Followers

Sunday, October 3, 2010

ஏழாவது வீடு




ஏழாம் வீட்டைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். ஏழாம் வீட்டின் கிரக குணங்களை கொண்டு எப்படி பட்ட கணவன் அல்லது மனைவி வருவாள் என்று கூறலாம். ஆசை சொத்துக்கள் சேர்க்கை , மரணம் ஆகியவற்றை கூறலாம்.

இப்பொழுது ஏழாம் வீட்டின் அதிபதி ஒவ்வொரு வீட்டின் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.

ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தால் அவன் கவர்ச்சி கொண்டவனாக இருப்பான். அவனிடம் பெண்கள் அன்பு வைத்து இருப்பார்கள் பாபகாரியகள் அறியாது காமகாரியங்கள் செய்வான். இவர்களுக்கு மனைவியின் மூலம் வருமானம் இருக்கும்.

ஏழாவது வீட்டின் கிரகம் இரண்டாம் வீட்டில் இருந்தால் மனைவியின் மூலம் சொத்துக்கள் வரும். மனைவியின் மூலம் சம்பாத்தியம் இருக்கும். மனைவியின் மூலமும் உறவினர்கள் மூலமும் உதவி இருக்கும்.

ஏழாம் வீட்டு கிரகம் மூன்றாம் வீட்டில் இருந்தால் களத்திரதோஷம் மனைவிக்கு மாரகம் ஏற்பட்டு மறு விவாகம் செய்துக்கொள்ளவும் கூடும். அதைப்போல் அதிகமாக காமமோ பற்று இருக்காது.

ஏழாம் வீட்டு கிரகம் நான்காம் வீட்டில் இருந்தால் அமர்ந்திருந்தால் எதிர்பார்க்கும் இன்பத்தை அடைவான். குடும்பத்தை நடத்தும் பொறுப்பையும் யோக்கியத்தை அம்சங்களையும் அவனுக்கு வரும் மனைவி பெற்று இருப்பாள்.

ஏழாம் வீட்டு கிரகம் ஐந்தாம் வீட்டில் இருந்தால் அவருக்கு களத்திர தோஷம் பெற்றவனா இருப்பான் சினிமா போன்றவற்றில் ஈடுபாடு இருப்பான். காதல் மணம் முடிப்பான் ஆனால் திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது.

ஏழாம் வீட்டு கிரகம் ஆறாம் வீட்டில் இருந்தால் மனைவி வியாதிகள் கொண்டவளாக இருப்பாள். கணவனக்காக எதிராக கலகங்கள் விரோதங்கள் செய்வாள் மனைவியினால் ஆதரவு இருக்காது.

ஏழாம் வீட்டு கிரகம் ஏழாவது வீட்டில் இருந்தால் ஜhதகன் மனைவியின்
வீட்டில் அடிமையாக இருப்பான் மனைவியின் செல்வாக்கு அதிகமாக இருக்கும்.

ஏழாம் வீட்டு கிரகம் எட்டாவது வீட்டில் இருந்தால் அவனக்கு வரும் மனைவியினால் அவன் கஷ்டங்களை வறுமைகளை அனுபவிப்பான். குடும்பத்தை ஓழுங்காக நடத்தும் பொறுப்பு அற்றவளாகவும் வீனான ஆசை கொண்டவளாகவும் வருமான குறைவுடனும் இருப்பாள்.

ஏழாம் வீட்டு கிரகம் ஓன்பதாம் வீட்டில் இருந்தால் பெரியவர்களின் அனுக்கிரக்தாலும் பூர்வ புண்ணியத்தாலும் சிறு வயதில் திருமணம் நடைபெறும். குடும்பம் ஒற்றுமையுடன் இருக்கும்.

ஏழாம் வீட்டு கிரகம் பத்தாவது வீட்டில் இருந்தால் வரும் மனைவியால் சம்பாத்தியம் இருக்கும். சொத்துக்களும் நகைகளும் சேரும்.

ஏழாம் வீட்டு கிரகம் பதினேராவது வீட்டில் இருந்தால் நல்ல செல்வத்துடன் சொத்துகளுடனும் மனைவி வருவாள். மனைவியினால் அந்தஸ்துடன் மனைவி வருவாள். மனைவியினால் கணவனின் அந்தஸ்து உயரும்.

ஏழாம் வீட்டு கிரகம் பன்னிரேண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவியினால் அதிகமான தன சேதங்கள் ஏற்படும். மனைவி இன்ப வாழ்க்கை வாழ ஆசைபடுவாழ். கடன்கள் வாங்கியும் சொத்துக்கள் விற்றும் குடும்பத்தை நடத்த வேண்டி இருக்கும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

5 comments:

agalya said...

HI
my doubt
you say Lakna is 1st house.
Then you say palan for Lakna in 2nd , 3rd , 4th and so on..
Is it confusing.

2. you also say 1st house, 2nd house athipati . Lakna may vary depds on rasi. How do find the athipathi ?

with confused
agalya

agalya said...

Hi I confused.
1. You say Lakana is 1st house. Then you say palan for Lakna in houses 1, 2 ,3 and so on.

2. athipathi for 1st house , second house ......

can you clarify these plaes
Thanks

agalya said...

Hi
I am confused.
You say Lakna is 1st house
Then you keeps say palan for Lakna in 2 veedu, 3rd veedu & so on
confused

rajeshsubbu said...

// agalya said...
HI
my doubt
you say Lakna is 1st house.
Then you say palan for Lakna in 2nd , 3rd , 4th and so on..
Is it confusing.//


தங்களின் வருகைக்கு மிகவும் நன்றி எந்த வீடாக இருந்தாலும் லக்கினதிலிருந்து தான் வீடுகளை எண்ணி வரவேண்டும். அதாவது லக்கினாதிபதி எந்த வீட்டிற்க்கு சென்றுள்ளார் அதைதான் 2 ம் வீடு 3 ம் வீடு என்று கூறிஉள்ளேன். அதன் பலன் என்ன வென்று எழுதிஉள்ளேன்.

//2. you also say 1st house, 2nd house athipati . Lakna may vary depds on rasi. How do find the athipathi ?

with confused
agalya//

எந்த வீட்டு அதிபதி என்று பார்பதற்க்கு லக்கினம் மகரம் என்று கொள்வோம் மகரம் சனியின் வீ்டு சனி அந்த வீட்டின் அதிபதி இவ்வாறாக ஒவ்வோரு வீட்டின் அதிபதியும் கண்டுகொண்டு பார்க்கவேண்டும்.விளக்கம் போதும் என்று நினைக்கிறேன் அதிகம் தேவைபட்டால் எழுதவும் தருகிறேன்

sujindhiran said...

hai sir
7m veedu 6m veedu parivarthanai
ulladhu .laknam rishabam
2m veedu guru irukkirar
manaivi patri sollunga sar.