Followers

Monday, August 6, 2018

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
         இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.






அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள் .





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள். 

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.  
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.  
சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள்.    

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.    
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.  
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.    

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.     
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.      

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள். 
 பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்   
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்  

வழக்கம்போல்                                                                     

திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.  

மற்றும் பல நண்பர்கள் தங்களின் பங்களிப்பை செலுத்தியுள்ளனர். அம்மன் பூஜை நடைபெறும் நாளில் உங்களின் வேண்டுதலை வையுங்கள். 

ஆடி மாதத்தில் அனைவரும் தங்களின் விருப்ப சந்தாவை செலுத்திவையுங்கள் என்று சொல்லிருந்தேன். பலர் தங்களின் விருப்ப சந்தாவை செலுத்தி வருகின்றனர். அனைவரும் செலுத்தி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இலவச சோதிட ஆலோசனைக்கு அதிகமான ஜாதகம் வந்திருக்கின்றது கொஞ்சம் காலதாமதம் இருந்தாலும் அனைவரையும் தொடர்புக்கொண்டு பேசிவிடுகிறேன். அனைவரும் தங்களின் செல்போன் எண்ணை இணைத்து அனுப்பிவையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 4, 2018

மறைமுக வீடு பலன்


வணக்கம்!
          ஒவ்வொரு மாதமும் எனக்கு பணம் அனுப்பியவர்களோடு சேர்ந்து ஐந்து நபர்கள் மட்டும் பணம் அனுப்பியிருக்கின்றீர்கள். விருப்ப சந்தாவை அனைவரும் செலுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அனைவரும் செலுத்தி வையுங்கள்.

ஆடி மாதம் என்பதால் பெரும்பாலும் நமது மக்கள் திருமணம் சம்பந்தப்பட்ட விசயங்களை செய்யமாட்டார்கள். ஆடி மாதத்தில் திருமணம் மட்டும் தான் செய்ய கூடாது. நிச்சயார்த்த விழா மற்றும் பெண் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் படலம் எல்லாம் செய்யலாம். அனைவரும் துணிந்து செய்யுங்கள்.

ஆடி மாதத்தில் நடைபெறும் கோவில் விழாக்களை எல்லாம் விட ஆடி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முக்கியத்துவம் கொடுத்து அன்று வழிபாடு அல்லது முன்னோர்களுக்கு செய்யவேண்டிய காரியத்தை எல்லாம் செய்யலாம்.

ஆடி அமாவாசை அன்று அங்காளபரமேஸ்வரி கோவில்களில் திருவிழா செய்வார்கள். அமாவாசை அன்று நீங்கள் நமது அம்மனை நினைத்து உங்களின் வீட்டில் சாமி கும்பிடலாம். உங்களுக்கு அருகில் இருக்கும் அம்மன் கோவில்களில் வழிபடலாம்.


மறைமுக வீடுகளை பற்றி நிறைய நாம் பதிவிட்டு இருக்கிறோம். மறைமுக வீடுகளில் இருந்து நன்மையைும் இருக்கின்றன. மறைமுக வீடுகளால் நல்லது நிறைய சொல்லிருக்கிறோம். மறைமுக வீடுகளில் உள்ள முக்கிய விசயங்கள் அனைத்தும் பதிவிடுகிறோம். அதனைப்பற்றி மறுபடியும் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

சனி கிரகம் எட்டாவது வீட்டில் இருந்தால் முதல் பலன் அவர்க்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு நல்ல பணத்தை அள்ளிக்கொடுக்ககூடிய ஒரு நிகழ்வு நடைபெறும். சம்பந்தமே இல்லாத இடத்தில் இருந்து பணத்தை அள்ளிக்கொடுக்ககூடிய அமைப்பு இருக்கும்.  செல்வவளத்தை அள்ளிதரும் அமைப்பு என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 2, 2018

தீயகிரகங்களின் தசா பலன்கள்


வணக்கம்!
          ஜாதகர்களுக்கு சனி தசா ராகு தசா மற்றும் கேது தசா நடைபெறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். இந்த ஜாதகர்களுக்கு இந்த கிரகங்கள் நன்மை தரும் நிலையில் இருந்தாலும் இந்த தசா ஒரு சில கெடுதல்களையும் செய்யவும் செய்யும்.

கெடுதல் கிரகங்கள் ராஜ வாழ்க்கையை கொடுத்தாலும் அவர்களின் குணங்களுக்கு தகுந்தமாதிரியான ஒரு சில கெடுதல்களையும் செய்யாமல் விட்டுவிடாது. இந்த மூன்று கிரகங்களுக்கும் உள்ள ஒரு சின்ன குணம் வெறுப்பு தன்மை. ஜாதகர்கள் என்ன தான் நிறைய சம்பாதித்தாலும் இவர்களுக்கு என்னடா என்று வெறுப்பை அவ்வப்பொழுது கொடுத்துக்கொண்டு இருக்கும்.

ஒரு சிலருக்கு நிறைய செல்வத்தை அள்ளிக்கொடுத்தாலும் ஜாதகர்களுக்கு நோயையும் கொடுத்துவிடும். செல்வவளத்தோடு நோயையும் தரும் நிலையில் இந்த கிரகங்கள் செயல்படும். நோயில்  ஒரு கவலையை கொடுக்கும் தன்மை உடையது.

சனி தசா நடக்கும் நபர்களுக்கு எல்லாம் அவ்வப்பொழுது நிச்சயமற்ற தன்மையை கொடுக்கும். ஒரு நபர் ஒரு பதவியில் இருக்கின்றார் என்றால் அந்த பதவி அவர்க்கு நீண்ட நெடிய பதவி வாய்ப்பாக இருக்காது ஏதோ ஒரு காரணத்திற்க்காக பதவியை இழக்கவும் நேரிடும்.

கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் அதனை எல்லாம் அனுபவிக்கும் உடல்நிலையில் அவர்கள் இருக்கமாட்டார்கள். நோய் இல்லாமல் இருந்தால் கூட நோய் வந்துவிடுமோ என்ற ஒரு மன பிரச்சினை உங்களை துரத்திக்கொண்டே இருக்கும்.

என்ன தான் உங்களுக்கு இராஜ அந்தஸ்தை தரும் நிலையில் இந்த கிரகங்கள் இருந்தாலும் அவர்களின் தீய குணங்களை அவ்வப்பொழுது ஜாதகர்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, August 1, 2018

இனிய தொடக்கம்


வணக்கம்!
          பல நண்பர்கள் திருமணம் ஆகவில்லை என்று சொல்லுவார்கள். திருமணத்திற்க்கு என்று ஒரு சில கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்களுக்கு என்னோடு ஒரு முறை வந்தால் போதுமானது கண்டிப்பாக திருமணம் கை கூடிவிடும்.

பல நண்பர்களிடம் இதனைப்பற்றி சொல்லிருக்கிறேன். பலர் என்னோடு வந்து பயன்பெற்று இருக்கின்றனர். முக்கால்வாசி பேர் வருவதில்லை இதற்கு காரணம்  அவர் அவர்களின் கர்மா. 

பல பெண்கள் கூட அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவரை அழைத்துக்கொண்டு என்னோடு வந்து தரிசனம் செய்துவிட்டு சென்று இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் நல்லமுறையில் திருமணம் நடைபெற்று இருக்கின்றது.

திருமணம் நடைபெறும் சக்தி வாய்ந்த கோவில்களை நாம் சொன்னாலும் அதனை இவர்கள் கும்பிட்டு வரும்பொழுது நீண்டகாலம் எடுத்துக்கொண்டு அதன்பிறகு திருமணம் நடைபெற்று இருக்கின்றது. என்னோடு வரும்பொழுது உடனே நடைபெறும்.

ஆடி மாதம் அம்மன் பூஜை விரைவில் நடைபெறும். அனைவரும் இதில் தங்களின் பங்களிப்பை அளியுங்கள். இலவச சோதிட ஆலோசனைக்கு ஜாதகம் அனுப்பிய நண்பர்கள் அனைவரும் வரும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு