Followers

Monday, June 17, 2013

ஞானியை உருவாக்கும் தசா


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சிலருக்கு ஆறாம் வீட்டில் அமரும் கிரகம் அல்லது ஆறாவது வீட்டு அதிபதியின் தசா நடைபெறும் அப்பொழுது அந்த மனிதர்களுக்கு ஏற்படும் அனுபவங்களை கொஞ்சம் பார்க்கலாம்.

ஒரு சிறந்த ஞானியை உருவாக்குவதில் ஆறாம் வீட்டுக்காரருக்கு நிகர் அவர் மட்டுமே. ஒருவன் ஞானியாக உருவாகவேண்டும் என்றால் என்ன அவனுக்கு நடைபெறும். அவனை சுற்றி அப்படியோரு அவலம் நடைபெற்று இருக்கவேண்டும். அவனை நோக்கி ஏகாப்பட்ட தாக்குதல் நடைபெற்று இருக்க வேண்டும். இப்படி நடந்தால் தான் அவன் ஞானத்தை நோக்கி செல்லமுடியும்.

ஆறாம் வீட்டு அதிபதி மோசமாக இருந்து தசா நடைபெற ஆரம்பித்தால் சுற்றி இருக்கும் அனைத்து சொந்தங்களும் அவனுடன் சண்டை போட ஆரம்பித்துவிடுவார்கள். சொந்தங்கள் மீது வெறுப்பு வருமே தவிர பாசம் சுத்தமாக வராது. இவர்களே சொந்தத்தை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். சொந்தங்கள் வழியாக வரும் பந்தம் பாசம் போய்விடும்.

ஏழாவது வீட்டுக்கு விரைய வீடு என சொல்லகூடிய வீடு ஆறாவது வீடு அல்லவா. ஏழாவது வீடு துணையை காட்டும் வீடு அல்லவா. துணைக்கு எதிராக நடைபெறும் தசா ஆறாவது வீட்டு தசா அப்பொழுது என்ன ஆகும். துணைவர் மூலம் பிரச்சினையை சந்திக்க வேண்டும். ஒருவருக்கு துணைவர் பிரச்சினையை கொடுத்தால் எப்படி ஆவார்கள் வாழ்க்கையை வெறுக்காமல் மகிழ்ச்சியாகவா இருப்பார்கள். வாழ்க்கை வெறுப்பின் உச்சம் கட்டம் நடந்துவிடும்.

ஆறாவது வீட்டு தசாவின் மிக முக்கிய குணம் ஒருவனை கடனில் தள்ளிவிடுவது. ஒருவனுக்கு கடன் வந்துவிட்டால் அவனை விட்டு மொத்த பேரும் விலகிவிடுவார்கள். கடனாக கொடுத்தவர்கள் மட்டு்ம் வந்து கொல்லாமல் கொல்வார்கள். நாட்டையே இழந்து நிற்கும் நிலையை வர்ணிப்பது கூட கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் என்று தானே சொல்லுகிறார்கள். அப்படி ஒரு நிலையை உருவாக்கிவிடும் ஆறாவது வீட்டு தசா. 

பொதுவாக ஆறாம் வீட்டு தசா மிகப்பெரிய ஞானியை உருவாக்குவதில் வல்லவர் இவராக தான் இருக்கமுடியும். ஆறாம் வீட்டு தசா அல்லது ஆறாம் அதிபதியின் தசா நடந்தால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கர்மாவின் தாக்குதல்


வணக்கம் நண்பர்களே!
                     நேற்று பதிவு போடமுடியவில்லை. ஏன் என்றால் சில நேரங்களில் பிறர் கர்மாவின் வினை தாக்குகிறது அப்பொழுது உடல் நிலை பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் இப்படி நடைபெறுவது உண்டு. 

பிறர்க்காக வேலை செய்யும்பொழுது அவர்களின் கர்மவினை தாக்கும் அதற்கு பாதிப்பு ஏற்படா செய்துக்கொண்டு தான் செய்வோம். ஒரு சில நேரங்களில் மீறி தாக்குதலை நடத்துக்கிறது. அப்பொழுது என்ன நடக்கும் என்றால் படுத்தபடுக்கையாக கிடக்க வேண்டிய நிலை ஏற்படும். எனக்கு தலைவலி வரும் பிறகு நமது அம்மனை வைத்து சரிசெய்துக்கொண்டு மறுபடியும் கிளம்ப வேண்டியதாகிவிடும் அதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும். நேற்று மதியம் நான்கு மணிவரை போராடவேண்டியதாகிவிட்டது. பிறகு நான்கு மணிக்கு பிறகு கிளம்பி பெசன்ட்நகர் அஷ்டலஷ்மி கோவில் சென்றுவி்ட்டு அப்படியே கடற்கரையில் உட்கார்ந்து தியானம் செய்த பிறகு நன்றாகிவிட்டது. தியானம் என்றால் சும்மா கடலை பார்ப்பது மட்டுமே.

நீங்களும் பிறர்க்கு ஜாதகம் பார்க்கும்பொழுது அல்லது பரிகாரம் சொல்லும்பொழுது இப்படி நடக்க வாய்ப்பு அதிகம். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது உங்களின் பொறுப்பு. பிறரின் கர்மாவை பார்ப்பது தானே நமது வேலை. இந்த வேலையை செய்யும்பொழுது அவர்களின் கர்மா நம்மை தாக்குவது இயல்பான ஒன்று அதனை தாக்கவிடாமல் நாம் தப்பிப்பது நமது கடமை.

உங்களிடம் நான் பலமுறை சொல்லிருக்கிறேன் பிறர்க்கு ஜாதகத்தை பார்க்கும்பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளேன். பல பேர்களிடம் ஜாதகத்தை பார்க்கவேண்டாம் என்று சொன்னாலம் கேட்பதில்லை. ஏன் கேட்பதில்லை என்றால் சோதிடம் ஒருவருக்கு படிக்க விருப்பம் வந்துவிட்டால் அவனுக்கு அது பைத்தியம் பிடிப்பது போல் வைத்துவிடும். ஒரு சிலரை நாம் பார்க்கலாம் பேஷ்புக் மீது பைத்தியம் பிடிப்பது போல் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் அல்லது செல்போனை வைத்து அதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள் அதுபோல் சோதிடம் படிப்பவனும் இப்படி தான். படித்து விட்டு சும்மா இருக்கவிடாது ஏதாவது ஜாதகத்தை பார்ப்போமே என்று நினைக்க வைத்துவிடும் பிறகு பிறர்கர்மாவை சேர்ந்து சுமக்க வேண்டியது தான்.

ஆன்மீகத்தில் உயர்நிலையில் இருப்பவர்கள் சக்தியை தேவையில்லாமல் உபயோகிக்கமாட்டார்கள். அவர்கள் அப்படியே சேமித்து வைப்பார்கள். அவர்களின் ஆன்மீகவளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துவார்களே தவிர பிறர்க்கு பயன்படுத்த மாட்டார்கள். நான் அப்படி கிடையாது, கிடைத்தவரை அடுத்தவர்ககளுக்கு கொடுப்போம் என்று நினைத்து செய்கிறேன்

சோதிடம் பார்ப்பது என்று வந்துவிட்டால் தகுந்த ஏற்பாட்டோடு வந்துவிடுவது நல்லது. பிறர் கர்மா வினை எப்படி எதிர்க்கொள்வதில் தான் உங்களின் வெற்றியே அடங்கியுள்ளது. பிறரின் கர்மாவை உங்களின் ஆத்மாவில் ஏற்றிக்கொள்ளாமல் சோதிடத்தை பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Saturday, June 15, 2013

ஆன்மீக அனுபவங்கள் 97


வணக்கம் நண்பர்களே!
                     இன்று ஒரு முக்கியமான ஒரு தகவலை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளபோகிறேன். நான் அம்மனை பற்றி நிறைய சொல்லிருக்கிறேன். அம்மனை தான் எடுக்கவேண்டும் என்று எல்லாம் உங்களிடம் சொல்லிருக்கிறேன். சிவன், பெருமாள் எல்லாம் வேண்டாம் என்றும் சொல்லுவேன். 

நான் அப்ப சிவனை கும்பிடமாட்டேனா என்றால் கண்டிப்பாக கும்பிடுகிறேன். இது சூட்சமான ஒரு விசயம். நான் அம்மனை வைத்து சிவனை கும்பிடுகிறேன். ஏன் என்றால் சிவன் பெருமாள் எல்லாம் ஹ வோல்டேஸ் மாதிரி நேரடியாக போனால் நாம் காலியாக வேண்டியது தான். நான் அம்மனை கும்பிடுவதால் அம்மன் எனக்கு அம்மாவாக இருப்பாள். அம்மா மூலம் அப்பனை அடைவது எளிதான ஒன்று. அம்மா நம்மோடு இருக்கும்பொழுது நமக்கு அப்பன் எந்த வித தொந்தரவும் கொடுக்கமாட்டார். 

இந்த வழியை தான் நாங்கள் பின்பற்றுகிறோம். எனது குருநாதர் காட்டிய வழி இது. ஏன் உலகத்தில் உள்ள மிகப்பெரிய ஆன்மீகவாதிகள் கூட இப்படி தான் அவர்கள் போய் சேருவார்கள். ஒரு சில சந்நியாசிகள் மட்டும் நேரிடையாக செல்வார்கள். சந்நியாசிகளுக்கு அது ஒத்துவரும். இல்லறவாசிகள் அம்மன் இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது. அம்மனை வைத்துக்கொண்டு நீங்கள் சிவனை அடையவேண்டும். தாயாரை வைத்துக்கொண்டு பெருமாளை அடையவேண்டும் இது இல்லறவாசிகளுக்கு உரிய வழி.

அம்மன் உங்களோடு இருந்தாலும் சிந்தனையில் சிவனை நினைத்துக்கொண்டே செல்லவேண்டும். இப்படி சென்றால் தான் நீங்கள் செல்லும் ஆன்மீகவழி சரியான வழியாக இருக்கமுடியும். நீங்களே பல கோவில்களில் பார்த்து இருக்கலாம். அதுவும் சிவன் கோவிலாக இருந்தால் அம்மனுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பார்கள். அம்மா பேரை முதலில் போட்ட பிறகு தான் அப்பன் பேரை பெயராக போடுவார்கள். கோவிலுக்கு அதிகமாக இல்லறவாசிகள் தான் செல்வார்கள். அதனால் நீங்கள் அம்மனை வைத்துக்கொண்டு சிவனையோ பெருமாளையோ அடையமுயற்சி செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

காயத்ரி மந்திர பயிற்சி


வணக்கம் நண்பர்களே!
                    அனைவரும் ஆன்மீக வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைக்கிறீர்கள். வரவேற்கிறேன். நமது பிளாக் வழியாக காயத்ரி மந்திர பயிற்சியும் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்.  அதில் பலபேர் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறாரகள். பல தளங்களில் உள்ள மந்திரப்பயிற்சிக்கும் நமது பிளாக்கில் நீங்கள் செய்யும் மந்திரப்பயிற்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது. 

நீங்கள் எந்த தெய்வத்தின் மந்திரத்தை எடுத்தாலும் அதற்கு நமது அம்மனின் துணை அதிகமாக உங்களுக்கு கிடைக்கும். உலகத்தில் உள்ள மந்திரங்களில் காயத்ரி மந்திரம் முதன்மையானது. 21 ஒரு நாட்களில் நல்ல முன்னேற்றத்தை அடையமுடியும். நமது நண்பர்கள் அடைந்திருக்கிறார்கள். பல ஆன்மீக நண்பர்கள் என்ன காயத்ரி மந்திரம் தானே இதில் என்ன இருக்க போகிறது என்று நினைத்துக்கொண்டு செய்வதில்லை. காயத்ரி மந்திரத்தை மட்டும் இங்கே செய்ய சொல்லவில்லை அதோடு சேர்ந்து பல பயிற்சிகளை நான் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.

ஒரு சிலருக்கு அவர்களின் ஆத்மாவின் சக்திக்கு தகுந்தவாறு பயிற்சி கொடுக்கிறேன். ஒரு சிலருக்கு 108 நாட்கள் முடியட்டும் என்று விட்டுவைத்திருக்கிறேன். அனைத்தும் அவர்களின் ஆத்மாவின் சக்தியை பொருத்து நடத்தப்படும். பல பேர் பல தளங்களி்ல் செய்த மந்திரத்தால் ஒன்றும் நடைபெறவில்லை என்று அதனை விட்டுவிட்டு நமது பிளாக்கில் வந்து பயிற்சி செய்துக்கொண்டுருக்கிறார்கள்.

பிற தளங்களில் வழியாக நடத்தும் பயிற்சியை செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. அதில் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் காலத்தை கடத்தாமல் உடனே வந்துவிடுங்கள். நமது அம்மன் இருக்கிறது உங்களை  காப்பாற்றும.

நமது பயிற்சியில் எந்தவித கட்டுபாடும் கிடையாது. அதனால் உடனே நீங்கள் இந்த பயிற்சியை எடுத்துக்கொள்ளுங்கள். நமது அம்மன் உங்களுக்கு மிகப்பெரிய சக்தியை கொடுக்கும் அதனை வைத்து நீங்கள் அனைத்திலும் முன்னேற்றம் கண்டுவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Friday, June 14, 2013

நாபியோகம்


வணக்கம் நண்பர்களே!
                    யோக வரிசையில் இப்பதிவில் ஒரு யோகத்தை நாம் பார்க்கலாம். இந்த யோகத்தின் பெயர் நாபியோகம்.

நாபியோகத்திற்க்கு எப்படிபட்ட கிரகநிலைகள் அமையவேண்டும்?

ஜென்ம லக்கினம் கடகமாக இருந்து செவ்வாயும் குருவும் சேர்ந்து மேஷத்தில் அமர்ந்தால் இந்த யோகம் ஏற்படும். அதைப்போல் கடக லக்கினத்தில் செவ்வாயும் குருவும் சேர்ந்து அமர்ந்தாலும் இந்த யோகம் ஏற்படும். 

1, 6, 7, 8 ஆகிய இந்த நான்கு வீட்டில் தீமையை விளைவிக்கும் பாவகிரங்கள் சேராமல் சுபக்கிரகங்கள் சேர்ந்து இடைவிடாது இருக்குமானாலும் இந்த யோகம் உண்டாகும். 

என்ன பலனை ஜாதகர் அனுபவிப்பார்?

ஜாதகர் நீண்ட ஆயுளை பெற்று ஏராளமான சொத்து மக்கள் பலம் அரசாட்சி பெற்று சந்தோஷமாய் வாழ்வார்.  

ஒரு சிலருக்கு அமைச்சராகவும், ராணவத்தில் படைத்தளபதியாகவும் இருப்பார்கள். இளம்வயதில் அதிக செல்வத்தைச் சம்பாதித்து சுகத்தோடு இருப்பர்.

யோகம் செயல்பட ஒரு சிலருக்கு அந்த தசா வரும் என்று பார்த்துக்கொண்டு இருப்பதில்லை. பிறந்ததில் இருந்து இந்த யோகத்தால் நல்ல பலனை அனுபவிப்பார்கள். ஒவ்வொரு ஜாதகம் ஒவ்வொரு மாதிரி செயல்படும். அனைத்தையும் நாம் ஆராய்ந்து தான் பலனை சொல்லவேண்டும்.



நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கோபுர தத்துவம்


வணக்கம் நண்பர்களே !
                     கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கோபுர தரிசனம் பாப விமோசனம் என்பார்கள். நானும் எனது குருவும் கோவில்களுக்கு சென்றால் நாங்கள் வெளியில் நின்று கோபுர தரிசனம் செய்துவிட்டு வந்துவிடுவோம். கோவிலுக்கு உள்ளே செல்வதில்லை. 

முற்காலத்தில் வாகன வசதிகள் இல்லை. மக்கள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்குச் செல்ல கோபுரங்களை அடையாளம் வைத்தே பயணம் மேற்கொண்டனர். கோயிலுக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க இயலாத முதியவர்கள் நோயுற்றோர் தாங்கள் இருந்த இடத்திலிருந்து பிராத்தனை செய்யும் இடமாக கோபுரங்களும் திகழ்கின்றன.

கோபுரத்தைப்ப பார்க்கம் ஒவ்வொரு மனிதனும் ஆத்மஞானம் பெறுகிறான். இந்த உடம்பு வெறும் கூடு இந்த உடம்பில் உறையும் மெய்ப்பொருள்தான் உண்மை. இறைவனே ஆன்ம வடிவில் நம்முள் உறைந்திருக்கிறார் என்ற ஆன்மீக உண்மையைக் கோபுரங்கள் நினைவுப்படுத்துகின்றன. மனிதனை எப்போதும் ஆன்மீக நினைவில் வைத்திருக்கவும் இறைவனை நினைவு படுத்துபவையாகவும் கோபுரங்கள் உதவுகின்றன.

கோபுரம் ஸ்தூல லிங்கம் ஆகும். கோயில் முன்பு உள்ளது ராஜகோபுரம் ஆகும். இதில் ஏராளமான மனித வடிவங்கள் இருக்கும்.விதவிதமான வாழ்க்கை முறைகள் இருக்கும். தேவர்களும் அவர்களின் செயல்முறைகளும் விளங்கப்பெற்றிருக்கும் விலங்குகளும் பறவைகளும் இடம் பெற்றிருக்கும். பிரபஞ்ச அமைப்பில் எல்லாவற்றிற்கும் இடமுண்டு என்பதைக் காட்டுவனவான இவை அமைந்திருக்கும்.

நாம் உடம்பில் மூடி மறைக்கும் பாகங்கள் வெளிபடையாக இங்குக் காட்டப்பட்டு இருக்கும் இதில் யாரும் வெட்கப்பட வேண்டியதில்லை. வாழ்க்கை முறையைத்தெரிந்து கொள்ள வேண்டிய முறைகளையே உணர்த்தியிருப்பதான ஆகமங்கள் கூறுகின்றன.

ராஜகோபுரங்களின் வாயில்கள் பொதுவாக ஒற்றைப்படை வரிசையில் அமைந்திருக்கும். மூன்று ஐந்து ஏழு ஒன்பது பதினொன்று என இருக்கும். மூன்று வாயில்கள் உள்ள இடத்தில் ஜாக்கிரதை, சொப்பன, சஷீப்தி என்று மூன்று காலங்களைக் குறிப்பிடுகின்றன. ஏழுவாயில்கள் மனம் புத்தி மற்றும் ஐம்பொறிகளை உணர்த்துகின்றன. நம்முடைய அமைப்பில் உள்ள வெவ்வேறு தத்துவங்களுக்குக் கோபுர வாயில்கள் சின்னங்களாக அமைந்திருக்கின்றன. புற உலகின் மனதை விடுவித்து அகத்தினுள்ளே பிரவேசிக்கும் தத்துவத்தை ராஜகோபுர பிரவேசம் நமக்கு உணர்த்திவருகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, June 13, 2013

செல்வம் சேர என்ன செய்யவேண்டும்?


வணக்கம் நண்பர்களே!
                    எனக்கு பல சேட்டுகளின் குடும்பங்கள் வாடிக்கையாளராக இருக்கிறார்கள். அவர்களின் வீடுகளுக்கு என்னை அடிக்கடி கூப்பிடுவார்கள் அவ்வாறு செல்லும்பொழுது அவர்கள் செய்யும் ஒரு சில செயல்கள் எனக்கு பிடிக்கும்.  

இந்த செயல்கள் தான் அவர்களுக்கு பணம் வந்துக்கொண்டே இருப்பதற்க்கு காரணமோ என்று எனக்கு தோன்றும். அவர்கள் செய்யும் செயல்கள் என்ன என்று உங்களுக்கு சொல்லுகிறேன். உங்களால் முடிந்தால் நீங்களும் செய்யலாம். சென்னையில் இருக்கும் சேட்டுகளின் வீடுகளுக்கு பார்த்தீர்கள் என்றால் புறாக்கள் அதிகமாக அவர்களின் வீடுகளுக்கு வந்து உட்கார்ந்திருக்கும் அது ஏன் என்றால் அவர்களின் மொட்டை மாடியில் புறாக்களுக்கு தேவையான உணவை அவர்கள் வைத்துவிடுகிறார்கள. 

அரிசியை இடித்து மாவுவாக்கி அந்த மாவை எடு்த்துக்கொண்டு எறும்பு இருக்கும் புற்றுகளில் போட்டுவிடுகிறார்கள். அவர்கள் இருக்கும் பகுதி முழுவதும் இருக்கும் எறும்பு புற்றுகளில் போட்டுவிடுகிறார்கள். எறும்பு தின்பதால் அவர்களின் கர்மாவின் வினை ஏறாது. கர்மவினை குறையும் என்று நம்புகிறார்கள். நமது மதத்தில் கூட சொல்லிவைத்திருக்கிறார்கள் ஒரு எறும்பு சாப்பிட்டால் நூறு ஏழைகள் சாப்பிட்டதற்க்கு சமம் என்று சொல்லியுள்ளார்கள்.

பசுமாடுகளை பேணிக்காப்பதற்க்கு என்றே பல டிரஸ்ட் வைத்திருக்கிறார்கள் அதற்க்கு தேவையான பணத்தை தாராளமாக அதற்கு தருகிறார்கள். சேட்டுகள் இருக்கும் வீட்டின் ரோட்டில் பசுமாடு சென்றால் அதற்கு என்று தீவனத்தை தருகிறார்கள். அவர்களின் செயல் நன்றாக இருக்கிறது அவர்கள் பணகாரர்களாக இருப்பதற்க்கும் இது தான் காரணமாக கூட இருக்கலாம் அல்லவா. நீங்களும் தாராளமாக செய்யலாம் நண்பர்களே.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.