வணக்கம் நண்பர்களே !
ஆன்மீக அனுபவத்தில் இப்பதிவில் ஒரு சுவாராசியமான தகவலைப்பற்றி என்னுடைய அனுபவத்தையும் கலந்து இப்பதிவை தருகிறேன்.
மகாபாரத கதைகள் பற்றி உங்களுக்கு தெரியும் அந்த கதையில் கெளசிகன் என்பவர் இருந்தார் அவர் கடுமையான தவம் இருந்து தவவலிமையை பெற்றார்.
கெளசிகர் ஒரு நாள் காட்டில் இருந்து வரும் போது ஒரு கொக்கு மரத்தின் மேல் இருந்து இவரின் மேல் எச்சத்தை இட்டுவிட்டது உடனே இவர் கோபத்தால் அந்த கொக்கை பார்த்தார் அந்த கொக்கு உடனே மரத்தின் கீழே விழுந்து உயிரை விட்டது.
கெளசிகர் ஒரு ஊருக்கு சென்றார் அந்த ஊரில் ஒரு வீட்டிற்க்கு சென்று பிச்சை கேட்டார். அந்த காலத்து சாமியார்கள் எல்லாம் பிச்சை எடுத்து தான் சாப்பிடுவது வழக்கம் இவர் அந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டு தர்மம் தர்மம் என்று சொன்னார் அந்த வீட்டு பெண்மணி இவரை கண்டுக்கொள்ளாது அவரின் வேலையிலே இருந்தார். அப்பொழுது மீண்டும் இவர் தர்மம் என்று சொன்னார். உடனே அந்த பெண்மணியின் கணவர் வந்து இவருக்கு தர்மம் இட்டார். கெளசிகருக்கு கோபம் தாங்காமல் அந்த பெண்மணியை பார்த்தார் அதற்கு அந்த பெண்மணி இவரிடம் கொக்கு என்று என்னை நினைத்தாயோ என்று சொன்னார், கெளசிகருக்கு ஒன்றுமே புரியவில்லை .
எப்படி நாங்கள் தவம் செய்து பெறுகின்ற அறிவை நீங்கள் குடும்பத்தில் இருப்பவர் சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். நான் என்னுடைய கடமையில் இருந்து சிறிதும் தவறாதவள் நீங்கள் கூப்பிடும்போது என்னுடைய கணவனுக்கு சமையல் செய்து கொண்டு இருந்தேன் அது என்னுடைய முதல் கடமை. ஒரு பெண் தன்னுடைய கணவனுக்கு அனைத்து கடமைகளும் செய்தால் போதும் அனைத்தும் கிடைத்துவிடும். அப்படி இருந்தும் இதனை தர்மயாதவ என்று ஒருவர் இருக்கிறார் அவரிடம் கற்றேன் என்றால் கெளசிகருக்கு ஒன்றும் புரியவில்லை உடனே அப்ப அந்த தர்மயாதவ் பெரிய ஆளாக இருப்பார் போல அவரை பார்த்தால் தெரியும் என்று எண்ணி அவர் எங்கு இருக்கிறார் என்று கேட்டார். அவர் சந்தையில் இருக்கிறார் என்று சொன்னாள் அந்த பெண்மணி.
கெளசிகர் சந்தைக்கு சென்று அங்கு உள்ளவர்களிடம் தர்மயாதவ் எங்கு இருக்கிறார் என்று கேட்டார் உடனே மக்கள் அதோ அந்த கடையில் கூட்டமாக இருக்கிறதே அது தான் அவரின் கடை என்று சொன்னார்கள். கெளசிகர் அங்கு சென்று பார்த்தால் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. தர்மயாதவ் மாசிச கறிகளை விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
இவருக்கு ஒன்றுமே புரியவில்லை இவர் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார் அனைத்து கூட்டமும் போனவுடன் தர்மயாதவ் கெளசிகரை பார்த்து வாங்க கெளசிகரே என்று கூப்பிட்டார் இவர் ஆடி போய்விட்டார் எப்படி இவர் நம்மை அடையாளம் கண்டுகொண்டார் உடனே தர்மயாதவ் அந்த பெண்மணியை சபித்துதீர்கள் போல என்று கேட்டார்.
கெளசிகருக்கு ஒன்றும் புரியவில்லை இவர்கள் வேலை செய்யும் இடத்திற்க்கும் ஆன்மீகத்திற்க்கும் சம்பந்தமே இல்லை ஆனால் இவர்களுக்குள் எப்படி கருத்து பரிமாறுகிறது என்று நினைத்து தர்மயாதவிடம் எப்படி இது எல்லாம் சாத்தியம் என்று கேட்டார்.
தர்மயாதவ் சொன்னார் நான் எனது பெற்றோருக்கு உள்ள அனைத்து கடமையும் செய்கிறேன் அந்த கடமையால் எனது ஆன்மீக அறிவு வளருகிறது என்று சொன்னார். எனது கடமையில் இருந்து ஒருபோதும் நான் தவறியதில்லை அதனால் என்னுடன் கடவுள் இருக்கிறார் என்று சொன்னார்.
இப்பொழுது சுவாராசியத்திற்க்கு வருகிறேன். உங்களுக்கு உள்ள அனைத்து கடமையும் நீங்கள் செய்தால் போதும். ஆன்மீகம் உங்களை தேடிவரும். ஒரு பெண் தன்னுடைய கணவனுக்கு உள்ள அனைத்து கடமையும் செய்யும் போது அந்த பெண்ணை எப்பேர்பட்ட ஆன்மீகவாதிகள் வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது அவளின் கடமைக்கு எதிரில் அனைத்தும் தோல்வியை தழுவும்.
இன்று எப்படி இருக்கிறது உலகம் பெண்கள் ஒழுங்காக கடமையை ஆற்றுகிறார்களா என்று கேட்டாள் கண்டிப்பாக 75 சதவீத பேர் தோல்வியை தழுவ வேண்டும். இன்று கணவன் மனைவிக்குள் அன்பு என்பது கூட மாத சம்பளத்தை அடிப்படையாக கொண்டுவிட்டது. ஆண்களை தேர்ந்தெடுக்கும் போது கூட இவன் நல்ல சம்பாதிப்பான என்று தான் கேட்கிறார்கள். அன்பு என்பது வேஷமாக போய்விட்டது.
ஒவ்வொருவரும் வருமானத்தை நோக்கி தான் திருமணம் செய்கிறார்கள் அன்பை நோக்கி அல்ல. இன்று திருமணங்கள் செய்யும் ஆண்களும் சரி பெண்களும் சரி இவர் மாதம் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று தான் கேட்கிறார்கள். இதில் கண்டிப்பாக அன்பு இருக்காது.
அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை அன்பு தான் ஆன்மீகம் என்று சொல்லுகிறார்கள். ஆன்மீகத்தில் நீங்கள் உயர வேண்டும் என்றால் நீங்கள் அன்பு செலுத்துவதில் உயர்ந்தால் மட்டுமே ஆன்மீக வாழ்க்கை கிடைக்கும்.
அன்பு செலுத்த கற்றுக்கொண்டால் நீங்கள் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை. கடவுள் உங்களை தேடி வருவார். நீங்களே சும்மா சொல்லிபாருங்கள் இந்த மாத சம்பளம் நான் தரமாட்டேன் என்று உங்கள் மனைவியிடம் சொல்லுங்கள் அடுத்த நாளில் இருந்து உங்களின் மனைவியின் நடவடிக்கை தனியாக இருக்கும். இதனை நான் குறைச்சொல்லவில்லை இன்று காட்டும் அன்பு அனைத்தும் வேஷம் தான் என்பது அப்பொழுது உங்களுக்கு புரியும்.
ஓஷோ சொல்லுவார் மனிதன் அன்பு காட்டுவதில் குறையோடு இருக்கிறான் என்று சொன்னார் உண்மை தான் அன்பு காட்டுவதில் அனைத்து பேர்களும் போலியாக மாறிவிட்டோம் அதனால் ஆன்மீகமும் போலியாகிவிட்டது.
அன்பும் போலியானது ஆன்மீகமும் போலியாகிவிட்டது நீங்கள் உண்மையான அன்பை செலுத்தும் போது உண்மையான ஆன்மீகத்தை நீங்கள் காணலாம். நன்றி நண்பர்களே அடுத்த பதிவில் பார்க்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment