Followers

Saturday, December 22, 2012

ஆன்மீக அனுபவங்கள் 37


வணக்கம் நண்பர்களே !
                                    ஆன்மீக அனுபவங்கள் இந்த பதிவில் ஒரு நல்ல தகவலை பார்க்கலாம்.

ஆன்மீகத்தில் மிக உயர்ந்த இடத்திற்க்கு சென்று அனைவரும் சிவதரிசனம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். யோகா தியானம் செய்பவர்களும் சிவதரிசனம் கிடைக்கவேண்டும் என்று தான் செய்வார்கள். ஒரு சிலருக்கு இது பயிற்சி இல்லாமல் எளிதில் கிடைக்கும். ஒரு சிலர் கடுமையான பயிற்சி செய்து இதனை பெறுவார்கள்.

சிவதரிசனத்தில் ஆத்மா தரிசனம் மிக உயர்ந்தது அடுத்தது தான் சிவ தரிசனம் கிடைக்கும். இதனை எப்படி செய்ய வேண்டும் என்றால் முதலில் நீங்கள் ஆத்மாக்களை பார்க்க பயிற்சி செய்ய வேண்டும்.

எனக்கு ஒரு நண்பர் இருந்தார் அவர் ஆத்மா தரிசனம் செய்யவேண்டும் என்று பல நாட்கள் பயிற்சி செய்தார் கடைசியில் அவருக்கு ஆத்மா தரிசனம் கிடைத்தது. எப்படி என்றால் ஆத்மாகளை பார்க்க வேண்டும் என்று தினமும் அவர் பூஜையறையில் இருந்து பிராத்தனை செய்தார்.

48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். 48 நாட்கள் எந்த வித தவறும் செய்யகூடாது. தினமும் பூஜை செய்ய வேண்டும். பூஜையறையில் நீங்கள் கடவுளிடம் ஆத்மா தரிசனம் வேண்டும் என்று கேட்க வேண்டும். என்னுடைய நண்பருக்கு 48 நாட்களுக்கு பிறகு 10 நாட்கள் சென்ற பிறகு தான் அவருக்கு கிடைத்தது.

ஆத்மாக்களின் தரிசனம் எப்படி இருக்கும் என்று சொன்னால் தானே நீங்கள் அதனை பார்க்கும் போது இது தான் ஆத்மாக்கள் என்று உங்களுக்கு தெரியும். ஒளி வடிவத்தில் காட்சி தரும். சிலருக்கு பகலில் வெறும் கண்களால் பார்க்கமுடியும். இரவிலும் தெரியும்.

எனது நண்பர் பார்த்தது கெட்ட ஆத்மாவை தான் அவர் பார்த்தார் அவர் சொன்னது நான் விரதம் இருக்கும்போது நான் நல்ல ஆத்மாவை பார்க்கவேண்டும் என்று வேண்டுதல் வைக்காமல் இருந்துவிட்டேன் அதனால் எனக்கு கெட்ட ஆத்மாக்களின் தரிசனம் கிடைத்துவிட்டது என்று சொன்னார். நீங்கள் வேண்டும் போது கடவுளிடம் நல்ல ஆத்மாக்களின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்று வேண்டுங்கள்.

கெட்டஆத்மா என்றால் நீங்கள் படத்தில் காட்டும் உருவம் என்று நினைத்துவிடாதீர்கள். கலராக தெரியும். பச்சை கலர் அல்லது மஞ்சள் கலரின் வண்ணத்தில் தெரியும். தூய வெள்ளை நிறத்தில் தெரியும் ஆத்மாக்கள் நல்ல ஆத்மாக்கள்.

ஒரு சிலருக்கு மனிதர்களை பார்க்கும் போது அவரின் உடலில் இருக்கும் ஆத்மாக்களை பார்க்கவும் முடியும். அந்த ஆத்மா எப்படி இருக்கிறது என்று கூட சொல்லமுடியும். 

திருவண்ணாமலையில் சேஷாத்திரி மகரிஷி ஒரு சில மனிதர்களை பார்க்கும் போது டேய் மலையை போய் சுற்றுடா என்று சொல்லுவாராம். ஏன் என்றால் பாவப்பட்ட ஆத்மா என்று அவரால் பார்க்கமுடிகிறது. மலை சுற்றுவது என்பது கிரிவலம் செல்லுவது என்று அர்த்தம். செவ்வாய்கிழமை மலையை சுற்றுவது முற்பிறவி பாவங்களை எளிதில் கரைக்கும்.  செவ்வாய்கிழமையில் மலையை சுற்றுடா என்று சொல்லுவாராம்.

ஒரு சில மனிதர்கள் தன்னுடைய உடலில் இருக்கும் ஆத்மாக்களை பார்க்கவும் முடியும் அது கூட முற்பிறவியி்ல் எப்படிபட்ட ஆத்மாவாக தனது ஆத்மா இருந்தது என்றும் தெரியும். எப்படி என்றால் ஆத்மா தன்னை மாற்றி மாற்றி காண்பிக்கும். இது உருவம் கிடையாது கலர் லைட் என்று வைத்துக்கொள்ளுங்கள் உண்மையில் இப்படி தான் தெரியவரும். மஞ்சள் மற்றும் பச்சை என்று இரண்டு கலரில் காண்பிக்கும்.  இப்படி காண்பித்தால் ஆகா நமது உடலில் இருப்பவன் முற்பிறவியில் படுமோசமாக இருந்து இருக்கிறான். திருவண்ணாமலை தான் இதற்கு சரியான இடம் என்று கிரிவலம் சென்று உங்களின் கர்மங்களை தீர்த்துக்கொள்ள வேண்டியது தான் வழி.

இவர் சொல்லுவது பொய்யாக இருக்குமோ என்று நீங்கள் நினைத்தால் இந்த பயிற்சியை செய்து பாருங்கள் நான் சொல்லுவது என்ன என்று தெரியவரும்.

என்ன நண்பர்களே மிகப்பெரிய மகான் ஒரு மனிதனை பார்த்து கண்டுபிடிக்கும் வித்தையை உங்களுக்கு சொல்லிக்கொடுத்து இருக்கிறேன். என்ன முயற்சி செய்வீர்களா? 

நீங்கள் நினைப்பது புரிகிறது இது எல்லாம் எதற்கு டா. பணத்தை சம்பாதிப்பதற்க்கு வழியை சொல்லுடா என்றால் ஆத்மாவை பார்க்கலாம் கடவுளை பார்க்கலாம் என்று சொல்லி நேரத்தை வீணடிக்கிறாய் என்று அனைவரும் நினைப்பது புரிகிறது.

முதலில் அனைத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் பணம் உங்களை தேடிவரும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

Friday, December 21, 2012

குங்குமம் தரும் பயன்



வணக்கம் நண்பர்களே !

                                 குங்குமத்தினால் என்ன பயன் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்

ஆன்மிகத்தில் முக்கிய இடம் வசிக்கும் குங்குமம் அழகு சாதன பொருட்கள் வரிசையிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

அழகாக ஆடை அணிந்து இரு புருவங்களுக்கு மத்தியில் நெற்றி வகிட்டில் குங்குமத்தை இட்ட பெண்களை பார்க்கும் போது லஷ்மிகரமாக தோன்றுவதை காணலாம்.

நெற்றியில் குங்குமம் இட்டவர்களை ஹிப்நாட்டிஸம் மெஸ்மெரிஸம் செய்ய முடியாது ஒருவரை அமைதிபடுத்தும் சக்தியும் இதற்கு உண்டு.

படிகாரம் சுண்ணாம்பு தண்ணீர் மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் செய்ய வேண்டும் இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புசத்தாக மாறிவிடும் படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது.

மூளைக்கும் உடலின் பிற பகுதிகளுக்கும் செல்லும் நரம்புகளுக்கு நெற்றிவகிட்டில் குங்குமம் இடுவதால் சக்தி கிடைக்கிறது.

மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் அதை கட்டுப்படுத்திக்கூடிய பகுதி நெற்றி அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்வதால் தனி பலன் கிடைக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

சூரியனின் கதிர்கள் நெற்றியில் இட்டுள்ள குங்குமத்தின் மீது படும்போது குங்குமத்துடன் சேர்க்கப்படும் படிகாரம் சுண்ணாம்பு தண்ணீர் மஞ்சள் மற்றும் வைட்டமின் டி அல்ட்ரா கதிர்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து காந்த சக்தியை உருவாக்குகின்றன.

இதனால் குங்குமம் இட்டுக்கொள்பவருக்கு புதிய பவர் கிடைக்கிறது,
குங்குமம் முறையாக தயாரித்தால் தான் இந்த பலன்களை அனுபவிக்க முடியும். கலப்படமான குங்குமத்தை இட்டுக்கொள்வதால் சில பிரச்சினைகள் வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

ஆன்மீக அனுபவங்கள் 36



வணக்கம் நண்பர்களே !
                            ஆன்மீக அனுபவத்தில் இப்பதிவில் ஒரு சுவாராசியமான தகவலைப்பற்றி என்னுடைய அனுபவத்தையும் கலந்து இப்பதிவை தருகிறேன்.

மகாபாரத கதைகள் பற்றி உங்களுக்கு தெரியும் அந்த கதையில் கெளசிகன் என்பவர் இருந்தார் அவர் கடுமையான தவம் இருந்து தவவலிமையை பெற்றார். 

கெளசிகர் ஒரு நாள் காட்டில் இருந்து வரும் போது ஒரு கொக்கு மரத்தின் மேல் இருந்து இவரின் மேல் எச்சத்தை இட்டுவிட்டது உடனே இவர் கோபத்தால் அந்த கொக்கை பார்த்தார் அந்த கொக்கு உடனே மரத்தின் கீழே விழுந்து உயிரை விட்டது. 

கெளசிகர் ஒரு ஊருக்கு சென்றார் அந்த ஊரில் ஒரு வீட்டிற்க்கு சென்று பிச்சை கேட்டார். அந்த காலத்து சாமியார்கள் எல்லாம் பிச்சை எடுத்து தான் சாப்பிடுவது வழக்கம் இவர் அந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டு தர்மம் தர்மம் என்று சொன்னார் அந்த வீட்டு பெண்மணி இவரை கண்டுக்கொள்ளாது அவரின் வேலையிலே இருந்தார். அப்பொழுது மீண்டும் இவர் தர்மம் என்று சொன்னார். உடனே அந்த பெண்மணியின் கணவர் வந்து இவருக்கு தர்மம் இட்டார். கெளசிகருக்கு கோபம் தாங்காமல் அந்த பெண்மணியை பார்த்தார் அதற்கு அந்த பெண்மணி இவரிடம் கொக்கு என்று என்னை நினைத்தாயோ என்று சொன்னார், கெளசிகருக்கு ஒன்றுமே புரியவில்லை .

எப்படி நாங்கள் தவம் செய்து பெறுகின்ற அறிவை நீங்கள் குடும்பத்தில் இருப்பவர் சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். நான் என்னுடைய கடமையில் இருந்து சிறிதும் தவறாதவள் நீங்கள் கூப்பிடும்போது என்னுடைய கணவனுக்கு சமையல் செய்து கொண்டு இருந்தேன் அது என்னுடைய முதல் கடமை. ஒரு பெண் தன்னுடைய கணவனுக்கு அனைத்து கடமைகளும் செய்தால் போதும் அனைத்தும் கிடைத்துவிடும். அப்படி இருந்தும் இதனை தர்மயாதவ என்று ஒருவர் இருக்கிறார் அவரிடம் கற்றேன் என்றால் கெளசிகருக்கு ஒன்றும் புரியவில்லை உடனே அப்ப அந்த தர்மயாதவ் பெரிய ஆளாக இருப்பார் போல அவரை பார்த்தால் தெரியும் என்று எண்ணி அவர் எங்கு இருக்கிறார் என்று கேட்டார். அவர் சந்தையில் இருக்கிறார் என்று சொன்னாள் அந்த பெண்மணி. 

கெளசிகர் சந்தைக்கு சென்று அங்கு உள்ளவர்களிடம் தர்மயாதவ் எங்கு இருக்கிறார் என்று கேட்டார் உடனே மக்கள் அதோ அந்த கடையில் கூட்டமாக இருக்கிறதே அது தான் அவரின் கடை என்று சொன்னார்கள். கெளசிகர் அங்கு சென்று பார்த்தால் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. தர்மயாதவ் மாசிச கறிகளை விற்பனை செய்து கொண்டு இருந்தார். 

இவருக்கு ஒன்றுமே புரியவில்லை இவர் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்  அனைத்து கூட்டமும் போனவுடன் தர்மயாதவ் கெளசிகரை பார்த்து வாங்க கெளசிகரே என்று கூப்பிட்டார் இவர் ஆடி போய்விட்டார் எப்படி இவர் நம்மை அடையாளம் கண்டுகொண்டார் உடனே தர்மயாதவ் அந்த பெண்மணியை சபித்துதீர்கள் போல என்று கேட்டார்.

கெளசிகருக்கு ஒன்றும் புரியவில்லை இவர்கள் வேலை செய்யும் இடத்திற்க்கும் ஆன்மீகத்திற்க்கும் சம்பந்தமே இல்லை ஆனால் இவர்களுக்குள் எப்படி கருத்து பரிமாறுகிறது என்று நினைத்து தர்மயாதவிடம் எப்படி இது எல்லாம் சாத்தியம் என்று கேட்டார்.

தர்மயாதவ் சொன்னார் நான் எனது பெற்றோருக்கு உள்ள அனைத்து கடமையும் செய்கிறேன் அந்த கடமையால் எனது ஆன்மீக அறிவு வளருகிறது என்று சொன்னார். எனது கடமையில் இருந்து ஒருபோதும் நான் தவறியதில்லை அதனால் என்னுடன் கடவுள் இருக்கிறார் என்று சொன்னார்.

இப்பொழுது சுவாராசியத்திற்க்கு வருகிறேன். உங்களுக்கு உள்ள அனைத்து கடமையும் நீங்கள் செய்தால் போதும். ஆன்மீகம் உங்களை தேடிவரும். ஒரு பெண் தன்னுடைய கணவனுக்கு உள்ள அனைத்து கடமையும் செய்யும் போது அந்த பெண்ணை எப்பேர்பட்ட ஆன்மீகவாதிகள் வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது அவளின் கடமைக்கு எதிரில் அனைத்தும் தோல்வியை தழுவும்.

இன்று எப்படி இருக்கிறது உலகம் பெண்கள் ஒழுங்காக கடமையை ஆற்றுகிறார்களா என்று கேட்டாள் கண்டிப்பாக 75 சதவீத பேர் தோல்வியை தழுவ வேண்டும். இன்று கணவன் மனைவிக்குள் அன்பு என்பது கூட மாத சம்பளத்தை அடிப்படையாக கொண்டுவிட்டது. ஆண்களை தேர்ந்தெடுக்கும் போது கூட இவன் நல்ல சம்பாதிப்பான என்று தான் கேட்கிறார்கள். அன்பு என்பது வேஷமாக போய்விட்டது.

ஒவ்வொருவரும் வருமானத்தை நோக்கி தான் திருமணம் செய்கிறார்கள் அன்பை நோக்கி அல்ல. இன்று திருமணங்கள் செய்யும் ஆண்களும் சரி பெண்களும் சரி இவர் மாதம் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று தான் கேட்கிறார்கள். இதில் கண்டிப்பாக அன்பு இருக்காது. 

அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை அன்பு தான் ஆன்மீகம் என்று சொல்லுகிறார்கள். ஆன்மீகத்தில் நீங்கள் உயர வேண்டும் என்றால் நீங்கள் அன்பு செலுத்துவதில் உயர்ந்தால் மட்டுமே ஆன்மீக வாழ்க்கை கிடைக்கும்.

அன்பு செலுத்த கற்றுக்கொண்டால் நீங்கள் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. கடவுள் உங்களை தேடி வருவார். நீங்களே சும்மா சொல்லிபாருங்கள் இந்த மாத சம்பளம் நான் தரமாட்டேன் என்று உங்கள் மனைவியிடம் சொல்லுங்கள் அடுத்த நாளில் இருந்து உங்களின் மனைவியின் நடவடிக்கை தனியாக இருக்கும். இதனை நான் குறைச்சொல்லவில்லை இன்று காட்டும் அன்பு அனைத்தும் வேஷம் தான் என்பது அப்பொழுது உங்களுக்கு புரியும்.

ஓஷோ சொல்லுவார் மனிதன் அன்பு காட்டுவதில் குறையோடு இருக்கிறான் என்று சொன்னார் உண்மை தான் அன்பு காட்டுவதில் அனைத்து பேர்களும் போலியாக மாறிவிட்டோம் அதனால் ஆன்மீகமும் போலியாகிவிட்டது. 

அன்பும் போலியானது ஆன்மீகமும் போலியாகிவிட்டது நீங்கள் உண்மையான அன்பை செலுத்தும் போது உண்மையான ஆன்மீகத்தை நீங்கள் காணலாம். நன்றி நண்பர்களே அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

Thursday, December 20, 2012

கோச்சார பலன் கேது நிறைவு பகுதி



கேது ஏழாமிடத்திற்கு வரும்போது உங்களின் துணைவர் உங்களுக்கு பிரச்சினையை கொடுப்பார். குடும்பத்தில் வறுமையும் நோயும் வரும். உங்களின் கூட்டுதொழில் சரிவை சந்திக்கும். உங்களின் நெருங்கிய நண்பர் மட்டுமே உதவி செய்வார்கள். புதிய நண்பர்கள் உங்களை தேடிவருவார்கள் அவ்வாறு வருபவர்களை நீங்கள் ஒதுக்கிவிடுவது நல்லது. பணச்செலவு ஏற்படும்.

கேது எட்டாமிடத்திற்க்கு வரும்போது பெண்களால் பிரச்சினை உருவாகும். துணைவர் மூலமும் பிரச்சினை ஏற்படும். விபத்துக்கள் ஏற்படும். வெளியூர் பயணம் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மனம் ஆன்மீக விசயங்களில் ஈடுபடும் போது அமைதி அடையும். 

கேது ஒன்பதாவது இடத்திற்க்கு வரும்போது தந்தையின் உடல்நிலையில் கவனமாக இருக்கவேண்டும். தந்தையின் உடல்நிலையில் சிறிய மாற்றம் வந்தாலும் அது மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும் உடனே மருத்துவரை காண்பிப்பது நல்லது. யாத்திரை செல்லுவதால் மனம் அமைதி அடையும்.

கேது பத்தாவது இடத்திற்க்கு வரும்போது பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்பட்டு புதிய தொழில்கள் தொடங்கும் நிலை ஏற்படும். வருமானம் நன்றாக வரும். புதிய சொத்துக்கள் வாங்கும் நிலை ஏற்படும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். ஆன்மீக வாழ்க்கையில் மனம் ஈடுபடும்

கேது பதினொன்றாவது வீட்டிற்க்கு வரும்போது நினைத்த காரியங்களை அனைத்தும் வெற்றி பெறும். நீங்கள் செய்கின்ற தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் மேலதிகாரிகள் உங்களின் திறமையை கண்டு பாராட்டுவார்கள்.பயணத்தால் நன்மை ஏற்படும் புதிய வீடு, நகை வாங்கலாம்.

கேது பனிரெண்டாவது வீட்டிற்க்கு வரும்போது உறவினர்களால் தொல்லை ஏற்படும் உங்களின் உடல்நிலையும் கெடும். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்படும்.  நீங்கள் செய்கின்ற தொழிலில் மட்டும் ஒரளவு செல்லும். வருமானம் குறைவாக இருக்கும். மருத்துவ செலவு ஏற்பட்டு அதனால் கையில் உள்ள பணம் குறையும்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  


கோச்சார பலன் கேது பகுதி-1


கேது சந்திரன் நின்ற ராசிக்கு வரும்போது உடல்நிலையில் கவலை ஏற்படும் ஏதாவது மருத்துவசெலவு வந்துவிடுமோ என்று மனதை நினைக்கதோன்றும். குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும். நீங்கள் செய்கின்ற வேலையில் மனது ஈடுபடாது. செய்கின்ற தொழிலும் நன்றாக இருக்காது. உங்கள் உறவினர்களின் வழியில் உள்ளவர்கள் பிரச்சினையை தருவார்கள்.

கேது இரண்டாம் இடத்திற்க்கு வரும்போது குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும். குடும்பத்தினர் ஒருவர் நோய்வாய்படுவார். பணத்தட்டுபாடு ஏற்படும். நீங்கள் செய்கின்ற வேலையில் ஒரளவு மனது ஈடுபடும். நீங்கள் செய்கின்ற தொழிலும் இதே நிலை தான். உங்களின் உறவினர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள் பிரச்சினையை தான் கொடு்ப்பார்கள் அதே நேரத்தில் உங்களின் நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள், இந்த நேரத்தில் உங்கள் செய்கின்ற வேலையில் மாற்றம் ஏற்பட்டால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

கேது மூன்றாம் இடத்திற்க்கு வரும்போது உங்களுக்கு நல்ல நேரம் என்று சொல்லலாம். நோய்கள் போய் உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். தொழில்கள் முன்னேற்றம் ஏற்படும். செலவு அதிகமாக இருக்கும்.

கேது நான்காம் இடத்திற்க்கு வரும்போது உங்களின் சுகம் கெடும். உங்களின் தாயார் உடல்நிலை கவலை ஏற்படும். வண்டி வாகனங்கள் பிரச்சினை ஏற்படும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.உங்களின் வீட்டில் விஷ பூச்சிகள் வரும்.  கடன் தொல்லை ஏற்படும்.

கேது ஐந்தாம் இடத்திற்க்கு வரும்போது பெரியோர்கள் சந்திப்பும் ஆதரவும் கிடைக்கும். எதிர்பாராத வகையில் புதிய நட்பு ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் கிடைக்கும். திடீர் பணவரவுகள் ஏற்படும். உங்களின் சொத்துக்கள் மீது வழக்குகள் வரும் அதனால் உங்களின் பணம் செலவழியும்.

கேது ஆறாமிடத்திற்க்கு வரும்போது அசாத்திய துணிவு பிறக்கும். நீங்கள் எடுக்கும் எந்த காரியம் தொடங்கினாலும் அதில் நல்ல பலன் கிடைக்கும். உங்களின் நண்பர்களின் ஆதரவும் உதவியும் பெரும் அளவில் கிடைக்கும். உங்களின் வேலையில் மனம் ஈடுபட்டு செய்வீர்கள். விரோதிகள் அடங்குவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

Wednesday, December 19, 2012

ஆன்மீக அனுபவங்கள் 35



வணக்கம் நண்பர்களே!
                     ஆன்மீக அனுபவத்தில் பிராணாயாமம் பற்றி எழுதியிருந்தேன் அதனை படித்துவிட்டு பல நண்பர்கள் அவசியமான பதிவு இதனைப்பற்றி எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். பிராணாயாமத்தின் தொடர்ச்சி இப்பதிவு

பிராணாயாமம் செய்ய முதலில் அறை நன்றாக காற்றோட்டம் உள்ள அறையாக இருக்கவேண்டும். முதலில் பிராணாயாமம் செய்யபோகிறோம் என்று உடலுக்கு சொல்லவேண்டும் அது எப்படி என்றால் இடது நாசி வழியாக மூச்சை முதலில் இழுக்கவேண்டும் பிறகு வலது நாசிவழியாக மூச்சை விடவேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 20 தடவை செய்யுங்கள் அது போதும். காலஅளவு வேண்டாம் சும்மா இழுத்து இழுத்து செய்யுங்கள்  இவ்வாறு கொஞ்ச நாட்கள் செய்தாலே போதும்.

உங்களின் மனதிற்க்கு பிராணாயாம பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறார் என்ற செய்தி சென்றுவிடும். இதனையே ஒரு மாத காலம் செய்யவேண்டும் அப்படி செய்யும் போது உங்களின் உடல் அதற்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்திக்கொள்ளும்.

பிராணாயாமத்தில் முதலில் மூன்று நிலைகள் உள்ளன அதனை சொல்லிவிடுகிறேன்.

1 பூரகம் மூச்சை உள்ளே இழுப்பது
2 கும்பகம் மூச்சை உள்ளே அடக்குவது
3 ரேசகம் மூச்சை வெளியே விடுதல்.

மூச்சை இழுப்பது அடக்குவது வெளியிடுவது இது தான் இதில் பெயரில் ஒன்றும் கி்டையாது. இதனை செய்யும் போது அதற்கு காலஅளவு இருக்கிறது அந்த கால அளவோடு செய்யும்போது மட்டுமே பிராணாயாமம் நமக்கு கைகொடுக்கும். காலஅளவை பொருத்தவரை எண்ணிக்கை தான் நல்லது.

இந்த எண்ணிக்கை ஒவ்வொருவரும் ஒரு மாதிரி எண்ணுவார்கள் அதனால் அதற்கு மந்திரத்தை வைத்தார்கள். மந்திரமும் ஒரு சிலநபர் வேகமாக சொல்லலாம் சில பேர் குறைவாக சொல்லலாம். நடுநிலையாக மந்திரத்தை சொல்லுவது போதும். மந்திரம் என்றால் எந்த மந்திரத்தை எடுத்துக்கொள்ளுவது பிரணவ மந்திரம் தான்.

"ஓம்" என்ற மந்திரம் தான் அது.

எப்படி செய்யலாம் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

கோச்சார பலன் ராகு நிறைவு பகுதி


ராகு ஏழாமிடத்திற்க்கு வரும்போது துணைவர் வழியாக பிரச்சினை ஏற்படும். உடல்நிலை பிரச்சினை ஏற்படும். கூட்டுத்தொழில் பிரச்சினை ஏற்படும். அடிக்கடி பயணம் ஏற்படும்.வீண் செலவு ஏற்படும்.

ராகு எட்டாமிடத்திற்க்கு வரும்போது திடீர் விபத்துக்கள் ஏற்படும். உங்களை சுற்றி சதிவலை ஏற்படும் அதனை நீ்ங்கள் போக்குவதற்க்கு பெரும்பாடுபடவேண்டிவரும். பணம் கிடைக்காது அன்றாட செலவுக்கு கூட அடுத்தவர்களை நீங்கள் நம்பி இருக்கவேண்டிவரும். 

ராகு ஒன்பதாவது இடத்திற்க்கு வரும்போது தந்தைவழி உறவினர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. மேலாதிகாரிகளிடம் பணிவாக நடந்துக்கொள்ளவேண்டும் அப்படி இல்லை என்றால் அவர்களின் கோபத்திற்க்கு ஆளாக வேண்டிவரும். 

ராகு பத்தாமிடத்திற்க்கு வரும்போது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர வழியில் மனம் ஈடுபடவைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். வேலை செய்யும் இடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.

ராகு பதினொன்றாமிடத்திற்க்கு வரும்போது தொழில் சிறக்கும். தொழிலில் வருமானம் வரும். திடீர் பணவரவு இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உங்களின் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இரு்க்கும். வீட்டில் சந்தோஷம் இருக்கும்.

ராகு பனிரெண்டாம் இடத்திற்க்கு வரும்போது வீண் செலவு வரும். மருத்துவமனை செலவு ஏற்படும். செய்கின்ற தொழிலில் பிரச்சினை ஏற்படும். அனைத்து செயல்களிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.