வணக்கம்!
ஒருவருக்கு கெட்ட நேரம் வந்தால் அவர்களின் மனதை தான் முதலில் ஆக்கரமிப்பு செய்து அதனை வீண் செய்யும். மனதை போட்டு குழப்பிவிட்டுவிடும். மனஅமைதியை இழந்து கஷ்டப்படுவார்கள். கெட்ட காலத்தில் நமது நண்பர்கள் பேசுவதை நான் பார்த்து இருக்கிறேன். எதிலும் நம்பிக்கை என்பதே இருக்கவே இருக்காது.
கெட்ட நேரம் வந்தால் கடவுள் மேல் உள்ள நம்பிக்கையை இழந்தாலும் உங்களின் மேல் உள்ள நம்பிக்கையை மட்டும் இழந்துவிடகூடாது. உங்களின் மீது நம்பிக்கை இல்லை என்றால் பிறகு எப்படி கடவுள் மேல் நம்பிக்கை வைக்கமுடியும்.
கெட்டகாலத்தில் ஒவ்வொருவருக்கும் வரும் எண்ணம் என்பது நல்லதாகவே இருக்காது. தீய எண்ணங்களாகவே இருக்கின்றன. கெட்டகாலம் வந்துவிட்டது இனி அமைதியாக இருந்து அனைத்தையும் மறுபடியும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டும். அதன்பிறகு ஒவ்வொன்றாக நாம் சாதித்துக்கொள்ளலாம்.
கெட்டகாலம் வரும்பொழுது நீங்கள் கோவிலுக்கு செல்வதை விட மனதிற்க்கு அமைதி தரும் இடத்திற்க்கு நீங்கள் சென்று அந்த அமைதியை அனுபவித்துவிட்டு வருவது நல்லது அதன்பிறகு கோவிலுக்கு எல்லாம் செல்லலாம்.
உங்களுக்கு பிடித்த இடம் என்று ஒரு இடம் இருக்கும் அந்த இடத்திற்க்கு அடிக்கடி சென்று வாருங்கள். உங்களுக்குள் நல்ல நம்பிக்கை வந்து நீங்கள் சாதிக்கலாம். மனமகிழ்ச்சி வரும்பொழுது தான் அனைத்து காரியமும் நடக்கிறது என்பதை உணர்ந்துக்கொண்டு செயல்பட்டால் எளிதில் அனைத்தையும் சாதித்துவிடலாம்.
அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment