Followers

Monday, December 15, 2014

உங்களின் வீடு பகுதி 9


வணக்கம் நண்பர்களே!
                      உங்களின் வீட்டைப்பற்றி உங்களின் ஜாதகத்தின் துணைக்கொண்டு அறிந்து வருகிறோம். இப்பதிவில் நான்காவது வீட்டில் சனிக்கிரகம் சம்பந்தப்பட்டு இருந்தால் உங்களின் வீட்டில் கிராமபுறத்தில் உள்ள தெய்வங்களின் வாசம் இருக்கும்.

ஒரு சில வீடுகளில் எல்லையை காக்கும் தெய்வமும் உங்களின் வீட்டிற்க்கு அடிக்கடி வந்து செல்லும். எல்லையை காக்கும் தெய்வம் வீட்டிற்க்கு வரகூடாது இருந்தாலும் உங்களை காக்குவதற்க்கு தான் வீட்டிற்க்கு வருகிறது அதனால் கவலைப்படதேவையில்லை.

உங்களின் வீடு அமைவது உழைப்பாளிகளின் வீடுகளுக்கு அருகில் உங்களின் வீடு அமையும். ஒரு சிலருக்கு தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கும் பகுதியில் வீடு அமையும்.பெரும்பாலும் நான்காவது வீட்டில் சனி சம்பந்தப்பட்டால் அவர்களின் வீடு நிறைய வீடுகள் இருக்கும் பகுதியில் அமைவதற்க்கு வாய்ப்பு அதிகம்.

நான்கில் சனி அமைந்தால் உங்களுக்கு வீடு அமைவது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். பெரும்பாலும் கூட்டுக்குடும்பங்கள் இருப்பது போல் உங்களின் வீடு அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                      சக்தியைப்பற்றி பல பதிவுகளில் நாம் பார்த்து வருகிறோம். ஒரு சக்தியை நீங்கள் எடுத்துவிட்டால் அந்த சக்தியிடம் சும்மா சும்மா போய் வேலை வாங்கிகொண்டு இருக்ககூடாது. அந்த சக்தியே உங்களுக்கு பார்த்து நல்லதை செய்துவிடும்.

பொதுவாக சக்தியை எடுத்தவர்கள் அதனை மிக பாதுகாப்பாக தான் பாதுகாப்பார்களே தவிர கண்ட இடத்திலும் பயன்படுத்திக்கொண்டு இருக்கமாட்டார்கள்.

இந்த பிறவியில் ஒரு சக்தி கிடைத்து நாம் முன்ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் மட்டுமே என்று நினைத்துக்கொண்டு அதே நேரத்தில் அந்த சக்தி நம்மை விட்டு போய்விடகூடாது என்றும் நினைப்பார்கள்.

உண்மையில் சக்தியை எடுத்த பிறகு அதனை தொலைத்த பிறகு மிகவும் கஷ்டப்படுவார்கள். சக்தியோடு இருந்த வாழ்க்கை வேறு இப்பொழுது இருக்கும் நிலை மிக கொடியது என்று சொல்லுவார்கள். நீங்களும் சக்தியை எடுத்தால் அதனை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது உங்களுக்கு நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, December 14, 2014

ஆன்மீகம்


வணக்கம் நண்பர்களே!
                      இன்றைய காலத்தில் ஆன்மீகத்தில் இருக்கின்றேன் என்று சொல்லிக்கொள்ள பலருக்கு ஆர்வம் இருக்கிறது. இதனை வரவேற்க வேண்டும்.

ஒவ்வொருவரும் ஆன்மீகவாதி மாறவேண்டும் என்று நான் நினைப்பேன். ஆன்மீகவாதி என்று வெளியே சொல்லிக்கொண்டு இருக்ககூடாது. உங்களுக்குள் அது நடைபெறவேண்டும். வெளியில் சொல்லிக்கொள்வதற்க்கு ஆன்மீகத்தை நாடினால் அது உங்களை காவுவாங்கிவிடும்.

நாம் ஆன்மீகவாதியாக மாறிவிட்ட பிறகு நமது குறைகளை நிவர்த்தி செய்துவிட்டு பிறகு தான் அடுத்தவர்களுக்கு நாம் ஏதாவது செய்யபோகவேண்டும். நமது குறைகளே நிவர்த்தி ஆகவில்லை நாம் அடுத்தவர்களுக்கு செய்யபோகிறோம் என்று அடுத்தவர்களின் கர்மாவை வாங்கிக்கொள்ளகூடாது.

ஆன்மீகவாதியாக இன்று மாறிவிட்டேன். எனக்கு நாளைக்குள் என்னுடைய பிரச்சினை அனைத்து தீர்ந்துவிடும் என்று நினைக்ககூடாது. படிப்படியாக உங்களின் குறைகள் எல்லாம் நிவர்த்தி ஆகிவிடும்.

ஒரு சிலர் என்னிடம் வந்து அந்த கோவிலுக்கு சென்றேன் எனக்கு நல்ல வைபேரேஷன் கிடைத்தது என்று சொல்லிவிட்டு எனக்கு இந்த பிரச்சினை இருக்கிறது என்று என்னிடம் சொல்லுவார்கள். உனக்குள் சக்தியை பற்றி புரியும் நிலை ஏற்பட்ட பிறகு என்னிடம் ஏன் வரவேண்டும் என்று நான் நினைப்பேன்.

சக்தியை உணர்ந்த பிறகு அந்த சக்தியை தான் நம்பவேண்டுமே தவிர என்னை நம்பகூடாது. அது உனக்கு காட்டிக்கொடுத்த பிறகு இடையில் நான் எதற்க்கு என்று பலரிடம் நான் கேட்டுள்ளேன் அதனால் உங்களுக்குள் ஆன்மீகத்தை வளருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பார்க்கலாம்


வணக்கம் நண்பர்களே!
                      பார்க்கலாம் இந்த வார்த்தையை அதிகம் நான் பயன்படுத்துவேன். இதனை நான் அதிகம் பயன்படுத்துவதை எனது நண்பர் ஒருவர் பார்த்துவிட்டு ஏன் இப்படி நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். ஒரு வேலை நீங்கள் அனைத்தையும் தவிர்க்க இப்படி பயன்படுத்துகிறீர்களாக என்று கேட்டார்.

பொதுவாக குரு அவர்களின் பிரதிபலிப்பு அதிகமாக என்னிடம் காணப்படும். குருவும் அதிகமாக இதனை போல் ஒரு வார்த்தையை பயன்படுத்துவார். நீங்களே இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வந்து என்னிடம் ஒரு உதவி என்று கேட்டால் உடனே அதனை நிறைவேற்றி கொடுக்ககூடாது என்று சொல்லுவார். ஆளை பார்த்து உதவியை செய் என்று சொல்லுவார். 

ஏன் ஆளை பார்த்து உதவியை செய் என்றால் நல்லவனை கண்டுபிடிப்பது கடினம். நல்லவன் என்று தெரியும்பொழுது மட்டுமே செய்யவேண்டும். ஒரு ஆள் வருகிறார் என்றால் அந்த ஆள் கண்டிப்பாக நம்மை போல் வேலை செய்பவரை பல பேரை பார்த்துவிட்டு தான் வருவார். பல சாமியார்களை நாடி விட்டு தான் நம்மை பார்க்கவருகிறார் அதனால் பொறுமையாக வேலையை தொடங்க வேண்டும் என்பார்.

என்னோடு நீண்ட நாட்கள் தொடர்பில் இருப்பவர்களுக்கு தான் வேலையை தொடங்குவோம். அதுவும் காலம் முடிவு செய்யவேண்டும் என்று காத்து இருப்போம்.  இப்படி செய்வதற்க்கு தான் பார்க்கலாம் என்று சொல்லுவது உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

ஆலய தரிசனம்


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்களின் ஆவல் நீங்கள் கோவிலுக்கு செல்லும்பொழுது எங்களிடம் சொல்லுவதில்லை. எங்களிடம் சொன்னால் நாங்களும் வருவோம் அல்லவா என்று கேட்கிறீர்கள். இதனைப்பற்றி பழைய பதிவில் சொல்லிவிட்டேன். அப்படி இருந்தும் பல நண்பர்கள் கேட்கிறார்கள்.

ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்பொழுது அங்குள்ள நமது நண்பர்கள் அங்குள்ள கோவிலுக்கு என்னை அழைத்துக்கொண்டு செல்வார்கள். நான் எதுவும் சொல்லுவதில்லை. அந்தந்த ஊர்களில் உள்ள நண்பர்கள் முடிவு செய்து தான் கோவிலுக்கு செல்கிறேன்.

நீங்கள் இதுவரை பார்த்த ஆன்மீகவாதிக்கும் எனக்கும் மிகவும் வித்தியாசம் இருக்கும். இதனை அறிந்தவர்கள் மட்டும் தான் என்னை கோவிலுக்கு அழைத்துக்கொண்டு செல்வார்கள்.

கோவிலுக்கு நான் செல்வது எல்லாம் மிகவும் ஜாலியாக தான் இருக்கும்படி விரும்புவேன். இந்த ஜாலி எப்படி உங்களுக்கு ஏற்றுக்கொள்ளும். சந்தோஷமாக ஆன்மீகத்தை விரும்புவன் நான். இதனை எல்லாம் சகித்துக்கொண்டு வருபவர்கள் தாராளமாக வாருங்கள். அந்தந்த ஊர்களுக்கு வரும்பொழுது கண்டிப்பாக என்னை தொடர்புக்கொள்ளுங்கள். கோவிலுக்கு சென்றுவரலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                      சக்தியைப்பற்றி நிறைய பதிவில் சொல்லியுள்ளேன். அதனை எல்லாவற்றையும் நீங்கள் படித்து பயன்பெற்று வருகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த பதிவில் புதுமையான ஒரு விசயத்தை பார்க்கலாம்.

ஒரு இல்லறம் என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்து தான் இருக்கும். அதாவது சிவனும் சக்தியும் சேர்ந்து இருக்கும். இரண்டு வித சக்தியும் சமநிலையில் இருக்கும்பொழுது மட்டுமே அந்த குடும்பம் நல்ல முறையில் இருக்கும். 

பெண்ணின் சக்தி அதிகமானால் குடும்பத்தில் பிரச்சினை தான் வரும். பெண்ணின் சக்தி அதிகம் அடைந்துவிட்டால் ஆணுக்கு பிரச்சினை அதாவது ஆண் பலகீனம் அடைந்துவிடுவான்.

ஒரு பெண் தனது நெற்றியில் இடும் திலகம் மிக முக்கியமானது. நெற்றியில் இருக்கும் பொட்டு மிகப்பெரிய அளவில் ஒரு பெண் வைத்துக்கொண்டால் அந்த பெண்ணின் சக்தி அதிகம் அடைந்துவிடும். வீட்டில் இருக்கும் ஆண் உங்களின் வார்த்தையில் சொல்லபோனால் டம்மியாகிவிடுவார். 

நெற்றியில் பெண்கள் இடும் பொட்டு சிறிய அளவில் இருக்கவேண்டும். பெரிய அளவில் வைத்தால் அம்மன் போல் மாறி ஆணின் பலம் குறைந்துவிடும்.

பின்குறிப்பு
           பெண்கள் இதனை வைத்து ஆணை கீழ் தள்ளிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு பொட்டை பெரிய அளவில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

குழந்தை பாக்கியம்


வணக்கம் நண்பர்களே!
                      இன்றைய காலத்தில் பல பேருக்கு குழந்தை இல்லாமல் இருக்கின்றனர். அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் முதலில் மனிதனுக்கு ஏற்படும் சூடும் ஒரு காரணமாக இருக்கிறது. 

பல்வேறு வகையில் மனிதனுக்கு ஏற்படும் சூட்டை தணிக்க பல வழிகளை மேற்க்கொள்கின்றனர். பழங்காலத்தில் மனிதன் கைக்கு மருதாணியை இட்டுக்கொண்டு உடலுக்கு குளிர்ச்சியை அளித்தான். 

மருதாணி உடலுக்கு நல்ல குளிர்ச்சியை அளிக்கிறது. இயற்கையான வகையில் கிடைக்கும் மருதாணியை கையில் வைத்தாலே போதும். குழந்தை இல்லாதவர்க்களுக்கு குழந்தை கிடைக்கும். இன்றைய காலத்தில் இயற்கையான மருதாணியை யாரும் பயன்படுத்துவதில்லை என்று தெரிகிறது. இயற்கையான முறையில் கிடைக்கும் மருதாணியை எடுத்து கையில் இட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பொதுவாக ஆண்கள் யாரும் மருதாணியை கையில் இட்டுக்கொள்வதில்லை. முதலில் ஆண்களுக்கு தான் கையில் மருதாணியை இடவேண்டும். ஆண்களுக்கு தான் குறைப்பாடு அதிகம் இருக்கிறது. அதனால் கையில் அழகுக்கு இட்டுக்கொள்ளாமல் குளிர்ச்சிக்காவது மருதாணியை இட்டுக்கொள்ளுங்கள். உங்களின் உடல் நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு