வணக்கம்!
ஜாதகர்களுக்கு சனி தசா ராகு தசா மற்றும் கேது தசா நடைபெறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். இந்த ஜாதகர்களுக்கு இந்த கிரகங்கள் நன்மை தரும் நிலையில் இருந்தாலும் இந்த தசா ஒரு சில கெடுதல்களையும் செய்யவும் செய்யும்.
கெடுதல் கிரகங்கள் ராஜ வாழ்க்கையை கொடுத்தாலும் அவர்களின் குணங்களுக்கு தகுந்தமாதிரியான ஒரு சில கெடுதல்களையும் செய்யாமல் விட்டுவிடாது. இந்த மூன்று கிரகங்களுக்கும் உள்ள ஒரு சின்ன குணம் வெறுப்பு தன்மை. ஜாதகர்கள் என்ன தான் நிறைய சம்பாதித்தாலும் இவர்களுக்கு என்னடா என்று வெறுப்பை அவ்வப்பொழுது கொடுத்துக்கொண்டு இருக்கும்.
ஒரு சிலருக்கு நிறைய செல்வத்தை அள்ளிக்கொடுத்தாலும் ஜாதகர்களுக்கு நோயையும் கொடுத்துவிடும். செல்வவளத்தோடு நோயையும் தரும் நிலையில் இந்த கிரகங்கள் செயல்படும். நோயில் ஒரு கவலையை கொடுக்கும் தன்மை உடையது.
சனி தசா நடக்கும் நபர்களுக்கு எல்லாம் அவ்வப்பொழுது நிச்சயமற்ற தன்மையை கொடுக்கும். ஒரு நபர் ஒரு பதவியில் இருக்கின்றார் என்றால் அந்த பதவி அவர்க்கு நீண்ட நெடிய பதவி வாய்ப்பாக இருக்காது ஏதோ ஒரு காரணத்திற்க்காக பதவியை இழக்கவும் நேரிடும்.
கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் அதனை எல்லாம் அனுபவிக்கும் உடல்நிலையில் அவர்கள் இருக்கமாட்டார்கள். நோய் இல்லாமல் இருந்தால் கூட நோய் வந்துவிடுமோ என்ற ஒரு மன பிரச்சினை உங்களை துரத்திக்கொண்டே இருக்கும்.
என்ன தான் உங்களுக்கு இராஜ அந்தஸ்தை தரும் நிலையில் இந்த கிரகங்கள் இருந்தாலும் அவர்களின் தீய குணங்களை அவ்வப்பொழுது ஜாதகர்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment