரு கிரகம் நீசம் அடைந்துள்ளது என்று நானும் இவருக்கு குழந்தை இருக்காது என்று முடிவு நினைத்துவிட்டேன். நானும் குழந்தை பாக்கியம் இருக்காது கடவுளை நன்றாக வழிப்படுங்கள் கடவுளாக பார்த்து செய்தால் உண்டு என்றேன்.
அவர் என்னை சந்தித்த பிறகு ஒரு சில மாதங்களில் என்னை சந்தித்து சொன்னார். அவரின் மனைவி கர்ப்பமாக உள்ளார். கடவுளை வழிப்பட்டதால் உண்டு என்றார்.
எனக்கு அப்பொழுது தான் விபரம் தெரிந்தது. குரு கிரகம் மகரத்தில் இருப்பதால் நீசம் அடைந்துவிடாது. திருவோணம் நட்சத்திரத்தில் குரு கிரகம் இருந்தால் மட்டுமே நீசம் அடையும் என்பதை தெரிந்துக்கொண்டேன். அவருக்கு குரு கிரகம் உத்திராட நட்சத்திரத்தில் இருந்ததாக ஞாபகம் இருக்கிறது.
குரு கிரகம் நீசம் அடைந்தால் கர்ப்பசிதைவு ஒரு சிலருக்கு ஏற்படும். குழந்தை பாக்கியம் கண்டிப்பாக இருக்கும். நீசம் அடைந்துவிட்டது என்று கவலைப்படதேவையில்லை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
அனுபவம்
வணக்கம் நண்பர்களே!
என்ன தான் சோதிடத்தில் பெரிய ஆள் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு சோதிடரும் இருந்தாலும் உனக்கு ஒன்றும் தெரியாது என்று ஒரு சில ஜாதகங்கள் வந்து நம்மை திக்குமுக்காட வைத்துவிடும்.
பத்து நாட்களுக்கு ஒரு ஜாதகத்தையாவது இப்படி கடவுள் அனுப்பி நமது மண்டையில் குட்டு வைத்துவிடுவார். இதனை நான் வெளிப்படையாகவே ஒற்றுக்கொள்வேன்.
ஒவ்வொரு ஜாதகத்திற்க்கும் இப்படி பலனை சொல்லும்பொழுது ஒரு எச்சரிக்கையுடன் இருக்கும்படி செய்வதற்க்கு கடவுளே இப்படி அனுப்புகிறார் என்று நான் நினைத்துக்கொள்வேன். நாம் சொல்லுகிற பலனுக்கும் அவர்களுக்கு குறைந்தது 80 சதவீதமாவது உண்மையில் நடக்கவேண்டும்.
எச்சரிக்கை உணர்வு இருப்பதால் நான் சொல்லும் பலன் மிகச்சரியாகவே அமைகிறது. தலைகணம் கொஞ்சம் எகிறும்பொழுது நமக்கு குட்டு கிடைக்கும்.
கிராமங்களில் சோதிடப்பலன் சொல்லும்பொழுது இளைஞர்கள் பயங்கரமாக கேலி செய்வார்கள். அதனை எல்லாம் தாண்டி நாம் சோதிப்பலனை சொல்லவேண்டும். பலவற்றை சமாளித்தால் தான் நாம் நல்ல சோதிடர் என்று பெயர் வாங்கமுடியும். இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு நடைபெற்று இருக்கிறதா?
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
அம்மன் அருள்
வணக்கம் நண்பர்களே!
நான் சும்மா இருந்தாலும் அம்மன் சும்மா இருக்காது. எங்கிருந்தாவது எனக்கு ஆட்களை அனுப்பிக்கொண்டே இருக்கும். அம்மனை நான் துதிக்கொண்டே இருப்பதால் அப்படி நடைபெறுகிறது. எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் அம்மனை பூஜிக்காமல் இருப்பதில்லை.
ஒரு சிலர் என்னிடம் வந்து இதனை நீ செய்துக்கொடுத்தால் உனக்கு இதனை நான் செய்து தருவேன் என்பார்கள். இது எல்லாம் நடந்தால் தருகிறேன் என்பது போலதான் இருக்கும். நான் அவர்களிடம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வந்துவிடுவேன்.
ஒருவர் எனக்கு நன்மை செய்யார் என்று எதிர்பார்ப்போம் ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஒருவர் வந்து எங்களுக்கு உதவி செய்வார். இவர் தான் எனக்கு உதவி செய்யார் என்று நான் ஒருபோதும் நினைப்பதில்லை. ஒரு மனிதனை நம்பவதைவிட நாம் வைத்திருக்கும் சக்தியை நம்பவேண்டும். அது எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும் என்ற நினைப்பு உனக்கு எந்த நாளும் இருக்கவேண்டும் என்று குரு சொல்லுவார்.
ஒரு சக்தியை நீங்கள் நம்பவதாக இருந்தால் தயவு செய்து மனிதனை நம்பவேண்டாம் சக்தியை மட்டும் நம்புங்கள். அது எந்த ரூபத்திலாவது வந்து உங்களை காப்பாற்றிவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Tuesday, January 13, 2015
நீச சனி
வணக்கம் நண்பர்களே!
நம்மிடம் வரும் ஜாதகத்தை வைத்தே உங்களுக்கு பாடம் நடத்தமுடியும். நிறைய ஜாதகங்களை அனுபவ ரீதியாக உங்களுக்கு கொடுக்கமுடியும். அந்தளவுக்கு ஜாதகங்களை நான் நேரிடையாக அவர்களின் வாழ்க்கை பார்த்து கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஒரு சோதிடனாக வாழ்க்கையை தொடங்கியதால் அனுபவம் அதிகமாக எனக்கு இருக்கிறது. இதனை பெருமையாக உங்களுக்கு சொல்லவில்லை எனது அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.
சனிக்கு மேஷ ராசி நீச வீடு என்று சோதிடம் சொல்லுகிறது. நீச வீட்டில் ஒரு கிரகம் அமரும்பொழுது அதனால் பலனை அந்த ஜாதகருக்கு கொடுப்பதில்லை. ஒரு சில காலத்தில் அது எப்பொழுதாவது பலனை கொடுக்கிறது.
நீசவீட்டில் இருக்கும் கிரகம் எப்பொழுது பலனை கொடுக்கிறது என்பது எனக்கு தெரியாது ஆனால் எப்பொழுதாவது பலனை தருகிறது. சுத்தமாக கொடுக்கவில்லை என்று நாம் அதனை ஒதுக்கியும் தள்ளிவிடமுடியாது. நீசவீட்டில் இருக்கும் கிரகம் ஜாதகன் வேண்டுவதால் பலனை கொடுக்கிறதா என்று கூட தெரிவதில்லை.
மேஷத்தில் சனி இருந்து பிறந்த ஜாதகர்கள் ஒரு தொழிலை நிலையாக நடத்துவதில்லை. வேலை செய்யும் ஜாதகர்களாக இருந்தால் கூட அவர்கள் ஒரு வேலையை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டு வருபவர்களாக இல்லை. ஒரு வருடம் அல்லது ஆறு மாதத்தில் அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலையை பார்க்க தொடங்கிவிடுகிறார்கள். ஒரு சிலர் ஆறு மாதம் வேலை செய்வது ஆறு மாதம் சும்மா வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு இருப்பவர்களாக இருக்கின்றனர்.
ஒரு ஜாதகத்தில் சனிக்கிரகம் நீசமாவது ஒரு பெரிய தொல்லை என்று தான் சொல்லவேண்டும். வாழவும் விடாமல் சாகாவும் விடாமல் ஒரு மனிதனை போட்டு தொந்தரவு செய்தால் என்ன தான் அவன் செய்வான். அப்படிப்பட்ட ஒரு நிலையை நீச சனி கொடுக்கும்.
மேஷத்தில் சனி இருக்க பிறந்தவர்கள். குலதெய்வ வழிபாடு அல்லது கிராம தேவதை வழிப்பாட்டை மேற்க்கொண்டு வாருங்கள். ஒரு வேலை அல்லது ஒரு தொழில் உங்களுக்கு அமையும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
சோதிட அனுபவம்
வணக்கம் நண்பர்களே!
தொழில் செய்யவேண்டும் என்று நிறைய பேர் நினைப்பது உண்டு. என்ன தொழில் செய்யலாம் என்பதை ஜாதகத்தை பார்த்து தேர்ந்தெடுப்பார்கள்.
ஜாதகத்தை பார்த்து தேர்ந்தெடுப்பதற்க்கு தொழில் வீட்டு அதிபதி நவாம்சத்தில் எந்த கிரகத்தோடு சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரகங்களின் காரத்துவம் உடையதொழிலை தேர்ந்தெடுத்து செய்வார்கள்.
பொதுவாக தொழிலை செய்யும்பொழுது இந்த அடிப்படையில் தான் அனைவரும் தொழிலை தேர்ந்தெடுப்பார்கள். இது மட்டும் வைத்து தொழிலை தேர்ந்தெடுக்ககூடாது. தசாநாதன் ஒவ்வொருக்கும் தொழிலில் மாற்றத்தை கொடுத்துவிடுவார்.
ஒரு சில ஜாதகங்களில் தசாநாதன் தொழிலை தருபவர்களாக இருக்கின்றனர். தசாநாதன் நன்றாக வேலை செய்யும் ஜாதகங்களில் இப்படி நடந்துள்ளதை பல பேர்களிடம் நான் பார்த்து இருக்கிறேன்.
நீங்கள் தொழில் செய்கின்றீர்கள் என்றால் உங்களுக்கு நடக்கும் தசாவையும் கவனித்துக்கொண்டு அந்த தொழிலை தேர்ந்தெடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Monday, January 12, 2015
Subscribe to:
Posts (Atom)



