Followers

Monday, August 31, 2015

காரிய தடை பரிகாரம்


வணக்கம்!
          காரிய தடையைப்பற்றி நான் அவ்வப்பொழுது எழுதி வருவது உண்டு. காரிய தடைக்கு என்ன காரணம் என்பது பற்றி ஏற்கனவே உங்களிடம் சொல்லிருக்கிறேன். மீண்டும் கொஞ்சம் அதனைப்பற்றி பார்க்கலாம்.

கொஞ்சம் வெளிப்படையாகவே இதனைப்பற்றி சொல்லுகிறேன். நமது தொழில் செய்பவர்களுக்கு என்று நான் ஆன்மீகவழியில் செய்து தருவது நீங்கள் அறிந்த ஒன்று. இதில் வரும் நண்பர்களிடம் நீங்கள் பூஜை செய்யவேண்டும். அதற்கு ஒரு தொகை ஆகும் என்று சொல்லுவேன். அதற்கு அந்த நண்பர்கள் சரி சார் செய்துவிடலாம் என்று சொல்லுவார்கள். அதன் பிறகு அதனைப்பற்றி பேசுவது என்பது இருக்கவே இருக்காது.

இவனோடு தொந்தரவுக்கு ஒரு அளவே இல்லை என்று போனை வைத்துவிடும் நண்பர்களும் உண்டு. இப்படி எல்லாம் நான் சொல்லுவது இவர்களின் பாக்கியஸ்தானம் எந்தளவுக்கு வேலை செய்கிறது என்பதை பார்ப்பதற்க்காக நான் சொல்லுவேன். 

பாக்கியஸ்தானம் என்பது தான தர்மம் ஆன்மீக பணி ஆன்மீகத்திற்க்காக இவர்கள் எடுக்கும் முயற்சி போன்றவற்றை காட்டும் ஒரு இடம். இதில் எல்லாம் ஒருவர் ஈடுபடும்பொழுது பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்யும். பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்தால் காரிய தடை இருக்காது.

பாக்கியஸ்தானத்திற்க்கு குரு காரகன் வகிக்கிறார். நம் ஆட்கள் எனக்கு கொடுக்க பணம் இல்லை என்று ஒரு நாள் தண்ணி போட பத்தாயிரம் செலவு செய்வார்கள். அதாவது ராகுவை துணைக்கு கூப்பிட்டுவிடுவார்கள். ராகு வந்தால் எப்படி பாக்கியஸ்தானம் வேலை செய்யும் காரிய தடையை அவர்களே உருவாக்கிவிடுவார்கள்.

என்னிடம் தான் வந்து பூஜை செய்யவேண்டும் என்பதில்லை தான தர்மம் மற்றும் ஆன்மீக பணி போன்றவற்றை எங்கு வேண்டுமானாலும் செய்துக்கொண்டு உங்களின் காரியதடையை விலக்கிக்கொள்ளுங்கள்.

பணம் சம்பாதிக்கவேண்டும் என்று பல கோடிஸ்வரர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவதின் நோக்கம். காரிய தடை இல்லாமல் வேலை நடக்கவேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் தொழில் அனைத்தும் வெற்றியை தரவேண்டும் என்ற நோக்கத்திற்க்காக மட்டுமே செய்கிறார்கள் என்பதை ஒரு முறை யோசித்து பார்த்தால் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, August 30, 2015

சந்திப்பு


வணக்கம்!
         நமது ஜாதககதம்பத்தில் பல நண்பர்கள் வந்து படித்து செல்லுகின்றனர். இதில் ஒரு சில நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்வது கூட கிடையாது அப்படியே சென்றுவிடுகின்றனர். அப்படி செல்லும் நண்பர்கள் திடீர் என்று பிரச்சினை வரும்பொழுது என்னை கூப்பிட்டு இப்படி ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ளேன் எப்படியாவது இதில் இருந்து காப்பாற்றுங்கள் என்று சொல்லுகின்றனர்.

மருத்துவமனையில் இருக்கின்றார் அவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றார் அவருக்காக அம்மனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லுகின்றனர். அம்மனிடம் வேண்டிக்கொள்வது பிரச்சினையில்லை ஆனால் அவரை நாம் காப்பாற்றவேண்டும் என்றால் அவரைப்பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கவேண்டும். நீங்கள் காப்பாற்றுங்கள் என்று சொல்லுகின்றீர்கள் உங்களை கூட எனக்கு தெரியவில்லை என்றால் எப்படி இதனை செய்வது.

ஜாதககதம்பத்திற்க்கு வரும் ஒவ்வொரு நட்புகளும் என்னை ஒரு முறை சந்தித்துவிடுங்கள். பல ஊர்களுக்கு நான் வருகிறேன் அப்படி வரும்பொழுது என்னை சந்தித்துக்கொள்ளுங்கள். நமது பதிவில் ஆரம்ப கட்ட நாட்களில் இருந்து இன்றுவரை பல நண்பர்கள் என்னை சந்திக்கொண்டு இருக்கின்றனர்.

வெளிநாடுகளில் நான் வசிக்கிறேன் என்றால் ஊருக்கு வரும்பொழுது என்னை வந்து சந்தியுங்கள். அப்படி இல்லை என்றால் போனில் தொடர்புக்கொண்டு பேசுங்கள். 

அவசர காலத்தில் அழைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் என்பது மட்டும் இல்லை. இத்தனை நாட்கள் படித்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்னும்பொழுது ஒரு சந்திப்பு அவசியம் என்பதால் உங்களிடம் இதனை சொல்லுகிறேன். அந்தந்த ஊர்களுக்கு வரும்பொழுது கூட சந்திக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, August 29, 2015

பச்சைப்பரப்புதல் மற்றும் காயத்ரி மந்திரம்


வணக்கம்!
          இன்று பெளர்ணமி தினம். பச்சைப்பரப்புதல் என்ற ஒன்றை நான் நமது பதிவில் சொல்லிருக்கிறேன். இதனை எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

உங்களின் குலதெய்வத்திற்க்கு இந்த பச்சைப்பரப்புதலை செய்யும்பொழுது உங்களின் குலதெய்வம் மனமிரங்கி உங்களுக்கு நல்ல வழிக்காட்டும். ஜாதகத்தில் ஏற்படும் எப்பேர்பட்ட தோஷத்தையும் நீக்கி நல்லவழியை கொடுக்கும்.

இன்று பெளர்ணமி தினம் என்பதால் உங்களின் குலதெய்வத்திற்க்கு உங்களின் வீட்டில் மாலை நேரத்தில் இந்த பச்சைப்பரப்புதலை செய்யுங்கள். நமது பதிவில் எப்படி செய்வது என்பது கொடுக்கப்பட்டு இருக்கிறது அதனை படித்துவிட்டு செய்யுங்கள்.

நாளைய தினம் காயத்ரி ஜெபம் என்ற ஒரு நாள். காயத்ரி மந்திரம் செபிப்பவர்கள் நாளை விஷேசமாக பூஜை செய்யலாம். காயத்ரி தேவி நல்ல அருளை வழங்கும் தினமாக நாளை இருக்கிறது. காயத்ரி மந்திரம் ஆரம்பிக்க நினைப்பவர்கள் கூட நாளை ஆரம்பிக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, August 28, 2015

கல்வி சேவை


வணக்கம்!
          நமது பதிவுக்கு வரும் நண்பர்களின் குழந்தைகள் பள்ளியில் படிக்கலாம். ஒரு சில நண்பர்கள் வசதி குறைவாக இருக்கலாம். இப்படி வசதி குறைவாக இருக்கும் குழந்தைகள் படிப்பதும் கடினமாக இருக்கும்.

வசதி குறைவாக இருந்தால் ஒரு சில குழந்தைகள் அந்த சூழ்நிலை படிக்கமுடியாமலும் இருக்கலாம். இன்றைய கல்வி எல்லாம் பணத்தை அடிப்படையாக கொண்டு தான் இயங்குகிறது. பணம் நன்றாக இருந்தால் அப்படியே சரி செய்துக்கொண்டு படிப்பு வந்துக்கொண்டு இருக்கிறது.

வசதி குறைவாக இருக்கும் குழந்தைகள் படிப்பது சிரமாக இருக்கும். அப்படி வசதி குறைவான குழந்தைகள் ஆன்மீக வழியில் சரி செய்து நன்றாக படிக்கவைக்கமுடியும். பொதுவாக படிப்பு சரியில்லை என்றால் அதனை சரிசெய்யமுடியும். 

நமது பதிவு வரும் குழந்தைகள் ஒழுங்காக படிக்கவில்லை என்றால் அவர்களைப்பற்றி என்னிடம் தெரிவியுங்கள். அவர்களுக்கு தேவையானதை நான் செய்துவிடுகிறேன். 

குறிப்பாக பத்தாவது மற்றும் பனிரெண்டாவது படிக்கும் குழந்தைகள் ஒழுங்காக படிக்காத குழந்தைகள் உங்களின் குழந்தைகளாக இருந்தால் எனக்கு தெரியப்படுத்துக்கள். அந்த குழந்தைகள் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்க வைக்கமுடியும்.

இது கல்வி சேவை. இது முற்றிலும் இலவசம். நமது பதிவை படிக்கும் நண்பர்களுக்கு மட்டும் இது செய்வதாக இருக்கிறேன். உங்களின் குழந்தைகள் உண்மையில் படிக்கவில்லை என்றால் மட்டும் எனக்கு தெரியப்படுத்தவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஓணம் நல்வாழ்த்துக்கள்

வணக்கம்!

          ஓணம் பண்டிகை கொண்டாடும் நண்பர்களுக்கு இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, August 27, 2015

நாளைய நாளில்


வணக்கம்!
          நாளை ஒரு முக்கியநாளாக வருகிறது. நடராஜருக்கு அபிஷேகம் செய்யும் நாள். நடராஜருக்கு வருடத்தில் ஐந்து நாட்கள் மட்டும் அபிஷேகம் செய்வார்கள். அந்த நாள் நாளை வருகிறது. உங்களின் அருகில் இருக்கும் சிவாலயத்திற்க்கு சென்று நடராஜர் அலங்காரத்தை தரிசனம் செய்துவிட்டு வரலாம். 

நாளை வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம். இந்த விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் கடைபிடிக்கலாம் அல்லது ஏதாவது ஒரு லட்சுமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். 

நாளை திருவோண நட்சத்திரம் வருகிறது. புதியதாக ஏதாவது திறக்கவேண்டும் என்றால் இந்த நாளில் திறக்கலாம். நீங்கள் திறக்கும் ஸ்தாபனம் நல்ல முறையில் வளரும்.

நாளை ஓணம் பண்டிகை. கேரள நாட்டில் உள்ளவர்களுக்கான பண்டிகை நாம் பெருமாளை தரிசனம் செய்து நல்ல வாழ்வை தரும்படி வேண்டிக்கொள்ளலாம்.

நமது புதிய பிளாக்கில் இன்றைய பதிவு 

உடலை விட்டு ஆத்மாவை எப்படி வெளியில் பறப்பது 

அதற்கான பயிற்சியை கொடுத்துள்ளேன். புதியதாக இணைய விரும்பும் நண்பர்கள் பணத்தை செலுத்திவிட்டு இணைந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வேண்டுகோள்


வணக்கம்!
         நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் அனைவரும் என்னை தொடர்புக்கொண்டு என்ன சார் எங்களுக்கு புதிய பதிவைப்பற்றி எந்த ஒரு கருத்தையும் சொல்லமாட்டீர்கள் எங்களிடம் அந்தளவுக்கு பணம் இருந்தால் வந்து சேர்ந்துவிடுவோம் எங்களுக்கு ஏதாவது பணத்தை குறைத்து வாங்ககூடாது என்று கேட்கிறார்கள்.

நான் இந்த புதிய பதிவை ஆரம்பித்த நோக்கம் யாராவது ஒருவர் வந்தால் போதும் அவர்களுக்கு நான் கற்ற விசயத்தை கொடுத்துவிடலாம் என்று தான் ஆரம்பித்தேன். இன்று புதிய பதிவில் பத்து பேர் இருக்கின்றனர். இன்னும் பல பேர் அதில் இணைந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

ஜாதககதம்பம் எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து இன்று வரை நான் சொல்லுவது கண்டிப்பாக பணம் ஒருவருக்கு இருக்கவேண்டும் அப்பொழுது தான் அவர்கள் நினைப்பதை ஏன் ஆன்மீகத்தை கூட அடையமுடியும் என்று சொல்லி வந்து இருக்கிறேன்.

பல செல்வவளத்தை பற்றி பதிவில் சொல்லிருக்கிறேன். அதனை எல்லாம் நீங்கள் வாழ்வில் கடைபிடித்தாலே போதும் இன்று ஒரளவுக்கு பணம் வந்து இருக்கும். அதனையும் செய்வதில்லை இன்று பல பேர் பணம் என்றவுடன் என்னிடம் பணம் இல்லை மாதம் மாதம் கட்டுகிறேன் என்கிறீர்கள்.

நான் பல ஊர்களுக்கு சென்று வருகிறேன் அப்படி செல்லும்பொழுது அந்தந்த ஊர்களில் என்னை வந்து சந்தித்து இருக்கவேண்டும். அதுவும் செய்வதில்லை பின்பு எப்படி உங்களை நான் நம்பி இதில் இணைப்பது. படு பிஸியான ஆட்கள் கூட மாதத்திற்க்கு ஒரு முறை என்னை வந்து சந்தித்து செல்லுகின்றனர். 

உங்களுக்கு நான் சொல்லுவது ஒன்று தான் நான் பல ஊர்களுக்கு சென்று வருகிறேன். அந்தந்த ஊர்களின் என்னை சந்தித்து கேளுங்கள். நான் இலவசமாக சொல்லிதருகிறேன். பணம் கட்டினால் மட்டுமே புதிய பிளாக்கிற்க்கு இணைப்பு வழங்கமுடியும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு