Followers

Sunday, September 1, 2013

ஆன்மீக அனுபவங்கள் 110


வணக்கம் நண்பர்களே!
                     நான் பல ஆலயங்களுக்கு செல்லும்பொழுது அங்கு பூஜை செய்யும் குருக்களை நன்றாக கவனித்து பார்த்தலில் ஒரு ஒற்றுமையான ஒரு விசயம் தெரிந்ததை கண்டுபிடித்தேன். அதனைப்பற்றி எனது குருநாதரிடம் விசாரிக்கும்பொழுது ஒரு உண்மையை சொன்னார் அதனை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

நான் ஆலயங்களில் பூஜை செய்பவர்களை பார்த்தலில் என்ன ஒற்றுமை என்றால் அனைவரின் கால்களும் ஏதாவது ஒருவிதத்தில் ஊனமாக இருக்கின்றது. ஊனம் இல்லை என்றால் கால் நடப்பது கூட தாங்கி நடப்பார்கள். நொண்டிகால் போல் நடப்பார்கள். இதனை குருநாதரிடம் கேட்டவுடன் சொன்னார். ஒரு மனிதன் அவனின் கால்களில் தான் நிற்கிறான். அவனின் பாதம் தான் மிகமுக்கியமான ஒன்று. நாம் சாமி கும்பிடபோனாலும் திருவடியை தான் கும்பிடுவோம். அப்படி ஒரு சக்தி திருவடிக்கு உண்டு.

பொதுவாக ஐயர்கள் அபிஷேகம் செய்யும்பொழுது தற்பொழுது உள்ள கோவில்களில் சிலைக்கு அருகிலேயே நின்று அபிஷேகம் செய்வார்கள். அந்த நீர் இவர்களின் கால்களிலும் படும். இதனை எடுத்து வரும் பக்தர்களுக்கு தீர்த்தமாக கொடுக்கிறார்கள். 

சாமிக்கு அபிஷேகம் செய்வது போல் இவர்களுக்கே அபிஷேகம் செய்கின்றார்கள். அது மிகப்பெரிய பாவம். அங்கு இருக்கும் சிலைகளை இவர்கள் கற்சிலை என்று நினைக்கிறார்கள் அது ஒரு ஐதீகம் என்று நினைப்பதில்லை. அதனால் தான் பல பேர்களுக்கு பூஜைசெய்பவர்களின் கால்கள் பிரச்சினையாக இருக்கும் அல்லது அவர்களின் வீடுகளில் பிரச்சினையாக இருக்கும் என்றார்.

பழம்கால கோவில்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சிலைக்கு அருகிலேயே ஒரு மேடைபோல் இருக்கும் அதன் மீது ஏறி நின்று குருக்கள் அபிஷேகம் செய்வார்கள். இன்றைய காலகோவில்களில் அப்படி அமைப்பதில்லை. 

இந்த பதிவுக்கு வரும் பூஜை செய்பவர்கள் இதனை கவனத்தில் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள். ஒரு சொட்டு நீர் கூட உங்களின் மேல் படக்கூடாது. 



இந்த காலத்தில் கோவில் கட்டினாலும் பழங்காலத்தில் எப்படி முறையை கையாண்டார்கள் என்பதை கவனத்தில் கொண்டு கோவிலை கட்டுங்கள். இப்பொழுது பல கோவில்கள் கட்டுகிறார்கள் அதில் ராஜகோபுரம் ஒன்று இன்று பகட்டுக்காக கட்டப்படுகிறது. அருகில் போனாலே பயமாக இருக்கின்றது கீழே விழுந்துவிடுமோ என்று எண்ண தோன்றுகிறது. சின்ன கோவிலாக கட்டினாலும் சரியான முறையில் கட்டப்படுகிறதா என்று தான் கவனிக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா பலன்கள் பகுதி 16


வணக்கம் நண்பர்களே!
                     ராகு ஒவ்வொரு ராசியிலும் அமர்ந்து தசா நடைபெற்றால் என்ன பலனை தரும் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.

மேஷ ராசி
          நல்ல செல்வசெழிப்பையும் பெண்களின் தொடர்பையும். பிறரை ஏமாற்றி பிழைப்பை நடத்த வைப்பான். அதிகமான காமத்தோடு அலையவைப்பான்.

ரிஷப ராசி
          நல்ல பணவரவையும். பெண்கள் வழியாக தொடர்பையும் அதன் மூலம் பிரச்சினையும் அதிகமான தனம் தானிய வரவையும் ஏற்படுத்தி தருவான்.

மிதுன ராசி
          பெண்களில் வழியில் தொடர்பு ஏற்பட்டு அதன் வழியாக பணவரவையும் ஏற்படுத்தி தருவான். எதிரியின் வழியாக பணவரவையும் ஏற்படுத்திதருவான்.

கடக ராசி
          அதிகமான பணவரவு மற்றும் பெரிய தலைவர்களாகவும் நிறைய நிலபுலங்களையும் ஏற்படுத்தி தருவான்.

சிம்ம ராசி
          நல்ல உடல்நிலையும் பணவரவும் ஏற்படுத்துவான் அதே நேரத்தில் புத்திரர்கள் வழியில் நாசத்தை ஏற்படுத்துவான்.

கன்னி ராசி
           அதிகமான பெண்களின் தொடர்பால் அவமானத்தையும் எதிரியின் வழியாக பிரச்சினையும் பணவரவு அற்றவனாகவும் ஏற்படுத்திக்கொடுப்பான்.

துலாம் ராசி
           மனக்கவலை சிறுநீரக கோளாறு இடையில் நல்ல பணவரவு கலந்து தருவான்.

விருச்சிக ராசி
            உடல்நிலையில் பிரச்சினையும் நாடுவிட்டு நாடு கடத்தலையும் ஒரு சிலருக்கு மரணத்தையும் ஏற்படுத்தி தருவான்.

தனுசு ராசி
          அப்பாவிற்க்கு விபத்து அல்லது மரணம் கொஞ்சம் பணவரவு ஏற்படுத்திக்கொடுப்பான்.

மகர ராசி
         புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பது இதனை செய்து தருவான்.

கும்ப ராசி
  தனவரவு மற்றும் புண்ணியதீர்த்தங்களில் நீராடுவது போன்றவற்றை ஏற்படுத்துவான்.

மீன ராசி
        அனைத்து தனத்தையும் ஏற்படுத்திக்கொடுத்த விட்டு கடைசியில் அனைத்தையும் நாசம் செய்வான்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

பரிகாரம்: குரு+சந்திரன்


வணக்கம் நண்பர்களே!
                    குரு சந்திர மங்கல யோகத்தைப்பற்றி பழைய பதிவில் பார்த்திருந்தோம். இந்த யோகத்தால் என்ன பயன் என்றால் நல்ல பணவரவு வந்துக்கொண்டே இருக்கும். எப்படிப்பட்ட நிலையிலும் பணம் வரும்.

குரு சந்திரன் சேர்ந்து இருந்தால் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தால் அல்லது குரு சந்திரனை தன் பார்வையால் பார்த்தால் குரு சந்திர மங்கள யோகம் ஏற்படுகிறது. 

இந்த யோகத்தால் ஒரு பிரச்சினை இருக்கின்றது அது என்ன என்றால் இந்த யோகத்தை உடையவர்கள். வேலை செய்யும் இடத்தில் இவர்களுக்கும் இவர்களின் மேல் அதிகாரிக்கும் ஒத்துவராது. மேல் அதிகாரிகள் இவரைகளை வஞ்சிப்பார்கள். அவர்களிடம் மட்டும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்லவேண்டும்.

மேல் அதிகாரிகள் ஏதாவது குடைச்சலை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.இவர்கள் ஒன்று சொன்னால் மேல் அதிகாரி வேண்டும் என்றே இவர்க்கு எதிராக எதாவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இப்படிபட்ட யோகத்தை உடையவர்கள் மேல் அதிகாரிகளின் கண்களில் படாமல் இருப்பதே மேல். இவர்களுக்கு பரிகாரம்.

ஆலங்குடி குருபகவானை திங்கள் கிழமை சென்று வணங்கிவாருங்கள்.அப்படி வணங்கி வரும்பொழுது இந்த யோகத்தால் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

மனிதபிறவி ஊனம்


வணக்கம் நண்பர்களே!
                    நமது ஜாதககதம்பத்தை படித்துவிட்டு இவரால் செய்யமுடியும் என்று எண்ணி என்னை தேடிவருவது எனக்கு மனதில் புதிய தெம்பு பிறக்கிறது. 

என்னை பொருத்தவரை என்னால் முடியும் என்று சொன்னால் முடியும் என்று சொல்லிவிடுவேன். அப்படி முடியவில்லை என்று எனக்கு தெரிந்தால் அதனை விட்டு விலகிவிடுவேன். ஒருவர் நம்பிக்கை வைத்து வரும்பொழுது அவருக்கு செய்து தருவது நடக்கவேண்டும் இல்லை என்றால் அவரின் நம்பிக்கை பொய்த்துவிடும். அதனால் முடியாத காரியத்தை என்னால் முடியாது என்று சொல்லிவிடுவது எனது வாடிக்கை.

நேற்று ஒரு வாடிக்கையாளரை சந்திக்க சென்றேன். அவரின் உறவினரின் ஒரு பையனுக்கு பேச்சு வரவில்லை என்று அந்த பையனின் ஜாதகத்தை பார்த்தேன். இரண்டாவது வீடு நன்றாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. அவரின் தந்தையின் ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் நன்றாக அடிப்பட்டு உள்ளது. பாக்கியவீடு நன்றாக இருக்கும் என்று பார்த்தால் பாக்கியமும் கெட்டு இருக்கிறது. 

ஒரு குழந்தைக்கு பேச்சு வரவில்லை என்றால் இரண்டு வயதிற்க்குள் பார்த்தால் மட்டுமே சாத்தியம். அதாவது ஆன்மீகவழியில் சரிசெய்யமுடியும் அதற்கு மேல் வயது சென்றுவிட்டால் அறிவியலை தான் நாடவேண்டும். 

இரண்டு வயதிற்க்குள் இருந்தால் எப்படி ஆன்மீகத்தால் பேசவைத்துவிடமுடியும். இந்த பையனுக்கு மூன்று வயது ஆகிவிட்டது. எனது குருநாதர் கூட சொல்லிருந்தார் இரண்டு வயதிற்க்குள் இருந்தால் நீ பார் அதற்கு மேல் சென்றுவிட்டால் அதனை அறிவியலுக்கு தான் அனுப்பவேண்டும் என்று சொல்லிருந்தார்.

ஒரு சில பரிகாரங்களை செய்ய சொல்லி இருந்தேன். அதன் பிறகு நாம் முயற்சி செய்து பார்க்கலாம் என்று சொல்லிருக்கிறேன். ஒருவருக்கு ஏன் பேச்சு வரவில்லை அப்படி என்ன பாவம் செய்திருப்பார் என்று பார்த்தால் ஆன்மீகம் சொல்லும் விளக்கம் முன்ஜென்மத்தில் சம்பந்தப்பட்ட நபர் ஒரு பெண்ணை வாயில் துணியை வைத்து கற்பழித்து இருப்பார் அல்லது தந்தை இந்த வேலையை செய்திருக்ககூடும் என்று சொல்லுகிறார்கள். 

ஒரு மனிதபிறவி எடுத்தால் எந்தவித ஊனமும் இல்லாமல் இருக்கவேண்டும்.
அவர்களின் நிலை கஷ்டமாக தான் இருக்கின்றது முடிந்தவரை பார்க்கலாம் என்று சொல்லியுள்ளேன்.ஒவ்வொருவருக்கும் எப்படிபட்ட பிரச்சினை வந்தாலும் கடவுள் இருக்கின்றார் அவர் நம்மை காப்பாற்றுவார் என்று நம்பி அவனை விடாமல் பிடித்தால் அனைத்தையும் அவன் சரி செய்வான்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

நல்ல நாள்


வணக்கம் நண்பர்களே!
                    நமது மதத்தில் எந்த நிகழ்வையும் நாள்களை பார்த்து தான் வைப்பார்கள். நல்ல நாளை பார்த்து தான் வைக்கவும் வேண்டும். ஒரு சிலர் என்ன செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எந்த நாள் எளிதாக இருக்கிறதோ அந்த நாளை வைத்துக்கொள்ளுவது.

கிராமங்களில் ஒரு ஐயர் மட்டும் இருப்பார். அவருக்கு எந்த நாள் வேலை இல்லாமல் இருக்கின்ற நாளை பார்த்து இந்த நாளில் நடத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லுவார். மக்களும் அந்த நாளை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அந்த நாளை பார்த்தால் விசேஷம் நடத்துபவர்களுக்கு சந்திராஷ்டமாக இருக்கும். 

சந்திராஷ்டமம் மிக மோசமான ஒரு நாள். அந்த நாளில் இவன் திருமணம் அல்லது வீடுகுடிபுகுந்தால் எப்படி இருக்கும் மோசமாக தான் இருக்கும். இவனுக்கு அந்த நாள் தான் இவனே தேடிய மிகப்பெரிய ஆப்பாக கூட இருக்கலாம். உங்களின் ஜாதகத்தை வைத்து அந்த நாளை தேர்ந்தெடுக்கவேண்டும்.

கடவுளுக்கு விஷேசமான நாளில் திருமணம் வீடுகுடிபோகுதல் போன்ற நிகழ்வை வைப்பதும் கூடாது. அன்றைய நாளில் முகூர்த்தம் என்று குறிப்பிட்டு இருந்தாலும் அந்த நாளில் தவிர்ப்பது நலம். கடவுளுக்கு தான் விஷேச நாட்களை தவிர மனிதர்களுக்கு அது கிடையாது. கடவுளுக்கு விஷேச நாளில் கடவுளை தான் கொண்டாடவேண்டுமே தவிர உங்களுக்கு கிடையாது.

வரும் விநாயகர் சதுர்த்தி அன்று பார்த்தால் ஏகாப்பட்ட திருமணம் நடைபெறுகிறது. இதனை எல்லாம் தவிர்ப்பது நலம். நாளை வைத்து தான் ஒரு காரியம் வெற்றி அடையுமா தோல்வி அடையுமா என்று பார்க்கமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ராகு தசா பலன்கள் பகுதி 15


வணக்கம் நண்பர்களே!
                    ஒருவருக்கு ராகு தசா ஆறாவது வீட்டில் இருந்து நடைபெறும்பொழுது எப்படிபட்ட வில்லன்களை அனுப்புவார் என்பதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

ஆறாவது வீட்டு அதிபதி லக்கினத்தில் தொடர்புக்கொண்டால் இவருக்கு வில்லன் இவரே தான். எப்படி அவருக்கு அவரே வில்லனாக வரமுடியும் என்று கேட்கிறீர்களாக மனரீதியாக பிரச்சினை கிளப்பி அவரே அவருக்கு ஆப்பு வைத்துக்கொள்வார்.

ஆறாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் தொடர்புக்கொண்டால் இவரின் குடும்பத்தில் உள்ளவர்களே அவருக்கு வில்லன்களாக உருவாக்கி தொந்தரவுக்கொடுப்பார்கள். இவரின் வாயால் சண்டை உருவாகிவிடும். 

ஆறாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் அமர்ந்து ராகு தசா நடைபெற்றால் இளைய சகோதர சகோதரிகள் இவருக்கு வில்லன்களாக வந்துவிடுவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் அமர்ந்து ராகு தசா ந்டைபெற்றால் பெற்ற தாய் வழியில் உள்ளவர்கள் இவர்க்கு எதிரியாக வந்துவிடுவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி ஐந்தாவது வீட்டில் அமர்ந்து ராகு தசா நடைபெற்றால் முன்ஜென்ம பகையில் உள்ளவர்கள் எதிரியாக வந்துவிடுவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் அமர்ந்து ராகு தசா நடைபெற்றால் நோய் மற்றும் அந்தவீட்டின் காரத்துவம் உள்ளவர்கள் எதிரியாக வருவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டில் அமர்ந்து ராகு தசா நடைபெற்றால் மனைவி மற்றும் மனைவியின் வழியில் உள்ளவர்கள் எதிரியாக வருவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் அமர்ந்து ராகு தசா நடைபெற்றால் மரணம் நடந்த வீட்டில் சண்டை ஏற்பட்டு அதில் உள்ளவர்கள் எதிரியாக வருவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து ராகு தசா நடைபெற்றால் தந்தை தந்தை வழியில் உள்ளவர்கள் எதிரியாக வருவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் அமர்ந்து ராகு தசா நடைபெற்றால் வேலை செய்யும் இடத்தில் இருந்து எதிரியாக வருவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி பதினோராவது வீட்டில் இருந்து ராகு தசா நடைபெற்றால் மூத்த சகோதர சகோதரிகள் வழியில் உள்ளவர்கள் எதிரியாக வருவார்கள்.

ஆறாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் நின்று ராகு தசா நடைபெற்றால் பெண்கள் வழியில் எதிரிகள் வருவார்கள்.

இதில் உள்ள வில்லன்கள் ராகு தசா நடைபெறும் காலத்தில் உங்களுக்கு வில்லன்களாக வருவார்கள். ராகு என்பதால் அனைத்தையும் நேருக்கு நேர் தாக்காமல் மறைந்து தாக்குவார்கள். ராகு தசா ஆறாவது வீட்டில் இருந்து நடைபெறும் பொழுது எச்சரிக்கையுடன் இருந்துக்கொள்ளுங்கள்

பரிகாரம்
        இவர்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள உக்கிரதேவதைகளை வணங்கவேண்டும். பதினெட்டு வருடங்கள் விடாமல் தொடர்ந்து வணங்கிவாருங்கள். பல தடைகளை ஏற்படுத்தினாலும் விட்டுவிடாமல் வணங்கிவந்தால் நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

அம்மனின் அருள்


வணக்கம் நண்பர்களே!
                  இந்த தளத்திற்க்கு வரும் நண்பர்களுக்கு என்று என்னால் முடிந்தளவுக்கு அம்மனை வைத்து நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் பலநாட்களாகவே இருந்து வந்தது. இதனை செயல்படுத்த கொஞ்சநாட்கள் எனக்கு தேவைப்பட்டது. ஏன் என்றால் நீங்கள் வேண்டுவது அம்மனிடம். நான் சொல்லுவதை மட்டும் கேட்கும் அம்மனை இந்த பதிவுக்கு வரும் நண்பர்கள் சொன்னாலும் கேட்கும்படி செய்யவேண்டும் என்று பலநாட்கள் உழைத்து அவ்வாறு ஏற்பாடு செய்தேன்.

இன்று பல நண்பர்கள் அதனால் பயன்பெற்று இருக்கிறார்கள். இப்பொழுது பார்த்தால் பல நண்பர்கள் எனக்கு போன் செய்து பூஜை எப்பொழுது என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அம்மனின் அருள் அந்தளவுக்கு செய்கின்றது. நான் ஆன்மீகத்தை பயிற்சி செய்யும்பொழுதே ஒன்றை நன்றாக முடிவு செய்தேன். எக்காரணம் கொண்டும் என்னை முன் நிறுத்தகூடாது. அதாவது என்னை வெளியில் காட்டி பெயரை சம்பாதிக்ககூடாது என்று முடிவு செய்தேன்.

அம்மனை வைத்து நான் எல்லாம் வேலையும் செய்து எனக்கு பெயரை எடுத்துக்கொள்ளமுடியும் ஆனால் ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்ந்துவிடமுடியும் என்று யோசித்தேன் எந்த பெயரும் நிலைக்கபோவதில்லை என்பதை அறிந்து எந்த தெய்வம் செய்கிறதோ அந்த தெய்வத்தை நேரிடையாகவே உங்களிடம் காட்டவேண்டும் என்பதால் அதனை காண்பித்தேன். நாளை நான் இருக்கலாம் இல்லாமல் போகலாம் ஆனால் தெய்வம் என்பது என்றும் இருக்கும்.

அங்காளபரமேஸ்வரியை நீங்கள் மற்றும் உங்களுக்கு பின்பு வரும் தலைமுறையினர் வேண்டுதலை வைத்தாலும் அது உங்களுக்கு நிறைவேற்றி வைத்துவிடும். நிலையான ஒன்றை நீங்கள் பிடித்துக்கொண்டு உள்ளீர்கள் என்பதை தெரியப்படுத்துகிறேன்.

என்னுடைய வேலை ஒரு மிகப்பெரிய சக்தி இருந்ததை கண்டுபிடித்தேன் அது நமக்கு மட்டும் ஏன் பயன்படுகிறது அனைவருக்கும் பயன்படவேண்டும் என்று நினைத்து வெளிக்கொண்டு வந்தேன். இன்று அனைவருக்கும் செய்துக்கொண்டு இருக்கிறது. 

தாராளமாக நீங்கள் வேண்டுதலை வையுங்கள் வேண்டுதல் வைத்தால் பணம் கொடுக்கவேண்டும் என்று எண்ணவேண்டாம். வேண்டுதலை வைத்து உங்களை உயர்த்திக்கொள்ளுங்கள். உயர்த்திய பின்பு நீங்கள் அம்மனுக்கு செய்துக்கொள்ளலாம். செய்யாமல் விட்டாலும் பரவாயில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.