Followers

Thursday, December 10, 2015

புதையலை கொடுக்கும் சுக்கிரன்


வணக்கம்!
          ஒன்பதாவது வீட்டிற்க்கு குரு காரணம் வகிப்பவர் என்றாலும் அதில் அமரும் ஒரு சில தீமை கிரகங்கள் கூட ஜாதகருக்கு நல்லதை செய்துவிட்டு செல்லும். இது படைத்தவனின் கையில் இருக்கும் ஒரு வித்தை என்று கூட சொல்லலாம்.

ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் அமையபெற்ற ஜாதகர்கள் பல பேரை நான் பார்த்திருக்கிறேன். மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்கின்றார்கள். யாருக்கே கிடைக்காத பொக்கிஷங்கள் எல்லாம் இவர்களுக்கு கிடைக்கிறது.

புதையல் போன்று ஒரு பொருள் இவர்களுக்கு கிடைக்கும் அதனை வைத்தே பல மடங்கு செல்வந்தராக மாறிவிடுவார்கள். இன்றைய காலத்தில் புதையல் போல் பல மடங்கு உள்ள பொருட்கள் எல்லாம் இருக்கின்றது புதையல் இல்லாவிட்டாலும் அது போன்ற ஒரு பொருள் இவர்களுக்கு கிடைக்கும்.

ஐந்தாவது வீடு தானே புதையல் லாட்டரி சீட்டு போன்றவைக்கு காரணம் நீங்கள் என்ன டா என்றால் ஒன்பதாவது வீட்டை சொல்லுகின்றிர்களே என்று கேட்கதோன்றும். ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் அமைந்த ஜாதகர்களின் வாழ்வை உற்று நோக்கினால் அவர்களின் வாழ்வில் இப்படி நடப்பதை நீங்களே அறிந்துக்கொள்ளலாம்.

ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் அமைந்திருப்பவர்கள் பிராமணர்களைவிட வேறு ஜாதியில் இருப்பவர்களை தங்களின் குருவாக வைத்திருந்தால் அவர்களுக்கு வெற்றி உறுதி என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 9, 2015

பாக்கியஸ்தானத்தில் இராகு


வணக்கம்!
          ராகு ஒன்பதாவது வீட்டில் அமர்ந்தவுடன் நாம் கண்ணை மூடிக்கொண்டு பாக்கியஸ்தானம் கெட்டுவிட்டது. உங்களுக்கு பித்ருதோஷம் இருக்கின்றது உங்களுக்கு கஷ்டமான காலம் தான் என்று சொல்லிவிடுவோம். உண்மையில் நடப்பது அப்படியல்ல.

நான் பார்த்த ஏகாப்பட்ட ஜாதகத்தில் ஒன்பதாவது வீட்டில் ராகு அமைந்தவர்கள் அனைவரும் மிகப்பெரிய வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஒரு சிலருக்கு ராகு ஒன்பதாவது வீட்டில் அமையும்பொழுது இளம்வயதில் அதிககஷ்டப்பட்டு இருக்கின்றார்கள். முப்பது வயதை கடந்தவுடன் நல்லவாழ்க்கை அவர்களுக்கு அமைந்திருக்கிறது.

ஒரு சிலர் அயல்நாடுகளில் அடிக்கடி பயணம் ஏற்கொண்டு மிகப்பெரிய அளவில் சம்பாதிப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். அயல்நாடுகளில் நிரந்தரமாக தங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள்.

பொதுவாக பார்க்கும்பொழுது ராகு ஒன்பதாவது வீட்டில் அமரும்பொழுது அதிகமாக ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்களாக இருக்கின்றார்கள். ஆன்மீகத்தைப்பற்றி ஆன்மீககூட்டங்களில் பேசுபவர்களும் இவர்களாக தான் இருக்கின்றார்கள். 

நான் ஒரு சில அயல்நாட்டில் வசிப்பர்களின் ஜாதகர்களை பார்த்திருக்கிறேன். ஒன்பதாவது வீட்டில் ராகு அமைந்தவர்கள் இந்தியாவிற்க்கு அடிக்கடி வந்து இமயமலை போன்ற இடங்களில் தங்கி ஆன்மீகப்பயிற்சியை மேற்க்கொள்பவர்களாக இருக்கின்றார்கள்.

இராகு ஒன்பதில் அமைந்தால் கெடுதல் மட்டும் தான் நடக்கும் என்று சொல்லுபவதை விட நல்லதும் நடக்கும் என்றும் சொல்லவேண்டும். ஒரு சிலருக்கு கஷ்டம் ஏற்படலாம். இப்படிப்பட்டவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடும்பொழுது இந்த நிலை மாறிவிடும்.

இன்று மதியம் திருப்பூர் பயணம்.  நாளை திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ளவர்கள் என்னை சந்திக்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 7, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          மழைக்காரணமாக தொடர்ந்து பதிவை தரமுடியவில்லை. மழை காரணத்தால் அம்மன் பூஜை அறிவிப்பையும் அறிவிக்கமுடியாத நிலை இருந்தது. அம்மன் பூஜை கார்த்திகை முடிவதற்க்குள் நடத்ததிட்டமிட்டுள்ளேன். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம்.

அம்மனுக்கு என்று தினமும் நடைபெறும் பூஜை கூட செய்யாத நிலை ஏற்பட்ட இருந்தது. மழையால் அம்மன் பூஜை தடை ஏற்பட்டு இருந்தாலும் சொந்த விசயமாக ஒரு காரியம் நடைபெற்றது அந்த காரணத்தாலும் பூஜை செய்யமுடியாத நிலை இருந்தது. இன்று இருந்து தொடர்ந்து அம்மன் பூஜை நடைபெறும்.

பரிகாரத்திற்க்காக பணம் செலுத்தியவர்களுக்கும் தொடர்ந்து பூஜை செய்யப்படும். அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்கும். அம்மன் பூஜையில் பங்களிப்பை அளிப்பவர்கள் அளிக்கலாம்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். ஒரு சில நாட்களில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 5, 2015

பாக்கியஸ்தானம் போல் செயல்படும் குரு தசா


வணக்கம்!
          மழை காரணமாக உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. கூடிய விரைவில் அனைத்து சரியாகவிடும் என்று நினைக்கிறேன். சரியான உடன் அதிக பதிவுகளை தந்துவிடுகிறேன். 

பாக்கியஸ்தானத்தை பார்த்து வந்தோம். பொதுவாக பாக்கியஸ்தானம் நன்றாக இல்லை என்று நினைப்பவர்களுக்கு கூட குரு தசா நடந்தால் அவர்களுக்கு பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்யும். ஒரு சில ஜாதகங்களில் நான் பார்த்து இருக்கிறேன் குரு தசா வந்தவுடன் நல்ல பாக்கியம் பெற்றவர்கள் போல் அவர்களுக்கு நடக்கும்.

குரு ஐந்தாவது மற்றும் ஒன்பதாவது வீட்டில் உள்ள காரத்துவத்தை அதிகம் கொடுப்பதால் அப்படி இருக்கலாம். குருதசாவில் உள்ளவர்கள் தான் அதிகம் பேர் கோவில் கட்டுவார்கள். அதிகமாக தான தர்ம காரியங்களில் ஈடுபடுவார்கள். பாக்கியஸ்தானத்தின் காரத்துவத்தை இவர்கள் செய்யும்பொழுது பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கின்றது தானே அர்த்தம் கொள்ளவேண்டும்.

ஒரு நண்பருக்கு கடுமையான பித்ருதோஷம் இருந்தது இளைமையில் கஷ்டப்பட்டார். குரு தசா வந்தவுடன் நல்ல நிலைக்கு வந்துவிட்டார். ஒரு கோவிலை கட்டி நிர்வகித்து வருகிறார். நிறைய ஆன்மீக பணிகளை செய்து வருகிறார். 

இதுவும் அவரின் பாக்கியம் தான் என்று சொல்லவேண்டும். குரு எந்த வீட்டில் இருந்து தசாவை நடத்தினாலும் பாக்கியஸ்தானத்தை பாேல் தான் செயல்படுகிறது. ஒரு சிலருக்கு வித்தியாசமாக நடைபெறலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 3, 2015

சென்னை வெள்ளம்


வணக்கம்!
          நெட் பிரச்சினை இருப்பதால் பதிவை தரமுடியவில்லை. இப்பொழுது தான் கொஞ்சம் கிடைத்தது. உடனே பதிவை தருகிறேன். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் பதிவை படிக்க கூட முடியாமல் எத்தனையோ நண்பர்கள் இருப்பார்கள். என்னால் முடிந்தவரை என்னிடம் உள்ள தொடர்பு நம்பரை வைத்து தொடர்புக்கொண்டு பேசினேன். போனை தொடர்புக்கொள்ளமுடியாத நண்பர்களுக்கு குறுந்தகவலை அனுப்பியுள்ளேன். சென்னையை தவிர மற்ற ஊர்களில் உள்ள நண்பர்களும் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டேன்.   

பழைய பதிவில் நான் சொல்லிருக்கிறேன். அனைவரும் நீச்சல் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுருந்தேன். கற்று இருந்தால் அந்த நீச்சல் இன்று பயன்பட்டு இருக்கும். அதே நேரத்தில் பல பேரை காப்பாற்ற முடியும்.

மனித தவறுகளால் இப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகினாலும் மன்னித்துவிட்டு இறைவனிடம் பிராத்தனை செய்வோம் மனிதர்களை காப்பாற்ற இறைவனிடம் பிராத்தனை செய்யலாம்.

வெள்ளத்தை காட்டி ஒரு சிலர் உலகம் அழியபோகின்றது எங்களிடம் வாருங்கள் என்று ஆன்மீகம் கூட இந்த நிலையில் பேசலாம். இதனை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் அடுத்த வேலையை பார்க்கலாம். அம்மனிடம் பிராத்தனை செய்வோம். தாங்கிக்கொள்ள வலிமையை தரும்.

கட்டண பதிவில் பதிவுகளை எழுதமுடியவில்லை. நெட் சரியான உடன் அனைத்து பதிவையும் சேர்த்து தந்துவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 2, 2015

இயற்கையோடு இணைந்த வாழ்வு


வணக்கம்!
          இயற்கையை எதிர்த்து வாழ நினைக்கும் மனிதனுக்கு ஒரு பாடமாகவே இந்த மழை இருக்கின்றது. கடவுளை சொல்லி குற்றமில்லை ஒரு சிலர் மழை வேண்டாம் என்று பிராத்தனை செய்வார்கள். மழை பெய்யவேண்டும் என்று தான் கடவுளிடம் கேட்கவேண்டும். மனிதன் செய்யும் தவறுக்கு மனிதன் கடவுள் மேல் பாரத்தை போட்டுவிடுவான்.

இயற்கையை அனுசரித்து நாம் வாழவேண்டும். ஆற்றின் ஓட்டத்தில் செல்லுகின்றவன் தான் பிழைப்பான் எதிர்த்து நிற்பவன் தோல்வி அடைவான் என்று தான் அந்த காலத்தில் இருந்து சொல்லி வருகின்றனர்.

என்னை சந்திக்கும் நண்பர்களிடம் நான் சொல்லுவது கூட மேலே சொன்ன விசயத்தை அடிக்கடி சொல்லுவேன். ஆன்மீகத்திற்க்கும் அது தான் உகந்த ஒன்று.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலைகளும் குளத்தின் மீதும் ஏரியின் மீதும் தான் கட்டியுள்ளார்கள். தண்ணீர் அதன் திசை நோக்கி சரியாக வருகின்றது. அந்த இடத்தில் நாம் ஆக்கிரமித்த காரணத்தால் நாம் மாட்டிக்கொள்கிறோம்.

கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லுவதை விட இனி மேலாவது திருந்தி அதற்கு உரிய ஏற்பாட்டை செய்யவேண்டும். கடவுளிடம் நிறைய மழை வேண்டும் என்று கேளுங்கள். இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 1, 2015

இனிய தொடக்கம்


வணக்கம்!
           தற்பொழுது பாக்கியஸ்தானத்தைப்பற்றி தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த ஸ்தானம் நன்றாக வேலை செய்யும்பொழுது மட்டுமே நமக்கு தடையின்றி காரியம் நடைபெறும். ஒவ்வொரு வேலை நடைபெறும்பொழுதும் தடையின்றி காரியம் நடந்தால் வெற்றியை நோக்கி வாழ்க்கை நகர்ந்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

நமக்கு தடை அதிகம் ஏற்பட்டு வாழ்வில் எந்த வேலையும் நடைபெறாமல் போகும்பொழுது நமக்கு வெறுப்பு வந்துவிடுவது இயல்பு. பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கும் ஒருவர் தான் ஒரு கோவிலை கட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கும். இந்த நாட்டில் இருக்கும் பணக்காரர்கள் அனைவரும் கோவிலை கட்டிவிடுகிறார்களா என்ன ? யாராவது ஒருவர் கோவிலை கட்டுவார். அவருக்கு தான் பாக்கியம் இருக்கும்.

நம்மிடம் பணம் அதிகம் இருந்தால் கூட இப்படிப்பட்ட காரியங்களை செய்துவிடமுடியாது. கோவிலை கட்டுவதற்க்கும் பாக்கியம் இருக்கவேண்டும். பாக்கியம் இருக்கும்பொழுது மட்டுமே அது சாத்தியப்படும்.

கோவிலை கட்டமுடியவில்லை ஏதாவது ஒரு கோவிலுக்கு நம்மால் உதவி செய்யமுடியும் என்றால் நம்மால் அது முடியும். உங்களுக்கு பாக்கியம் இருந்தால் இந்த வேலையிலாவது ஈடுபடுவீர்கள். அந்த பாக்கியம் இருக்கின்றதா என்பது உங்களின் நடவடிக்கையை பொறுத்த விசயம் அது அதனை நீங்கள் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.

உங்களால் முடிந்தால் ஒரு கோவிலை கட்டுவதற்க்கு சம்பாதியுங்கள். அப்படி சம்பாதிக்கமுடியவில்லை என்றால் கோவிலை பராமரிக்க அல்லது கோவிலுக்கு பூஜை செய்ய உதவி செய்யுங்கள். உங்களின் பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு