Followers

Wednesday, January 7, 2015

குழந்தை பாக்கியம்


வணக்கம் நண்பர்களே!
                      மனிதனுக்கு ஏற்படுகின்ற பிரச்சினையில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது திருமணத்திற்க்கு பிறகு குழந்தையில்லாமல் இருப்பது. தினமும் எனக்கு ஒரு மெயிலாவது இதனைப்பற்றி வந்துவிடும். குழந்தையில்லை எனது ஜாதகத்தை பார்த்து சொல்லுங்கள் என்று சொல்லுவார்கள்.

முன் ஜென்மத்தில் வரும் பிரச்சினை இது. குழந்தை பாக்கியம் என்பது வாங்கி வந்த வரம் தானே தவிர வேறு ஒன்றும் சொல்லுவதற்க்கு கிடையாது.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களை பார்த்து நான் வருத்தப்பட்டது உண்டு. ஏன் என்றால் இந்த விசயம் அவர்களின் கையில் கிடையாது. எல்லாேரும் இல்லறத்தில் ஈடுபடுவது போல் தான் ஒவ்வொருவரும் ஈடுபடுகிறார்கள். ஒருத்தருக்கு குழந்தை இருக்கின்றது அடுத்தவர்களுக்கு குழந்தை இல்லை என்றால் இங்கு தான் கடவுளைப்பற்றி நாம் நினைக்க தோன்றுகிறது.

குழந்தை இல்லாதவர்கள் ஒவ்வொருவரும் அவர் அவர்களின் குலதெய்வத்தை நன்றாக பிராத்தனை செய்துவிட்டு புண்ணியஸ்தலங்கள் சென்று புனித நீராடிவிட்டு ஒவ்வொரு கோவிலாக சென்று வருவது நல்லது.

குழந்தை என்பது ஒரு மிகப்பெரிய வரம் இதனை கடவுள் மனது வைத்து தான் கொடுக்கவேண்டும். கடவுளே மறுக்கும்பொழுது நாம் அவரை சரணாகதி அடைந்து தான் பெறமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு 

சோதனை


வணக்கம் நண்பர்களே!
                      இலவச சோதிட சேவையை நிறுத்திவிட்டேன். அதற்கு காரணம் அனைவரும் இலவச சோதிடத்தை மட்டும் பார்ப்பதோடு அவர்களின் வேலை முடிந்துவிடுகிறது. என்னைப்பொறுத்தவரை இலவச சோதிடம் கட்டணசோதிடம் என்று பார்க்காமல் பலனை சொல்லுவது எனது இயல்பு இதனை அனைவரும் நன்றாக பயன்படுத்திக்கொண்டனர். இது மட்டும் தான் எனக்கு பிழைப்பு என்பதால் கட்டண சோதிடம் மட்டும் போதும் என்று இலவச சோதிடத்தை நிறுத்திவிட்டேன்.

இலவசசோதிடத்தை நிறுத்தினாலும் பல பேர் அதற்கு மெயில் அனுப்பிக்கொண்டே இருக்கின்றனர். இலவச சோதிடத்திற்க்கு மெயில் அனுப்பினாலும் பரவாயில்லை பக்கம் பக்கமாக எனக்கு அவர்களின் பிரச்சினையை சொல்லி எழுதி அனுப்புக்கின்றனர். 

எரிந்துக்கொண்டு இருக்கும் வீட்டில் இருந்து என்ன எடுக்கலாம் என்பது எங்களின் பிழைப்பு. பிரச்சினையை வைத்து தான் நாங்கள் காசு பார்க்கிறோம்.  நீ இப்படி தான் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று எங்களை படைத்த ஆண்டவன் எழுதிய விதி.

ஒன்றை உங்களுக்காக சொல்லுகிறேன். மனித வாழ்க்கையில் பிரச்சினை என்பது இல்லாமல் இருக்காது. ஒரு கிரகம் நன்றாக இருக்கின்றது என்று சொன்னால் மீதி உள்ள கிரகங்கள் உங்களை அடிக்க தயாராக இருக்கிறது என்று தான் அர்த்தம். உங்களுக்கு நல்ல சோதிடம் தெரியும் இதனை நான் சொல்ல தேவையில்லை.

ஒவ்வொரு சோதனையும் ஏற்படும்பொழுது அதனை வெளியில் சொல்ல தேவையில்லை முடிந்தவரை ஆண்டவனிடம் பிராத்தனை வையுங்கள். அந்த நம்பிக்கை உங்களை காப்பாற்றும்.

பணம் இல்லை என்றால் அம்மனிடம் நல்ல பிராத்தனை வையுங்கள். அம்மன் உங்களை காப்பாற்றும். அதற்கு நீங்கள் பணம் கொடுக்கவேண்டும் என்பதில்லை. அம்மன் வழியாக முன்னேற்றம் அடையலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 6, 2015

தீய எண்ணங்கள்


வணக்கம் நண்பர்களே!
                      இன்றைய காலத்தில் செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டியை பார்த்தாலே எங்காவது ஏதாவது கொலை நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஏதாவது ஒரு உருவத்தில் தகராறு நடந்துக்கொண்டே இருக்கிறது.

இதற்கு எல்லாம் காரணம் நிறைய சொல்லப்பட்டாலும் ஒரு கருத்தை உங்களிடம் சொல்லுகிறேன். இதனையும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

இந்த உலகத்தில் மனிதன் குழந்தையாக பிறக்கும்பாெழுதே அவன் எதிர்மறையான எண்ணங்களோடு தான் பிறக்கிறான். அப்படிப்பட்டவனை திருத்தி நல்லவனாக மாற்றுவது நமது வளர்ப்பு முறை.

ஒரு குழந்தையை கவனித்து பார்த்தால் அந்த குழந்தை ஏதாவது ஒன்றை போட்டு உடைத்துக்கொண்டே இருக்கும். கையில் கிடைப்பதை உடைக்கும். ஏன் அப்படி குழந்தை உடைக்கிறது?

குழந்தை பிறக்கும்பொழுதே அதற்குள் நிறைய எதிர்மறையான எண்ணங்களை கடவுள் வைத்து தான் படைக்கிறான். அதனை அப்படியே வெளியில் காட்டும்.  கையில் கிடைப்பதை போட்டு உடைக்கிறது. இதனை நமது பெற்றோர்கள் திருத்தி நல்வழியை சொல்லிக்கொடுக்கிறார்கள். அந்த எதிர்மறையான எண்ணங்கள் அந்த நேரத்தில் குறைந்துவிடுகிறது. கொஞ்சகாலம் விட்டுவிட்டால் இயற்கையாகவே எதிர்மறை எண்ணங்களுக்கு தீனிப்போடுவது போல் சம்பவங்கள் நடைபெறும்பொழுது பொங்கி எழுந்துவிடுகிறது.

மதங்கள் எல்லாம் இந்த பூர்வபுண்ணியத்தில் உள்ள தீய எண்ணங்களை குறைக்க தான் வழியை சொல்லுகிறது. என்ன ஒன்று என்றால் அனைவரையும் அது திருத்துவதில்லை அல்லது நிரந்தரமாக தீர்ப்பதில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஒருத்தன் கெட்டவன் என்றால் கண்டிப்பாக அவன் ஒன்றும் செய்வதில்லை அவனுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அப்படி செய்கிறது. திருத்தாமல் விட்டவர்களை தான் நாம் குறைச்சொல்லவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      வீட்டைப்பற்றி பார்த்து வந்தோம். கொஞ்ச நாளாக அதனை எழுதாமல் இருந்தேன். இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ஒரு வீட்டிற்க்கு மேற்கிலும் தெற்கிலும் இடவசதியை அதிகப்படுத்தாதீர்கள். அதாவது இடம் விட்டுவிடகூடாது. இதனை அனைத்து வாஸ்து பார்ப்பவர்கள் சொல்லுவார்கள். ஒரு வீட்டை பார்க்கும்பொழுது தெற்கிலும் மேற்கிலும் இடம் விட்டு கட்டிருந்தார்கள் என்றால் அந்த வீட்டில் இருப்பவர்கள் பிரச்சினையில் தான் இருப்பார்கள்.

உங்களுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது என்று ஜாதகத்தை பார்த்துக்கொண்டிருப்பீர்கள் தெற்கில் அல்லது மேற்கில் இடம் விட்டு வீடு கட்டி அதில் குடியிருந்தால் உங்களுக்கு வரவேண்டிய நல்ல நேரம் கண்டிப்பாக வராது.

உங்களுக்கு ஏதாவது உடல்நிலையில் பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கிறது. பெரிய மருத்தவர்களை பார்த்தும் நோய் போகவில்லை என்றால் கண்டிப்பாக உங்களின் வீட்டை தான் பார்க்கவேண்டும்.மேற்கிலும் தெற்கிலும் பிரச்சினை இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 5, 2015

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      மார்கழி மாத அம்மன் பூஜை வரும் 11/01/2015 ஞாயிறுக்கிழமை அன்று நடைபெறும். இந்த மாதம் அம்மன் பூஜைக்கு காணிக்கை அனுப்பியவர்கள்


சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணா அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு சுப்பிரமணியன் அவர்கள். 
திரு சுந்தரம் அவர்கள்
திரு சத்திய சீதாராமன் அவர்கள்.
மயிலாடுதுறையை சேர்ந்த திரு யுவராஜ் அவர்கள்.

வழக்கம்போல் பூஜையில் பங்குபெறும்

திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்.

நேரில் வந்து பங்குபெறும் 
திரு கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்

பூஜைக்கு என்று மற்றும் பலர் பணம் அனுப்பியுள்ளனர்.

பூஜை நடைபெறும் அன்று அம்மனிடம் பிராத்தனையை வைத்து வேண்டிக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 2, 2015

செல்வவளம்


வணக்கம் நண்பர்களே!
                      நேற்று புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. 

செல்வவளத்திற்க்கு என்று நிறைய கருத்துக்களை நான் பதிவில் சொல்லிக்கொண்டு வருகிறேன். அதனை பல நண்பர்கள் செய்துக்கொண்டு வருவது எனக்கு தெரிகிறது.

செல்வவளம் இயற்கையாக வருவது நமது பாக்கியம். நமக்கு ஜாதகம் சரியில்லை அப்படிப்பட்ட நிலையிலும் நாம் செல்வவளத்தோடு இருக்கவேண்டுமானால் நான் சொன்ன கருத்துகளை பின்பற்றி வரவேண்டும். பின்பற்றி வருவது மட்டுமல்ல என்னை ஏதாவது ஒரு விதத்தில் என்னை பின்பற்றி வரவேண்டும்.

என்னுடைய தொழில் நண்பர்கள் கூட என்ன செய்வார்கள் என்றால் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் என்னிடம் சொல்லுவார்கள். அப்பொழுது மட்டுமே அவர்களால் ஜெயிக்கமுடியும்.

என்னிடம் சொல்லுவதால் அவர்களின் ஒவ்வொரு செயலும் தடையின்றி நடைபெறும். நான் ஒன்றும் செய்வதில்லை அம்மன் அவர்களுக்கு உதவுகிறது.

ஜாதக கதம்பம் வழியாக வரும் நிறைய குடும்பங்கள் அப்படி தான் பின்பற்றி வருகிறார்கள். அதிகபட்சம் நான்கு மாதங்கள் பின்பற்றினாலே போதும் அவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். இதுவரை நீங்கள் செய்யவில்லை என்றாலும் இனிமேலாவது செய்ய தொடங்குங்கள்.

சென்னை பயணம் ஒத்திவைத்துள்ளேன். திருப்பூர் பயணம் மேற்க்கொள்கிறேன். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் நாளை என்னை சந்திக்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Thursday, January 1, 2015

இனிய தொடக்கம்

வணக்கம் நண்பர்களே!
                      தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு