Followers

Monday, January 13, 2020

ஏழரைச்சனி


வணக்கம்!
          உடல் எந்த வித தவறும் செய்யவில்லை என்றாலும் மனதால் செய்யும் தவறுக்கு உடலும் சேர்ந்து கஷ்டப்படுகின்றது. இன்றைய காலத்தில் உடலால் செய்யப்படும் தவறுகள் குறைவாகவே இருக்கும் ஆனால் மனதால் செய்யப்படும் தவறால் உடலுக்கு அதிகபாதிப்பை தந்துவிடுவதும் உண்டு.

ஏழரைச்சனி என்றாலே இதுவரை இந்த ஜென்மத்தில் நாம் செய்த தவறுக்கு ஏழரைச்சனியின் காலத்தில் நாம்  துன்பத்தை அனுபவிக்கவேண்டும் என்ற ஒரு காலம் போலவே செயல்படும். பலருக்கு ஏழரைசனியின் காலத்தில் தான் உடலுக்கு நுடத்தை கொடுக்ககூடிய ஒரு செயல் நடைபெறும். கை காலில் அடிப்பட்டு அதனால் உடல் துன்படுவது போலவே செய்யும். உடல் துன்பப்பட்டால் மனதும் துன்படும் அல்லவா அதனால் இதனை செய்துவிடுவதும் உண்டு.

ஏழரைச்சனியின் காலத்தில் ஒரு சிலருக்கு பெரிய அடி இல்லாவிட்டாலும் ஒரு சுளுக்கு ஏற்பட்டு அதிக வலியை கொடுப்பது போன்ற ஒரு விசயம் அனைவருக்கும் நடைபெறும். சுளுக்கு ஏற்பட்டால் இந்த காலத்தில் தான் அதிகமான மருந்து வந்துவிட்டது அதனை போடுவார்கள் ஆனால் கிராமபுறங்களில் இதற்க்கு நல்லெண்ணெய் வைத்து தேய்ப்பார்கள்.

திருநள்ளாறு நீங்கள் சென்றாலே அங்கு நல்லெண்ணெய் உடலில் தேய்த்து அதன்பிறகு குளத்தில் நீராடிவிட்டு அதன்பிறகு தான் சாமி தரிசனம் செய்ய செல்வீர்கள்.  நல்லெண்ணெய் தேய்த்து சனிக்கிழமை தோறும் நீங்கள் வீட்டிலேயே நீராடுவதும் நல்ல பரிகாரமாகவே இருக்கும். இதனை ஏழரைச்சனியின்பொழுது மட்டும் இல்லாமல் எல்லா காலத்திலும் செய்து வருவது நல்லது.

சிறப்பு கட்டண பதிவுக்கு இந்த வாரம் கடைசி கட்டணம் செலுத்துவதற்க்கு அதன்பிறகு கட்டணம் அதிகம் என்பதால் உடனே கட்டணத்தை செலுத்திவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 9, 2020

கேள்வி & பதில்


வணக்கம்!
          பல நண்பர்கள் தொடர்ச்சியாக ஏழரைச்சனியைப்பற்றி கேட்டறிந்தனர். வருகின்ற சனிபெயர்ச்சியை முன்னிட்டு தான் அந்த பதிவையே தந்தேன். இனிமேலும் பல பதிவுகளை தருவதற்க்கு உள்ளேன். கட்டணபதிவிற்க்கு பணம் செலுத்தி அதற்க்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தியை தருகிறேன். 

ஏழரைச்சனி என்றாலே அது பெரிய பாதிப்பை கொடுக்ககூடிய ஒரு நிகழ்வாகவே பெருமையான நபர்களுக்கு இருக்கின்றது. இது அனைவருக்கும் பாதிப்பை கொடுக்கும் என்றால் அது கிடையாது என்று சாெல்லலாம் அதற்கு காரணம் அவர்களுக்கு நடைபெறும் தசாநாதனின் வலு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு பாதிப்பு என்பது குறைவாகவாகவே இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் சிறிய பாதிப்போடு போய்விடுவது உண்டு.

நான் அதில் சொல்லிருந்த ஒன்று ஏழரைச்சனி இரண்டாவது சுற்றைப்பற்றி சொல்லிருந்தேன். ஏழரைச்சனியின் இரண்டாவது சுற்றில் இருப்பவர்களுக்கு பொங்கு சனி தானே அது நிறைய செல்வத்தை கொடுக்காத என்றும் ஒரு சிலர் கேட்டனர். பொங்கு சனி என்பதை எடுத்துக்கொள்ளலாம். அனைத்து பிரச்சினையும் முடிவடைந்து அதன் பிறகு அது செல்வத்தை கொடுத்துவிட்டு செல்கின்றது என்று சொல்லலாம். இது கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன?

நிறைய பேருக்கு கடன்கள் ஏழரைச்சனியின் காலத்தில் தான் உருவாகியிருக்கின்றது என்பதையும் நாம் சுட்டிக்காட்டவேண்டும்.  ஏதோ ஒரு விதத்தில் கடன்களை உருவாக்கியது ஏழரைச்சனி என்று பலர் சொல்லிருக்கின்றனர். கடன்கள் உருவாயிருந்தாலும் அந்த கடனை சமாளிக்ககூடிய ஒரு வகையில் பணத்தையும் கொடுத்துக்கொண்டே தான் இருக்கின்றன.

ஏழரைச்சனியின் காலத்தில் ஒருவருக்கு கண்ணில் பிரச்சினை என்பது உருவாகும். உடலில் ஏதோ ஒரு உறுப்பில் அல்லது மொத்தத்தில் வந்தாலும் கண் பிரச்சினை என்பது இருக்கும். கண்ணை சுற்றி கருவளையம் போன்ற ஒன்று உருவாகும். பலருக்கு கண் ஆப்ரேஷன் செய்தது எல்லாம் இந்த ஏழரைச்சனியின் இரண்டாவது சுற்றில் தான் நடந்து இருக்கின்றது.  ஏழரைசனியின் தாக்கம் கண்ணை பார்த்தாலே தெரிந்துக்கொள்ளமுடியும். சனியைப்பற்றி நிறைய தகவலை இனிவரும் பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 7, 2020

ஏழரைச்சனி


வணக்கம்!
          ஒருவருக்கு இரண்டாவது சுற்று ஏழரைச்சனி நடைபெறும்பொழுது அவர்க்கு பெரும்பாலும் ஆட்டி படைத்துவிடும். ஏழரைச்சனி என்றாலே பயம் இருக்கும். இரண்டாவது சுற்று சுற்றும்பொழுது அதனை பொங்கு சனி என்று சொல்லுவார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்லுவார்கள் அதிர்ஷ்டம் அடிக்குதோ இல்லையோ அவர்களுக்கு நிறைய வைத்து செய்துவிடும்.

ஏழரைச்சனி இரண்டாவது சுற்று நடைபெறும் காலத்தில் அவர்களை பார்த்து ஊரே சிரிக்கும்படி அமைந்துவிடுவது உண்டு. இவர்கள் நல்லது செய்தாலும் கூட இவர்களை ஊர் பார்த்து சிரிக்கும்படி அமைந்துவிடும். சிலருக்கு ஏதோ பொதுவிசயத்தில் ஈடுபட்டு அவர்கள் அசிங்கப்பட நேரிடும். தற்பொழுது ஊராட்சியில் தேர்தல் நடந்து அல்லவா இதில் தோற்றவர்களுக்கு பெரும்பாலும் ஏழரைச்சனி நடந்து இருக்கும். 

தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை கையில் இருந்த காசு எல்லாம் போய்விட்டு அதனால் கவலையில் இருப்பவர்களும் இருக்கின்றனர். வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் இருந்து கடைசியில் அது தோல்வியை கொடுத்தது அவர்களுக்கு நடைபெறும் ஏழரைச்சனி என்றால் அது பொய் என்று சொல்லமுடியாது. பலரை இதில் காவு வாங்கியிருக்கின்றது.

ஏழரைச்சனி காலத்தில் பெரும்பாலும் நோயை கொடுக்கும் விதத்தில் செயல்படுகின்றது. ஏழரைச்சனி காலத்தில் தான் உடலில் பல விதமான நோய்கள் எல்லாம் தோன்றுகின்றன. உடலுக்குள் எந்த வித தொந்தரவும் இல்லாமல் இருந்த மனிதன் ஏழரைச்சனி காலத்தில் உடலுக்குள் பிரச்சினை வருவதை கண்டுக்கொள்ளமுடியும். ஏழரைச்சனி இரண்டாவது சுற்று பெரும்பாலும் உடலுக்குள் பிரச்சினையை கொடுக்கின்றது.

ஏழரைச்சனிக்கு என்ன தான் பரிகாரம் என்று கேட்கலாம். இந்த உலகத்தில் நீங்கள் தனிமையானவர்கள் என்பதை காட்டக்கூடிய காலம் என்பதால் உணர்ந்துகூடிய ஒரு வாய்ப்பு உருவாகும். உங்களை சுற்றி இருக்கும் அனைத்தும் போலியானவை என்பதை காட்டக்கூடிய நேரம் அதனால் தனிமையில் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். தனிமையில் இருப்பது தான் சிறப்பான ஒன்று என்று இருங்கள். நிறைய சிவலாயங்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 6, 2020

ஆன்மீகவாதியின் அடையாளம்


வணக்கம்!
          நாம் ஒரு ஆன்மீகவாதியாக இருக்கின்றோமா என்பதை தெரிந்துக்கொள்வதற்க்க பல வழிகள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இதனை சொல்லுவார்கள். எனக்கு உடல் சிலிர்க்கும். எனக்குள் ஒரு மாதிரியான ஒரு உணர்வு வரும் என்று சொல்லுவார்கள். அவர் அவர்களுக்கு தகுந்த மாதிரியான ஒரு கருத்தை சொல்லுவார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளலாம். சக்தி உடலில் ஏறும்பொழுது அதாவது முதன் முதலாலாக உடலில் ஏறும் பொழுது உங்களின் உடல் அதிக சூடு அடையும் இதனை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். நமது உடலில் சக்தி ஏறுகின்றது என்று அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

உங்களின் உடலில் இருந்து ஒரு விதமான வாசனை வீச ஆரம்பிக்கும். இதனை நன்கு உன்னிப்பாக கவனித்து நுகர்ந்து பார்க்கும்பொழுது இதனை தெரிந்துக்கொள்ளலாம். நமக்கு ஏற்படும் கனவில் நாம் அதிகமாக பறப்பது போன்ற ஒரு நிலையில் கனவு வரும் இதுவும் ஆன்மீகவாதியாக நாம் இருக்கின்றோம் என்று தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களின் தலைமுடியை வெட்டாமல் விட்டுவிட்டால் உங்களின் முடி ஜடை போல வரும். முடி ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். இதனை நாம் நன்றாக பராமரித்து வந்தால் கூட அது ஒட்ட ஆரம்பித்துவிடும். பெரியதாக வளரவேண்டும் என்பதில்லை கொஞ்சம் வளர்ந்தாலே அது உங்களுக்கு ஒட்ட ஆரம்பித்துவிடும். இப்படி இருந்தால் நீங்கள் ஆன்மீகவாதியாக இருக்கின்றீர்கள் என்று தெரிந்துக்கொள்ளலாம்.

நம்முடைய மனது எவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்துக்கொண்டு இருந்தாலும் உங்களின் மனதிற்க்குள் ஒரு அமைதி நிலவிக்கொண்டே இருக்கும். ஒரு சண்டை சச்சரவில் இருக்கும்பொழுது கூட உங்களின் மனது அமைதியில் இருக்கும். 

கட்டண பதிவை ஆரம்பிக்கும் நாள்கள் விரைவில் வர இருப்பதால் உடனே இதில் இணைந்துக்கொள்ளுங்கள். பதிவை ஆரம்பித்த பிறகு கட்டணம் பனிரெண்டாயிரம் என்று ஏற்ற இருப்பதால் உடனே பத்தாயிரம் பணத்தை செலுத்தி தங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 3, 2020

சிறப்பு கட்டண பதிவு 5

வணக்கம்!
         ஒரு மனிதனுக்கு மனமகிழ்ச்சி என்பது தொடர்ச்சியாக இருந்துவிடுவதில்லை ஒரு சிலருக்கு ஒரு ஐந்து நிமிடம் இருக்கும் ஒரு சிலருக்கு ஒரு நாள் முழுவதும் இருக்கும் ஒரு சிலருக்கு ஒரு வாரம் முழுவதும் இருக்கும் அடுத்ததாக கவலை பற்றிக்கொள்ளும். மகிழ்ச்சியை தானே மனிதன் விரும்புவான் கவலையை மனிதன் விரும்புவதில்லை இது எதனால் நடைபெறுகின்றது என்றால் இதற்க்கும் புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.

உங்களின் புண்ணிய கணக்கில் நல்லது இருந்து அது இந்த ஜென்மத்தில் கொடுத்தால் உங்களின் வாழ்க்கையில் அதிகபட்ச மகிழ்ச்சியை நீங்கள் அனுபவிக்கமுடியும். மகிழ்ச்சிக்கும் புண்ணியத்திற்க்கும் அதிக சம்பந்தம் இருக்கின்றது. நீங்கள் தொடர்ச்சியாக மகிழ்ச்சியையும் அனுபவிக்கமுடியாது அதன் பிறகு உங்களுக்கு சோகம் வந்துவிடும்.

நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றீர்கள் என்றால் உங்களின் புண்ணியகணக்கில் உள்ள மகிழ்ச்சி செலவு செய்துக்கொண்டு இருக்கின்றது அர்த்தம். அது எவ்வளவு தான் உங்களுக்கு கொடுக்கும் விரைவில் தீர்ந்துவிடபோகின்றது என்று அர்த்தத்தில் அதனை எடுத்துக்கொள்ளவேண்டும். புண்ணியத்தை அதிகரிக்கும் செயலில் ஈடுபடவேண்டும்.



நான் நல்ல வசதி வாய்ப்போடு இருக்கின்றேன். எனக்கு பணவசதி அதிகமாக இருக்கின்றது எனக்கு புண்ணியத்தைப்பற்றி எல்லாம் கவலைப்படதேவையில்லை என்று சொல்லுபவர்களாக இருந்தாலும் எப்பேர்ப்பட்ட  பணக்கார்ரகளுக்கும் மனது மகிழ்ச்சியோடு இருப்பதில்லை ஏதோ ஒரு கவலை அவர்களை தொற்றிக்கொள்ளும் அது வெளியில் தெரியாது.

சோதிடத்தில் உள்ள கிரகங்கள் உங்களின் மனதை ஆட்கொண்டு அது மகிழ்ச்சியையும் கவலையும் தருகின்றது என்று சொல்லுவார்கள். கிரகங்கள் உங்களின் முன்ஜென்மம் மற்றும் இந்த ஜென்மத்தில் உள்ள செயலை வைத்து அது கொடுக்கின்றது என்று சொல்லுவார். இது ஒரு புறம் உண்மை என்று எடுத்துக்கொள்ளலாம். 

ஒரு ஆன்மீகவாதி என்பவன் இதனை கடந்து போய்விடவேண்டும் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். எவ்வளவு பெரிய மகிழ்ச்சி வந்தாலும் ஆடாமல் மற்றும் எவ்வளவு பெரிய கவலை வந்தாலும் சோர்ந்து போகாமல் இருப்பார்கள். இவர்களின் மனநிலையை அந்த நிலைக்கு எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். ஆன்மீகவாதிகள் என்பவர்கள் பெரும்பாலும் கிரகங்களின் தாக்குதலுக்குள் ஆட்படுவதில்லை.

ஆன்மீகவாதியாக எல்லாம் வேண்டியில்லை சாதாரணமான மனிதன் மகிழ்ச்சியாக இநருக்கவேண்டும் அது போதும் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்பவர்களாக இருந்தால் அதற்க்கும் வழி இருக்கின்றது அதனைப்பற்றி நமது கட்டணபதிவில் நிறைய பார்க்கலாம்.

கட்டணபதிவை தொடங்கும் காலம் வந்துவிட்டது உடனே கட்டணத்தை செலுத்திவிடுங்கள். நிறைய பதிவுகள் மற்றும் முன்னேற்றத்திற்க்கு உள்ள விசயங்கள் நிறைய அதில் எழுதி இருக்கிறேன். உடனே விரைந்து கட்டணத்தை செலுத்தி வையுங்கள்.

இன்று நவஅம்மன் யாகம் நடைபெற இருக்கின்றது. நவஅம்மன் யாகத்திற்க்கு காணிக்கை செலுத்தி இருப்பவர் நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 2, 2020

செயலை விரைந்து செய்வோம்


வணக்கம்!
          ஒரு வருடத்தில் வரும் பிறந்தநாள் மற்றும் வருடபிறப்பு எல்லாம் வருவது மக்கள் எல்லாம் சந்தோஷமாக எடுத்துக்கொண்டு அதனை கொண்டாடுவார்கள். இதனை சந்தோஷமாக கொண்டாடுவதை விட நம்முடைய வாழ்வில் நிறைய கடமைகளை எல்லாம் முடித்துக்கொண்டு இருக்கின்றீர்களாக என்பதை எச்சரிக்கை செய்யும் ஒரு நிகழ்வாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

நம்முடைய வாழ்வு என்பது ஒரு மின்னல் போன்றது என்று ஒரு ஆழ்வார் சொல்லிருக்கின்றார். மனிதவாழ்வை ஒரு நொடியில் வந்து சென்றுவிடும் மின்னலோடு ஒப்பிட்டு இருக்கின்றார். அவர் சொன்னது எல்லாம் மனிதவாழ்விற்க்கும் நிச்சயம் இல்லை என்பதை மின்னலோடு ஒப்பிட்டு சொல்லிருக்கின்றார். உங்களின் அருகில் உள்ள நபர்களை கூட பாருங்கள் உங்களோடு பேசிக்கொண்டு இருந்து இருப்பார் அவர் அடுத்த நாெடியில் கூட இறந்து இருக்கலாம்.

அவர்க்கு வந்த மரணம் நமக்கும் அடுத்த நாெடியில் கூட வரலாம். இந்த வாழ்வு நிச்சயம் இல்லாத ஒன்று தான். இதனை நமக்கு அறிவித்துக்கொள்வதற்க்கே இந்த வருடபிறப்பு பிறந்தநாள் எல்லாம் வருகின்றது. 

வருடப்பிறப்பை கொண்டாடிவிட்டு அடுத்தபதிவிலேயே இப்படி பயமுறுத்துவது போலவே சொல்லிருக்கின்றீர்களே என்று நினைக்கலாம். நாம் நமது கடமையும் நமக்குள்ள வேலையையும் விரைவாக முடிப்பதற்க்கு இதனை சொல்லுகிறேன். நம்மால் முடிந்த அனைத்து வேலையையும் செய்யுங்கள் அதனை விரைவாக செய்யவேண்டும் என்பதை சொல்லுவதற்க்கு இதனை சொல்லுகிறேன்.

சாதாரணமாக ஒரு ஆன்மீகவாதி முடிந்தளவு விரைவாகவே தன்னுடைய செயலை எல்லாம் செய்வார்கள். சாதாரணமானவர்களுக்கும் இந்த செயலை விரைந்து செய்யவேண்டும். நிலையற்ற இந்த உயிர் இந்த உடலில் இருக்கும் வரை நல்ல காரியங்களை எல்லாம் விரைந்து செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 1, 2020

இனிய தொடக்கம்


வணக்கம்!
          அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு