Followers

Saturday, March 31, 2012

அனுபவம்



வணக்கம் நீண்ட நாட்களாக பதிவு எழுதவில்லை தினமும் வந்தவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் ஒருவருக்கு திடிர் என்று உடல்நிலை சரியில்லை. அவருக்கு ஆப்பிரேஷன் செய்தார்கள். நானும் கூட இருக்க வேண்டியதாகிவிட்டது. நாம் தான் சோதிடராக இருப்பதால் எந்த ஒரு நிகழ்வையும் சோதிட கண்னோட்டத்தில் பார்க்கும் ஆளாக இருப்பதால் என்ன நடந்தது என்று பார்த்தேன்.

ஆப்பிரேஷன் செய்து கொண்டவர் ராசி மீன ராசி அவருக்கு ஒரு பையன் ஒரு பெண் இரண்டு பேரும் இரட்டையர்கள் இருவருக்கும் கன்னி ராசி.

மீன ராசிக்கு அஷ்டமசனி சனி பகவான் வக்கிரமாக இருப்பதால் ஏழில் சனி பகவான் என்று வைத்துக்கொள்வோம். லக்கினமும் மீனம் தான். ஏழில் சனி இருந்து நேரடியாக ராசிக்கு விழுவதால் உடல்நிலையில் மிகவும் பிரச்சினை செய்துவிட்டது. பிள்ளைகளின் ராசிப்படி தந்தை ஸ்தானத்தை காட்டும் இடத்தில் கேது பகவான் அமர்ந்துள்ளார்.

அதனால் தந்தைக்கு பிரச்சினையை ஏற்படுத்தி விட்டார். இருந்தாலும் ஆப்பிரேஷன் நன்றாக முடிந்துவிட்டது ஆனால் பிள்ளைகளின் ராசிப்படி கன்னி ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்க்கு குரு வரபோகிறார். அதனால் தந்தைக்கு பிரச்சினை வரவாய்ப்பு உள்ளது.

எப்பொழுதும் குடும்ப சனி வந்தால் அதாவது இரண்டாம் வீட்டிற்க்கு வந்தால் குடும்பத்தில் ஏதாவது ஒருவர் இறப்பார். குடும்பத்தில் கூட்டத்தை கூட்ட நினைப்பார். அது நல்ல நிகழ்ச்சியாகவும் இருக்கலாம் அல்லது துக்க நிகழ்ச்சியாகவும் இருக்கலாம்.

ஏழரை சனி நடக்கும் நேரத்தில் ஒருவருக்கு மரணம் ஏற்படுவது மிக குறைந்த பட்சம் தான் அப்படி மரணம் ஏற்படுதல் என்பது சனிக்கு தீய கிரகம் சேர்க்கை ஏற்பட்டால் உண்டாகும். இப்பொழுது ஏழரை சனி நடப்பவர்கள் இந்த ஆண்டு இறுதியில் ராகு சனி உடன் சேருகிறார் . சனியுடன் செவ்வாய் ஜூன் மாதத்தில் இருந்து 45 நாட்கள் இருப்பார் அந்த நாட்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கு வேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: