Followers

Sunday, December 14, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                      அம்மனின் பூஜை படங்களை பார்த்துவிட்டு இரண்டு நண்பர்களே உடனே எனக்கு போன் செய்து நன்றாக உள்ளது என்று சொன்னார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துவிட்டு அதன் வழியாக உங்களுக்கு ஒரு செய்தியை சொல்லலாம் என்று பதிவை தருகிறேன்.

அம்மன் பூஜையை மிக ஆவலுடன் அதே நேரத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு செய்யவேன். இது அனைத்தும் எனது குருநாதர் வழியாக வந்த விசயம் இது. அவர் சொல்லுவார் நீ எந்தளவுக்கு கடவுள் மேல் ஈடுபாடு காட்டுகிறாய் என்பது நீ செய்யும் பூஜையில் தெரியும் என்பார்.

என் மனதால் செய்யும் பூஜை இதனை விட மிகப் பிரமாண்டாதாக தான் இருக்கும். பணம் செலவு செய்து செய்வதால் வரும் பணத்திற்க்கு தகுந்தவாறு பூஜையை செய்கிறேன்.

நாம் நிறைய செயலை செய்யவேண்டும் என்று நினைக்கும்பொழுது நாம் செய்யும் பூஜையின் அளவும் மிக பிரமாண்டமாய் அமையவேண்டும். பிரமாண்டம் பிரமாண்டமானதை நமக்கு தரும்.

ஒவ்வொரு பூஜை நீங்கள் செய்யும்பொழுதும் அதிக ஈடுபாடு காட்டுங்கள். அந்த ஈடுபாடு மிகப்பெரிய வெற்றியை உங்களுக்கு தரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
பெருமதிப்புக்குரிய ஐயா, 
எனது நீண்ட நாள் சந்தேகம் இது, 12 இல் கேது இருந்தால் அது  மோட்சத்துக்கு  இட்டு செல்லும் என்பது பொதுவான கருத்தாகவிருகிறது. மோட்சம் என்பது பாவம் , புண்ணியம் இரண்டும் இல்லாத நிலையில் தானே சித்திக்கும். அதாவது இப்பிறவியிலேயே ஒருவர் தன்னுடைய பூர்வ ஜென்ம பாவங்களை முழுமையாக அனுபவித்து முடித்திருப்பதும், அடுத்த பிறவிக்கு இப்பிறவி புண்ணியம் பங்களிக்காத நிலையில்  மோட்சம் கிடைப்பது சாத்தியமான ஒன்றாகும். இது எளிதில்  புரிந்து  கொள்ள கூடியதாயும் இருக்கிறது. ஆக பாக்கிய ஸ்தானம், புண்ணிய ஸ்தானம்  இவையோடு தொடர்புபட்டே   மோட்சம் அமையுமா? (கேது 12இல் அமைந்தால் மோட்சம் என்பதன் உண்மையான விளக்கம் என்ன? )

கேள்வி கேட்தற்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் முதல் கேள்வி இது. பொதுவாக நான் சோதிடத்தை புத்தகத்தில் போட்டுள்ளது போல் படித்து ஒப்பித்து சொல்பவன் கிடையாது. சோதிட புத்தகத்தில் படித்ததை ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்தில் அப்படி நடந்துள்ளதா என்று பார்த்துவிட்டு தான் பலனை சொல்லுபவன்.

சோதிட புத்தகத்தில் போட்டுள்ள அனைத்தும் அப்படியே நடந்துவிடாது. ஒரு சிலருக்கு நடக்கலாம். ஒரு சிலரின் ஜாதகங்களில் பனிரெண்டாவது வீட்டில் கேது இருந்த ஜாதகத்தை பார்த்துள்ளேன். அவர்கள் அந்தளவுக்கு நன்மை செய்தவர்களாக இல்லை.

கேது மட்டும் மோட்சத்தை கொடுப்பார் என்று நான் நினைக்கவில்லை நீங்கள் சொல்லுவது போல் புண்ணியம் மற்றும் பாக்கிய வீடு எல்லாம் சேர்ந்து மோட்சத்தை கொடுக்கலாம். மோட்சத்தைப்பற்றி பல பதிவுகளில் நான் சொல்லிருந்தாலும் இனிமேலும் வரும் பதிவுகளில் நான் சொல்லுகிறேன் படித்து பாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 4

வணக்கம் நண்பர்களே!
                                               இந்த மாதம் நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள் நிறைவு பகுதி.







அன்புடன் 
ராஜேஷ்சுப்பு




அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம் நண்பர்களே!
                      இந்த மாதம் நடைபெற்ற அம்மனின் பூஜை படங்கள் தொடர்ச்சி.





அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம் நண்பர்களே!
                      இந்த மாதம் நடைபெற்ற அம்மனின் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு.




அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம் நண்பர்களே!
                      கார்த்திகை மாதம் நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு







Thursday, December 11, 2014

உங்களின் வீடு பகுதி 8


வணக்கம் நண்பர்களே!
                      உங்களின் வீட்டைப்பற்றி உங்களின் ஜாதகத்தை வைத்து பார்த்து வருகிறோம். சுக்கிரன் நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டால் உங்களின் வீட்டில் நல்ல பெண் சக்தி இருக்கும்.

உங்களின் வீட்டில் இருக்கும் பெண்சக்தியால் உங்களின் வீடு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல வீடுகளை நான் பார்த்து இருக்கிறேன். நல்ல முறையில் உள்ளனர்.

ஒரு சில வீட்டில் முன்னோர்களாக இருந்த பெண்கள் அதே வீட்டில் சக்தியாக நிலைக்கொண்டு அவர்களின் குடும்பத்தை காப்பாற்றி வருகிறது. இப்படி சக்தி கூட உங்களின் வீட்டில் இருக்கலாம். 

உங்களின் வீட்டில் இருக்கும் இந்த பெண் சக்தியால் பல நன்மைகளை நீங்கள் பெறவேண்டும் என்றால் ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமை அன்று அந்த சக்திக்கு பிடித்தமான பொருள்களை கொண்டு ஒரு பூஜை செய்து வழிப்பட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு