Followers

Wednesday, December 2, 2015

இயற்கையோடு இணைந்த வாழ்வு


ணக்கம்!
          இயற்கையை எதிர்த்து வாழ நினைக்கும் மனிதனுக்கு ஒரு பாடமாகவே இந்த மழை இருக்கின்றது. கடவுளை சொல்லி குற்றமில்லை ஒரு சிலர் மழை வேண்டாம் என்று பிராத்தனை செய்வார்கள். மழை பெய்யவேண்டும் என்று தான் கடவுளிடம் கேட்கவேண்டும். மனிதன் செய்யும் தவறுக்கு மனிதன் கடவுள் மேல் பாரத்தை போட்டுவிடுவான்.

இயற்கையை அனுசரித்து நாம் வாழவேண்டும். ஆற்றின் ஓட்டத்தில் செல்லுகின்றவன் தான் பிழைப்பான் எதிர்த்து நிற்பவன் தோல்வி அடைவான் என்று தான் அந்த காலத்தில் இருந்து சொல்லி வருகின்றனர்.

என்னை சந்திக்கும் நண்பர்களிடம் நான் சொல்லுவது கூட மேலே சொன்ன விசயத்தை அடிக்கடி சொல்லுவேன். ஆன்மீகத்திற்க்கும் அது தான் உகந்த ஒன்று.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலைகளும் குளத்தின் மீதும் ஏரியின் மீதும் தான் கட்டியுள்ளார்கள். தண்ணீர் அதன் திசை நோக்கி சரியாக வருகின்றது. அந்த இடத்தில் நாம் ஆக்கிரமித்த காரணத்தால் நாம் மாட்டிக்கொள்கிறோம்.

கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லுவதை விட இனி மேலாவது திருந்தி அதற்கு உரிய ஏற்பாட்டை செய்யவேண்டும். கடவுளிடம் நிறைய மழை வேண்டும் என்று கேளுங்கள். இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு