Followers

Wednesday, September 9, 2015

அம்மன் பூஜை


வணக்கம் !
          அம்மன் பூஜை வரும் 13.09.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
தூத்துகுடியை சேர்ந்த திரு கலைராஜன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
ஆம்பூரை சேர்ந்த திரு பிரசன்னகுமார் அவர்கள்
திரு சத்திய சீத்தாராமன் அவர்கள்.
திரு வீரேஷ் சந்தானம் அவர்கள்.
கண்டியூரை சேர்ந்த திரு இராமசுப்பிரமணியன் அவர்கள்

வழக்கம் போல்
திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதலை வையுங்கள். அம்மன் உங்களுக்கு நடத்திக்கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 8, 2015

கேட்பது கிடைக்கும் நினைப்பது நடக்கும்


வணக்கம்!
          இன்று காலை திருச்சிக்கு அருகில் இருக்கும் வயலூர் முருகனை தரிசனம் செல்ல சென்றுருந்தேன். காலையில் தரிசனத்தை முடித்துவிட்டு தற்பொழுது தான் வந்தேன்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி இருக்கின்றது. குறைந்தது அரை மணி நேர பயணத்தில் கோவிலை அடைந்துவிடலாம். 

கேட்பது கிடைக்கும் நினைப்பது நடக்கும் என்று இந்த திருகோவிலைப்பற்றி சொல்லுகிறார்கள். கோவிலைப்பற்றி பல சிறப்புகள் சொல்லுகிறார்கள். மிக பழமையான கோவில் தான் இது. இந்த ஊரை பார்ப்பதற்க்கும் மிகவும் நன்றாக உள்ளது.

மழைக்காலம் ஆரம்பித்தால் நிறைய கோவில்களை தரிசனம் செய்ய செல்வேன். எனக்கு வெயில் காலம் சரிப்பட்டு வராது என்பதால் மழை காலமாக பார்த்து கோவில் தரிசனம் செய்வது உண்டு. 

ஏனோ திடீர் என்று இந்த கோவிலைப்பற்றி எனது வாயாலே சொல்ல வைத்தது. இந்த கோவில் எங்கு இருக்கின்றது என்பதை பிறகு நெட்டில் தேடிப்பார்த்தேன். அதன் பிறகு தான் இந்த கோவிலுக்கு சென்றேன். கடந்த வாரம் வரை இப்படிப்பட்ட ஒரு கோவில் இருக்கின்றதா என்று கூட எனக்கு தெரியாது. இன்று சென்று வந்துவிட்டேன். 

திருச்சி பக்கம் செல்வதாக இருந்தால் அப்படியே இந்த கோவிலையையும் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். முருகனின் அருள் கிடைக்கபெறுவீர்கள்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!

ஐயா

இதற்கு நான் மறுப்பு தெரிவிக்கிறேன். ஏனெனில் அனைவரும் விவசாயத்தை விட்டால் சோத்துக்கு எங்கே போவது?
அப்போ யார்தான் விவசாயம் செய்வது?
நீங்கள் சொன்ன நஷ்ட தொழில் என்பது உண்மைதான்.இருந்தாலும் விவசாயத்தை கைவிட சொல்வது சரியல்ல.
மாற்று வழி கூறவும்.

எம்.திருமால்

நண்பர் தன்னுடைய நிலையை சொல்லியுள்ளார். ஒவ்வொரு தொழில் செய்யும் தொழிலாளி அவர்களின் பையனை எப்படியும் அவர்கள் தொழிலில் அமருவது போல் செய்வார்கள் ஆனால் விவசாய தொழில் செய்யும் விவசாயி மட்டும் அவர்களின் பையனை விவசாய தொழிலில் ஈடுபட நினைப்பதில்லை. இதிலேயே நாம் அந்த தொழிலைப்பற்றி புரிந்துக்கொள்ளலாம்.

விவசாயம் செய்ய வேண்டியதில்லை என்று சொல்லவில்லை. கடன் வாங்கி அந்த தொழிலை செய்யவேண்டிய நிலை ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படும். அப்பொழுது அவர்களுக்கு பெரும் தோல்வி வரும்பொழுது அதனை தாங்கமுடியாது அல்லவா. அதனால் அந்த நேரத்தில் மட்டும் கொஞ்சம் ஒதுங்கி இருங்கள் என்று சொன்னேன்.

ஒரு விவசாயிக்கு ஆத்மார்த்தமாக இருக்கவேண்டும் என்று நான் நினைத்து தான் அதனை சொன்னேன். மறுபடியும் சொல்லுகிறேன் உங்களுக்கு கெடுதல் வரும் நேரத்தில் அடுத்த வேலையை பார்க்கலாம்.

என்னுடைய நிலத்தை அப்படியே தரிசாக தான் போட்டுள்ளேன். எப்பொழுதாவது நல்ல நிலைமை விவசாயத்திற்க்கு ஏற்படும்பொழுது முதல் விவசாயியாக நானே அந்த தொழிலை செய்யவேண்டும் என்பதற்க்காக அந்த நிலத்தை அப்படியே விற்காமல் வைத்திருக்கிறேன். 

எனக்கு பெரிய கஷ்டம் வந்தபொழுது எல்லாம் அந்த நிலத்தை விற்காமல் கடன் வாங்கி தான் சமாளித்தேன். விவசாய புரட்சி ஏற்பட்டு நான் கஷ்டப்பட்டு விளைகிற அனைத்து பொருட்களுக்கும் நானே விலையை நிர்ணிக்கும் உரிமை எனக்கு வரும் என்று காத்துஇருக்கிறேன்.  அப்பொழுது அந்த நிலம் தேவைப்படும் என்று வைத்திருக்கிறேன்.


அம்மன் பூஜையை வரும் ஞாயிற்றுகிழமை வைக்கலாம் என்று இருக்கிறேன். பூஜைக்கு பங்களிப்பை அளிக்கும் நண்பர்கள் தங்களின் பங்களிப்பை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, September 7, 2015

விவசாய தொழில்


வணக்கம்!
          தற்பொழுது தஞ்சாவூர் பகுதி எல்லாம் பயிர் நடவு செய்யும் நாட்களாக இருக்கின்றன. இந்தியாவில் முதுகெலும்பு என்று சொல்லும் விவசாய தொழில் தான் எனது குடும்ப தொழிலாகவும் இருந்து வந்தது. தற்பொழுது அதில் நான் அதிக அக்கறை காட்டுவதில்லை. விவசாய தொழிலை செய்யவில்லை.

விவசாய தொழிலை எனது தந்தை செய்து வந்தார். அதில் ஏற்பட்ட நஷ்டம் மிகப்பெரிய அளவு. அதனை செய்ய வேண்டாம் என்று நான் ஒதுங்கிவிட்டேன். நஷ்டம் ஏற்பட்டாலும் அதனை செய்யவேண்டும் என்று தந்தை சொன்னார். எனக்கு நன்றாக சோதிடம் தெரிந்த பிறகு அதில் ஈடுபட்டால் என்றும் அதில் முன்னேற்றம் அடையமுடியாது என்பது தெரிந்த பிறகு இனி மேல் அதில் ஈடுபடகூடாது என்று முடிவு செய்து நிறுத்திவிட்டோம். 

சோதிடத்தில் ராகு தசா மற்றும் அஷ்டமசனி ஏழரை சனி போன்ற கெடுதல் தரும் நேரத்தில் எந்த தொழில் செய்தாலும் விவசாயதொழில் மட்டும் செய்யவே செய்யகூடாது.  ஒரு வேலை உங்களுக்கு அடுத்த தொழில் ஒன்று இருந்தால் உங்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைப்பதற்க்கு விவசாயதொழிலை செய்யலாம்.

விவசாய தொழில் ஒரு நஷ்டதொழில் என்பது விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிக்கும் புரியும். உங்களுக்கு விவசாய தொழில் நன்றாக வந்துக்கொண்டிருக்கிறது என்றாலும் கூட சோதிடத்தில் கெடுதல் செய்யும் நிலையில் கிரகங்கள் இருக்கும்பொழுது விவசாயதொழில் செய்யவேண்டாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, September 6, 2015

பித்ருதோஷமும் வறுமையும்


ணக்கம்!
          இளம்வயதில் உள்ள நண்பர்களை சந்திக்கும்பொழுது ஒரு சிலர் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் சொல்லி புலம்புவார்கள். ஒரு சிலருக்கு கஷ்டங்களை சொல்லுவதற்க்கு கூட அவர்களுக்கு என்று அக்கறை காட்ட குடும்பத்திலும் சரி நண்பர்கள் வட்டத்திலும் சரி ஆட்கள் இல்லை.

இவர்களின் கஷ்டத்தை சொல்லுவதற்க்கு என்று என்னிடம் வந்து பல மணி நேரம் புலம்புவார்கள். நானும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைப்பது உண்டு.

இளம் வயதில் கஷ்டம் என்பது ஒரு கடுமையான தண்டனை தான். சொல்லபோனால் மிகப்பெரிய பாவமும் அது தான். அந்த கஷ்டத்தை எல்லாம் தாங்கிக்கொண்டு இருந்தால் வாழ்க்கையின் பின் பகுதி மிகுந்த வசதி படைத்தவர்களாக இருப்பதற்க்கு சோதிடத்தில் வழி உண்டு.

இளம் வயதில் அதிக கஷ்டத்திற்க்கு உள்ளாவதற்க்கு சோதிடத்தில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பித்ரு தோஷம் மிகப்பெரிய அளவில் பாதிக்கும். இளம் வயதில் கடுமையான வறுமையை தந்து பின் பகுதியில் அதிக செல்வாக்கை கொடுக்கும்.

இளம்வயதில் வறுமையை கொடுக்கும் நேரத்தில் நீங்கள் மதுபழக்கத்திற்க்கு மற்றும் தீயபழக்கத்திற்க்கு ஆளாக கூடும். அந்த இடத்தில் மட்டும் கவனம் தேவை. உங்களின் முழுசக்தியும் ஒருங்கிணைக்கும்பொழுது மட்டுமே பின்னாளில் வெற்றி பெறமுடியும். நினைத்து பார்க்க முடியாத அளவிற்க்கு வளர்ச்சி இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, September 4, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          இரண்டு நாட்களாக பதிவை தரமுடியவில்லை.  வெளியூரில் இருப்பதால் பதிவு எழுதுவதற்க்கு நேரம் இல்லை. இன்று முதல் தினமும் பார்த்துவிடலாம்.

அடுத்த வாரத்தின் இறுதிற்க்குள் அம்மன் பூஜை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தும் நண்பர்கள் அனுப்பி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, September 1, 2015

முதல் தொடக்கம்


வணக்கம்!
          எத்தனையோ ஜென்மங்கள் கடந்து வந்து இருப்பீர்கள். இந்த ஜென்மங்களில் எல்லாம் நல்லதும் தீயதும் செய்து வந்திருப்பீரகள். நாம் செய்தவைக்கு பரிகாரமாய் இந்த ஜென்மத்தை எடுத்து இருப்பீர்கள். இந்த ஜென்மத்தில் நமக்கு ஏற்படும் தீயவைகளை எடுத்து நல்ல வாழ்க்கையை வாழ்ந்து அதோடு சேர்ந்து கடவுளின் நிலைக்கு செல்வதற்க்கு ஒரு நல்ல வாய்ப்பு நமது புதிய பதிவில் சொல்லப்பட்டு வருகிறது.

ஒன்றை நீங்கள் அடைவதற்க்கு நீண்ட காலம் தேவையில்லை குறைந்தது ஒரு மூன்று மாத காலம் நீங்கள் பயிற்சி செய்தால் போதும் அதனை நீங்கள் கண்டிப்பாக பெற்றுவிடமுடியும்.

உங்களுக்கு கண்டிப்பாக இந்த ஜென்மத்தில் ஏதாவது ஒரு குறை ஏற்பட்டு இருக்கும். அந்த குறையை போக்கி அதனை பெறுவதற்க்கும் ஒரு வழியை புதிய பிளாக்கில் உள்ள பயிற்சி உங்களுக்கு உதவி செய்யும். உதாரணத்திற்க்கு நீங்கள் நீண்ட நாட்கள் வறுமையிலேயே இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த பயிற்சியை நீங்கள் எடுத்து வரும்பொழுது கண்டிப்பாக உங்களின் பொருளாதார வளம் மேம்படும்.

ஒவ்வொரு பரிகாரமாக செய்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. இதனை செய்தாலே போதும் அனைத்தையும் நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும். நான் பயிற்சி செய்ததை நீங்கள் செய்யபோகின்றீர்கள்.

அஷ்டமசனி நடக்கும் நேரத்தில் நாம் எப்படிப்பட்ட பரிகாரங்கள் செய்தாலும் அந்தளவுக்கு எடுபடாது ஆனால் இந்த பயிற்சியை செய்தால் கிரகங்கள் ஒன்றும் செய்யாது.

எல்லாேரும் இதனை செய்யவேண்டும் என்பது எனது விருப்பம். உங்களின் வீடுகளில் இருந்தே அனைத்து பயிற்சியையும் செய்துக்கொள்வது போல் வடிமைத்து இருக்கிறேன். உடனே இணைந்து பயிற்சியை தொடங்குங்கள்.

சென்னையில் சந்திக்க நினைக்கும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு