Followers

Thursday, November 9, 2017

சுக்கிரன் தரும் ஆன்மீகவித்தை


ணக்கம்!
          சுக்கிரன் என்றாலே அது வித்தையும் குறிக்கும் ஒரு கிரகம். வித்தை என்றால் அது ஆன்மீக வித்தை. ஆன்மீகவித்தையை செய்பவர்கள் அனைவரும் சுக்கிரனின் காரத்துவத்தில் வருபவர்களாக தான் இருப்பார்கள்.

முதலில் ஆன்மீகவித்தையை ஒருவர் செய்யவேண்டும் என்றால் அம்மனின் அருள் கண்டிப்பாக வேண்டும். அம்மனின் அருள் இல்லை என்றால் ஆன்மீகவித்தையை ஒருவர் செய்துவிடமுடியாது. அம்மன் சுக்கிரனின் காரத்துவத்தில் தான் வரும்.

ராகுவோடு சேரும் சுக்கிரன் நிறைய ஆன்மீகவித்தையை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கொடுக்கும். ராகு என்றாலே கொஞ்சம் வில்லங்களை கொண்டது தானே. சும்மா இருக்காமல் எதையாவது செய்துக்கொண்டே இருப்பார்கள்.

தேவர்கள் என்றால் அவர் வேலை உண்டு என்று இருப்பார்கள். அசூரர்கள் என்றால் சும்மா இருப்பார்களா  பிறரை வேண்டும் என்றே வம்புக்கு இழுப்பார்கள் அல்லவா. ராகுவோடு சேரும் சுக்கிரன் இப்படிப்பட்ட வேலைகளை அதிகமாக செய்வார்கள்.

ஆன்மீகவித்தை நல்லவழியாக இருந்தால் அது ஓடிக்கொண்டு இருக்கும். தீயவழியை நோக்கி சென்றால் கதை முடிவடைந்துவிடும். கொஞ்சநாளில் அது முடிவடையும். எங்கையாவது சென்று மாட்டிக்கொண்டு விடுவார்கள்.

சுக்கிரனின் காரத்துவத்தில் வருகின்ற வித்தை நல்லவழியிலும் செல்லும். ராகுவோடு மட்டும் சுக்கிரன் சேர்ந்தால் மட்டுமே அது தீயவழிக்கு செல்லும். சுக்கிரன் தனித்து நின்றால் நல்லவழிக்கே ஆன்மீகவித்தையை செய்வார்கள்.

மழை குறைந்துவிட்டது. அம்மன் பூஜை விரைவில் நடத்தப்படும். காணிக்கை செலுத்துபவர்கள் உடனே செலுத்திவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 8, 2017

சுக்கிரன்

ணக்கம்!
          சுக்கிரன் என்றாலே அது காமசக்தியை குறிக்கும் ஒரு கிரகம் என்று சோதிடத்தில் சொல்லி வைத்திருக்கிறார்கள். காமசக்தி உடலில் குறைய குறைய உங்களுக்கு முதுமை வந்துவிடுகிறது.

குளிர்காலத்தில் நிறைய நோய்கள் வந்துவிடுகின்றன. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதால் நோய்கள் வந்துவிடுகின்றன. உண்மையில் காமசக்தி நன்றாக இருந்தால் உடலில் எந்த நோயும் வராது. சுக்கிரன் நன்றாக இருந்தால் உடலில் நோய் வராது என்பதை சொல்லுகிறேன்.

கண் கெட்ட பிறகு தான் சூரிய நமஸ்காரம் என்பது போல நாம் உடல் மீது அதிகம் கவனம் வைக்காமல் இருந்துவிடுகிறோம். நோய் வந்த பிறகு தான் உடல் மீது கவனம் வைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

சுக்கிரனின் சக்தியை ஒருவர் வாழ்நாள் முழுவதும் பெற்றுவிட்டால் அவர்க்கு ஆயுள் அதிகம் என்று சொல்லலாம். சனிக்கிரகம் ஆயுள்கிரகம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஆயுளை நீட்டிக்க சுக்கிரன் அருள் அளபரிய வேண்டும் என்பது தான் உண்மை. 

நீங்கள் இளம் வயதாக இருந்தாலும் சரி அல்லது வயது அதிகமாக இருந்தாலும் சரி உணவு விசயத்தில் எப்படி இருக்கின்றீர்கள் உங்களுக்கு சுக்கிரனின் அருள் இருக்கின்றதா என்பதை அறிந்துக்கொண்டு செயல்படுங்கள். நீண்ட ஆயுளை பெறுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 7, 2017

பிரச்சினை உடனே தீர வழி

ணக்கம்!
          ஒரு வேலைக்கு செல்கிறோம் அப்பொழுது தடைகள் வருகின்றன அல்லது ஏதோ ஒரு பிரச்சினை இருக்கின்றது அப்பொழுது எந்த தெய்வத்தை வணங்கலாம் என்று ஒரு கேள்வியை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.

இந்த மாதிரியான நேரத்தில் தெய்வ உபாசனை பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் அவர்களின் தெய்வத்தை வேண்டலாம். குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு முழுமையாக இருந்தால் குலதெய்வத்திடம் வேண்டலாம்.

மேலே சொன்னதை விட ஒரு ஞானியின் புத்தகம் இருந்தால் அந்த புத்தகத்தை எடுத்து படித்தால் உடனே உங்களுக்கு பிரச்சினை தீரும். புத்தகம் இல்லை என்றால் அவரை உருவத்தை மனதில் நிறுத்தி எனக்கு இதனை தீர்க்கவேண்டும் என்று வேண்டினால் உடனே தீரும்.

ஞானம் அடைந்தவர்களின் ஆசி இருந்தால் அனைத்தையும் நாம் சாதித்துவிடலாம். ஆசி இருப்பதற்க்கு நாமும் ஒழுக்கமானவராக இருக்கவேண்டும். ஒழுக்கமானவராக என்றால் சத்தியத்தை பேசுபவர்களாக இருந்தால் இது எளிதில் உங்களுக்கு கிடைக்கும்.

உங்களுக்கு ஒய்வு இருக்கும் நேரத்தில் ஞானியின் புத்தகங்களை எடுத்து படித்துக்கொண்டு அவர்கள் சொல்லும் வழியை நீங்கள் பயிற்சி செய்துக்கொண்டே இருந்தாலே பல விசயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, November 6, 2017

சக்தி


வணக்கம்!
         அம்மன் பூஜை மழை தூறல் இருப்பதால் தாமதம் ஆகின்றது. மழைவிட்டவுடன் உடனே பூஜை செய்துவிடலாம் என்று இருக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன்பு என்னை சந்தித்த நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள் அந்த நேரத்தில் ஒரு வெற்றியை பெறவேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர்களின் வெற்றிக்கு இதனை எல்லாம் செய்யவேண்டும் என்று அந்த சமயத்தில் சொல்லிருந்தேன். 

என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை அதனை அவர்கள் செய்யவில்லை. அவர்கள் வாழ்வில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டு வந்துவிட்டார்களா என்று தற்பொழுது பார்த்தால் அன்று இருந்த நிலையை விட தற்பொழுது கீழே சென்றுவிட்டனர். 

நம்மிடம் அதனை செய்யவில்லை என்பதற்க்காக அவர்கள் கீழே செல்லவில்லை. அவர்கள் தேடிக்கொண்டே இருந்த காரணத்தால் அவர்கள் முன்னேற்றம் காணவில்லை என்று தான் நினைக்கிறேன். பின்தங்கியே நிலையிலேயே இருந்துக்கொண்டு இருக்கின்றனர்.

அவர்களிடம் நான் கேட்ட தொகை அவர்களுக்கு அந்த நேரத்தில் மிக மிக குறைந்த விலை அதனை கொடுப்பதற்க்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை. தற்பொழுது வரை அவர்களின் போராட்டம் தாெடர்ந்துக்கொண்டு இருக்கின்றது.

ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்வதற்க்கு கண்டிப்பாக சக்தி தேவை. அந்த சக்தியை ஒரு ஆன்மீகவாதியிடம் இருந்து நீங்கள் பெற்று தான் ஆகவேண்டும். அது எந்த ஆன்மீகவாதியகவும் இருக்கலாம் ஆனால் அதனை பெற்று விரைவில் முன்னேற்றப்பாதைக்கு செல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சுக்கிரன்


ணக்கம்!
         சுக்கிரன் மட்டும் தான் சுகபோகவாழ்வை தரமுடியுமா மற்ற கிரகங்களால் கொடுக்கமுடியாத என்று ஒரு கேள்வி அனைவரின் மனதிலும் வரக்கூடிய ஒன்று தான். ஒவ்வொருவரும் அவர்களின் கர்மவினைப்படி மற்றும் இந்த பிறவியில் செய்யக்கூடிய பூஜை பலன்கள் படியும் அவர்களுக்கு சுகபோகவாழ்வு கிடைக்கும்.

சுகபோகம் என்றால் சுக்கிரன் மட்டும் தான் கொடுக்கும் என்பதை விட்டு விட்டு அவர்களின் ஜாதகத்தில் யார் கொடுப்பார்கள் என்பதை பார்த்து தெரிந்துக்கொள்ளவேண்டும். சுகபோகத்திற்க்கு காரகம் என்ற முறையில் சுக்கிரனை பார்ப்பார்கள்.

சுகபோகத்திற்க்கு உள்ள கிரகம் நல்ல பலனை கொடுத்தால் அது நன்றாக இருக்குமே என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சுகபோகத்திற்க்குரிய சுக்கிரன் நன்றாக இருக்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

சுக்கிரன் பலனை கொடுப்பதற்க்கு அவர்களின் ஜாதகத்தில் தசாவும் ஒத்துழைக்க வேண்டும். தசா ஒத்துழைத்தால் மட்டுமே அவர்களுக்கு சுக்கிரன் முழுமையான பலனை கொடுக்கும். நடக்கும் தசாவுக்கும் சுக்கிரனுக்கும் ஒத்துழைக்கவில்லை என்றால் அந்த நேரத்தில் சுக்கிரனால் கொடுக்கமுடியாது.

தசாநாதன் வழிகொடுத்தால் சுக்கிரனால் நல்ல பலனை அவ்வப்பொழுது கொடுத்து கொண்டே இருக்கும். சம்பந்தப்பட்ட ஜாதகரும் பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டு இருப்பார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, November 5, 2017

சுக்கிரன் தரும் ஆன்மீகம்


வணக்கம்!
         சுக்கிரன் கிரகம் என்றவுடன் நாம் சுகபோக ஆசை மட்டும் தான் நமக்கு கொடுப்பார் என்ற எண்ணம் இருக்கும். சுகபோக ஆசையோடு ஆன்மீக வாழ்வையும் அற்புதமாக நமக்கு கொடுப்பார்.

சுக்கிரனின் வழியில் ஆன்மீகம் செய்பவர்கள் அனைவரும் சுகபோக வாழ்வை சந்தித்துவிட்டு அதன் பிறகு ஆன்மீகத்தில் ஈடுபடுபவராக இருப்பார்கள். 

உண்மையில் ஒரு ஆன்மீகவாதி சுகபோகவாழ்வை வாழ்ந்தபிறகு ஆன்மீகம் செய்தால் மிகச்சரியான ஒரு வழியில் அவர் செல்வார். எந்த விதத்திலும் அவர்க்கு அடுத்த விசயத்தில் ஈர்ப்பு வந்துவிடாது. அவரின் நிலையை எளிதில் அடைந்துவிடுவார்.

மற்ற கிரகங்கள் கொடுக்கும் ஆன்மீகம் அந்தளவுக்கு நன்றாக இருக்காது என்றே சொல்லலாம். ஒரு சிலர் வறுமையில் இருந்து வரும்பொழுது அவர்களுக்கு மற்ற விசயத்தில் ஈர்ப்பு வந்துவிடும். 

எல்லாவற்றிலும் சலிப்பு ஏற்பட்டு அதன்பிறகு ஆன்மீகத்தை கொடுப்பதில் சுக்கிரனுக்கு நிகர் மற்ற கிரகங்கள் இல்லை என்றே சொல்லலாம். மற்ற கிரகங்களை விட ஆன்மீகத்திற்க்கு சுக்கிரன் கிரகம் மிக உகந்தது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, November 4, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரனைப்பற்றி எழுத ஆரம்பித்தவுடன் பல நண்பர்கள் தங்களைப்பற்றி நிறைய சொல்லிருக்கிறார்கள். மனம் திறந்து இப்படிப்பட்ட பிரச்சினை எனக்கு இருக்கின்றது என்று அவர் அவர்களின் ஜாதகத்தை அனுப்பி சொல்லிருந்தனர். 

உடல்நிலையப்பற்றி பலர் கேட்டனர். வெளிநாடுகளில் இருந்து கூட பலர் உடல்நிலையைப்பற்றி கேட்டனர். வெளிநாடுகளில் நல்ல சத்தான உணவுகள் இருக்கின்றன என்று அனைவரும் சொன்னார்கள். அப்படி இருந்தும் உடல்நிலை பிரச்சினைப்பற்றி சொல்லுகின்றனர்.

என்னுடைய உடல்நிலைக்கு பல நண்பர்களிடம் கேட்டு தான் தெரிந்துக்கொண்டேன். அது போல தான் இதுவும். முடிந்தவரை சாப்பாட்டு முறையில் இதனை சரி செய்ய பாருங்கள். சக்தி மிகுந்த உணவுகளை சாப்பிட பாருங்கள்.

பலர் நல்ல வழிகளை சொல்லுகின்றனர். அவர்களை போல உள்ளவர்களிடம் பழக்க வழக்கத்தை உருவாக்கி அதனை பின்பற்றினாலே போதும். கண்டிப்பாக ஆராேக்கியமான வாழ்க்கை வாழலாம்.

சுக்கிரன் நன்றாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் இருக்கும். சுக்கிரன் சரியில்லை என்றால் உடல் ஆரோக்கியத்திற்க்கு உணவுகளை எடுத்து சரிசெய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு