Followers

Friday, January 5, 2018

ஏழரை சனி பொற்காலம்


வணக்கம்!
          உங்களுக்கு ஏழரை நடந்து அது வாழ்நாளில் இரண்டாவது சுற்றாக இருந்தால் உங்களுக்கு அது யோகமான ஒரு ஏழரை சனியாகவே இருக்கும். மிகவும் அற்புதமான ஒரு காலக்கட்டம் என்றால் அது ஏழரை சனியின் இரண்டாவது சுற்றாக தான் இருக்கும்.

பெரும்பாலும் ஏழரை சனி என்றாலே அதனை பார்த்து பயம்கொள்ள தான் அதிகம் பேர் நினைப்பார்கள். பயம்கொள்வது இயற்கை தான் ஆனால் இரண்டாவது சுற்றில் பயம்கொள்ள தேவையில்லை. உங்களின் வாழ்க்கையில் ஒரு செட்டில்மெண்ட் கொடுக்கும் காலமாக இருக்கின்றது.

ஏழரை சனியின் இரண்டாவது சுற்றில் பயம்கொள்ளும் ஒரு விசயம் உடல்நிலையில் கொஞ்சம் பிரச்சினை தரும். அதனையும் நீங்கள் நன்றாக உணவை எடுத்துக்கொண்டால் உங்களுக்கு உடல்நிலையிலும் பிரச்சினை வராது.

ஏழரை சனியின் இரண்டாவது சுற்றில் உங்களுக்கு பலன்கொடுக்கவில்லை என்றால் உங்களின் குலதெய்வ வழிபாட்டை அதிகப்படுத்துங்கள் அதோடு உங்களின் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய சடங்குகளை செய்யுங்கள். உங்களுக்கு நல்லகாலம் பிறக்கும்.

ஏழரை சனியின் இரண்டாவது சுற்றில் நிலம் வாங்குவது வீடு கட்டுவது வீடு விலைக்கு வாங்குவது சொத்துகளை சேர்க்கும் யோகம் எல்லாம் கிடைக்கும். ஏழரை சனியின் இரண்டாவது சுற்றி தவறவிடவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 4, 2018

நவஅம்மன்(சண்டி) பொதுயாகம்


வணக்கம்!
          நவஅம்மன்(சண்டி) பொதுயாகம் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு ஜாதகத்தையும் காணிக்கையும் அனுப்பி செய்ய சொல்லிருந்த நண்பர்கள் அனைவருக்கும் அம்மன் அருளால் நல்லது நடக்கும்.

ஒவ்வொரு நாளும் சிறப்பாக செய்து அதன் பிறகு அதனை நமது நண்பர்களுக்கு புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறேன். அதனை பார்த்தே ஒவ்வொரும் தெரிந்துக்கொண்டிருக்க முடியும். 

பொதுவாக இந்த யாகத்திற்க்கு காணிக்கை அனுப்பியிருந்தாலும் இதற்கு செய்த பொருட்செலவு அதிகம். ஏற்கனவே இது திட்டமிட்ட ஒன்று தான். நமது நண்பர்களிடம் ஏற்கனவே கலந்து ஆலோசித்த காரணத்தால் அவர்களின் ஒத்துழைப்பு நன்றாகவே இருந்தது.

பொதுவாக செய்யும்பொழுது சும்மா செய்துவிடாமல் எப்படி கட்டணத்தை செலுத்தி செய்தால் எப்படி செய்தனோ அதனை போல் அதனை விட சிறப்பாக செய்திருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நேரத்தை ஒதுக்கி சிறப்பாக செய்தேன்.

ஒரு சில காலம் சென்ற பிறகு பொதுயாகத்தைப்பற்றி அறிவிப்பு வரும் அப்பொழுது கலந்துக்கொள்ளுங்கள். நவ அம்மன்(சண்டி) தனி யாகம் செய்ய நினைப்பவர்கள் தொடர்புக்கொள்ளலாம். நவ அம்மன் யாகத்திற்க்கு கட்டணம் ஏற்றப்படவில்லை. சேவை நோக்கத்தோடு அது செய்யவேண்டும் என்பதால் அதே கட்டணத்தில் தொடர்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 3, 2018

எது தேவை?


வணக்கம்!
          பொதுவாக எந்த ஒரு பணம் சம்பந்தப்பட்ட பூஜையாக இருந்தாலும் அதில் முதலில் தங்களை இணைத்துக்கொள்வது பணம் நிறைய இருக்கும் நபர்கள் தான். லட்சுமி பூஜை அறிவித்தவுடன் அதற்கு முதலில் போன் செய்து பூஜை செய்ய சொன்னவர்கள் யார் என்று பார்த்தால் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நபர்கள் தான் செய்ய சொன்னார்கள். 

எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் நான் நினைப்பது பணத்தட்டுபாட்டோடு இருக்கும் நபர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக தான் பணத்தை குறைத்து செய்துக்கொண்டு இருக்கிறேன்.

பணம் இல்லை என்று சொன்னவர்கள் எல்லாம் வேறு வேலையில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு எது தேவை எது தேவையில்லாத விசயம் என்பதை முதலில் நீங்கள் புரிந்துக்கொண்டால் தான் உங்களால் முன்னேற்றம் அடையமுடியும்.

பணம் இல்லாதவர்கள் செய்யும் வேலை எல்லாம் தேவையில்லாத வேலையாக தான் செய்துக்கொண்டு இருப்பார்கள். இதனை தவிரக்க அவர்களின் கர்மா விடுவதில்லை என்று நினைக்கிறேன். முதலில் அமைதியாக அமர்ந்து எது நமக்கு தேவை என்பதை யோசித்து அதனை எழுதிவைத்துக்கொண்டு அதனை மட்டும் செய்யுங்கள்.

பணம் போனால் கூட சம்பாதித்துவிடமுடியும். காலம் போனதை யார் வந்தாலும் திருப்பிக்கொடுக்கமுடியும் என்பதை புரிந்துக்கொண்டால் அனைத்தையும் விரைவில் முடித்துக்கொள்ள நீங்கள் நினைப்பீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 2, 2018

சுக்கிரன்


வணக்கம்!
          இந்திராகாந்தி  சொன்ன வார்த்தை என்று சொல்லுவார்கள். இந்தியர்கள் தொடக்கத்தில் காட்டும் வேகத்தை போக போக காட்டமாட்டார்கள். முடிவில் அந்தளவுக்கு காட்டமாட்டார்கள் என்று சொன்னதாக படித்து இருக்கிறேன்.

உண்மையான வார்த்தை என்றால் இது தான். நம்மால் தொடக்கத்தில் காட்டும் வேகம் அதனை தொடர்ச்சியாக கொண்டு செல்வதில்லை. நம்மால் கடைசிவரை காட்டமுடியாதற்க்கு காரணம் நம்மிடம் போதிய ஊட்டசத்து இல்லாத உடல் இருக்கின்றது.

உங்களின் உடல் நல்ல ஊட்டசத்தோடு இருந்தால் அது கடைசிவரை கொண்டு செல்லும். உடல் நன்றாக வேலை செய்யும்பொழுது மனதும் நன்றாக வேலை செய்யும். நம்மால் அனைத்தையும் சரியாக செய்துவிடமுடியும்.

ஒரு தொழில் ஆரம்பிப்பது எளிது ஆனால் அந்த தொழிலை சரியாக கொண்டு செல்வதற்க்கு சுக்கிரனின் ஆற்றல் தேவைப்படும். சுக்கிரனின் ஆற்றல் இருந்தால் உங்களின் உடல் சோர்வு அடையாது. நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் வெற்றியை நோக்கி செல்லும்.

சுக்கிரன் சரியில்லை என்றால் உங்களின் உடல் பலவீனப்பட்டு அதோடு மனதும் சோர்வடைந்து உங்களின் தொழில் நசுங்கப்பட்டுவிடும். இதனை சரிசெய்யும் வித்தையை அறிந்துக்கொண்டு செயல்பட்டால் எந்த காரியத்திலும் வெற்றி பெற்றுவிடலாம்.

அம்மன் பூஜை விரைவில் நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 1, 2018

லட்சுமி பூஜை


வணக்கம்!
          ஜாதககதம்பத்தில் செய்யப்படும் அனைத்தும் சேவை நோக்கத்தோடு செய்யப்படுகிறது. பூஜைகளுக்கு செய்யப்படுகின்ற செலவை வைத்து தான் நான் கட்டணமாக நிர்ணயம் செய்கிறேன். 

எனக்கு இது தொழிலாக இருந்தாலும் என்னுடைய தனிப்பட்ட விருப்பம் மற்றும் செலவுகளுக்கு எல்லாம் இதுவரை நமது நண்பர்கள் எனக்கு தனியாக செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் கட்டணத்தை பூஜைகளுக்கு மட்டும் செய்வதை வாங்கிக்கொள்கிறேன்.

பரிகாரம் செய்துக்கொடுத்து இருக்கிறேன் அதோடு நவஅம்மன்(சண்டி)யாகத்தையும் செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். நவஅம்மன் பொதுயாகத்தை செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். தற்பொழுது ஒன்றை புதியதாக செய்யலாம் என்று முடிவு செய்து அறிவிக்கிறேன்.

நமது நண்பர்கள் வறுமையில் இருந்தால் அவர்கள் கஷ்டத்தில் இருந்தால் அவர்களுக்கு என்று லட்சுமி பூஜை செய்யப்படும். இதற்கு கட்டணம் மிக மிக குறைவு. வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று செய்யப்படும்.  இது ஏற்கனவே தெரிந்த நண்பர்களாக இருந்தால் நல்லது. அடிக்கடி பணக்காரர்கள் செய்யும் இந்த பூஜை உங்களுக்காக இது அறிவிக்கப்படுகிறது. 

கட்டணம் Rs 3000 மட்டுமே

விருப்படும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

Cell No 9551155800
Whatsapp 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன்


வணக்கம்!
          ஒரு மனிதனின் உணவில் 30 சதவீதம் மூளை வேலை செய்ய எடுத்துக்கொள்ளும் என்று படித்து இருக்கிறேன். நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டின் சக்தியில் 30 சதவீதம் மூளைக்கு செல்கின்றது. ஒரு சராசரி மனிதனுக்கு இந்த அளவு என்றால் ஆன்மீகவாதியின் மூளைக்கு அதிகமாகவே எடுத்துக்கொள்ளும்.

பல பதிவுகளில் நான் உங்களிடம் சொல்லிக்கொண்டு வருவது நீங்கள் அதிகமாக ஊட்டசத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லிவருகிறேன். நீங்கள் அனைவரும் ஆன்மீகவாதிகள் என்பதால் இந்த கருத்தை அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகிறேன். அதோடு தற்பொழுது சுக்கிரன் கிரகத்தைப்பற்றி சொல்லிவருவதால் உங்களுக்கு இதனை அதிகமாக சொல்லுகிறேன்.

நாம் குறைந்தது ஒரு வருடத்திற்க்கு மேல் பரிகாரத்தை பரிந்துரை செய்து அதனை செய்துக்கொண்டு வருகிறோம். பரிகாரத்தோடு உங்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவையும் சாப்பிட்டால் எளிதில் உங்களுக்கு நடைபெறும்.

ஊட்டசத்து நிறைந்த உணவை உட்கொண்டால் உங்களை நோக்கி செல்வவளம் வரும் என்பதை அனுபவத்திலும் நான் பார்த்து இருக்கிறேன். இதனை பல முறை நான் சோதனையும் செய்து பார்த்து பலருக்கும் பரிந்துரை செய்துக்கொண்டு வருகிறேன்.

சுக்கிரனின் ஆற்றல் நிறைந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை நீங்கள் சாப்பிட்டால் கண்டிப்பாக சுக்கிரனின் செல்வவளம் உங்களை நோக்கி வந்தே தீரும் என்பது அனுபவ உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இனிய தொடக்கம்

வணக்கம்!
          அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தங்களின் இல்லத்தில் ஆண்டு முழுவதும் அம்மனின் அருள் நிற்க அம்மனிடம் பிராத்தனை வைத்து இந்த ஆண்டை தொடங்குகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு