7 ஆம் வீட்டில் ராகு இருந்தால் களத்திரதோஷத்தை ஏற்படுத்தும். பல பெண்கள் தொடர்பு ஏற்படும் சிற்றின்பத்தில் ஈடுபாடு அதிகம் ஏற்படும் துணைவரின் நலம் கெடும். துணைவர்களால் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும். இவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் இவரை ஏமாற்றுவார்கள். திருமணம் நடைபெறாதவர்களாக இருந்தால் திருமணத்தடை ஏற்படுத்தும் திருமணம் நடைபெற்றவர்களுக்கு வீண் குழப்பங்களை ஏற்படுத்துவார். அதனால் பிரிவினை ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் இல்லையென்றால் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.
8 ஆம் வீட்டில் ராகு இருந்தால் உடம்பில் நோய் ஏற்படுத்துவார். நண்பர்களிடம் தேவையற்ற விவாதம் தவிர்கவும். செல்வ நிலை ஒரே மாதிரியாக இருக்காது. துணைவரிடம் சண்டை சச்சரவு ஏற்படும். விபத்து ஏற்படும். தகுதிக்கு மீறிய பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வாக்குறுதி தருவது கூடாது. பணவசதி அவ்வளவு சிறப்பாக இருக்காது. இறக்கும் தறுவாயில் படுத்த படுக்கையாக இறக்க நேரிடும். உடலில் புண் ஏற்படும். பாதுகாப்பு குறைவான இடத்தில் தங்காதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
9 ஆம் வீட்டில் ராகு இருந்தால் கடுமையான பித்ரு தோஷம் ஏற்படும். எடுத்த அனைத்து காரியங்களும் தடை ஏற்படும். பெரியவர்களின் சாபங்கள் இருக்கும். தந்தை நலம் பாதிக்கப்படும். உயர்கல்வி படிக்க இயலாது. ஆன்மீக ரீதியில் புண்ணிய காரியங்கள் செய்வார்கள். சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை.
10 ஆம் வீட்டில் ராகு இருந்தால் நல்ல தொழில் வாய்ப்பு அமையும். வருமானம் நன்றாக இருக்கும். அன்னியர் மூலம் தொழில் அமையும். ஆன்மீக விஷயத்தில் நாட்டம் அதிகமாகும். தொழில் சார்ந்த வகையில் சந்திக்கும் குறுக்கீடுகளைச் சரி செய்ய கடின முயற்சி தேவைப்படும். கலைதுறையில் நுழைந்து சாதிக்கலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.
11 ஆம் வீட்டில் ராகு இருந்தால் நல்ல செல்வ வளம் வரும். வருமானத்தில் குறைவு இருக்காது. மூத்த சகோதர சகோதரிகளிடம் பகை இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். ஆன்மீக பயணம் செல்ல நேரிடலாம். பொருளாதாரத்தில் நல்ல உயர்வைத் தருவார். புதிய புதிய தொழில்கள் ஆரம்பித்துக்கொண்டே இருப்பார்கள்.
12 ஆம் வீட்டில் ராகு இருந்தால் செலவு அதிகமாக இருக்கும். கடுமையாக உழைத்தாலும் வருமானம் அதிகமாக இருக்காது. முழுமையான நித்திரை சுகம் இருக்காது. புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். பிள்ளைகளால் செலவு ஏற்படும். பாதங்களில் பிரச்சினை ஏற்படும். எதிர்பாராத செலவுகள் வரலாம். வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
6 comments:
ஐயா, என் நண்பருக்கு 7இல் ராகு , 1இல் கேது . களத்திர தோஷம் உள்ளது, 30 வயதில் இன்னும் திருமணம் ஆகவில்லை. பரிகாரம் எதாவது இருந்தால் கூறுங்கள்
Hello sir,rahu is in 9th house.but i have studied Post Graduation,stil interested in studying.My father's health is good.why nothing matched as you said for 9th house predictions of rahu
//* daran said...
ஐயா, என் நண்பருக்கு 7இல் ராகு , 1இல் கேது . களத்திர தோஷம் உள்ளது, 30 வயதில் இன்னும் திருமணம் ஆகவில்லை. பரிகாரம் எதாவது இருந்தால் கூறுங்கள் *//
தங்கள் வருகைக்கு நன்றி. ராகு கேது தலங்களுக்கு சென்று வழிபட சொல்லுங்கள்.
//* Lazy boy said...
Hello sir,rahu is in 9th house.but i have studied Post Graduation,stil interested in studying.My father's health is good.why nothing matched as you said for 9th house predictions of rahu*//
தங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்லுவது சரிதான் என்னிடமும் நிறைய ஜாதகங்கள் உள்ளன. நான் தருவது பொதுபலன் தான். இப்பொழுதான் ஆரம்பித்து இருக்கிறோம் போக போக அனைத்து பலன்களும் வரும்.
Ok thank you
ஐயா தங்கள் வலைத்தளம் பயனுள்ளதாக உள்ளது.நன்றி.
venkatesh28@hotmail.com
Post a Comment