வணக்கம் நண்பர்களே!
பார்க்கலாம் இந்த வார்த்தையை அதிகம் நான் பயன்படுத்துவேன். இதனை நான் அதிகம் பயன்படுத்துவதை எனது நண்பர் ஒருவர் பார்த்துவிட்டு ஏன் இப்படி நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். ஒரு வேலை நீங்கள் அனைத்தையும் தவிர்க்க இப்படி பயன்படுத்துகிறீர்களாக என்று கேட்டார்.
பொதுவாக குரு அவர்களின் பிரதிபலிப்பு அதிகமாக என்னிடம் காணப்படும். குருவும் அதிகமாக இதனை போல் ஒரு வார்த்தையை பயன்படுத்துவார். நீங்களே இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வந்து என்னிடம் ஒரு உதவி என்று கேட்டால் உடனே அதனை நிறைவேற்றி கொடுக்ககூடாது என்று சொல்லுவார். ஆளை பார்த்து உதவியை செய் என்று சொல்லுவார்.
ஏன் ஆளை பார்த்து உதவியை செய் என்றால் நல்லவனை கண்டுபிடிப்பது கடினம். நல்லவன் என்று தெரியும்பொழுது மட்டுமே செய்யவேண்டும். ஒரு ஆள் வருகிறார் என்றால் அந்த ஆள் கண்டிப்பாக நம்மை போல் வேலை செய்பவரை பல பேரை பார்த்துவிட்டு தான் வருவார். பல சாமியார்களை நாடி விட்டு தான் நம்மை பார்க்கவருகிறார் அதனால் பொறுமையாக வேலையை தொடங்க வேண்டும் என்பார்.
என்னோடு நீண்ட நாட்கள் தொடர்பில் இருப்பவர்களுக்கு தான் வேலையை தொடங்குவோம். அதுவும் காலம் முடிவு செய்யவேண்டும் என்று காத்து இருப்போம். இப்படி செய்வதற்க்கு தான் பார்க்கலாம் என்று சொல்லுவது உண்டு.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment