எட்டாவது வீட்டைக்கொண்டு ஆயுளை நிர்ணயிக்க வேண்டும். எட்டாவது வீடு மறைவு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு மரணம் இயற்கையானதாக வருமா அல்லது துர்மரணமா என்று பார்பதற்க்கும் எட்டாம் வீட்டை வைத்துதான் பார்க்கவேண்டும். ஒருவரின் துன்பங்கள் தடைகள் தோல்விகள் வாழ்க்கையில் படபோகிற கஷ்டங்கள் ஆகியவற்றையும் எட்டாம் வீட்டை வைத்து சொல்லலாம்.மூதாயர்களின் சொத்து உயில்கள் இன்ஷீரன்ஸ். பிராவிடண்ட் பண்டு ஆகியவற்றையும் எட்டாம் வீட்டைக்கொண்டே பார்க்க வேண்டும். பெண்களுக்கு எட்டாம் வீடு மிகவும் முக்கியம் அவர்களின் மாங்கல்ய பாக்கியம் எட்டாம் வீட்டை கொண்டே கணிக்க முடியும்.
இப்பொழுது எட்டாம் வீட்டின் அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
எட்டாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் அதாவது முதல் வீட்டில் இருந்தால் கடன் வறுமை வியாதிகளுடன் இருப்பான்.
எட்டாம் வீட்டு கிரகம் இரண்டாம் வீட்டில் இருந்தால் வாக்கில் நாணயம் இருக்காது. துர்வார்த்தை உபயோகிப்பார்கள் குடும்பத்தில் சந்தோஷம் இருக்காது. உடல் பலம் குறைந்து காணப்படும். பைத்தியம் பிடித்தவன் போல் இருப்பார்கள்.
எட்டாம் வீட்டு கிரகம் 3 ம் வீட்டில் இருந்தால் சகோதரர்கள் ஒற்றுமை இருக்காது. தைர்யம் குறைந்து காணப்படும். மனதில் ஒரு வித பயம் இருந்து கொண்டே இருக்கும். பெரியவர்களால் சேர்த்துவைக்கப்பட்ட சொத்துக்கள் பலவிதங்களில் நாசமாகும்.
எட்டாம் வீட்டு கிரகம் 4 ம் வீட்டில் இருந்தால் தாயாரும் தாய்வழிமாமன் முதலானவர்களின் ஆதரவு இருக்காது. குடும்பத்தில் சதா சச்சரவுகள் தோன்றும். சிரமாக குடும்பத்தை நடத்தவேண்டி வரும். முன்னோர்களின் சொத்துக்கள் அழியும்.
எட்டாம் வீட்டு கிரகம் 5 ம் வீட்டில் இருந்தால் புத்திரர்களால் மன அமைதி இல்லாமலும் சதா பிரச்சினைகளுமாக இருக்கும். உடல் நோய் இருந்து வரும். பிள்ளைகளுடன் விரோதம் இருந்துவரும்.
எட்டாம் வீட்டு கிரகம் 6 ம் வீட்டில் இருந்தால் உடல் நலிந்து கெட்ட எண்ணங்கள் கொண்டவனாகவும் தந்திரவானகவும் பகைவர்களை வெல்ல கூடியவனாகவும் இருப்பான்.
எட்டாம் வீட்டு கிரகம் 7 ம் வீட்டில் இருந்தால் மனைவியை சதா சண்டை போட்டுக்கொண்டும் மனைவியால் கலகம். மனைவி அற்ப ஆயுள் உள்ளவராகவும் இருப்பார்கள்.
எட்டாம் வீட்டு கிரகம் 8 ம் வீட்டில் இருந்தால் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்துவான் நன்மை தீமை அறியாது நினைத்த மாத்திரத்தில் ஏதாவது செய்துவிட்டு அவமானத்தையும் அலைச்சல்களை அடைவான்.
எட்டாம் வீட்டு கிரகம் 9 ம் வீட்டில் இருந்தால் தந்தை சொத்துக்கள் நாசமாகும் பிள்ளைகளால் கடன் ஏற்படும். நண்பர்களிடம் விரோதம் ஏற்படும்.
எட்டாம் வீட்டு கிரகம் 10 ம் வீட்டில் இருந்தால் வேலையில் ஒழுங்காக இருக்கமாட்டார்கள். அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அரசாங்கத்தில் கெட்ட பெயர் எடுப்பார்கள்.
எட்டாம் வீட்டு கிரகம் 11 ம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர்கள் சகோதரிகளுக்கு கண்டம் குழந்தைகளால் வருமானம் ஏற்படும்.
எட்டாம் வீட்டு கிரகம் 12 ம் வீட்டில் எப்பொழுதும் ஊர் சுற்றும் குணம் ஏற்படும். வண்பு வழக்குகள் ஏற்படும். இன்பசுகம் ஏற்பட்டு கையில் உள்ள பணத்தை இழப்பார்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
2 comments:
12 பாவங்களிலும் 8 ம் வீடு கிரகம் துன்பம் தந்தால் எப்படி வாழ்வது. என்ன கொடுமை சார். 8ம் வீடு ஆட்சி வீடாக இருந்தாலும் துன்பமா? விருச்சிகத்தை 8ம் வீடு என்றும் ஆங்கிலத்தில் " passionate love" என்றும் அழைப்போம். தேளை செல்ல பிராணியாக வளர்த்தால் அது கடிக்கும் என எனக்கு தோன்ற வில்லை. பாம்பிற்கு பால் வார்த்தல் கடிக்கும் என்பது பாடலுக்கு ஒத்துவரும்,வாழ்விற்கும் வருமா? அப்படி என்றால் பாம்பை செல்ல பிராணியாக வெளிநாடுகளில் வளர்க்கிறார்களே! செவ்வாய்க்கு உரிய பரிகாரம் செய்தால் உடனடி பலன் கிடைக்கும் என நீங்கள் கூறி உள்ளீர்கள். விளக்கம் தேவை.
பாவத்தை அனுபவிக்க நரகமும் (எமலோகம்- 7 planes below bhuloka such as atala,vitala,rasatala ....and paatala) இன்பத்தை அனுபவிக்க சொர்க்கமும்( இந்திரலோகம்) இருக்க இரண்டையும் அனுபவிக்க பூமி எதற்கு? கர்ம லோகமான பூமியில் கர்மமான இறைவனை வணங்க நித்ய சாயுஜ்ய பதவி வைகுண்டத்தில் அளித்தால் பூலகம் தேவையில்லை அல்லவா? ஒரு நொடியில் இறைவன் மக்களுக்கு ஞானத்தை வழங்கிய கதைகள் வரலாற்றில் எவ்வளவோ இருக்க இறைவன் எல்லோருக்கும் ஏன் ஞானத்தை இக்காலத்தில் வழங்கவில்லை? விளக்கம் தேவை.
Post a Comment