Followers

Sunday, December 4, 2016

எமன்


ணக்கம்!
          இறைவன் எமனிடம் எல்லாேரும் உன்னை கண்டு பயப்படுகிறார்கள் ஏன் இப்படி செய்கிறாய் என்று எமனிடம் கேட்டாராம். பலி உன்மேல் விழுகிறதே அது ஏன் உனக்கு என்று கேட்டாராம். எமன் இறைவனிடம் நீங்கள் பூலோகத்திற்க்கு சென்று தண்ணீர் தூக்கிக்கொண்டிருக்கும் பெண்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று பார்த்து வாருங்கள் என்றாராம்.

இறைவன் பூலோகத்திற்க்கு வந்து பார்த்திருக்கிறார். தண்ணீர் தூக்கும் இடத்தில் பார்த்தால் பெண்கள் அந்த நோயால் அவர் இறந்தார் இந்த நோயால் அவர் இறந்தார் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எமனால் இறந்தார் என்று ஒருவரும் சொல்லவில்லை. 

பலி முழுவதும் நோய்க்கு தான் சென்று இருக்கிறது எமனுக்கு செல்லவில்லை. உங்களுக்கு எமனின் அழைப்பு வந்தால் மனிதன் சென்று தான் ஆகவேண்டும். நாேய் மீது நாம் பலி போட்டுக்கொண்டு இருப்போம். 

ஒரு சிலருக்கு நோய் வந்தால் உடனே சம்பந்தப்பட்ட கிரகத்திற்க்கு பரிகாரம் செய்வார்கள். கண்டிப்பாக செய்து தான் ஆகவேண்டும் அதோடு எமனுக்கும் நாம் பரிகாரம் செய்யவேண்டும். எமன் கோவில் இருக்கும் இடத்திற்க்கு சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வேண்டுதல் வைக்கவேண்டும்.

ஒரு சிலருக்கு நோய் வருவதுபோல் இருக்கும் உடனே இறந்துவிடுவார்கள் அதனால் கிரகத்திற்க்கும் பரிகாரம் செய்யவேண்டும் எமன் வந்து பிடிக்கவேண்டாம் என்று வேண்டுதலை எமன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 3, 2016

இராகு கேது பரிகாரம் பகுதி 5


ணக்கம்!
          பண வரவு மற்றும் குடும்பஸ்தானத்தை காட்டக்கூடிய இடம் இரண்டாவது வீடு. இதில் ஏதோ ஒன்று மட்டும் கொடுக்கும் தன்மையில் தான் இரண்டாவது வீடு இயங்கும்.

பணத்திற்க்கு என்று அலையும் மனிதனிடம் கண்டிப்பாக அவனின் குடும்பம் அந்தளவுக்கு இருக்காது என்பது எனது அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன். பணம் வருகிறது அதனால் நம்ம குடும்பம் நன்றாக இருக்கின்றது என்று ஒரு மகிழ்ச்சி இருக்கும் ஆனால் நாட்கள் ஆக ஆக குடும்பத்தில் உள்ளவர்களால் நிம்மதி போய்விடும்.

நிறைய பணக்காரர்களின் குடும்பத்தில் உள்ள வாரிசுகளுக்கு நல்ல வாழ்க்கை அமையவில்லை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. அவர்களின் வாரிசுகள் ஒழுங்கான ஒரு வாழ்க்கை வாழமுடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.

இரண்டையும் சமமாக இருப்பது போல் பார்த்துக்கொள்ளவேண்டும். பணமும் வேண்டும் குடும்பமும் வேண்டும் என்று நினைத்து இருக்கவேண்டும். ராகு கேது இரண்டாவது வீட்டில் சம்பந்தப்படும்பொழுது அவர்களின் குடும்பத்தில் உள்ள வாரிசுகள் நன்றாக இருக்காது.

உங்களின் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் ராகு கேது சம்பந்தப்பட்டால் உங்களின் வாரிசுகளுக்கும் இப்படி இருந்தால் நீங்கள் இந்த பரிகாரத்தில் உடனே கலந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, December 2, 2016

பெண்களால் எதிர்ப்பா?


வணக்கம்!
          ஒருவருக்கு பெண்கள் வழியில் எதிர்ப்பு வருகின்றது என்று வைத்துக்கொள்வோம் அவர்களுக்கு சுக்கிரன் கிரகம் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம். ஒரு ஆணுக்கு பெண் வழியில் எதிர்ப்பு வந்தால் அது பெரிய சிக்கலாகிவிடும். 

என்ன பெரிய சிக்கல் என்று கேட்கலாம். பெண்ணால் பிரச்சினை என்றால் அவமானம் தானே அதனால் தான் சிக்கல் என்று சொன்னேன்.

நிறைய பகுதியில் மகளிர் காவல்நிலையம் இருக்கும் அந்த மகளிர் காவல்நிலையில் பார்த்தால் கணவன் மனைவி அடிதடி சண்டைக்கு விசாரணை நடைபெறும். அங்கு பார்த்தால் அங்கு இருக்கும் பெண் காவலர்கள் கணவனை போட்டு மிரட்டு மிரட்டு என்று மிரட்டுவார்கள். ஏகா ரகளை அங்கு நடைபெறும். உண்மையில் ஒரு ஆணுக்கு அது மிகப்பெரிய அவமானம் தான்.

நீங்களே பல இடத்திற்க்கு செல்லும்பொழுது கவனித்து பாருங்கள். ஒரு ஆண் ஏதோ ஒரு காரணத்தினால் பெண்களால் அவமானப்படுவார். ஆயிரம் ஆண்கள் இருக்கும்பொழுது ஒருவர் இப்படி அவமானபடுகிறார் என்றால் கண்டிப்பாக அவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருக்காது என்பது தான் உண்மையான ஒன்று.

படிக்கும் நீங்களே ஏதோ ஒரு நாளில் பெண்களால் பிரச்சினை வரும்பொழுது அந்த நேரத்தில் உங்களின் ஜாதகத்தில் சுக்கிரனின் கிரக சுழற்சி உங்களுக்கு நன்றாக இருக்காது. பெண்களால் எதிர்ப்பு தன்மை அதிகம் வந்தால் உங்களின் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை சரியில்லை என்று எடுத்துக்கொண்டு சுக்கிரனின் வழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இராகு கேது பரிகாரம் பகுதி 4


ணக்கம்!
          இராகு குடும்ப ஸ்தானத்தில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்த்து வருகிறோம். ராகு இரண்டாவது வீட்டில் சம்பந்தப்படும்பொழுது அதனை ராகு கேது தோஷம் இருக்கின்ற ஜாதகம் என்ற சொல்லிவிடுவார்கள். அனைவருக்கும் இந்த தோஷம் இருப்பதில்லை என்பது தான் உண்மை. சோதிடத்தில் உள்ள விதியை அப்பிளை செய்யும்பொழுது இது தோஷம் ஆக கணக்கீடு செய்யப்படுகிறது.

இன்றைய காலத்தில் இளைஞர்களுக்கு திருமணம் செய்யும்பொழுது அவர்களை தனிக்குடித்தனம் போக பெரியோர்களே கட்டாயப்படுத்துகிறார்கள். புது தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளவே ஆண்டுகள் செல்லும். அவசர யுகத்தில் அவசரமாக தனிக்குடிதனம் செல்ல சொல்லுவதால் அவர்களும் சென்றுவிடுகிறார்கள்.

தனிக்குடித்தனம் செல்லும் இவர்களிடம் ராகு கேது விளையாட ஆரம்பித்துவிடும். இருவருக்குள்ளும் கடுமையான சண்டை சச்சரவுகளை கிளப்பிவிட்டு அவர்களை சண்டைபோட வைத்துவித்துவிடுகிறது. 

சண்டை முற்றி இருவரும் தன் வீட்டில் உள்ள நபர்களிடம் எங்களை பிரித்து வையுங்கள் என்று சென்றுவிடுகிறார்கள். பெரியோர்களும் இவர்களை பிரித்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள். உண்மையில் இது எல்லாம் நடக்கிறது.

குடும்ப பாரம்பரித்தை திருமண ஆன புது தம்பதிகளுக்கு எடுத்து சொல்லவேண்டும். குடும்ப பாரம்பரியத்தை சொல்லும்பொழுது புதியவர்களும் அதனை கேட்டு இந்த குடும்பத்திற்க்காக நாம் சேர்ந்து வாழவேண்டும் என்று நினைப்பார்கள். பாரம்பரியம் இல்லை என்றால் பிரிக்க தான் நினைப்பார்கள்.

நாம சொல்லவேண்டியவைக்கு வருவோம். இரண்டில் ராகு கேது இருந்தால் பயப்படும் அளவுக்கு இல்லை என்றாலும் வருடத்திற்க்கு ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்யவிட்டால் இதன் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிர தசா

ணக்கம்!
          சுக்கிரதசா நடக்கும் பெரும்பான்மையான நபருக்கு அதிக நோயையும் கொடுக்கிறது என்பது உண்மையான ஒரு விசயம். நாற்பது வயதிற்க்கு மேல் நோய் வருவது இயற்கையாக இருந்தாலும் ஒரு சிலருக்கு இளைமையிலேயே நோய் வருவது கஷ்டமாக இருக்கின்றது.

சுக்கிரதசா ஒருவருக்கு நோயை தருகிறது என்பது சுக்கிரன் தசா நடப்பவர்களுக்கு இது தெரியும். சுக்கிரதசாவில் சுக்கிரன் ஆறுக்குடையவனின் பார்வை அல்லது சம்பந்தப்படும்பொழுது ஏதாவது ஒரு நோயை தரும் என்பது பொதுவிதி. சுக்கிரன் நீசம் பெற்று தசா நடந்தாலும் நோயை தரும்.

சுக்கிரன் என்றாலே நம்ம ஆளுங்க உடனே சர்க்கரை வியாதி என்று சொல்லிவிடுவார்கள். சர்க்கரை வியாதி மட்டும் கிடையாது பல வியாதிகளையும் தான் சுக்கிரன் கொடுக்கிறது. சுக்கிரன் நீசம் பெறும் காலத்தில் கண் சம்பந்தப்பட்ட நோயை கூட கொடுக்கும். 

உடலில் கணையம் பிரச்சினை என்றால் பல நோயைகளை உருவாக்கிவிடும். நாம் தீயகிரகத்தை பற்றி தான் பயப்படுவோம் ஆனால் சுக்கிரன் போன்ற கிரகங்களும் அதிக தீமையை தரும் என்பது சுக்கிரதசாவில் அடிப்பட்டவர்களுக்கு நன்றாக தெரியும்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தது உடலில் ஒரு கட்டி வந்தது அதனை ஆப்ரேஷன் செய்து நீக்க சென்றவர்கள் அதனாலே இறந்ததும் நடந்து இருக்கிறது. 

சுக்கிர தசா நடந்து அவர்களுக்கு நோயை தருகின்றது என்றால் சுக்கிரனுக்கு உரிய பரிகாரத்தை செய்யுங்கள். அவர்களின் ஜாதகத்தை என்னிடம் காண்பித்து அதற்குரிய பரிகாரத்தை செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 1, 2016

இராகு கேது பரிகாரம் பகுதி 3


வணக்கம்!
          ராகு இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டால் எப்படி பலன் கிடைக்கும் என்பதைப்பற்றி பார்க்கலாம். ராகு இரண்டாவது வீட்டில் இருந்தால் வாயில் இருந்து பேசும் வார்த்தை பிறர்க்கு தொந்தரவு அளிக்கும். பேசும் வார்த்தையில் நஞ்சு இருக்கும்.

ஒரு சிலர் பேசுவதால் பிரச்சினையில் மாட்டிக்கொள்வார்கள். உங்களுக்கு இரண்டில் ராகு இருந்து பெண்களிடம் பேசும்பொழுது அதிக கவனத்தோடு இருக்கவேண்டும். வில்லங்க வார்த்தை வந்து பெண்களிடம் அடிவாங்கும் நிலையும் ஏற்படும்.

இரண்டாவது வீடு உங்களின் வீட்டில் உள்ள வாரிசுகளை குறிக்கும். ஐந்தாவது வீடு தானே வாரிசு என்று கேட்கலாம். உங்களின் குடும்ப உறுப்பினரைப்பற்றி குறிப்பிடும் இடம் அதனால் அப்படி சொன்னேன். இன்றைய காலத்தில் திருமணம் முடிந்தவுடன் அவர்கள் தனிக்குடிதனம் சென்றுவிடுகிறார் அல்லவா அப்பொழுது அந்த இடம் அவர்களின் வாரிசை குறிக்கும் இடம். இந்த இடத்தில் ராகு இருந்தால் அவர்களின் வாரிசுகள் ரவுடியாக இருந்தால் பெயர் எடுக்கலாம். ஒரு சிலர் வீணாகவும் போய் இருக்கிறார்கள். ஒரு சிலர் அரசியல் குடும்ப பின்னணி இருக்கின்றது.

இரண்டாவது வீட்டில் ராகு இருக்கும்பொழுது அவர்களுக்கு பணவரவு பெரும்பாலும் சட்டவிரோதமாக இருக்கும். ஒரு சிலர் நல்லபடியாகவும் சம்பாதிக்கிறார்கள். ஒரு சிலருக்கு பணம் வரவே வராது. வங்கியில் இருக்கும் பணநிலைமையை காட்டக்கூடிய ஒரு இடம். இந்த இடத்தில் இருந்தால் உங்களின் வங்கியில் இருக்கும் பணம் களவும் போகும். நெட்டில் இருந்து திருடிவிடுகிறார்கள் என்று சொல்லுகிறார்கள் அல்லவா அது எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக பணவரவு நன்றாக இருக்கும்.

தற்பொழுது இந்தியாவிற்க்கு இந்த இரண்டாம் இடம் பிரச்சினை இருக்கின்றது என்று நினைக்கிறேன். எல்லாேரும் வங்கி வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு திடிர் அதிர்ஷ்டம் போல யாருக்கோ போடவேண்டிய பணத்தை உங்களின் வங்கிகணக்கில் வந்துவிழும். அனைவரும் இந்த பலனை எதிர்பார்க்கவேண்டாம் ஒரு சிலருக்கு நடக்கும்.

மேலும் தொடரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை


வணக்கம்!
          அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம். முதல் தேதியில் இந்த அறிவிப்பை வெளியிட்டதற்க்கு காரணம் எங்கள் பகுதியில் உள்ள வங்கியில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் அல்லது ஆயிரத்து ஐநூறு ரூபாய் தான் கொடுக்கிறார்கள். 

ஒரு சில நாட்களில் வங்கியில் பணம் இல்லை என்று சொல்லுகின்றனர். ஏடிம் வாசலில் கியூவில் நின்ற காரணத்தால் தான் பதிவு எழுதுவது கூட குறைந்தது என்று சொல்லலாம். நம் தொழில் கூட இந்த நேரத்தில் கொஞ்சம் பாதிப்பு இருந்தது.

பொதுவாக எனக்கு எந்த நேரமும் எப்படியும் வாடிக்கையாளர்கள் வந்துக்கொண்டே இருப்பார்கள். பணம் செல்லாது என்று அறிவித்தவுடன் குறைந்தது ஒரு வாரத்திற்க்கு ஒருவர் கூட வரவில்லை அதன் பிறகு தற்பொழுது சீராகிவிட்டது. மக்களை அந்தளவுக்கு பாதித்து இருக்கின்றது. ராகு கேது பரிகாரம் கூட இந்த காரணத்தால் தான் கொஞ்ச தள்ளிவைத்து ஜாதகத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு சார் உங்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும் என்று கேட்டார்கள். என்னை அந்தளவுக்கு பார்க்கும் உங்களுக்கு நன்றி. என்னுடைய பெயரில் இந்த ஜாதககதம்பம் மட்டும் தான் உள்ளது. ஜாதககதம்பத்திற்க்கு வரும் பணம் எல்லாம் முறையான வரி அரசாங்கத்திற்க்கு செலுத்தப்படுகிறது. 

நமது பகுதியில் உள்ள வங்கிகளில் பணம் குறைவாக கொடுப்பதால் இந்த அறிவிப்பை இன்றே வெளியிடுகிறேன். அம்மன் பூஜைக்கு பணம் அனுப்புவர்கள் தற்பொழுதே அனுப்பிவிடுங்கள். பணத்தை எடுப்பதற்க்கு வசதியாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு