வணக்கம் நண்பர்களே!
                    இன்று காலை சென்னை வந்து சேர்ந்துவிட்டேன். விரைய தசாவை முதலில் பார்த்துவிடலாம். ஒரு முறை சங்கரன்கோவில் பக்கத்தில் இருந்து ஒரு நபர் என்னை சந்திக்க வந்தார். அவரின் சித்தப்பா ஜாதகத்தை கொண்டுவந்து காட்டினார். இவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். மருத்துவர்கள் இவரை கைவிட்டுவிட்டார்கள் என்று சொன்னார்.
சம்பந்தப்பட்ட ஜாதகரின் ஜாதகத்தை பார்த்தேன். பனிரெண்டாவது வீட்டில் ராகு சுக்கிரன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் அமர்ந்து இருந்தன. அவருக்கு ராகுவின் தசா நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவருக்கு காமத்தின் வழியாக வரும் நோய் அவரை தாக்கிருப்பது தெரிந்தது.
சம்பந்தப்பட்ட ஜாதகர் ராகுதாசவின் கடைசியில் தான் அவரின் ஜாதகத்தை பார்க்க நேர்ந்தது. அவருக்கு என்ன பரிகாரம் செய்தாலும் சரிப்பட்டு வராது. வந்த நபர் என்னிடம் பரிகாரம் இருந்தால் செய்யுங்கள் என்று சொன்னார். அவரை வைத்து நாம் பிழைப்பை நடத்தகூடாது என்று என்ன செய்தாலும் முடியாத ஒன்று சொல்லிவிட்டேன். இறப்பின் இறுதியில் நின்றுக்கொண்டிருக்கும் மனிதனுக்கு என்ன பரிகாரத்தை செய்வது.
கடவுளிடம் வேண்டிக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்று சொல்லிவிட்டேன். அவரின் ஜாதகத்தில் விரைய ஸ்தானத்தில் ராகு சுக்கிரன் செவ்வாய் மூன்று கிரகங்கள் அமர்ந்து இருந்தன. விரையஸ்தானத்தில் அமர்ந்த கிரகங்கள் கண்டிப்பாக காமத்தில் இழுத்துக்கொண்டு விட்டுவிடும். அதுவும் முறைதவறிய இடத்திற்க்கு இழுத்து செல்வதில் மூன்று பேரும் வல்லவர்கள். இப்படி அமர்ந்ததால் அவர்க்கு அந்த நோய் வந்தது.
இவருக்கு பொருத்தமாக ராகு தசா வேறு நடைபெறுகிறது அல்லவா. ராகு எங்கு அமர்ந்து தசா நடத்தினாலும் அது பிரச்சினையை தரும். அவர் விரைய ஸ்தானத்தில் அமர்ந்து நடந்தால் பெரிய பிரச்சினை தான் வரும். சுக்கிரன் மற்றும் செவ்வாய் அதிகமான காமத்திற்க்கும் இழுத்து செல்லவைக்கும் கிரகம் என்பதால் இவருக்கு இப்படிபட்ட நோய் வந்திருக்கிறது. தற்பொழுது இவர் உயிரோடு இல்லை.
கிரகங்கள் இப்படி அமர்ந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் தான் சரியாக இருக்கவேண்டும். எச்சரிக்கையுடன் இருந்தால் விதியை வென்று இருக்கலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
ராஜேஷ்சுப்பு

No comments:
Post a Comment