மனிதனுக்கும் மட்டும் தான் ஆன்மீகம் என்னும் சக்தியை உணர அதிக வாய்ப்பளித்து இருக்கிறான். மற்ற உயிரனங்கள் தான் வாழ்ந்தால் போதும் என்று உணவை மட்டும் தேடிக்கொண்டு இருக்கின்றன.
மனிதனுக்கு உணவை மட்டும் தேடியதோடு தன் இறக்கபிறந்தவர்கள் அல்ல வேறு ஏதோ ஒன்று இருக்கின்றது என்ற ஒரு அறிவை வைத்திருக்கிறான் அதனால் தான் மற்ற உயிரனங்களில் இவன் வேறுப்பட்டு இருக்கிறான்.
தன் உணவை தேடுவதோடு இறைவனையும் தேடுகிறான். ஒரு சிலர் இறைவனை தேடுவதை விட்டுவிட்டு விலங்குகள் போலவே வாழ்ந்துக்கொண்டும் இருக்கிறார்கள். மாடுகள் போல் தலையை கீழே குனிந்து கொண்டு இருக்கிறார்கள் மேலே நிமிர்ந்து வானத்தை கூட பார்ப்பதில்லை.
ஏன் நாம் பிறந்தோம் எதற்க்காக இங்கு வந்தோம் என்று ஒரு நிமிடம் சிந்தித்தால் நமக்கு ஆன்மீகசக்தி வந்துவிடும்.நாம் வாழும் வாழ்க்கை வாழ்க்கை தானா என்று சிந்தித்து பார்க்கவேண்டும். எது மரணத்தை தருகிறதோ அது வாழ்க்கை அல்ல. மரணத்தை தராத ஒன்று இருக்கின்றதா என்று பார்த்தால் அது தான் ஆன்மீகசக்தியின் பிறப்பிடமாக இருக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment