Followers

Sunday, June 10, 2018

தெய்வ குற்றம்


ணக்கம்!
         தெய்வகுற்றம் என்பதைப்பற்றி பார்க்கலாம். ஏதாவது ஒரு கோவிலுக்கு நாம் செய்யவேண்டியதை செய்யாமல் விட்டுவிட்டால் அல்லது ஒரு கோவிலுக்கு எதிராக நாம் களம் இறங்கி அந்த கோவிலை கட்டவிடாமல் தடுத்தால் கோவில் திருவிழாக்களை நடத்த விடாமல் செய்தால் தெய்வ குற்றம் ஒரு குடும்பத்திற்க்கு ஏற்படும்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு காரணங்களை சாஸ்திரங்கள் விவரித்து சொல்லுகின்றன. சோதிடத்தில் உள்ள தோஷங்கள் மற்றும் நடைமுறையில் ஒருவருக்கு நடக்கும் விசயத்தை நம்முடைய அனுபவத்தோடு வைத்து வரும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லுவது உண்டு.

ஒரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய் வந்தால் அவர்களுக்கு தெய்வ குற்றம் இருக்கின்றது என்று அர்த்தம். மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லும் நிலைமை ஏற்படும். ஒரு சிலருக்கு என்ன நோய் என்றே தெரியாமல் அதற்கு மருத்துவம் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். இதற்கு எல்லாம் தெய்வகுற்றம் இருக்கின்றது என்று அர்த்தம்.

தெய்வகுற்றம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வந்தாலும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு ஒருவர் மருத்துவமனையிலேயே இருக்கின்றார் என்றால் அவர்க்கு தெய்வகுற்றம் இருக்கின்றது என்று அர்த்தம். ஒரே நோய்க்கு தொடர்ச்சியாக ஆண்டு கணக்கில் மருத்துவம் பார்த்து வந்தாலும் அதுவும் தெய்வ குற்றம் என்று தான் அர்த்தம்.

ஒரு சிலர் கோவிலுக்கு செல்லாமலே இருப்பார்கள் அவர்களுக்கு கூட இப்படிப்பட்ட தோஷம் எல்லாம் வருவதற்க்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட ஜாதகர்களை நான் நிறைய பார்த்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, June 9, 2018

ஆன்மீகம்


வணக்கம்!
         நண்பர் ஒருவரின் கேள்வி ஒன்றை கேட்டுருந்தார். லாட்டரி நம்பர் என்ன என்பதை ஆன்மீகத்தில் கண்டுபிடித்து சொல்லமுடியுமா என்று கேட்டார். நம்ம நாட்டில் கிடையாது. வெளிநாட்டில் உள்ள லாட்டரி நம்பரை தெரிந்துக்கொள்ள வழி இருக்குமா என்ற கேள்வியாக இருந்தது.

என்னுடைய அனுபவத்தில் நிறைய வேலைகளை செய்து இருக்கிறேன் ஆனால் இதுபோன்ற வேலையை நான் செய்தது கிடையாது. நண்பர் கேட்டார் என்பதற்க்காக கடந்த பத்து நாட்களாக நிறைய ஆராய்ச்சி செய்து பார்த்தேன். நிறைய வேலைப்பளுக்கு இடையே இதனையும் செய்துக்கொண்டு இருந்தேன்.

ஒன்றும் கிடைக்கவில்லை. அம்மனை வைத்து நிறைய முயற்சி செய்து இதனை கண்டுபிடிக்கவேண்டும் என்று நானும் போராடி பார்த்தேன். இதற்கு தகுதி இன்னமும் எனக்கு வரவில்லை என்றே இந்த நேரத்தில் தோன்றுகிறது.

உங்களிடம் இதனை சொல்லுவதற்க்கு காரணம் என்ன என்றால் நிறைய இடத்தில் வெளியில் தெரியாத சாமியார்கள் இப்படிப்பட்ட வேலையை சரியாக செய்துவிடுகின்றனர். அவர்களை பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமும் இல்லை என்று சொன்னார்கள்.

ஆன்மீகத்தில் லாட்டரி எண்களை கண்டுபிடிப்பது உண்டு. நிறைய பேர்கள் என்னிடம் இதனைப்பற்றி தெரிவித்து இருக்கின்றனர். இதனை கண்டுபிடிக்கின்றனர் ஆனால் அவர்களைப்பற்றி விபரம் தெரியவில்லை என்கின்றனர். ஆன்மீகத்தில் இது சாத்தியப்படிக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, June 8, 2018

பெண்களுக்கான பதிவு


வணக்கம்!
          ஒரு பெண் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்க்கு புகுந்தாலும் அவர் தன்னுடைய அப்பா வீட்டின் குலதெய்வத்தை மறக்ககூடாது. பிறந்த வீட்டின் குலதெய்வத்தை தொடர்ச்சியாக வணங்கிக்கொண்டே வரவேண்டும்.

புகுந்த வீட்டின் குலதெய்வத்தின் தெய்வத்தையும் வணங்கிக்கொண்டு பிறந்த வீட்டின் குலதெய்வத்தின் தெய்வத்தையும் வணங்கிக்கொண்டு வந்தால் அவரின் வாழ்க்கை சிறந்து விளங்கும். ஒரு பெண்ணிற்க்கு மட்டும் இரண்டு குலதெய்வம் என்று சொல்லுவார்கள். 

பல குடும்பங்களில் பெண் பிறந்த வீட்டின் குலதெய்வம் நல்ல உதவியாக இருக்கின்றது. குலதெய்வ வழிபாட்டில் பிறந்த பெண்ணிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து குலதெய்வ பூஜையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்ய சொல்லுவார்கள்.

புகுந்த வீட்டில் பெண்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினையும் பிறந்தவீட்டின் குலதெய்வம் நிறைவற்றி வருகின்றது என்பது பலரின் வாழ்வில் நடந்து கொண்டு இருக்கின்றது. பிறந்த பெண்களுக்கு அதிக பிரச்சினை வருகின்றது என்றால் உடனே பிறந்த வீட்டின் குலதெய்வத்தின் வணங்கி வந்தால் அந்த பிரச்சினை தீரும்.

பிறந்த வீட்டின் குலதெய்வத்தை இதுவரை வணங்காமல் நீங்கள் இருந்தால் ஒரு முறை சென்று வணங்கி வாருங்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்க்கு பூஜையின் பொழுது காணிக்கை செலுத்தி வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, June 7, 2018

கர்மாவை எளிதாக எப்படி அறிவது?


வணக்கம்!
          ஒரு நண்பர் கேள்வி கேட்டார். கர்மா என்பதை சாதாரணநபர்கள் உடனே உணர்ந்துக்கொள்வது எப்படி என்று கேட்டார்.

உலக முழுவதும் உங்களுக்கு பிரச்சினை என்று வந்தாலே அது கர்மாவை தான் காட்டுவார்கள். இவர் எளிதாக புரிந்துக்கொள்வது எப்படி என்று கேட்டு இருக்கின்றார். ஒரு சின்ன பிரச்சினை வந்தாலே அது கர்மா என்று தான் சொல்லுவார்கள். உண்மையாக அப்படி இல்லை. 

கர்மாவை எளிதாக புரிந்துக்கொள்வதற்க்கு ஒரு வழியை சொல்லுகிறேன். ஆண்களாக இருந்தால் அவர்களின் மனைவியின் நகையை வாங்கி அடகு வைத்து விடுங்கள் அல்லது விற்றுவிடுங்கள். உங்களின் மனைவியின் வீட்டில் போட்டு நகையாக இருந்தால் நல்லது.

கொஞ்சநாள்கள் அந்த நகையை திருப்பிக்கொடுக்காமல் இருந்தால் போதும். கர்மா என்றால் என்ன என்று உங்களுக்கு புரியும். நீங்கள் நகையை அடகு வைக்கிறேன் என்று நீங்கள் உங்களின் மனைவியிடம் கேட்கும்பொழுதே கர்மா என்றால் என்ன என்பது புரியும்.

ஒவ்வொருநாளும் எப்படிப்பட்ட பிரச்சினை எல்லாம் வரும் என்பது அந்த சிவனுக்கு கூட தெரியாது. நீங்கள் நினைக்காதா பிரச்சினை எலலாம் வரும். நீங்கள் இந்த நகையை திருப்பிக்கொடுக்கும்பொழுது தான் கர்மா உங்களை விட்டுவிலகும். கர்மாவைப்பற்றி தெரிந்துக்கொள்ள இது ஒரு எளிமையான வழி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நைவேத்தியம்


 ணக்கம்!
         கடவுளுக்கு பயன்படுத்தும் நைவேத்தியத்தில் அதிக கவனம் செலுத்தி தயார் செய்யவேண்டும். கடவுள் படைக்கும் நைவேத்தியம் என்பது மிகவும் சுத்தமாக தயார் செய்யவேண்டும். நைவேத்தியம் தயார் செய்யும் நபர் முதலில் நன்றாக குளித்துவிட்டு அதன்பிறகு சமைக்க ஆரம்பிக்கவேண்டும்.

நைவேத்தியம் தயார் செய்யும் வீட்டையும் சுத்தமாக தயார் செய்த பிறகு தான் சமைக்க ஆரம்பிக்கவேண்டும். கடவுளுக்கு என்று நாம் படைக்கும் உணவு என்பது மிகவும் புனிதமானது அதனை நாம் சுத்தமாக தயார் செய்யும்பொழுது கடவுள் நமக்கு உடனே பலனை கொடுப்பார்.

ஒரு சில நேரத்தில் சமைக்கும் பொழுது வாயில் மற்றும் மூக்கில் துணியை அணிந்துக்கொண்டு அதனை நுகராமல் தயார் செய்வார்கள். இப்படி செய்யமுடியவில்லை என்றாலும் நன்றாக குளித்துவிட்டு சுத்தமாக தயார் செய்யுங்கள்.

நாம் என்ன தான் மந்திரங்களை சொன்னாலும் அது எல்லாம் கூட ஒரு சில நேரத்தில் தவறாக பயன்படும் விதத்தில் நடந்துவிடும் ஆனால் நாம் படைக்கும் நைவேத்தியத்தை கண்டிப்பாக இறைவன் ஏற்பார்.

எந்த தெய்வத்திற்க்கு எப்படிப்பட்ட நைவேத்தியத்தை படைக்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல நீங்கள் தயார் செய்து படைத்தால் நன்றாக உங்களுக்கு பலன் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, June 6, 2018

கெட்டகாலத்தில் செய்யவேண்டியவை


வணக்கம்!
         ஒருவருக்கு கெட்ட நேரம் வந்தால் அவர்களின் மனதை தான் முதலில் ஆக்கரமிப்பு செய்து அதனை வீண் செய்யும். மனதை போட்டு குழப்பிவிட்டுவிடும். மனஅமைதியை இழந்து கஷ்டப்படுவார்கள். கெட்ட காலத்தில் நமது நண்பர்கள் பேசுவதை நான் பார்த்து இருக்கிறேன். எதிலும் நம்பிக்கை என்பதே இருக்கவே இருக்காது.

கெட்ட நேரம் வந்தால் கடவுள் மேல் உள்ள நம்பிக்கையை இழந்தாலும் உங்களின் மேல் உள்ள நம்பிக்கையை மட்டும் இழந்துவிடகூடாது. உங்களின் மீது நம்பிக்கை இல்லை என்றால் பிறகு எப்படி கடவுள் மேல் நம்பிக்கை வைக்கமுடியும்.

கெட்டகாலத்தில் ஒவ்வொருவருக்கும் வரும் எண்ணம் என்பது நல்லதாகவே இருக்காது. தீய எண்ணங்களாகவே இருக்கின்றன. கெட்டகாலம் வந்துவிட்டது இனி அமைதியாக இருந்து அனைத்தையும் மறுபடியும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டும். அதன்பிறகு ஒவ்வொன்றாக நாம் சாதித்துக்கொள்ளலாம்.

கெட்டகாலம் வரும்பொழுது நீங்கள் கோவிலுக்கு செல்வதை விட மனதிற்க்கு அமைதி தரும் இடத்திற்க்கு நீங்கள் சென்று அந்த அமைதியை அனுபவித்துவிட்டு வருவது நல்லது அதன்பிறகு கோவிலுக்கு எல்லாம் செல்லலாம்.

உங்களுக்கு பிடித்த இடம் என்று ஒரு இடம் இருக்கும் அந்த இடத்திற்க்கு அடிக்கடி சென்று வாருங்கள். உங்களுக்குள் நல்ல நம்பிக்கை வந்து நீங்கள் சாதிக்கலாம். மனமகிழ்ச்சி வரும்பொழுது தான் அனைத்து காரியமும் நடக்கிறது என்பதை உணர்ந்துக்கொண்டு செயல்பட்டால் எளிதில் அனைத்தையும் சாதித்துவிடலாம்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, June 5, 2018

செலவு வரும் வழி


வணக்கம்!
          நமக்கு வரும் சின்ன சின்ன செலவுகளை எல்லாம் குறைத்துக்கொண்டாலே போதும் உங்களுக்கு பெரிய அளவில் பணக்காரர்ரகளாக உருவாதற்க்கு காரணமாக இருக்கும். சின்ன சின்ன செலவுகளை குறைப்பதற்க்கு பதில் சின்ன செலவுகள் எப்படி வருகின்றது என்பதை ஜாதகத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளவேண்டும்.

ஜாதகத்தில் உங்களுக்கு கோச்சாரபடியாகவே ஒரு சில கிரகங்கள் இராசிக்கு வரும்பொழுது அல்லது விரைய வீட்டிற்க்கு செல்லும்பொழுது அது செலவை வைத்துவிடும். சில நாட்களே தங்கும் செவ்வாய் சூரியன் புதன் சுக்கிரன் போன்ற கிரகங்கள் எல்லாம் உங்களுக்கு சின்ன செலவுகளை வைத்துவிடும்.

பெரும்பாலும் இது அடிக்கடி மருத்துவமனைக்கு செலவு வைத்துவிடும் அல்லது உறவினர்களுக்கு ஏதாவது வகையில் செலவு செய்யவைக்கும். தேவையற்ற செலவுகளையும் உருவாக்கிக்கொண்டே இருக்கும்.

கோச்சாரபலனின் நீண்டநாள் தங்கும் இராகு கேது குரு மற்றும் சனி போன்ற கிரகங்களும் செலவை வைக்கும் அது உங்களுக்கு அதிகபடியான மருத்துவமனை செலவை வைக்கும். தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு சென்று வருவதற்க்கு வாய்ப்பை உருவாக்கி விடும்.

மேலே சொன்ன விசயங்களை உற்றுநோக்கிக்கொண்டு அதற்கு தகுந்தார்போல உங்களின் வழிபாட்டையும் வைத்துக்கொண்டு வந்தால் ஒரளவு செலவை குறைத்துக்கொள்ளலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு