Followers

Friday, October 10, 2014

கர்மா விலக


வணக்கம் நண்பர்களே!
                      கர்மத்தை தொலைத்தால் தான் நாம் முன்னேற்றம் என்ற அடியை வைக்கமுடியும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஜாதககதம்பத்தில் கர்மத்தை தொலைக்க நான் நிறைய விசயங்களை சொல்லிக்கொண்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் ஒரு கருத்தை பார்க்கலாம்.

நான் ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்தியபொழுது எனது குரு கோவில்களுக்கு என்னை அழைத்து செல்லவில்லை மாறாக காடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டு சென்றார். ஏன் அப்படி என்னை அழைத்து சென்றார் என்று நான் அவரிடமும் கேட்கவில்லை. நானே பல முறை சிந்தித்து இதனை கண்டுபிடித்தேன்.

இன்றைய காலத்தில் நகர்புறத்தில் இருக்கும் கோவில்கள் எல்லாம் ஒரு விதத்தில் தன்னுடைய சக்தியை இழந்து வருகின்றன. அதற்கு காரணம் மக்கள் செய்யும் தவறுகள். அதனைப்பற்றி பேச இப்பொழுது நேரம் இல்லை நேரடியாக கருத்துக்கு செல்வோம்.

காடுகளுக்கு எனது குரு அழைத்து சென்றாலும் எனக்கு கொடுத்த பயிற்சி மிகவும் ரகசியமானதாகவே இருந்தன. அதற்க்காக அவர் காடுகளை தேர்ந்தெடுத்தாலும் நான் கண்டுபிடித்தது காடுகளில் இருக்கும் மூலிகைகள் மனிதனின் கர்மத்தை தொலைப்பதில் அதிவேகமாக வேலை செய்யும் என்பதை அறிந்தேன்.

காடுகளுக்கு செல்லும் வழியில் உள்ள மூலிகைகள் தன்னுடைய தெய்வீக தன்மையை கொண்டு மனிதனின் கர்மாவை தொலைக்கிறது. அதே நேரத்தில் காடுகளில் உள்ள கோவில்களை நாம் வழிபடும்பொழுது நமக்கு பல மடங்கு சக்திகளை தருகிறது.

நீங்கள் செல்வவளத்தில் முன்னேற்றம் மற்றும் நல்ல வாழ்க்கையை அமையவேண்டும் என்றால் முதலில் நீங்கள் காடுகளில் உள்ள கோவில்களை வணங்கிவாருங்கள். காடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பிவாருங்கள். காடுகளில் கோவில்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை பல நல்ல மூலிகைகள் இருக்கும் காட்டிற்க்கு சென்று வரும்பொழுது நமக்கு நல்ல விசயம் நடைபெறும்.

காடுகளுக்கு செல்லும்பொழுது தகுந்த ஏற்பாடு மற்றும் பாதுகாப்பாேடு சென்று வாருங்கள் நண்பர்களே.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

வெற்றி வாழ்க்கை


வணக்கம் நண்பர்களே!
                      நான் ஒரு சில நண்பர்களே சந்திக்கும்பொழுது அவர்கள் சொல்லும்பொழுது ஒரு சில விசயங்கள் எனக்கு பிடிபடவே மாட்டேன்கிறது. அவர்கள் உலகத்தி்ல் உள்ள  கோவில்கள் மற்றும் சாமியார்களை தேடி செல்லுகின்றனர் என்ற தகவல் தான் அது.

பல கோவில்களுக்கு நான் சென்று இருக்கிறேன் ஆனால் எந்த கோவிலையும் நான் வணங்குவது கிடையாது. கோவில்களை சுற்றி பார்ப்பேன் அதோடு சரி. வந்துவிடுவேன்.

நாம் வெற்றி பெறவேண்டும் என்றால் ஒரு கடவுள் மட்டும் வழிபாட வேண்டும். ஒரு சாமியாரின் ஆலோசனை மட்டும் கேட்டு நடந்து வந்தால் நாம் வெற்றி பெறமுடியும். பல ஆன்மீகவாதிகளை சந்தித்தால் கடைசியில் நீங்கள் தோல்வி மட்டும் தான் அடைவீர்கள்.

செல்வவளத்திற்க்கு கூட இப்படி தான் நான் சொல்லுவேன். நீங்கள் ஒரு தெய்வத்தை மட்டும் வணங்கிவரவேண்டும் என்பேன். உலகத்தில் உள்ள பெரிய கோடிஸ்வரர்கள் அனைவரும் ஒரு தெய்வத்தை மட்டும் தான் வணங்கிவருவார்கள். அதுப்போல் நீங்களும் ஒரு தெய்வத்தை மட்டும் வணங்கிவாருங்கள்.

மனிதனுக்கு வாழ்க்கையில் ஒரு மனைவி மற்றும் ஒரு தெய்வம் ஒரு குரு மட்டும் அமைந்தால் மட்டுமே அவன் வெற்றி பெறமுடியும். பல உள்ளது என்றால் கண்டிப்பாக அது தோல்வி மட்டும் தான் அடையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

ஆட்டுக்கால் பகவதி அம்மன் பகுதி 3

வணக்கம் நண்பர்களே!
                      இந்த கோவிலை உருவாக்கிய ஒரு மகான் இருக்கிறார் அவரின் ஜூவசமாதி இங்கு அமைந்துள்ளது.






திருவனந்தபுரம் செல்லும்பொழுது இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். அற்புதமான ஒரு கோவில்
நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.



ஆட்டுக்கால் பகவதி அம்மன் பகுதி 2

வணக்கம் நண்பர்களே!
                      பெண்கள் பொங்கல் வைத்ததில் கின்னஸ் ரெக்கார்ட்டை பெற்றுள்ள கோவில் இந்த பகவதி அம்மன் கோவில்.








இன்று காலை சென்னை வந்துவிட்டேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Thursday, October 9, 2014

ஆட்டுக்கால் பகவதி அம்மன் பகுதி 1

வணக்கம் நண்பர்களே!
                      கேரளாவில் உள்ள ஆட்டுக்கால் பகுதி அம்மன் கோவிலுக்கு நேற்று சென்று வந்தேன். அங்கு எடுத்த போட்டோவை கீழே கொடுத்துள்ளேன்.



இங்கு வெடிவழிபாடு செய்கிறார்கள். பத்து ரூபாய் நாம் செலுத்தினால் ஒரு வெடி போடுகிறார்கள். வித்தியசமான வழிபாடு






இன்று காலை திருப்பூர் வந்துவிட்டேன். திருப்பூர் நண்பர்களை சந்திக்க வந்து இருக்கிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

Tuesday, October 7, 2014

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                      ஒரு நண்பரை நான் சந்தித்தேன். அவரின் ஜாதகத்தில் சந்திரன் ஆறாவது வீட்டில் இருந்தது. ஆறாவது வீட்டு சந்திரனை குருகிரகம் தன் ஒன்பதாவது பார்வையில் பார்க்கிறது. அவர் ஒரு தொழில் செய்துக்கொண்டு இருக்கிறார். 

குரு கிரகம் சந்திரனை பார்ப்பதால் அவருக்கு பணம் விசயத்தில் பற்றாக்குறை ஏற்படவில்லை. பொதுவாக குருவும் சந்திரனும் சேர்ந்து இருக்கும்பொழுது அவர்களுக்கு பணம் விசயத்தில் பற்றாக்குறை ஏற்படாது. அதேப்போல் சந்திரனை குரு கிரகம் பார்த்தாலும் பணப்பற்றாக்குறை ஏற்படுவதில்லை என்னுடைய அனுபவத்தில் ஒரு சிலரை நான் இப்படி பார்த்து இருக்கிறேன்.

இவருக்கு பிரச்சினை என்ன என்றால் ஒரு தொழிலும் இவருக்கு நிலையாக அமைவதில்லை. உடனே நீங்கள் கேட்கலாம் தொழில் வீட்டை வைத்து தொழிலை பார்க்காமல் குருவும் சந்திரனையும் பற்றி சொல்லுகிறீர்களே என்று தோன்றும்.

உண்மையில் ஒரு சில நேரங்களில் சம்பந்தமே இல்லாமல் இருக்கும் கிரகங்கள் அவரின் ஏதாவது ஒரு விசயத்தில் பிரச்சினையை கொடுத்துக்கொண்டு இருக்கும். அதேப்போல் இவருக்கும் அப்படி தான் நடந்தது. சந்திரனுக்கு குருவின் பார்வையால் நிலையான தொழில் இவருக்கு அமையவில்லை.

இவரும் போகாத கோவில்கள் இல்லை. பார்க்காத சோதிடர்கள் இல்லை அதனால் நான் அம்மனை வைத்து இவருக்கு நிலையான தொழில் செய்து தர வைத்தேன். உண்மையில் கிரகங்களுக்கு தான் செய்து இருக்கவேண்டும். கிரகங்களுக்கு செய்யாமல் அம்மனை வைத்து செய்து கொடுத்தேன். ஏன் என்றால் இது மிகப்பெரிய சிக்கல் என்று அம்மனால் தான் முடியும் என்று அப்படி செய்தேன்.

குரு சந்திரன் சேர்ந்து இருந்தாலும் குருவின் பார்வை சந்திரனுக்கு கிடைத்தாலும் அவர்களுக்கு வேலையில் பிரச்சினையை கொடுத்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

கோவளம் பீச்

வணக்கம் நண்பர்களே!
                        பல முறை நான் திருவனந்தபுரம் வந்து இருந்தாலும் கோவளம் பீச்சுக்கு சென்றதில்லை. இந்த முறை நண்பரோடு அங்கு சென்று வந்தேன். அதன் படங்களை பாருங்கள். என்னடா ஊர் சுற்றி காட்டுகிறார் என்று நினைக்கவேண்டாம். பல இடங்களுக்கு நாம் செல்லும்பொழுது வித்தியாசமான பல நல்ல அனுபவங்களை பெறமுடியும் என்பதற்க்காக இதனை தருகிறேன். எந்த ஒரு காரணம் கொண்டும் அவசரப்பட்டு பணத்தை செலவு செய்து இங்கு செல்லவேண்டாம். அப்படி ஒன்றும் பெரிசாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை.



மேலே உள்ள படம் கோவளம் செல்லும் வழியில் எடுக்கப்பட்டது.





நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.