வணக்கம் நண்பர்களே!
நான் பல ஊர்களுக்கு சென்று வருகிறேன். அப்படி சென்று வரும்பொழுது நான் பார்க்கும் அனுபவம். எப்படியாவது பிறரிடம் ஏமாந்து பணத்தை விடுபவர்களாகவும் அல்லது ஒழுங்கான பணம் மேலான்மை இல்லாமல் பணத்தை இழந்தவர்களாக அதிகம் பேர் இருக்கின்றார்கள்.
நமக்கு நடக்கும் தசா புத்திகளை நன்றாக ஆராய்ந்து பார்த்துவிட்டு பணத்தை நாம் கையாள வேண்டும். ஒரு தசா முதலில் பணத்தை தருவதாகவும் ஒரு சிலருக்கு இருக்கிறது. அடுத்து வரும் புத்தியில் பணத்தை இழக்கவும் வைக்கிறது.
நாம் ஜாதகத்தை தான் பார்க்கவில்லை என்றாலும் ஏதாவது ஒரு தெய்வத்தை நூறு சதவீதம் நாம் நம்பி பிராத்தனை செய்து வந்தால் நமது பிராத்தனையின் பலனாக நமக்கு வரும் பணம் தேவையில்லாமல் நம்மிடம் இருந்து செல்லாது.
ஒவ்வொரு தசாவிலும் வரும் ஒவ்வொரு புத்தியும் கண்டிப்பாக நமக்கு மாற்ற மனநிலையை கொடுத்தாலும் நாம் நம்பிக்கை வைக்கும் தெய்வம் அந்த புத்தியின் தீயவை எல்லாம் போக்கி நமக்கு நல்ல மனநிலையை தரும்.
இன்றைய காலத்தில் வாரத்தில் ஏழு நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்தை அல்லது ஒவ்வொரு தெய்வத்தை வணங்கி வருபவர்களை பலரை நான் பார்த்து இருக்கிறேன். இப்படி எல்லாம் வணங்கி வராமல் நீங்கள் ஒரு தெய்வ வழிபாட்டை மட்டும் செய்து வாருங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.

No comments:
Post a Comment