வணக்கம் நண்பர்களே!
இன்றைய காலத்தில் செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டியை பார்த்தாலே எங்காவது ஏதாவது கொலை நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஏதாவது ஒரு உருவத்தில் தகராறு நடந்துக்கொண்டே இருக்கிறது.
இதற்கு எல்லாம் காரணம் நிறைய சொல்லப்பட்டாலும் ஒரு கருத்தை உங்களிடம் சொல்லுகிறேன். இதனையும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
இந்த உலகத்தில் மனிதன் குழந்தையாக பிறக்கும்பாெழுதே அவன் எதிர்மறையான எண்ணங்களோடு தான் பிறக்கிறான். அப்படிப்பட்டவனை திருத்தி நல்லவனாக மாற்றுவது நமது வளர்ப்பு முறை.
ஒரு குழந்தையை கவனித்து பார்த்தால் அந்த குழந்தை ஏதாவது ஒன்றை போட்டு உடைத்துக்கொண்டே இருக்கும். கையில் கிடைப்பதை உடைக்கும். ஏன் அப்படி குழந்தை உடைக்கிறது?
குழந்தை பிறக்கும்பொழுதே அதற்குள் நிறைய எதிர்மறையான எண்ணங்களை கடவுள் வைத்து தான் படைக்கிறான். அதனை அப்படியே வெளியில் காட்டும். கையில் கிடைப்பதை போட்டு உடைக்கிறது. இதனை நமது பெற்றோர்கள் திருத்தி நல்வழியை சொல்லிக்கொடுக்கிறார்கள். அந்த எதிர்மறையான எண்ணங்கள் அந்த நேரத்தில் குறைந்துவிடுகிறது. கொஞ்சகாலம் விட்டுவிட்டால் இயற்கையாகவே எதிர்மறை எண்ணங்களுக்கு தீனிப்போடுவது போல் சம்பவங்கள் நடைபெறும்பொழுது பொங்கி எழுந்துவிடுகிறது.
மதங்கள் எல்லாம் இந்த பூர்வபுண்ணியத்தில் உள்ள தீய எண்ணங்களை குறைக்க தான் வழியை சொல்லுகிறது. என்ன ஒன்று என்றால் அனைவரையும் அது திருத்துவதில்லை அல்லது நிரந்தரமாக தீர்ப்பதில்லை என்று தான் சொல்லவேண்டும்.
ஒருத்தன் கெட்டவன் என்றால் கண்டிப்பாக அவன் ஒன்றும் செய்வதில்லை அவனுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அப்படி செய்கிறது. திருத்தாமல் விட்டவர்களை தான் நாம் குறைச்சொல்லவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment