Followers

Saturday, July 19, 2014

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே !
                    வரும் வாரத்தில் அம்மனின் பூஜையை நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளேன். இந்த மாத அம்மனிடம் வேண்டுதல் வைத்து அதனை அம்மன் நடத்திக்கொடுத்து இருந்தால் உங்களின் காணிக்கையை அம்மனின் பூஜைக்கு கொடுக்கலாம்.

இந்த மாதம் அனைவரும் பூஜையில் பங்களிக்க வேண்டுகிறேன். உங்களால் முடிந்த பணத்தை அம்மனின் பூஜைக்கு அனுப்பி வையுங்கள். முடிந்தளவு முதலிலேயே அனுப்பி வைத்து விட்டால் அதற்கு தகுந்தார்போல் நான் திட்டமிட்டு அம்மனின் பூஜையை செய்யலாம்.

ஆடி மாதம் பூஜை என்பது மிகவும் விஷேசமான ஒன்று. ஆடி மாதம் அங்களாபரமேஸ்வரிக்கு உற்சவம் அனைத்து இடங்களிலும் நடைபெறும். இதுவரை அம்மனிடம் வேண்டுதலை வைத்தவர்கள் மட்டும் பங்களிப்பை அளித்தார்கள். இந்த மாதம் அனைவரின் பங்களிப்பு இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 

மாதம் தோறும் ஒரு சில நண்பர்கள் பங்களிப்பை அளித்து வருகிறார்கள். அவர்களின் வேண்டுதல் அப்படிப்பட்டது. இந்த மாதம் அனைவரின் பங்களிப்பு இருக்கும்பொழுது வருடந்தோறும் உங்களுக்கு அம்மனின் அருள் நிச்சயம் கிடைக்கும். கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பவர்கள் அனுப்பவேண்டாம். ஏன் என்றால் நான் கேட்கிறேன் என்று ஒரு சில நண்பர்கள் கடன் வாங்கி அனுப்பிவிடுவார்கள். அதனை தவிர்க்கவேண்டும். முடிந்தவர்கள் அனுப்பி வையுங்கள்.

பணம் அனுப்புபவர்கள் கண்டிப்பாக உங்களின் பெயர், ஊர் மற்றும் தொடர்புக்கொள்ள மொபைல் நம்பர் அனைத்தையும் எழுதி அனுப்பிவையுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Friday, July 18, 2014

அனுபவமே கல்வி


வணக்கம் நண்பர்களே!
                    என்னுடைய தொழில் நண்பர்களோடு சந்திக்கும்பொழுது பல நல்ல விசயங்களைப்பற்றி விவாதிப்பது உண்டு. அப்படிப்பட்ட ஒரு நல்ல விசயத்தைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

என்னுடைய தொழில் நண்பர்கள் அவர்களின் குழந்தைகளை அரசாங்க பள்ளியில் படிக்க வைக்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.அவர்களின் குழந்தைகள் அரசாங்க பள்ளியில் படித்தால் போதும் என்கிறார்கள். ஏன் என்று அவர்களிடம் கேட்டேன். குழந்தைகளுக்கு அதிகமான சுமையை நாம் தந்துவிடகூடாது என்கிறார்கள். அவர்கள் என்னிடம் கண்டிப்பாக எங்களின் குழந்தைகளை பெரிய அளவில் படிக்கவைப்போம். அதற்கு அரசாங்க பள்ளிக்கூட படிப்பே போதுமானது என்கிறார்கள்.

தனியார் பள்ளியில் கொடுக்கும் கல்வி அதிக சுமையை தருகிறது. அந்த சுமை இவர்களுக்கு மனதில் பிரச்சினையை கொடுத்துவிடும். காலையில் தூங்கி எழுந்து ஒன்பது மணிக்கு பள்ளிக்கு சென்றால் போதும். பள்ளிக்கூடத்தை விட்டு வந்தவுடன் நன்றாக விளையாடினால் போதும் என்கிறார்கள்.

அவர்கள் சொல்லுவது உண்மையான ஒரு செய்தி தான். குழந்தைகளுக்கு அதிகசுமையை ஏன் தரவேண்டும். அரசாங்க பள்ளிப்படிப்பே போதுமானது. அந்த குழந்தைகளுக்கு இளம் வயதில் இருந்தே அவர்களின் பெற்றோர்கள் அனைத்து விசயத்தையும் சொல்லிக்கொடுக்கிறார்கள். நான் அந்த குழந்தைகளிடம் பேசும் பொழுது அப்படி ஒரு அறிவு இருக்கிறது.

என்னிடமே அதிகமான கேள்விகளை அந்த குழந்தைகள் கேட்கிறது என்றால் பாருங்கள். குழந்தைகள் கேள்வி கேட்டால் அந்த கேள்விக்கு அனைத்து பெற்றோர்களும் பதிலை அளிக்கவேண்டும். அவர்கள் கேட்ட கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் உடனே நான் விடையை தெரிந்த பிறகு உனக்கு சொல்லுகிறேன் என்று சொல்லிவிடுங்கள். பிறகு விடையை நீங்கள் தெரிந்தக்கொண்ட பிறகு அவர்களுக்கு சொல்லுங்கள்.

என்னிடம் ஒரு சின்ன குழந்தை வளர்க்கிறது என்று வைத்துக்கொள்வோம். குறைந்தப்பட்சம் ஒரு ஆறு மாதம் வளர்ந்தால் போதும் அவர்கள் கேட்கும் கேள்விக்கு உங்களால் கூட பதிலை கொடுக்கமுடியாது.

அனைத்து பெற்றோர்களும் அவர்களின் குழந்தைகளுக்கு சின்ன வயதில் நேரத்தை ஒதுக்கி சொல்லிக்கொடுத்தால் பள்ளிகூடத்திற்க்கான வேலையே இல்லாமல் போய்விடும். தொழில் செய்பவர்களுக்கு பண்த்தைப்பற்றி பெரிய கவலை கிடையாது ஆனாலும் தன் குழந்தைகளுக்கு நல்ல அறிவை அவர்களே ஊட்டுகிறார்கள். குழந்தைகள் என்ஜாய் செய்து கற்றுக்கொள்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

செல்வ வளம் உங்களை தேடி வரும்


வணக்கம் நண்பர்களே!
                    பெரும்பாலும் மக்களுக்கு தேவையானது பணம் மட்டுமே. அந்த பணம் வருவதற்க்கு என்ன வழி என்றாலும் அதனை செய்வா்கள். பணம் வருவதற்க்கு ஒரு வழியைப்பற்றி இப்பதிவில் சொல்லுகிறேன்.

நான் தொழில் அதிபர்களை சந்திக்கும்பொழுது பல டிப்ஸ்களை அவர்களுக்கு கொடுப்பது என்னுடைய வேலையாக இருக்கும். அவர்களை நன்றாக கவனித்து அவர்களை நான் மாற்றி வருகிறேன்.

உங்களுடைய கால்கள் சுத்தமாக இருந்தால் உங்களை தேடி பணம் வரும். என்னுடைய கால்களுக்கு தினமும் ஏதாவது ஒரு எண்ணெய் தேய்ப்பது வழக்கம். குளிப்பதற்க்கு முன்பாக கூட இதனை நான் செய்துவிட்டு தான் குளிப்பேன். கால்கள் மிகவும் சுத்தமா இருந்தால் நம்மை தேடி பணம் வரும்.

என்னடா புது கதையாக இருக்கின்றது என்று நினைக்கவேண்டாம். தொடர்ந்து சுத்தமாக வைத்திருங்கள் கண்டிப்பாக உங்களை தேடி செல்வம் வரும்.நாம் நிற்க்கும் கால்கள் நமது வாழ்க்கையை அதிகம் பிரதிபலிக்கும் தன்மை உடையது.

நமது கால்கள் சுத்தமாக வைக்கும்பொழுது நம்மை தேடி மகாலட்சுமியே வருவதாக ஒரு ஐதீகம் இருக்கிறது. என்ன நண்பர்களே இனிமேல் உங்களின் கால்கள் சுத்தமா இருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

Thursday, July 17, 2014

விரைய தசா பகுதி 34


வணக்கம் நண்பர்களே!
                    விரைய வீட்டு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். அதில் ஒரு அனுபவத்தை இப்பதிவில் பார்க்கலாம். பூர்வபுண்ணியாதிபதியான ஐந்தாவது வீட்டு அதிபதி சனிக்கிரகம் விரையாதிபதி வீட்டில் இருந்தார். 

சொந்த ஊரை விட்டு வெளியில் வந்து தங்கி இருந்தார். பொதுவாக பூர்வபுண்ணியம் கெடும்பொழுது அவர்கள் சொந்த ஊரை விட்டு வெளியில் சென்று தங்கிவிடுவது நல்லது.

இவரும் சொந்த ஊரைவிட்டு வெளியில் வந்து தங்கியிருந்தார். அவருக்கு நான்கு குழந்தைகள். இரண்டு பையன் இரண்டு பெண்கள். நான்கு பேரும் படித்தது எல்லாம் சொந்த நாட்டிலேயே படித்தார்கள். அவருக்கு சனி தசா தொடங்கியவுடன் நான்கு பேரும் வெளிநாட்டிற்க்கு சென்று தங்கிவிட்டார்கள்.

சம்பந்தப்பட்ட நபர் மட்டும் வெளிநாட்டில் சென்று தங்கவில்லை. இவர் இருந்த ஊரிலேயே இருக்கிறார். அவ்வப்பொழுது சென்று வருகிறார். ஐந்தாவது வீட்டு அதிபதியாக இருந்த சனிக்கிரகம் விரைய வீட்டில் அமர்ந்து தசாவை நடத்தியதால் புத்திரர்கள் வெளிநாட்டில் தங்குவது போல் செய்துவிட்டது.

ஒரு சிலருக்கு இப்படியும் நன்மையை அளிக்கும். விரைய தசா ஒரு சிலருக்கு நல்லதையும் செய்துவிடும். லக்கினத்திற்க்கு பனிரெண்டில் சனி அமர்ந்து தசாவை நடத்தும்பொழுது அவருக்கு கண்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தற்பொழுது தசா நடந்துக்கொண்டு இருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

கிரகங்களுக்கு சாந்தி


வணக்கம் நண்பர்களே!
                    நிறைய விசயங்களை நான் உங்களிடம் சொல்லவேண்டும் என்று நினைப்பேன் ஆனால் அதனை பொதுவில் எழுதகூடாது என்று ஒரு சில விதிகள் இருப்பதால் அதனைப்பற்றி எழுதுவதில்லை. அதே நேரத்தில் நான் கடுமையாக சோதனை செய்பவன். பிறர் ஒருவர் எத்தனை நாள் என்னோடு தொடர்பில் இருக்கிறார் என்று எல்லாம் பார்ப்பேன்.

ஒருவர் வந்தவுடன் அவருக்கு தேவையானவற்றை எல்லாம் எடுத்து கொடுக்க முடியாது. அவர்கள் உண்மையில் நல்லவர்களா அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைக்காக வருகிறார்களா என்று எல்லாம் பார்ப்பது உண்டு.

இந்த உலகம் ஒரு கண்ணாடி நாம் என்ன செய்தாலும் அது நம்மீது எதிர்ப்பை காட்டும். கண்ணாடியில் நின்றுக்கொண்டு நீங்கள் சிரித்தால் அது சிரிப்பது போல் காட்டும். அழுதால் அழுவது போல் காட்டும். நீங்கள் எந்த எதிர்ப்பை காட்டினாலும் அதே எதிர்ப்பு திரும்பி உங்களுக்குள் வந்துவிடும். 

ஒரு முறை இரயிலில் நான் சென்றுக்கொண்டிருக்கும்பொழுது சகபயணிகள் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். நானும் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு இளைஞர் எனது படுக்கைக்கு மேல் இருந்து கீழே இறங்கினார். இறங்கும்பொழுது எனது உடல் மேல் அவரின் கால் பட்டவுடன் நான் தூக்கத்தை விட்டு எழுந்துவிட்டேன். அவர் என்னிடம் சாரி என்றுவிட்டு எப்படி தான் தூங்குவது? இத்தனை பேர் குறட்டை விடுகிறார்கள். இந்த சத்தத்தில் நான் எப்படி தூங்குவது என்று புலம்பினார்.

அந்த இளைஞர் என்னிடம் எப்படி நீங்கள் தூங்குகிறீர்கள் என்று கேட்டார். இந்த குறட்டை சத்தம் எப்படி உங்களை தூங்கவிடுகிறது என்றார். அவரிடம் இந்த இரயில் ஒடும் சத்தம் வந்துக்கொண்டு இருக்கும். அதனால் இரயில் ஓடாமல் இருக்கமுடியுமா? அதுபோல் தான் இந்த குறட்டை சத்தமும். உலகம் அதுபாட்டு இயங்கிக்கொண்டே இருக்கும் அதனோடு நாம் சண்டைபோட்டால் அது நம்மீது எதிர்த்து  பாயதுவங்கும். அதனோடு ஒத்துபோனால் நாம் பாட்டுக்கு சென்றுக்கொண்டு இருக்கலாம் என்றேன். 

அவர் அப்பொழுதே தூங்க சென்றுவிட்டார். விடியற்காலையில் எழுந்தபொழுது அவர் என்னிடம் நல்ல விசயத்தை நீங்கள் எனக்கு சொன்னீர்கள் என்று நன்றி சொன்னார்.

அவரிடம் சொன்னதை தான் உங்களிடம் சொல்லுகிறேன். கிரகங்கள் அதன் வேலையை செய்துக்கொண்டே இருக்கும். அதனோடு சண்டையிட்டால் உங்களை திருப்பி அடிக்கும். அதனோடு ஒத்து சென்றால் உங்களோடு அதுவும் ஒத்து செல்லும். கிரகங்களை பார்த்து நீங்கள் பயந்தால் உங்களை அது பயமுறுத்திவிடும். அதனோடு அன்பாக செல்லும்பொழுது உங்களோடு அது அன்பாக செல்லும்.இது தான் கிரகங்களுக்கு செய்யும் முதல் சாந்தி.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

வசிய அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    சமீபத்தில் திருப்பூர் சென்றபொழுது எனது தொழில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு ஆசிரமத்திற்க்கு செல்வோம் என்று முடிவு செய்து காரில் சென்றோம். அந்த ஆசிரமத்தை இதுவரை பார்த்தில்லை அப்படி என்ன தான் அங்கு இருக்கிறது என்று பார்க்கலாம் சென்றோம்.

அங்கு சென்று அனைத்தையும் பார்த்தோம். நாம் பழங்காலத்தில் உபயோகப்படுத்திய காப்பர் செம்பு மற்றும் நல்ல உலோகலங்களை வைத்து நம்மை ஈர்க்கிறார்கள். அனைத்தையும் பார்த்துவிட்டு வந்த பிறகு எனக்கு லேசான தலைவலி உருவாகியது. 

திருப்பூர் வந்த பிறகு அன்று இரவே சென்னை திரும்ப வேண்டி இருந்ததால் இரயில் வந்தேன். மனதில் சின்ன குழப்பம் போல் இருந்தது. வேலை காரணமாக இருந்ததால் ஒய்வு இல்லாமல் இருப்பதால் அப்படி இருக்கும் என்று நினைத்தேன்.

காலையில் குளித்துவிட்டு அம்மனின் பூஜையில் அமர்ந்த பொழுது தான் தெரிகிறது. அவர் நன்றாக வசியம் செய்து வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. மக்களை கவர்வதற்க்கு ஒரு சக்தியை வசியம் செய்து அந்த இடத்தில் வைத்திருக்கிறார். ஒரு ஆன்மீகவாதிக்கே குழப்பத்தை தருகிறது என்றால் சாதாரணமாக ஒருவர் சென்றால் அவர் அப்படியே மயங்கி விழுந்துவிடுவார்.

மக்களை கவர்ந்து இழுப்பதற்க்கு இந்த வேலையை செய்து இருக்கிறார். உண்மையில் இது எல்லாம் அஷ்டகர்மாவில் செய்ய கூடிய வேலை. அவரின் வேலைக்கும் அவரின் பெயருக்கும் இப்படி செய்திருக்கிறார்.

மக்களை ஒருபொழுதும் இப்படி இழுப்பது தவறு என்று அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. நீங்கள் ஆன்மீகவாதிகளை தேடிச்செல்லும்பொழுது மிக எச்சரிக்கையுடன் செல்லுங்கள். இவர்களின் பிழைப்பிற்க்கு ஏதாவது வில்லகத்தை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அதில் நீங்கள் விழுந்துவிடாதீர்கள். கோவிலுக்கு செல்லுங்கள் மற்றும் உண்மையில் நல்ல ஆன்மீகவாதியாக இருந்து அவர் மக்களை ஈர்க்கும்வேலையில் இல்லை என்றால் சென்று வரலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

எதார்த்தம்


வணக்கம் நண்பர்களே!
                    சோதிடர்களிடம் நமது நண்பர்கள் எதிர்பார்ப்பது எப்படியும் சோதிடர்களை ஏமாற்றிவிட்டு இலவசமாக அனைத்து காரியத்தையும் முடித்துவிட்டு வந்துவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சோதிடர்கள் வருபவர்களை எப்படியும் ஏமாற்றிவிடவேண்டும் என்று இல்லாததை சொல்லிவிட்டு பணத்தை பிடுங்க பார்ப்பார்கள்.

இருவரும் ஏமாற்றும் மனநிலையில் இருக்கும்பொழுது அங்கு காரியம் எப்படி வெற்றிபெறும். இருவர்களின் மனநிலைப்படி தான் காரியம் நடைபெறும். இருவரையும் கிரகங்கள் ஏமாற்றிவிட்டு அதன் வேலையை செய்துவிட்டு போய்விடும். 

உங்களுக்கு வேலை நடக்கவேண்டும் என்றால் நல்ல சோதிடராக பார்த்து அவரிடம் பணத்தை முதலிலேயே கொடுத்துவிட்டு இந்த பிரச்சினையை தீர்த்துக்கொடுங்கள் என்றால் அவரால் முடிந்தளவு முயற்சி செய்து உங்களை காப்பாற்றுவார்.

நான் பரிகாரங்கள் செய்ய செல்வதில்லை ஒரு சில நபர்கள் என்னிடம் வந்து இந்த பிரச்சினையை எப்படியும் தீர்த்துக்கொடுங்கள் என்று கேட்பார்கள். நானும் அதனை ஏற்றுக்கொண்டு பணம் எவ்வளவு தருவீர்கள் என்று கேட்பேன். அவர்கள் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்பார்கள். 

அவர்களிடம் இருக்கும் பணத்தின் அளவு கோடியை தாண்டும். ஆயிரம் ரூபாய் எனக்கு வேண்டாம். நான் காரியத்தை செய்துமுடித்த பிறகு ஒரு நல்ல தொகையை எனக்கு கொடுங்கள் என்று கேட்பேன். அப்பொழுது என்ன சொல்லுவார்கள் என்றால் மூன்றாயிரம் ரூபாய் தருகிறேன் என்பார்கள். 

அவர்களின் வீட்டில் இருக்கும் கர்மாவை எடுத்து என் தலையில் சுமக்கும் வேலைக்கு மூன்றாயிரம் ரூபாய் என்றால் நான் எங்கு சென்று என் சுமையை இறக்கி வைக்கமுடியும். நான் செய்துக்கொடுத்துவிடுகிறேன் அதன் பிறகு நல்ல தொகையை தாருங்கள் என்றால் அதற்கே இப்படி என்றால் என்ன செய்வது என்று நான் விட்டுவிடுவேன்.

இப்பொழுது தனிநபர்களுக்கு செல்வதே கிடையாது. என்னுடைய அம்மனே பணத்தை பாேட்டால் தான் அதுவே இறங்கிவந்து செய்யும். இல்லை என்றால் அது திரும்பிகூட பார்க்காது. கடவுளுக்கே பணமா என்று கேட்க தோன்றும். என்ன செய்வது இதன் வழியாக தானே என் பிழைப்பு நடக்கிறது.  அப்படி மாற்றி வைத்திருக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.