Followers

Saturday, January 5, 2019

பழனி பாதயாத்திரை


வணக்கம்!
         பொங்கலுக்கு முன்பே அம்மன் பூஜை நடத்தப்படும் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்துங்கள்.

அடுத்தவாரத்தில் பழனி பாதயாத்திரை செல்கிறேன். ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்கிறேன். பாதயாத்திரை மற்றும் பல பூஜைகளால் தான் நவஅம்மன் யாகம் தள்ளி சென்றது. இன்றும் அமாவாசை பூஜை நன்றாக செய்யப்பட்டது.

நம்முடைய நண்பர்கள் அனைவருக்கும் அவ்வப்பொழுது உங்களால் முடிந்தளவுக்கு பாதயாத்திரை மேற்க்கொள்ளுங்கள். உங்களின் ஆன்மா நல்ல நிலையில் இருப்பதற்க்கும் பல விதமான நன்மைகள் இவ்வாழ்க்கையிலும் மறுவாழ்விலும் நடைபெறுவதற்க்கு இப்படிப்பட்ட யாத்திரை அவசியம் மேற்க்கொள்ளவேண்டும்.

பல நண்பர்கள் இதனை செய்துக்கொண்டு வருகின்றீர்கள். உங்களுக்கு எப்பொழுது எல்லாம் நேரம் இருக்கும்பொழுது எல்லாம் யாத்திரையை மேற்க்கொள்ளலாம். இந்த பிறவியை நன்றாக பயன்படுத்திக்கொள்ள இப்படிப்பட்ட யாத்திரையை செய்யவேண்டும்.

பழனிக்கு மட்டும் அல்ல உங்களுக்கு மனதில் தோன்றும் எந்த கோவிலுக்கும் யாத்திரை மேற்க்கொள்ளலாம். ஒவ்வொரு யாத்திரையிலும் உங்களின் ஆன்மா பலப்படுவதை நீங்களே உணரமுடியும். பாத யாத்திரையை முடித்துக்கொண்டு வந்து பதிவில் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். கடந்தகாலத்தை சொல்லுவதில் பயன் இல்லை என்பதால் தற்பொழுதே அறிவித்துவிட்டேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 4, 2019

கேள்வி & பதில்


வணக்கம்!
           நாளை அமாவாசை. நமது ஜாதக கதம்பம் சார்பாக சிறப்பான ஒரு பூஜை செய்யப்படுகின்றது. பெரும்பாலும் இந்த பூஜைகள் வெளியில் சொல்லப்பட மாட்டாது. அதோடு புகைப்படங்களும் வெளியில் காட்டப்படமாட்டாது. உங்களுக்கு அவசியமான வேண்டுதல் இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும். 

நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை கற்று தருவீர்களா அல்லது யாராவது இந்த வித்தையை கற்று தரும் நபர்கள் இருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும் என்று கேட்டார்.

என்னுடைய வேலை பூஜைகள் செய்வது. உங்களோடு என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்வது. பெரும்பாலும் நான் வழிபாட்டை சொல்லிக்கொடுப்பது உண்டு. அதோடு என்னுடைய வேலையை முடித்துக்கொள்வேன்.

பெரும்பாலான ஆன்மீக பயிற்சிகள் கூட பெரியளவில் எல்லாம் இருக்காது. நான் சொல்லி தந்த விசயங்கள் கூட அப்படிப்பட்ட ஒன்றாக தான் இருக்கும். ஒரு சாதாரணமான மனிதனுக்குள்ள பயிற்சி தான் அனைவருக்கும் சொல்லிக்கொடுத்து இருக்கிறேன்.

கூடு விட்டு கூடு பாயும் விசயத்தை எல்லாம் கற்பதை விட ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படையான ஆன்மீக விசயங்களை நீங்கள் கற்றாலே போதும் அதனை தொடர்ச்சியாக செய்து வந்தாலே போதுமானது என்பதால் இதனை சொல்லிக்கொடுக்கிறேன் என்று யாராவது சொன்னால் அதனை எல்லாம் நீங்கள் தேடிச்செல்ல வேண்டியதில்லை. உங்களிடம் இருக்கும் ஆன்மீகத்தை தொடர்ச்சியாக செய்து வாருங்கள் அது போதுமானது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நவ அம்மன் (சண்டி) யாகம்


வணக்கம்!
          நவ அம்மன் (சண்டி) யாகம் பொங்கலுக்கு பிறகு தான் நடத்தப்படுகின்றது. அம்மன் பூஜையை முடித்துவிட்டு நவஅம்மன் (சண்டி) யாகம் நடத்தப்படும். ஒரு சில காரணங்களுக்காக தள்ளி நடத்தப்படுகின்றது. சண்டி யாகத்திற்க்கு பலர் தங்களைப்பற்றிய விபரத்தை தெரிவித்து வருகின்றனர். அனைவரும் சண்டி யாகத்தில் இணைய அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தற்பொழுது ஆன்மீக காலம் என்றே சொல்லலாம். இந்த காலத்தில் பெரும்பாலும் அனைவரும் கோவில் கோவில் என்று தான் இருப்பார்கள். பெரும்பாலும் கோவிலுக்கு செல்வதால் மனிதர்கள் பெரியதாக தங்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்று சொல்லமாட்டார்கள்.

ஆன்மீகத்தில் இணைத்துக்கொள்வதால் அனைத்தையும் தாங்களே சரி செய்துக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையோடு செயல்பட்டுக்கொண்டு இருப்பார்கள். ஆன்மீக பயணத்தை அப்படியே செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். 

காலச்சுழற்சி என்பது ஒரு சில நாட்களிலேயே அனைவரும் மறுபடியும் மாற்றத்தை நோக்கி சென்றுவிடுவார்கள். எப்படி என்றால் தை பூசத்திற்க்கு பிறகு கோவில் பக்கம் அதிகம் செல்லமாட்டார்கள். பிரச்சினையை கண்டு பயப்பட ஆரம்பித்துவிடுவார்கள்.

தினமும் கோவில் கோவிலாக சென்றுக்கொண்டு இருந்தால் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் நல்ல பலனை கொடுக்க ஆரம்பிக்கும். பிரச்சினை என்பது வந்தாலும் நீங்களாகவே அதனை வென்றுவிடும் மனநிலையில் இருப்பீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 3, 2019

நட்சத்திரத்தை வைத்து நாடி


வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் நம்முடைய வேலையை சரியாக செய்ய நினைத்தாலும் ஒரு சில நேரத்தில் கொஞ்சம் தடுமாற்றத்தை சூழ்நிலை உருவாக்கிவிடுகின்றது. காலையிலேயே தரவேண்டிய பதிவை இந்த நேரத்தில் கொடுக்கமுடிகிறது.

நாடியைப்பற்றி நேற்று சொல்லிருந்தேன். ஒரு நண்பர் இதனைப்பற்றி நேற்று இரவே கேள்வி கேட்டுருந்தார். கேள்வி இது தான் எப்படி நம்முடைய நாடி என்ன என்று பார்ப்பது ஜாதகத்தில் அதற்கு என்ன வழி என்று கேட்டார்.

உங்களின் நட்சத்திரத்தை வைத்து நாடியை பார்க்கவேண்டும். உங்களின் வசதிக்காக நாடி மற்றும் நட்சத்திரத்தை கீழே கொடுத்து இருக்கிறேன் படித்து அதனை வைத்து பார்த்துக்கொள்ளுங்கள்.

வாத நாடி அல்லது பார்சுவநாடி

அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.

பித்த நாடி அல்லது மத்தியா நாடி

பரணி, மிருகசீரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.

சிலேத்தும நாடி அல்லது சமான நாடி

கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.

உங்களின் நட்சத்திரத்தை வைத்து உங்களின் நாடியை கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 2, 2019

நாடி


வணக்கம்!
          திருமணப்பொருத்தம் பார்க்கும்பொழுது நாடிப்பொருத்தம் என்ற ஒன்றைப்பற்றி சொல்லுவார்கள். பொருத்தம் பார்ப்பதில் நாடிப்பொருத்தமும் உண்டு. நாடி என்றால் நமது உடலில் ஓடுகின்ற நாடி எந்த நாடி என்பதை காட்டுவதாகும். மூன்று நாடியும் ஓடும் இதில் எந்த நாடி அதிகமான தாக்கம் உங்களின் உடலில் இருக்கின்றது என்று பார்ப்பார்கள். 

ஒரு ஆணின் நாடியும் பெண்ணின் நாடியும் வெவ்வாறாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். வெவ்வாறாக இருந்தால் நாடிப்பொருத்தம் இருக்கும் என்று சொல்லுவார்கள். ஒரு ஆணுக்கு வாதநாடியாக வந்தால் பெண்ணிற்க்கும் வாதநாடியாக வரக்கூடாது என்பார்கள் வேறு நாடியாக வந்தால் பொருத்தம் இருக்கும்.

நாடியை வைத்து தான் மருத்துவமும் பார்ப்பார்கள். எனக்கு தெரிந்தவரை இது ஆயுர்வேதத்தில் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். இதனை கிராமபுறங்களில் நன்றாக பார்ப்பார்கள். வயதான மனிதர்கள் நாடியை பார்த்தே இவர் இத்தனை நாள் தான் உயிரோடு இருப்பார் என்று சொல்லுவார்கள்.

இன்றும் எங்கள் பகுதியில் இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இருக்கின்றனர். பத்து வருடத்திற்க்கு முன்பு இதனை நன்றாக பார்த்து சொல்லிருக்கின்றார்கள். இப்பொழுது உள்ள தலைமுறைக்கு நாடி அந்தளவுக்கு பார்க்க தெரியவில்லை என்று தோன்றுகின்றது.

நாடிப்பொருத்தம் திருமணத்திற்க்கு மட்டும் இல்லை நமது உடல்நிலை எப்படி இருக்கும். எப்படிப்பட்ட நோய் எல்லாம் வரும் என்பதை தெரிந்துக்கொண்டு அதன்படி நடப்பதற்க்கு தான் இதனை எல்லாம் சொல்லிருக்கின்றனர். உங்களின் ஜாதகத்தை எடுத்து எந்த நாடி உங்களுக்கு அதிகமாக இருக்கின்றது என்பதை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இராசி அதிபதி


வணக்கம்!
          ஒவ்வொருவருக்கும் கடவுள் கொடுக்கிறாரோ இல்லையோ அவர்களின் இராசி அதிபதி அவர்களுக்கு முடிந்தளவு நன்மையை செய்துவிடுவார். அவரால் முடிந்தளவுக்கு அந்த இராசிக்காரர்களை காப்பாற்றுவார்.

இராசிக்காரர்களுக்கு கொடுக்கவேண்டும் என்ற நியதி இயற்கை என்று சொன்னாலும் பல ஜாதகர்களை காப்பாற்றி அவர்களை இழுத்துக்கொண்டு செல்வது அந்த இராசி அதிபதி. இராசி அதிபதி நன்றாக ஜாதகத்தில் அமையவில்லை என்றாலும் அந்த இராசி அதிபதி அவரால் ஒரு பெரிய நன்மையை செய்யாமல் விடுவதில்லை.

நம்முடைய ஜாதகத்தில் பிற கிரகங்களை வலுப்படுத்துவதை விட நம்முடைய இராசி அதிபதியை நன்றாக வலுப்படுத்தினால் அதனால் நமக்கு நிறைய நன்மை கிடைப்பதற்க்கு வழி செய்யும். இராசி அதிபதியின் பொதுவாக எடுத்துக்கொண்டு அதற்குள்ள தொழிலை செய்தால் கூட அந்த தொழிலில் வெற்றி பெறலாம்.

ஒரு தொழில் வெற்றி பெறுவதற்க்கு அவர்களின் பத்தாவது வீடு வழி செய்வதை விட இராசி அதிபதி நல்ல வழி செய்துக்கொடுக்கின்றது. ஒரு சிலருக்கு பத்தாவது அதிபதி ஒழுங்காக வேலை செய்யாமல் இருந்தாலும் கூட இராசி அதிபதி நன்றாக வேலை செய்து அவர்களை காப்பாற்றுகின்றது.

இராசி அதிபதியை வலுப்படுத்த நாம் பெரியதாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை. இராசி அதிபதிக்கு ஒரு அர்ச்சனை மட்டும் செய்தால் போதுமானது. எப்பொழுது உங்களுக்கு நேரம் கிடைக்கின்றதோ அந்த நாளில் சென்றுகூட இந்த அர்ச்சனை செய்துவிட்டு வரலாம். நல்ல பலனை நீங்கள் அனுபவிக்கமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 1, 2019

இனிய தொடக்கம்


வணக்கம்!
          அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முழுவதும் உங்களின் வீட்டில் அமைதி நிலைவி ஆனந்தம் பொங்கி ஆரோக்கியத்தோடு வாழ்ந்து அதோடு நல்ல செல்வ செழிப்போடு வாழவேண்டும் என்று அம்மனிடம் பிராத்தனை வைக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு