வணக்கம்!
சுக்கிரன் என்றாலே அது வித்தையும் குறிக்கும் ஒரு கிரகம். வித்தை என்றால் அது ஆன்மீக வித்தை. ஆன்மீகவித்தையை செய்பவர்கள் அனைவரும் சுக்கிரனின் காரத்துவத்தில் வருபவர்களாக தான் இருப்பார்கள்.
முதலில் ஆன்மீகவித்தையை ஒருவர் செய்யவேண்டும் என்றால் அம்மனின் அருள் கண்டிப்பாக வேண்டும். அம்மனின் அருள் இல்லை என்றால் ஆன்மீகவித்தையை ஒருவர் செய்துவிடமுடியாது. அம்மன் சுக்கிரனின் காரத்துவத்தில் தான் வரும்.
ராகுவோடு சேரும் சுக்கிரன் நிறைய ஆன்மீகவித்தையை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கொடுக்கும். ராகு என்றாலே கொஞ்சம் வில்லங்களை கொண்டது தானே. சும்மா இருக்காமல் எதையாவது செய்துக்கொண்டே இருப்பார்கள்.
தேவர்கள் என்றால் அவர் வேலை உண்டு என்று இருப்பார்கள். அசூரர்கள் என்றால் சும்மா இருப்பார்களா பிறரை வேண்டும் என்றே வம்புக்கு இழுப்பார்கள் அல்லவா. ராகுவோடு சேரும் சுக்கிரன் இப்படிப்பட்ட வேலைகளை அதிகமாக செய்வார்கள்.
ஆன்மீகவித்தை நல்லவழியாக இருந்தால் அது ஓடிக்கொண்டு இருக்கும். தீயவழியை நோக்கி சென்றால் கதை முடிவடைந்துவிடும். கொஞ்சநாளில் அது முடிவடையும். எங்கையாவது சென்று மாட்டிக்கொண்டு விடுவார்கள்.
சுக்கிரனின் காரத்துவத்தில் வருகின்ற வித்தை நல்லவழியிலும் செல்லும். ராகுவோடு மட்டும் சுக்கிரன் சேர்ந்தால் மட்டுமே அது தீயவழிக்கு செல்லும். சுக்கிரன் தனித்து நின்றால் நல்லவழிக்கே ஆன்மீகவித்தையை செய்வார்கள்.
மழை குறைந்துவிட்டது. அம்மன் பூஜை விரைவில் நடத்தப்படும். காணிக்கை செலுத்துபவர்கள் உடனே செலுத்திவிடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Sukran + Kethu Sernthal enna palan Sir...
Post a Comment