வணக்கம் நண்பர்களே!
                    தியானம் என்பதை இந்த காலத்தில் அனைவரும் செய்கின்றனர். தியானம் யோகா என்று சொல்லுவது எல்லாம் பேஷனாகிவிட்டது. தியானம் யோகா செய்துக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் அவர்களை இந்த சமுதாயம் மதிக்கும் என்று நினைக்கிறார்கள். ஏதோ நல்லது நடந்தால் சரி. 
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் திருமணத்திற்க்கு ஒரு வாகனம் அமர்த்திக்கொண்டு வெளியூர் செல்லும்பொழுது காலையில் வண்டி சென்றுக்கொண்டிருக்கும்பொழுது ஒரு நண்பர் இரண்டு சீட்டிற்க்கும் நடுவில் உட்கார்ந்துக்கொண்டு தியானம் செய்கிறேன் என்று அவர் செய்த செயலை பார்க்கும்பொழுது பல பேர் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
உங்களுக்கு சொல்ல வந்ததை சொல்லுகிறேன். நமது தினசரி செய்யும் செயல் போல் ஆன்மீகப்பயிற்சி இருக்கவேண்டும். அடுத்தவர்கள் நம்மை பார்த்து பெருமை படவேண்டும் என்று நினைத்தால் அது ஆன்மீகப்பயிற்சி கிடையாது. நாம் செய்யும் ஆன்மீகப்பயிற்சி வெளியில் ஒரு நாளும் தெரியகூடாது.
நீங்கள் என்ன பயிற்சி செய்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதைப்பற்றி உங்களின் மனைவிக்கு கூட தெரியக்கூடாது. வெளியில் சொல்லும்பொழுது ஆன்மீகப்பயிற்சி ஒரு போதும் கைகூடாது. இதனைப்பற்றி விளக்கி சொல்லமுடியாது ஆனால் உண்மையான ஒரு விசயம்.
நாம் எப்படி சுவாசிக்கிறோமோ அதனைப்போல் நமது ஆன்மீகப்பயிற்சியும் இருக்கவேண்டும். நாம் சுவாசிக்கிறோம் என்று வெளியில் சொல்லுகிறோமா அதனைப்போல் தான் ஆன்மீகப்பயிற்சியும் இருக்கவேண்டும். தியானம் செய்கிறேன் என்று பொது இடங்களில் உட்கார்ந்துக்கொண்டு நமது வழிபாட்டை கொச்சைப்படுத்தவேண்டாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
 

 
1 comment:
Thiyanam parri innum neengal niraya padhivu thara vendukirom.
Post a Comment