வணக்கம்!
மனையைப்பற்றி பார்த்து வருகிறோம். இதில் ஒன்றைப்பற்றி பார்க்கலாம். ஒருவர் வீடு கட்ட ஆரம்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் வீடு கட்ட ஆரம்பித்து அந்த வீட்டு வேலை முடியவே மாட்டேன்கிறது என்றால் அது அவரின் ஜாதகத்தில் உள்ள பிரச்சினை கிடையாது. அந்த மனையின் உள்ள பிரச்சினையாகவே இருக்கும்.
வீடு கட்ட ஜாதகத்தை மட்டும் பார்த்து பலனை சொல்லகூடாது அவரின் மனையும் பார்த்து பலன் சொல்லவேண்டும். வீடு கட்ட ஆரம்பித்து அந்த வீட்டை கட்டிமுடிக்க முடியவில்லை என்றால் அந்த மனையில் ஏதோ பிரச்சினை என்று நாம் முடிவு செய்துவிடலாம்.
வீட்டின் மனையில் ஏதோ ஒன்று புதையுண்டு இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு துர்சக்தி அங்கு உலவிக்கொண்டு இருக்கலாம். நமது அப்பா காலத்தில் எல்லாம் பிரவச பார்க்க அவ்வளவு வசதி ஏற்படவில்லை. முதல் பிரவசத்தில் பிறந்த குழந்தை இறப்பதற்க்கு அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.
முதல் குழந்தை இறந்தால் அதுவும் ஆண் குழந்தையாக இருந்தால் அந்த குழந்தையை அவர்கள் வாழ்ந்த வீட்டிலேயே புதைத்துவிடுவார்கள். ஏன் என்றால் அந்த காலத்தில் ஆண் குழந்தையின் மண்டை ஓட்டை மாந்தீரிகம் செய்பவர்கள் எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள் என்று பயந்து இப்படி செய்வார்கள்.
புதையுண்ட அந்த இடத்தில் புது மனை போட்டதால் வீடு பாதியிலேயே நிற்க்கும். அதற்கு பரிகாரமாக ஒரு நல்ல ஆன்மீகவாதியை அழைத்துவந்து ஒரு பூஜையை அந்த வீட்டில் செய்தால் மறுபடியும் வேலை தொடங்கும்.
பொதுவாக நீங்கள் மனை போடுவதற்க்கு முன்பு நன்றாக மனையைப்பற்றி விசாரித்துவிட்டு நல்ல பூஜையை செய்த பிறகு வேலையை தொடங்குவது நல்லது.
விரைவில் புதிய பிளாக் தொடங்கப்படுகிறது. உடனே சந்தாவை செலுத்திவிட்டு உங்களைப்பற்றிய விபரத்தை எனக்கு அனுப்புங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
மனையில் வீடு கட்ட ஆரம்பிக்கும் முன்பு நான்கு மூலையிலும் வன்னி மர குச்சியை புதைத்து விட்டு 2 மாதங்கள் கழித்து மனை வேலைகளை தொடங்கினால் தடையின்றி பணிகள் நடக்கும் .
Post a Comment