Followers

Friday, July 31, 2015

ஆன்மீக பயிற்சி


வணக்கம்!
          காயத்ரி மந்திரத்தை பற்றி காலையில் பதிவை தந்தவுடன் பல நண்பர்கள் அதனை செய்யவேண்டும் எங்களுக்கும் வழியை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். ஒவ்வொருவரும் இதனை செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.

பல நண்பர்கள் குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதலை செய்யுங்கள் என்று சொல்லிருந்தேன். பல பேர் இதனை செய்துக்கொண்டு இருக்கின்றனர். பல நண்பர்கள் இதனை விட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். மறவாமல் இதனை செய்துவிடுங்கள்

வளர்பிறையில் இருந்து காயத்ரி மந்திரத்தை செய்ய ஆரம்பிக்கலாம். அதற்க்கான பதிவை தருகிறேன் அந்த நேரத்தில் என்னை தொடர்புக்கொண்டு புதிய நண்பர்கள் இதனை செய்ய ஆரம்பிக்கலாம்.

காயத்ரி மந்திரத்தை தொடர்ச்சியாக செய்யும்பொழுது மட்டுமே உங்களுக்கு பயன்தரும். உங்களின் கர்மவினையை நீங்களே போக்குவதற்க்கு வழி செய்கின்றீர்கள். இதற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. வழியை மட்டும் சொல்லுவது எனது வேலை. தொடர்ச்சியாக செய்பவர்களை எந்த காரணத்திலும் விட்டுவிடுவதில்லை அவர்களுக்கு தேவையான கருத்துக்களை அவ்வப்பொழுது சொல்லிக்கொண்டே வருவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கேள்வி & பதில்


வணக்கம்!

தாங்கள் ஒவ்வொரு பதிவிலும் தெய்வத்தை பிரசுரித்து எழுதி வருகிறீர்கள் . எல்லா தெய்வங்களும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. மகிழ்ச்சி . அந்த தெய்வ படத்திற்கு கிழே தெய்வத்தின் பெயர் & ஊர் பிரசுரம் செய்தல் நன்றாக இருக்கும் .

என் கோரிக்கை நிறைவேறும் என நினைக்கிறேன் ,

நன்றியுடன் 
சோமசுந்தரம் பழனியப்பன்.

பதில்
      ஓய்வு நேரத்தில் நெட்டில் தேடி எனது கம்யூட்டரில் சேமித்து வைத்துவிடுவேன். அதனை ஒவ்வொன்றாக பதிவில் போடுவது வழக்கம். இந்த படங்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட வெப்சைட்டில் கூட என்ன தெய்வம் எந்த ஊர் என்று இருப்பதில்லை. அதனால் படம் போடும்பொழுது அதனைப்பற்றி விபரம் அளிக்க முடிவதில்லை.

நமது பதிவில் இதனை தரும்பொழுது இதனை பார்த்துக் கூட ஆன்மீக பக்கம் வருவார்கள் என்ற நம்பிக்கையில் இப்படி நல்ல படங்களை எடுத்து போடுகிறேன். மனது இந்த படங்களை பார்த்தவுடன் அதுவாகவே ஒரு பக்குவதற்க்கு வரும் என்ற நம்பிக்கையில் போடுகிறேன். பல பேர்கள் இதனாலே ஆன்மீகத்தை தேடியதும் உண்டு.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இந்த நிலைக்கு யார் காரணம்?


வணக்கம்!
          தற்பொழுது நிறைய பேர் காயத்ரி மந்திரத்தை கேட்டு செய்துக்கொண்டு இருக்கின்றனர். எப்படியும் தன் நிலையை உயர்த்த வேண்டும் என்று ஆன்மீகத்தின் பக்கம் வருகின்றனர். அனைவரையும் வரவேற்கிறேன். அதோடு ஒரு கருத்தையும் சொல்லிவிடுகிறேன்.

தற்பொழுது நீங்கள் இருக்கும் நிலைக்கு காரணம் நீங்கள் தான் என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களுடைய மனது தான் அதற்கு காரணமாக இருக்கின்றது. 

என்னை தேடி வருபவர்களுக்கு எளிதில் ஆன்மீகத்தை தெரிந்துக்கொள்ள உதவமுடியும் ஆனால் அவர்களின் மனது அதனை ஏற்றுக்கொள்வதில்லை மனதின் தந்திரம் அது. மூன்று நாள்களுக்கு செய்யவேண்டும் என்று மனது சொல்லும் அதன் பிறகு மனது அதனை மாற்றிவிட்டு வேறு ஒன்றுக்கு தாவும். மூன்று நாட்களுக்கு காயத்ரி மந்திரத்தை செய்வீர்கள் அதன் பிறகு இதில் என்ன இருக்கின்றது என்று விட்டுவிடுவீர்கள்.உங்களுக்கு எஜமானாக மனது இருந்து உங்களை கெடுக்கிறது என்பது உங்களுக்கு தெரியவே தெரியாது.

நான் குருவிடம் செல்லும்பொழுது நான் முடிவு எடுத்தது என் மனதால் தான் நான் கெட்டேன் இனி அவர் பார்த்து எதை சொன்னாலும் அதனை நாம் கேட்டு அதன் படி நடப்போம் என்று சென்றேன். அவரின் மனது படி நான் செயல்பட்டதால் அவரிடம் உள்ளது அனைத்தும் என்னிடம் வளர்க்க முடிந்தது. 

மனது எல்லாவற்றையும் சந்தேகப்படும். அதன் இயல்வு அது. மூன்று நாட்களில் எந்த முன்னேற்றம் இல்லை என்றவுடன் உடனே அடுத்த வேலையை பாரு என்று உங்களின் மனது உங்களுக்கு ஆணையிட்டு நீங்கள் ஒழுங்காக செய்கின்ற வேலையை விடவைத்துவிடும். 

பல நண்பர்கள் இதில் இருக்கின்றனர் அனைவரும் எப்படியும் சக்தியை நாம் எடுத்துவிடவேண்டும் என்று பல்வேறு போராட்டம் செய்து அதனை பெறமுயற்சிக்கின்றனர். அனைவருக்கும் சொல்லுவது உங்களின் மனது உங்களை ஏமாற்றுகிறது. உங்களின் மனதிற்க்கு அடிபணியாமல் செய்கின்ற வேலையை விடாமல் செய்யுங்கள் விரைவில் சக்தி பெற்றவர்களாக மாறிவிடுவீர்கள்.


சக்தியை எடுக்கும் எளிமையான பல வழிகளை புதிய பிளாக்கில் சொல்லபோகிறேன். பணத்தை செலுத்திவிட்டு உடனே உங்களைப்பற்றிய விபரத்தை தெரியப்படுத்துங்கள். அனைத்து பதிவுகளும் பிராடிக்கலாகவே இருக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, July 30, 2015

அஞ்சலி


ஆத்மா சாந்தியடைய அம்மனிடம் பிராத்திக்கிறேன்.

ராஜேஷ்சுப்பு

Wednesday, July 29, 2015

புதிய தொடக்கத்தைப்பற்றி


ணக்கம்!
          ஜாதககதம்பத்தில் நிறைய கருத்துக்களை எழுதியுள்ளேன். அதனை எடுத்து எத்தனை பேர்கள் முன்னேற்றம் அடைந்தனர் என்பது எனக்கு தெரியாது. ஜாதககதம்பத்தில் ஒரு பதிவில் ஒன்றை சொல்லிருந்தேன் அது இருட்டில் அமர்ந்துக்கொண்டு உங்களை பரிசோதனை செய்யும்பொழுது உங்களின் ஆத்மாவை பார்க்கலாம் என்று சொல்லிருந்தேன்.

இதனை எத்தனை பேர் முயன்று பார்த்தார்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் ஒருவர் முயன்று பார்த்து அதனைப்பற்றி எனக்கு சொல்லிருந்தார். இதுப்போல் பல பதிவுகளில் தனிப்பட்ட முறையில் உங்களை ஆன்மீகத்தில் மேம்படுத்திக்கொள்ள வழியை சொல்லிருந்தேன். 

சும்மா படித்துக்கொண்டே இருந்தால் அதில் ஒன்றும் வரப்போவதில்லை முயன்று பார்த்தால் தான் அது என்ன என்று தெரியும்.இப்பொழுது நாம் தொடங்கும் புதிய பதிவுகளில் ஒவ்வொரு பதிவுகளும் ஒரு ஆன்மீகப்பயிற்சியை கண்டிப்பாக எடுப்பது போல் இருக்கும். சும்மா படித்துக்கொண்டு இருக்கமுடியாது. அதனை பயிற்சியாக செய்ய ஆரம்பிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அந்த பதிவு வர இருக்கின்றது.

ஆன்மீகப்பயிற்சி வகுப்பை எடுங்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் அனைவரும் அதில் இணைந்துக்கொள்ளுங்கள். இலவசமாக கொடுத்தால் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும் அந்த காரணத்தால் அதற்கு பணம் என்று சொல்லியுள்ளேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, July 27, 2015

வீட்டிற்க்கும் அருள்


வணக்கம்!
          ஒருவருக்கு வீடு கட்டவேண்டும் என்றால் அவருக்கு அந்த யோகமும் இருக்கவேண்டும் அதே நேரத்தில் அவர்களின் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தின் அருளும் இருக்க வேண்டும்.

எந்த அருளும் இல்லாமல் இருந்தாலும் குருவின் அருள் இருந்தால் வீடு கட்டிவிடலாம். எதுவும் இல்லாமல் பணம் மட்டும் இருந்தால் போதும் வீடு கட்டிவிடலாம் என்று நினைத்தால் அது தவறு. வீடு கட்ட அனுமதி கூட அரசாங்கத்திடம் இருந்து வாங்கமுடியாது.

நாம் ஒரு வீடு கட்ட அரசாங்கத்திடம் அனுமதி கேட்டால் அரசாங்கம் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் அப்பொழுதே நாம் தெரிந்துக்ககொள்ளலாம் நமக்கு எந்த அருளும் இல்லை. நாம் இனி நல்ல அருளை பெற்றுக்கொண்டு வீடு கட்ட ஆரம்பிக்கவேண்டும் என்று அதனை தேடி செல்லலாம்.


நமது புதிய பிளாக்கை தொடங்குவதற்க்கான வேலை எல்லாம் நடந்துக்கொண்டு இருக்கின்றது. நல்ல நாளாக பார்த்து அதனை ஆரம்பித்துவிடுவோம். 

பல தரப்பட்ட நண்பர்களிடம் எதிர்ப்பும் ஆதரவும் வந்தது. பொதுவாக இதனை தொடங்குவதற்க்கு காரணம் பல வருடங்களாக என்னை தொடர்ந்து ஆன்மீகத்திற்க்கு என்று வந்த நண்பர்கள் தொடர்ந்து என்னை வந்து சந்தித்துக்கொண்டே இருப்பார்கள். சந்திப்பு நேரத்தில் மட்டும் அவர்களுக்கு பல அனுபவங்களை சொல்லிவந்தேன். அது குறைவான அனுபவங்களாக இருக்கும். இப்படிப்பட்ட ஒன்றை தொடங்கிவிட்டால் அவர்களுக்கு தினமும் அவர்களை மேம்படுத்திக்கொள்ள நல்ல வழி கிடைக்கும்.

காயத்ரி மந்திரம் செய்தவர்கள் அதுவும் என்னிடம் கேட்டு செய்தவர்கள் எல்லாம் இதில் இணைந்துக்கொண்டால் மிகவும் நல்லது. உங்களை மேம்படுத்திக்கொண்டு உங்களின் முன்னேற்றத்தையும் நீங்களாகவே மேம்படுத்தக்கொள்ளலாம்.  சரியான ஒரு ஆன்மீகப்பயிற்சி எடுக்கவேண்டும் என்றால் இதில் நீங்கள் இணைந்துக்கொள்வது நல்லது.

பணம் அதிகம் என்பது எனக்கு தெரியும் அதே நேரத்தில் அதில் நான் கொடுக்க போகிற கருத்தை நீங்கள் படிக்கும்பொழுது எனக்கு அதிக பணம் நீங்களே கொடுப்பீர்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, July 25, 2015

மனை


வணக்கம்!
          மனையைப்பற்றி பார்த்து வருகிறோம். இதில் ஒன்றைப்பற்றி பார்க்கலாம். ஒருவர் வீடு கட்ட ஆரம்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் வீடு கட்ட ஆரம்பித்து அந்த வீட்டு வேலை முடியவே மாட்டேன்கிறது என்றால் அது அவரின் ஜாதகத்தில் உள்ள பிரச்சினை கிடையாது. அந்த மனையின் உள்ள பிரச்சினையாகவே இருக்கும்.

வீடு கட்ட ஜாதகத்தை மட்டும் பார்த்து பலனை சொல்லகூடாது அவரின் மனையும் பார்த்து பலன் சொல்லவேண்டும். வீடு கட்ட ஆரம்பித்து அந்த வீட்டை கட்டிமுடிக்க முடியவில்லை என்றால் அந்த மனையில் ஏதோ பிரச்சினை என்று நாம் முடிவு செய்துவிடலாம். 

வீட்டின் மனையில் ஏதோ ஒன்று புதையுண்டு இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு துர்சக்தி அங்கு உலவிக்கொண்டு இருக்கலாம். நமது அப்பா காலத்தில் எல்லாம் பிரவச பார்க்க அவ்வளவு வசதி ஏற்படவில்லை. முதல் பிரவசத்தில் பிறந்த குழந்தை இறப்பதற்க்கு அதிக வாய்ப்பு இருந்திருக்கும். 

முதல் குழந்தை இறந்தால் அதுவும் ஆண் குழந்தையாக இருந்தால் அந்த குழந்தையை அவர்கள் வாழ்ந்த வீட்டிலேயே புதைத்துவிடுவார்கள். ஏன் என்றால் அந்த காலத்தில் ஆண் குழந்தையின் மண்டை ஓட்டை மாந்தீரிகம் செய்பவர்கள் எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள் என்று பயந்து இப்படி செய்வார்கள்.

புதையுண்ட அந்த இடத்தில் புது மனை போட்டதால் வீடு பாதியிலேயே நிற்க்கும். அதற்கு பரிகாரமாக ஒரு நல்ல ஆன்மீகவாதியை அழைத்துவந்து ஒரு பூஜையை அந்த வீட்டில் செய்தால் மறுபடியும் வேலை தொடங்கும்.

பொதுவாக நீங்கள் மனை போடுவதற்க்கு முன்பு நன்றாக மனையைப்பற்றி விசாரித்துவிட்டு நல்ல பூஜையை செய்த பிறகு வேலையை தொடங்குவது நல்லது.

விரைவில் புதிய பிளாக் தொடங்கப்படுகிறது. உடனே சந்தாவை செலுத்திவிட்டு உங்களைப்பற்றிய விபரத்தை எனக்கு அனுப்புங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு