நான் இந்த ஜாதகத்தை தொட்டவுடன் பதிவு நீண்டு கொண்டே செல்கிறது அதனால் சுருக்கமாக இந்த பதிவிலேயே முடித்துக்கொள்கிறேன். ஒரு மனிதனின் வாழ்க்கையை சொல்லவேண்டும் என்றால் ஆயிரம் பக்கங்கள் கூட போதாது. நீண்டு கொண்டே செல்லும் உங்கள் பொறுமை கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
எட்டாம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் இருக்கிறார் ஆறாம் வீடு நோய் ஸ்தானம் இவருக்கு உடம்பு மெலிந்து காணப்படுகிறது. எந்த எந்த விதத்தில் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதிலேயே எண்ணங்கள் வந்துகொண்டே இருக்கும். யாராவது எதிரி என்று வந்துவிட்டால் அவரை பாடாதபாடு படுத்துவார்கள்.
ஒன்பதாம் வீடு என்று சொல்லக்கூடிய பாக்கியஸ்தானத்தைப் பற்றி பார்க்கலாம் அதன் அதிபதி ஐந்தாம் வீட்டில் இருக்கிறார் அதுவும் ராகுவுடன் சேர்ந்து அமர்ந்துள்ளார். இவரின் தந்தை உயிருடன் இல்லை. பாக்கியஸ்தான அதிபதி ஐந்தில் நிற்பது நல்லது தான் ஆனால் இவருக்கு அமைந்த கிரகம் இரண்டும் கெடுதல் தரும் கிரகம் அதனால் நடந்த பலன் எல்லாம் கெடுதல் ஆக அமைந்தது.
ரிஷப ராசி பத்தாவது வீடாக வருகிறது அதன் அதிபதி சுக்கிரன் அவர் களத்திர ஸ்தானத்தில் இருக்கிறார். இவர் மனைவி மூலம் நல்ல வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு துணையாக இருப்பார் ஆனால் இவருக்கு திருமணம் நடைபெறவில்லை. இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவந்தார் ஆனால் இப்பொழுது வேலையில் இல்லை.
லாப ஸ்தானம் வைத்து பார்க்கும் மிதுன ராசியாக வருகிறது. அதன அதிபதி புதன் அவர் மீனராசியில இருக்கிறார். 8 ஆம் வீட்டில் இருக்கிறார். உயில் இன்சுரன்ஸ் மூலம் பணம் வரும். இவர்களுது வாழ்க்கையில் ஏற்றதாழ்வுகள் சர்வ சாதாரணம் மோசடி பேர்வழிகளால் இவர் ஏமாற்றபடுவார். எனவே மொத்தத்தில் இவர் எச்சரிக்கையாக பணம் விஷயத்தில் இருக்கவேண்டும்.
கடைசியாக விரயஸ்தானம் கடக ராசியாக வருகிறது அதன் அதிபதி சந்திரன். அவர் களத்திர ஸ்தாகனத்தில் இருக்கிறார். மனைவி மூலம் விரைய செலவுகள் ஏற்படும். ஆனால் இவருக்கு திருமணவாழ்வில் ஈர்ப்பு ஏற்படாது. இவரிடம் நான் கேட்டதற்க்கு எனக்கு திருமணமே பிடிக்கவில்லை என்று சொன்னார்.
இவர் வேலை செய்துக்கொண்டு இருக்கும் போது தலையில் அடிபட்டது அதனால் இவர் சுயநினைவு இல்லாமல் இருந்தார். பெரிய மருத்துவமனை எல்லாம் பார்த்தார்கள் இப்பொழுது இவர் கொஞ்சம் தேறி வருகிறார். இவருக்கு தலையில் அடிப்பட்டது குரு தசை நடக்கும் போதுதான் குரு இவருடைய ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் இருக்கிறது.
நான் இவருக்கு சொன்ன ஜாதக பலன்களில் ஒரு 10 சதவீதம் தான் இந்த தொடர்பதிவில் எழுதினேன். மீதி எழுதவில்லை ஏன் என்றால் புதியவர்கள் கருத்தில் கொண்டு எழுதவில்லை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment