வணக்கம் நண்பர்களே!
நமது ஜாதககதம்பத்தை படித்துவிட்டு இவரால் செய்யமுடியும் என்று எண்ணி என்னை தேடிவருவது எனக்கு மனதில் புதிய தெம்பு பிறக்கிறது.
என்னை பொருத்தவரை என்னால் முடியும் என்று சொன்னால் முடியும் என்று சொல்லிவிடுவேன். அப்படி முடியவில்லை என்று எனக்கு தெரிந்தால் அதனை விட்டு விலகிவிடுவேன். ஒருவர் நம்பிக்கை வைத்து வரும்பொழுது அவருக்கு செய்து தருவது நடக்கவேண்டும் இல்லை என்றால் அவரின் நம்பிக்கை பொய்த்துவிடும். அதனால் முடியாத காரியத்தை என்னால் முடியாது என்று சொல்லிவிடுவது எனது வாடிக்கை.
நேற்று ஒரு வாடிக்கையாளரை சந்திக்க சென்றேன். அவரின் உறவினரின் ஒரு பையனுக்கு பேச்சு வரவில்லை என்று அந்த பையனின் ஜாதகத்தை பார்த்தேன். இரண்டாவது வீடு நன்றாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. அவரின் தந்தையின் ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் நன்றாக அடிப்பட்டு உள்ளது. பாக்கியவீடு நன்றாக இருக்கும் என்று பார்த்தால் பாக்கியமும் கெட்டு இருக்கிறது.
ஒரு குழந்தைக்கு பேச்சு வரவில்லை என்றால் இரண்டு வயதிற்க்குள் பார்த்தால் மட்டுமே சாத்தியம். அதாவது ஆன்மீகவழியில் சரிசெய்யமுடியும் அதற்கு மேல் வயது சென்றுவிட்டால் அறிவியலை தான் நாடவேண்டும்.
இரண்டு வயதிற்க்குள் இருந்தால் எப்படி ஆன்மீகத்தால் பேசவைத்துவிடமுடியும். இந்த பையனுக்கு மூன்று வயது ஆகிவிட்டது. எனது குருநாதர் கூட சொல்லிருந்தார் இரண்டு வயதிற்க்குள் இருந்தால் நீ பார் அதற்கு மேல் சென்றுவிட்டால் அதனை அறிவியலுக்கு தான் அனுப்பவேண்டும் என்று சொல்லிருந்தார்.
ஒரு சில பரிகாரங்களை செய்ய சொல்லி இருந்தேன். அதன் பிறகு நாம் முயற்சி செய்து பார்க்கலாம் என்று சொல்லிருக்கிறேன். ஒருவருக்கு ஏன் பேச்சு வரவில்லை அப்படி என்ன பாவம் செய்திருப்பார் என்று பார்த்தால் ஆன்மீகம் சொல்லும் விளக்கம் முன்ஜென்மத்தில் சம்பந்தப்பட்ட நபர் ஒரு பெண்ணை வாயில் துணியை வைத்து கற்பழித்து இருப்பார் அல்லது தந்தை இந்த வேலையை செய்திருக்ககூடும் என்று சொல்லுகிறார்கள்.
ஒரு மனிதபிறவி எடுத்தால் எந்தவித ஊனமும் இல்லாமல் இருக்கவேண்டும்.
அவர்களின் நிலை கஷ்டமாக தான் இருக்கின்றது முடிந்தவரை பார்க்கலாம் என்று சொல்லியுள்ளேன்.ஒவ்வொருவருக்கும் எப்படிபட்ட பிரச்சினை வந்தாலும் கடவுள் இருக்கின்றார் அவர் நம்மை காப்பாற்றுவார் என்று நம்பி அவனை விடாமல் பிடித்தால் அனைத்தையும் அவன் சரி செய்வான்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment