Followers
Monday, October 5, 2015
அம்மன் பூஜை படங்கள் பகுதி 1
வணக்கம்!
நமது பகுதியில் தொடர்ந்து மழை பெய்துக்கொண்டு இருக்கின்றது. இன்று காலையில் அம்மன் பூஜை நடத்திவிடவேண்டும் என்று முடிவு செய்தேன் ஆனால் காலையிலேயே மழை ஆரம்பித்துவிட்ட காரணத்தால் மதியம் இரண்டு மணிக்கு மழையோடு அம்மன் பூஜை நடத்தவேண்டியதாகிவிட்டது. மழையிலும் முடிந்தளவு முயற்சி செய்து அலங்கரித்தார்கள் நண்பர் இராஜ்குமார் மற்றும் கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Saturday, October 3, 2015
பாக்கியஸ்தானம்
வணக்கம்!
பாக்கியஸ்தானத்தைப்பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறோம். அதனை படித்துவிட்டு ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையிலும் இப்படி தான் நடந்துக்கொண்டு இருக்கின்றது என்று சொன்னார்கள். அனைவருக்கும் நன்றி. நான் எழுதுவது எனது அனுபவத்தில் நடந்ததை எழுதுகிறேன் அது உங்களின் வாழ்விலும் அப்படி வரும்பொழுது அது உங்களுக்கு ஏற்றுக்கொள்கிறது.
நமக்கு அமையும் குருவும் பாக்கியஸ்தானத்தில் இருந்து தான் கிடைக்கிறது. பொதுவாக நான் குருவிடம் இருந்து தான் அனைத்தையும் கற்கிறோம். குருவின் வார்த்தை நமக்கு அறிவை கொடுக்கிறது.
நான் அனைவரிடமும் நன்றாக பழகுவேன் ஆனால் குரு அந்தளவுக்கு பழகமாட்டார். எனக்கு நிறைய தொழில் நண்பர்கள் பழக்கம். இவர்களை என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் எந்தளவுக்கு ஈடுபாடு காட்டுகிறார் என்பது எல்லாம் நான் கவனிப்பதில்லை ஆனால் எனது குரு கவனித்துக்கொண்டு இருப்பார். இதில் ஏதாவது ஒரு பிரச்சினை என்று வரும்பொழுது என்னிடம் குரு சொல்லிவிடுவார். இனி அவர்களிடம் தொடர்பு இருக்ககூடாது என்றுவிடுவார்.
அவர் சொல்லிவிட்டால் அடுத்த பேச்சு என்பது என்னிடம் கிடையாது ஏன் என்றால் பணத்தை சம்பாதித்துவிடலாம் குருவை சம்பாதிக்கமுடியாது. பாக்கியஸ்தானத்தை நாம் காப்பாற்ற வேண்டும் என்றால் இது தான். நாம் எந்த விதத்திலும் அதனை மீறிவிடகூடாது. பாக்கியஸ்தானத்தில் இருந்து கிடைப்பதை நாம் ஒரு சில நேரங்களில் தவறாக ஏதாவது செய்யும்பொழுது நமக்கு பெரிய அடி விழுந்துவிடும்.
நமக்கு ஒன்று கிடைத்து அது நம்மை விட்டு செல்லுகிறது என்றால் பெரும்பாலும் நமது முட்டாள்தனத்தில் தான் நம்மை விட்டு செல்லும். பொறுமையாக அனைத்தையும் கையாண்டால் போதும். பாக்கியஸ்தானம் நமக்கு நிறைய கொடுத்துவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
அம்மன் பூஜை
வணக்கம்!
அம்மன் பூஜை 5.10.2015 திங்கள்கிழமை நடைபெறும். அம்மன் பூஜைக்கு என்று காணிக்கை செலுத்தியவர்கள்.
திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
மயிலாடுதுரையை சேர்ந்த திரு யோகராஜ் அவர்கள்
தூத்துக்குடியை திரு கலைராஜன் அவர்கள்
ஆம்பூரை சேர்ந்த திரு பிரசன்னகுமார் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு விமல் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு மருதுபாண்டியன் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு மருதுபாண்டியன் அவர்கள்
நேரில் வந்து பங்குபெறும் கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்
திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்
அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதலை அம்மனிடம் வையுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
அனுபவம்
வணக்கம்!
ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு விதமான புதுமையான அனுபவம் எனக்கு கிடைக்கும். இந்த முறையும் அது நடந்தது. பல வருடங்கள் நமது ஜாதககதம்பத்தை பின்பற்றும் நண்பர்கள் எல்லாம் இதுவரை சந்திக்காமல் இருந்து இருக்கின்றனர். தற்பொழுது எல்லாம் ஒவ்வொருவராக வந்து சந்திக்கிறார்கள்.
நான் செல்லும் ஊர்கள் அனைத்தையும் முன்கூட்டியே பதிவில் சொல்லிவிடுகிறேன். அந்த நாளில் என்னை வந்து சந்திக்கவேண்டும் என்பதற்க்காக தான் முன்கூட்டியே பதிவில் போடுகிறேன். முடிந்தவரை ஜாதககதம்பத்தை படிப்பவர்களை சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. உங்களின் ஊர்க்கு வரும்பொழுது சிரமம் பார்க்காமல் வந்து சந்தித்துவிடுங்கள்.
ஒவ்வொரு ஊர்க்கும் செல்லும்பொழுது சந்திக்கும் நண்பர்களிடம் புதிய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்வது வழக்கம். ஜாதககதம்பத்தில் சொல்லாத கருத்துக்களை நேரில் சந்திக்கும்பொழுது உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
பொதுவான இடத்தில் எழுதும்பொழுது ஒரு சில கருத்துக்களில் பிடிவாதமாக இருப்பதுபோல் உங்களுக்கு தோன்றும் அது என்னை சந்திக்கும்பொழுது அப்படி இல்லை என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
அம்மன் பூஜை முடிந்த பிறகு மதுரை மற்றும் அருப்புக்கோட்டை செல்லவதாக திட்டம் இருக்கின்றது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Thursday, October 1, 2015
அம்மன் பூஜை
வணக்கம் !
புரட்டாசி மாத அம்மன் பூஜையை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கிறேன். அம்மன் பூஜைக்கு என்று பணம் அனுப்புவர்கள் உடனே அனுப்பி வைத்துவிடுங்கள்.
அம்மன் பூஜைக்கு என்று தொடர்ந்து பணம் அனுப்பியவர்களின் கோரிக்கை கண்டிப்பாக அம்மன் நிறைவேற்றி வைக்கும். பல நண்பர்கள் நமது ஜாதககதம்பத்தில் இருந்து தொடர்ந்து அவர்களின் பங்களிப்பை அளிக்கின்றனர்.
புதியதாக வரும் நண்பர்களும் அம்மனிடம் வேண்டுதலை வைத்து பூஜைக்கு என்று தங்களின் பங்களிப்பை அளியுங்கள். உங்களின் வேண்டுதல் கண்டிப்பாக நடைபெறும்.
இந்த மாதம் அம்மன் பூஜை ஆறு தேதிக்குள் நடத்தவேண்டும் என்று ஒரு நிர்பந்தம் ஏற்பட்டு இருப்பதால் தங்களின் பங்களிப்பை உடனே அனுப்பிவிடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Subscribe to:
Posts (Atom)


