Followers

Sunday, April 6, 2014

அம்மன் அருள்



வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்களுக்காக நான் செய்துக்கொடுத்த வேலை எல்லாம் இப்பொழுது தான் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. நான் வெளியில் சுற்றிக்கொண்டிருந்ததால் அம்மன் சிறிது தொய்வாக வேலை செய்துக்கொடுத்தது.

எனது அறையில் தங்கி வேலையை ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு வேலையும் வேகமாக நடைபெற்றுவருகிறது. உனது வேலை நடைபெறவில்லை என்று சென்றவர்கள் கூட திருப்பி என்னை தேடி வந்துக்கொண்டிருக்கின்றனர். நான் தனிமையில் இருக்கும்பொழுது நிறைய வேலைகளை அம்மனிடம் சொன்னவுடன் சென்று செய்து வருகின்றது.

தனிமையாக எனது அறையில் இருந்தால் எனக்கு வேலை அதிகமாக வரும் அதற்கு காரணம் அம்மன். அலுவலகம் வைத்து சம்பாதிப்பதைவிட நான் தங்கியிருக்கும் அறையில் இருந்தால் அதிகம் வருமானம் கிடைக்கும்.

தனிமையில் அம்மனோடு இருக்கும்பொழுது நிறைய வேலைகள் நடத்திக்கொடுக்கும். நமக்கும் புதிய வேலைகள் வரும். நீங்களும் ஆன்மீகத்தில் ஈடுபட்டு இருந்தால் தனிமையில் பூஜையறையில் இருங்கள். அப்பொழுது தான் நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Aanmeegathirku thanimai than siranthatho