Followers

Thursday, January 8, 2015

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                      ஒவ்வொரு நாளும் எனக்கு பணம் ஏதாவது ஒருவழியில் வந்துக்கொண்டே இருக்கும். அதற்கு காரணம் ஜாதககதம்பம் என்று சொல்லலாம். 

மாதம் மாதம் அம்மன் பூஜையை வெளியில் தெரிந்து நடத்தினாலும் ஒவ்வொரு நாளும் நான் தங்கியிருக்கும் அறையில் பூஜை செய்துக்கொண்டு இருப்பேன். நான் எதனையும் மறைப்பது கிடையாது. மாதம் மாதம் அம்மன் பூஜை செய்வதற்க்கு செய்யும் செலவை விட வீட்டில் செய்யும் பூஜைக்கு அதிக செலவு எனக்கு ஏற்படும்.

இதனை எல்லாம் மாதத்தில் வரும் சோதிட வழியாக வரும் வருவாயை வைத்து தான் நடைபெறும். எவ்வளவு பணம் வந்தாலும் அது எனக்கு தங்காது. எதாவது பூஜை செய்து பார்ப்பது எனது வேலையாக வைத்திருப்பேன்.

எனது சுயதேவைக்கு தொழில் அதிபர்களுக்கு செய்யும் வேலையில் இருந்து எடுத்துக்கொள்வேன். அப்படி இருந்தும் பல நேரங்களில் கடன் வாங்கியது உண்டு. கடன் எப்பொழுதும் எனக்கு இருக்கும். 

தொழில் அதிபர்களின் பணம் போதுமானதாக இருந்தாலும் அதனை அவர்களுக்கு பூஜை செய்வதற்க்கே அதிகம் செலவு ஆகும். என்னுடைய சுயபரிசோதனை செய்துக்கொள்வதற்க்கும் நிறைய பூஜைகள் செய்ய வேண்டியுள்ளது. ஏன் இப்படி சுயபூஜை செய்கிறேன் என்றால் ஒவ்வொரு நாளும் ஒரு தேடுதல் இருந்துக்கொண்டே இருக்கும்.இதற்கு எல்லாம் அதிக செலவு தான் ஆகின்றது.

அற்புதமான பல விசயங்கள் சுயதேடுதலில் கிடைக்கிறது. அதற்கு எதனை வேண்டுமானாலும் கொடுக்கலாம். அனைத்திற்க்கும் அம்மன் தான் காரணமாக இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வைகுண்ட ஏகாதசி தரிசனம் பகுதி 2

வணக்கம் நண்பர்களே!
                      பல்லாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோவில். இது சிதலமடைந்து பிறகு புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டது. 






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். அதில் தெற்கு மற்றும் மேற்கு பக்கம் இடம் விட்டு கட்டகூடாது என்று சொல்லிருந்தேன். அதனை படித்துவிட்டு நண்பர்கள் தொடர்புக்கொண்டு சந்தேகம் கேட்டனர். 

ஜாதகம் கூட நமக்கு தேவையில்லை நாம் என்னவாக போகிறோம் என்பதை நாம் முதலில் தீர்மானித்துவிடவேண்டும் அதன் பிறகு நாம் அதற்கு தகுந்தார் போல் அனைத்தையும் தீர்மானித்துக்கொள்ளவேண்டும்.

ஒருத்தருடைய எண்ணம் தான் அவனை வழிநடத்தும் மிகப்பெரிய ஆற்றல் வாய்ந்தது. நீங்கள் எப்படி வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றீர்களோ அதற்கு தகுந்தார் போல் அனைத்தையும் செய்துக்கொள்ளவேண்டும். உதாரணத்திற்க்கு நல்ல வசதி வாய்ப்போடு இருக்க வேண்டும் என்று நினைத்தால் வடக்கு பக்கம் இடவசதியை அதிகப்படுத்தி அதே நேரத்தில் அந்த இடத்தில் அதிகமாக நீங்கள் சம்பந்தப்படும்பொழுது உங்களுக்கு நேர்மையான வசதி கிடைக்கும்.

நான் தவறான வழியில் தான் சம்பாதிப்பேன். எனக்கு இருக்கும் எண்ணம் எல்லாம் தவறான வழியில் தான் சம்பாதிக்கவேண்டும் என்று  எண்ணுகிறேன் என்றால் அதற்கு மேற்கு பக்கம் அதிக இடவசதியை செய்துக்கொண்டு வாழும்பொழுது உங்களுக்கு தவறான வழியில் பணம் சேரும்.

முதலில் நீங்கள் என்னவாக மாறவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கு தகுந்தார்போல் மாற்றிக்கொள்ளுங்கள். இது தான் முதல் சூத்திரம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வைகுண்ட ஏகாதசி தரிசனம் பகுதி 1

வணக்கம் நண்பர்களே!
                      வைகுண்ட ஏகாதசி அன்று திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை என்ற ஊருக்கு சென்று இருந்தேன். அங்கு ஸ்ரீ  தேவி பூமாதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு மாலையில் சென்றேன். இது எதார்த்தமாக நடந்த ஒரு கோவில் விசிட். அன்று ஏகாதசியாக இருந்த காரணத்தால் பெருமாளே என்னை அழைத்தது போல் அந்த கோவிலுக்கு சென்றேன். 

கோவிலில் மொத்தம் இருந்த நபர் ஐயரை தவிர நான்கு பேர் மட்டுமே. மிகப்பெரிய கோவில். வைகுண்ட ஏகாதசிக்கு இப்படி ஒரு நல்ல தரிசனத்தை கொடுத்த இறைவனுக்கு எத்தனை கோடி நன்றி சொன்னாலும் தகும். அந்த தரிசனத்தை நீங்களும் காணவேண்டும் என்று செல்போனில் எடுத்த போட்டோவை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். ஒரு வீட்டை நாம் பார்த்து அது மிக நல்லதாக இருந்து அந்த வீட்டில் இருப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்றால் அந்த வீட்டில் இருக்கும் நபர்களை நாம் கவனிக்க வேண்டும்.

வீட்டில் உள்ள நபர்கள் தவறான தொழில் செய்து வருகிறார் என்றால் அவருக்கு வாஸ்து படி அமைக்கப்பட்ட வீடு சரிப்பட்டு வராது. ஒரு வீட்டிற்க்கு கிழக்கு பக்கமும் வடக்கு பக்கமும் இடம் விட்டு கட்டவேண்டும் என்று வாஸ்துவில் சொல்லுவார்கள். இப்படிப்பட்ட வீடு தவறான தொழில் செய்பவர்களுக்கு சரிப்பட்டுவராது.

பல பேர்களின் வீடுகளை நான் பார்த்து இருக்கிறேன். அந்த வீடுகளுக்கு சென்று பார்க்கும்பொழுது வீடு நன்றாக இருக்கும். ஜாதகத்தில் உள்ள ஒரு சில கிரக நிலைகளால் அவர்களின் தொழில் தவறாக இருக்கும். அவர்கள் ஏதாவது ஒரு பிரச்சினையில் இருப்பார்கள். அவர்களிடம் வீட்டை மாற்றிவிடுங்கள் என்று சொல்லுவேன்.

தவறான தொழில் செய்பவர்களுக்கு வாஸ்து படி வீட்டை அமைக்கும்பொழுது அந்த வீடு அவர்களை திருத்த நினைக்கும். அவர்கள் செய்யும் தொழிலை தவிர வேறு தொழில் தெரியாது என்று விட்டு வரமாட்டார்கள்.அப்பொழுது அவர்களை அடுத்த வீடாக பார்த்து குடி போய்விடுங்கள் என்று சொல்லிவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Wednesday, January 7, 2015

குழந்தை பாக்கியம்


வணக்கம் நண்பர்களே!
                      மனிதனுக்கு ஏற்படுகின்ற பிரச்சினையில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது திருமணத்திற்க்கு பிறகு குழந்தையில்லாமல் இருப்பது. தினமும் எனக்கு ஒரு மெயிலாவது இதனைப்பற்றி வந்துவிடும். குழந்தையில்லை எனது ஜாதகத்தை பார்த்து சொல்லுங்கள் என்று சொல்லுவார்கள்.

முன் ஜென்மத்தில் வரும் பிரச்சினை இது. குழந்தை பாக்கியம் என்பது வாங்கி வந்த வரம் தானே தவிர வேறு ஒன்றும் சொல்லுவதற்க்கு கிடையாது.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களை பார்த்து நான் வருத்தப்பட்டது உண்டு. ஏன் என்றால் இந்த விசயம் அவர்களின் கையில் கிடையாது. எல்லாேரும் இல்லறத்தில் ஈடுபடுவது போல் தான் ஒவ்வொருவரும் ஈடுபடுகிறார்கள். ஒருத்தருக்கு குழந்தை இருக்கின்றது அடுத்தவர்களுக்கு குழந்தை இல்லை என்றால் இங்கு தான் கடவுளைப்பற்றி நாம் நினைக்க தோன்றுகிறது.

குழந்தை இல்லாதவர்கள் ஒவ்வொருவரும் அவர் அவர்களின் குலதெய்வத்தை நன்றாக பிராத்தனை செய்துவிட்டு புண்ணியஸ்தலங்கள் சென்று புனித நீராடிவிட்டு ஒவ்வொரு கோவிலாக சென்று வருவது நல்லது.

குழந்தை என்பது ஒரு மிகப்பெரிய வரம் இதனை கடவுள் மனது வைத்து தான் கொடுக்கவேண்டும். கடவுளே மறுக்கும்பொழுது நாம் அவரை சரணாகதி அடைந்து தான் பெறமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு 

சோதனை


வணக்கம் நண்பர்களே!
                      இலவச சோதிட சேவையை நிறுத்திவிட்டேன். அதற்கு காரணம் அனைவரும் இலவச சோதிடத்தை மட்டும் பார்ப்பதோடு அவர்களின் வேலை முடிந்துவிடுகிறது. என்னைப்பொறுத்தவரை இலவச சோதிடம் கட்டணசோதிடம் என்று பார்க்காமல் பலனை சொல்லுவது எனது இயல்பு இதனை அனைவரும் நன்றாக பயன்படுத்திக்கொண்டனர். இது மட்டும் தான் எனக்கு பிழைப்பு என்பதால் கட்டண சோதிடம் மட்டும் போதும் என்று இலவச சோதிடத்தை நிறுத்திவிட்டேன்.

இலவசசோதிடத்தை நிறுத்தினாலும் பல பேர் அதற்கு மெயில் அனுப்பிக்கொண்டே இருக்கின்றனர். இலவச சோதிடத்திற்க்கு மெயில் அனுப்பினாலும் பரவாயில்லை பக்கம் பக்கமாக எனக்கு அவர்களின் பிரச்சினையை சொல்லி எழுதி அனுப்புக்கின்றனர். 

எரிந்துக்கொண்டு இருக்கும் வீட்டில் இருந்து என்ன எடுக்கலாம் என்பது எங்களின் பிழைப்பு. பிரச்சினையை வைத்து தான் நாங்கள் காசு பார்க்கிறோம்.  நீ இப்படி தான் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று எங்களை படைத்த ஆண்டவன் எழுதிய விதி.

ஒன்றை உங்களுக்காக சொல்லுகிறேன். மனித வாழ்க்கையில் பிரச்சினை என்பது இல்லாமல் இருக்காது. ஒரு கிரகம் நன்றாக இருக்கின்றது என்று சொன்னால் மீதி உள்ள கிரகங்கள் உங்களை அடிக்க தயாராக இருக்கிறது என்று தான் அர்த்தம். உங்களுக்கு நல்ல சோதிடம் தெரியும் இதனை நான் சொல்ல தேவையில்லை.

ஒவ்வொரு சோதனையும் ஏற்படும்பொழுது அதனை வெளியில் சொல்ல தேவையில்லை முடிந்தவரை ஆண்டவனிடம் பிராத்தனை வையுங்கள். அந்த நம்பிக்கை உங்களை காப்பாற்றும்.

பணம் இல்லை என்றால் அம்மனிடம் நல்ல பிராத்தனை வையுங்கள். அம்மன் உங்களை காப்பாற்றும். அதற்கு நீங்கள் பணம் கொடுக்கவேண்டும் என்பதில்லை. அம்மன் வழியாக முன்னேற்றம் அடையலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு