Followers

Friday, January 31, 2020

கட்டண பதிவு இனிய தாெடக்கம்.


வணக்கம்!
          நம்முடைய கட்டண பதிவு இன்று முதல் செயல்பட துவங்கியது. கட்டண பதிவில் கட்டணத்தை செலுத்தியவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் இணைப்பை வழங்கி இருக்கிறேன். அனைவரும் அதனை பெற்று படிக்க ஆரம்பியுங்கள். ஒவ்வொருவரையும் இன்று நான் தொடர்புக்கொள்கிறேன் எப்படி அதனை திறந்து படிக்கவேண்டும் என்பதை தொடர்புக்கொண்டு சொல்கிறேன். புதியதாக இணைய விரும்பும் நபர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

கட்டணபதிவில் இருந்து வரும் கட்டணம் என்னுடைய செலவிற்க்கு போக மீதியை அம்மன் கோவில் கட்டும் பணிக்கு ஒதுக்க இருக்கிறேன் அதனால் அனைவரும் இதில் இணைந்துக்கொள்ளுங்கள். நாம் கொடுக்ககூடிய பதிவு கண்டிப்பாக உங்களுக்கு பயன்படும் விதத்தில் இருக்கும் நம்பிக்கையோடு கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

தைபூசத்திற்க்கு என்று அன்னதானம் செய்ய சொல்லிருந்தேன் அனைவரும் அதற்கான ஏற்பாட்டை செய்து இருக்கின்றீர்களா முடிந்தவரை நல்ல முயற்சி எடுத்து அதனை செய்யுங்கள். ஏதோ ஒரு நபர்க்காவது அதனை செய்யவேண்டும் என்று நினையுங்கள்.

முருகனின் தைபூசத்திற்க்கு என்று நீங்கள் அன்னதானம் செய்யும்பொழுது உங்களின் குடும்பம் தழைத்து செம்மையாக வளரும். வாரிசுகள் உங்களுக்கு உருவாகி உங்களின் வாழ்க்கையை சிறக்க வைக்க உதவும் தை பூசம் என்பதால் இதனை செய்யலாம். உங்களுக்கு முடிந்தால் பழனி சென்று தரிசனம் செய்துவிட்டு வரலாம் அப்படி இல்லை என்றால் உங்களுக்கு அருகில் இருக்கும் முருகன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 30, 2020

ஆன்மசக்தியை அதிகரிப்பது எப்படி?


வணக்கம்!
          ஒரு நல்ல ஆன்மீகவாதியாக இருக்கும் நபர் எப்பொழுதும் எதையாவது நினைத்து கொண்டு சிந்தித்துக்கொண்டே இருக்கமாட்டார். சரியான நேரத்தில் சரியான படி சிந்திப்பார் மற்றபடி அமைதியாக இருந்துவிடுவார். இது தான் சக்தியை மேம்படுத்தி தன்வசம் வைத்துக்கொள்வது என்பது ஆகும். 

நீங்கள் அனைவரும் நல்ல ஆன்மீகவாதியாக இருப்பதற்க்கு முதல் முயற்சி எப்படி இருக்க வேண்டும் என்றால் நீங்கள் எந்த நேரமும் எதையாவது சிந்திக்க வேண்டாம். அதே போல சிந்திக்காமல் செல்போனை பார்த்துக்கொண்டே இருப்பதும் தவறான ஒன்றாகவே இருக்கும். 

மனதின் தெம்பு குறைய ஆரம்பித்துவிடும். நாம் பார்த்த நமது தளத்தில் இருந்து வந்த ஆன்மீகவாதிகள் அனைவரும் கொஞ்ச நேரம் கிடைத்தால் செல்போனை எடுத்துக்கொண்டு யாரிடமாவது பேசிக்கொண்டு இருப்பதை செய்துக்கொண்டு இருக்கின்றனர்.

பிறரிடம் பேசுவது தவறு இல்லை ஏதோ ஒரு நேரத்தில் பேசுங்கள் மற்ற நேரத்தில் அமைதியாக உங்களின் சக்தியை அதிகரிக்க வேண்டிய வேலையை செய்ய வேண்டும். ஒரு நாள் என்பதில் போன் பேசுவதற்க்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டும் மற்றபடி சிந்தனை இல்லாமல் இருந்தால் நல்லது. உங்களுக்கு ஒரு வேலை வரும்பொழுது அந்த நேரத்தில் அதனை ஈடுபட்டால் விரைவில் அது நடைபெறுவதற்க்கு மேலே சொன்னதை கடைபிடிக்கவேண்டும்.

ஆன்மசக்தி நன்றாக இருக்கவேண்டும் என்றால் நம்முடைய சிந்தனையை மிகச்சரியாக பயன்படுத்தவேண்டும். இந்த யுக்தியை நீங்கள் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டால் எந்த கோவிலுக்கும் செல்லாமல் உங்களின் சக்தி அதிகரிப்பதை நீங்களே கண்டுக்கொள்ளமுடியும். குறிப்பிட்ட காலத்திலேயே அது உங்களுக்கு கை கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 28, 2020

முன்கூட்டியே அறிவது எப்படி?


வணக்கம்!
          நமக்கு வரக்கூடிய நல்லது கெட்டதை முன்கூட்டியே அறிவதற்க்கு சோதிடம் பயன்பட்டாலும் அதனை விட ஆன்மீகத்தின் வழியாக நமக்கு தெரிவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றதா என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டு அனுப்பிருந்தார். கண்டிப்பாக ஆன்மீகத்தின் வழியாக இதற்கு வழி இருக்கின்றது.

ஒரு நபர் தினமும் குறைந்தது ஐந்து நிமிடம் ஒதுக்கி பூஜையறையில் சாமி கும்பிட்டாலே போதும் அவர்களுக்கு நடைபெறும் அனைத்து நல்லது மற்றும் கெட்டதை தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது. இதன் கூட கொஞ்சம் அமைதியான குணம் தேவை. இயற்கையாகவே அனைத்தும் நமக்கு சொல்லிக்கொண்டு தான் இருக்கும்.

ஒரு காரியத்திற்க்கு நீங்கள் செல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம் நீங்கள் கிளம்பும்பொழுது உங்களின் வீட்டில்  ஏதோ ஒன்று உங்களிடம் காட்டும். பல்லி இருந்தால் அதன் நிமித்தம் அடிக்கும். தினமும் அதனை கவனிக்கும்பொழுது எது நல்ல நிமித்தம் எது கெட்ட நிமித்தம் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். நீங்கள் செல்லும்பொழுது எதிரே வரும் நபரை வைத்தும் நீங்கள் கண்டுக்கொள்ளலாம்.

பரப்பரப்பான வாழ்க்கையில் இது எல்லாம் சாத்தியமா என்று கேட்டால் கண்டிப்பாக இது எல்லாம் சாத்தியமே. அதனை விட உங்களின் மனது அதற்கு சரியாக ஒத்துழைக்கின்றதா என்பதை வைத்தும் நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். நன்றாக நீங்கள் பிரபஞ்சத்தோடு ஒன்றிணையும்பொழுது உங்களுக்குள் அனைத்தையும் முன்கூட்டியே சொல்லிவிடும்.

நம்முடைய மனம் பெரிய அளவில் சஞ்சலத்திலேயே இருப்பதால் எதனையும் நமக்கு தெரியாமல் போய்விடுகின்றது. மிக கடுமையான பிரச்சினை வரும்பொழுது கூட நமக்கு தெரிகின்றது அதனை விட மரண வருவதையும் ஒரு சில நிகழ்வுகளை வைத்தே நாம் தெரிந்துக்கொள்ளமுடியும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 27, 2020

ஆன்மீகம்


வணக்கம்!
         சராசரி மனிதனை விட ஒரு ஆன்மீகவாதிக்கு பிரச்சினையும் அதிகமாக வரும் அதே நேரத்தில் அதனை சமாளிக்கும் திறமையும் அதிகமாகவே வரும். ஆன்மீகத்தில் நான் இருக்கிறேன் எனக்கு பிரச்சினை என்பது வரவே வராது என்ற நிலைபாட்டில் இருக்கமுடியாது. சராசரி மனிதனை விட அதிகமாகவே பிரச்சினை சந்திக்க நேரிடும்.

ஆன்மீகத்தில் இருப்பதற்க்கு நான் சும்மாகவே இருந்துவிடலாமே என்று கேட்கலாம். ஆன்மீகத்தில் நிறைய பிரச்சினை என்பது வந்தாலும் சாதிக்ககூடிய நிறைய ஆற்றலை கொடுத்துவிடும். நிறைய சாதிக்கமுடியும். சாதரணமானவர்கள் ஒரு காரியத்தை சாதித்தால் ஆன்மீகவாதிகள் பத்து காரியத்தை சாதித்துவிடுவார்கள். ஆன்மீகத்தில் இருப்பவர்களை நோக்கியே நிறைய காரியங்கள் தேடிவரும்.

ஆன்மீகத்தில் இருப்பவர்களின் ஜாதகத்தை பார்த்தால் படுமோசமாகவே இருக்கும். நிறைய தோஷங்கள் மற்றும் அனைத்து கிரகங்களும் பலம் இழந்து காணப்படும். உங்களின் ஜாதகத்திலும் இப்படி இருக்கும் என்பதை பார்த்தால் தெரிந்துக்கொள்ளமுடியும் அப்புறம் எப்படி சாதிக்கின்றார்கள் என்று கேட்கலாம். இவர்களே அதனை தேடி தேடி கற்றுக்கொண்டு அதில் ஜெயித்துவிடுவார்கள்.

ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு கிரகமும் பெரியதாக ஒத்துழைப்பதில்லை இருந்தாலும் சாதிப்பார்கள். இதனை உங்களிடம் சொல்லுவதற்கும் காரணம் நீங்கள் அனைவரும் எட்டமுடியாத தூரத்தில் இருந்தாலும் அதனை எட்டி சாதனைப்படைப்பவர்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

நமது அம்மன் கோவில் வேலை மீண்டும் ஆரம்பிக்க இருப்பதால் அனைத்து நண்பர்களும் அதற்காக செயல்பட்டு உதவுங்கள் விரைவில் அம்மன் கோவில் கட்டும் பணியை ஆரம்பிப்போம். கட்டண சோதிட பதிவு அமாவாசை அன்று ஆரம்பிப்பதாக சொல்லிருந்தேன். ஒரு சில காரணங்களால் அது தள்ளி சென்றுள்ளது. ஒரு சில நாட்களில் அதனை தந்துவிடுகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, January 26, 2020

அம்மன் பூஜை


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள். 
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள். 
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள். 

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள். 

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள். 
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள். 
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.  

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள். 
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள். 
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள். 
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள். 
மதுரையை சேர்ந்த திரு முருகன் அவர்கள்.  

வழக்கம்போல்                             திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். 

அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம். 

அன்புடன்    
ராஜேஷ்சுப்பு

Thursday, January 23, 2020

தை அமாவாசை


வணக்கம்!
          நாளை தை அமாவாசை இதனை ஆன்மீகத்தின் தொடக்கம் என்று எடுத்துக்கொண்டு புதியதாக ஆன்ம சாதனை செய்பவர்கள் செய்யலாம். அமாவாசை அன்று நமது முன்னோர்களுக்கு நீங்கள் விரதம் இருந்து விரதத்தை மேற்க்கொள்ளலாம். விரதம் மட்டும் இருந்தாலே போதுமானது. அவர் அவர்களுக்கு சக்தி தகுந்தமாதிரி பூஜைகளை செய்தாலும் விரதம் மட்டும் அனைவரும் இருக்கலாம்.

நான் வெளியிடங்களில் அதுவும் ஏதாவது ஒரு பொது இடத்தில் நின்றுக்கொண்டு இருப்பேன் நான் யாரையும் எதிர்பார்த்த இல்லாத ஒரு நேரத்தில் யாராவது ஒரு நபர் வந்து என்னிடம் பேச்சு கொடுப்பார். நானும் அவருடன் பேசுவேன் அவர் சிறிது பேசியவுடன் அவர் வாருங்கள் ஒரு டீ குடிக்கலாம் என்று கூப்பிடுவார். நான் அவர்க்கு பரிச்சியம் இல்லாத ஆட்களாக இருந்தாலும் அவர் வழிய வந்து இதனை சொல்லுவார்.

பெரும்பாலான இடத்தில் நான் இதனை கண்டுணர்ந்தேன். முன்பின் தெரியாத ஆட்கள் கூட ஏதோ ஒரு நபர் நம்மை நாடி வந்து இப்படி கேட்பது ஒரு ஆச்சரியமாக இருக்கும். அதே நேரத்தில் அவர் எனக்கு இப்படிப்பட்ட பிரச்சினை இருக்கின்றது என்று அவரின் பிரச்சினையை கூறுவார். பல இடத்தில் இப்படி நடந்து இருக்கின்றது. என்னைப்பற்றி எதுவும் கேட்காமல் இதனை சொல்லுவார்கள். 

நான் எந்த ஒரு ஆன்மீக அடையாளங்களோடு இருப்பதில்லை இருந்தாலும் என்னை நோக்கி இப்படிப்பட்ட நபர்கள் வருவார்கள். எனக்குள் இருக்கும் ஆன்மீகம் இதனை ஈர்க்கின்றது என்பது தெரிந்தது. இதனை உங்களிடம் சொல்லுவதற்க்கு காரணம் நீங்கள் பிடித்து இருக்கும் அனைத்தையும் விட ஆன்மீகத்தை விடாமல் பிடித்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்கும் இது நடக்கும்.

புதியதாக ஆன்மீகத்தை ஆரம்பிக்கும் நிகழ்வாகவே நாளை அமாவாசை எடுத்துக்கொள்ளலாம். ஏதாே ஒரு ஆன்ம சாதனையை நீங்கள் ஆரம்பித்து ஆன்ம சக்தியோடு  வருவதற்க்கு நான் வாழ்த்துகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 21, 2020

அன்னதானம்


வணக்கம்!
          ஒரு மனிதனுக்கு செய்யும் நேரிடையான உதவி வேலை செய்கின்றதோ இல்லையோ அவனுக்கு செய்யும் மறைமுக உதவி நன்றாகவே வேலை செய்துவிடும். எப்பேர்பட்ட தீங்கானவனாக இருந்தாலும் அவனின் உடல் உங்களை ஆசீர்வதிக்கும். இதனை நன்கு அறிந்து நமது முன்னோர்கள் அன்னதானம் என்ற ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

நீங்கள் அன்னதானம் செய்தால் உங்களுக்கு எதிரியாக இருந்தாலும் அவனின் உடல் சந்தோஷப்பட்டு அவனை அறியாமலேயே உங்களை வாழ்த்திவிடுகின்றது. உலகத்தில் இருக்கின்ற தானத்தை விட அன்னதானம் சிறந்த ஒன்று என்று சொல்லிருக்கின்றனர். அன்னதானம் அடிக்கடி செய்வது உங்களுக்கு ஏற்படும் எப்பேர்பட்ட தோஷமும் உங்களுக்கு ஏற்படும் தடைகளை உடைத்து உங்களை வாழவைக்கின்றது.

நான் பெரும்பாலும் அன்னதானம் சாப்பிடுவதில்லை நமது வாடிக்கையாளர்கள் உணவங்களில் வாங்கிகொடுக்கும் சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன் மற்றபடி எந்த வித அன்னதானத்திலும் அவ்வளவு எளிதில் சாப்பிடுவது கிடையாது. தவிர்க்கமுடியாத பட்சத்தில் அன்னதானம் சாப்பிடுவது உண்டு. நீங்களும் முடிந்தால் இதனை கடைபிடித்து வரலாம்.

நீங்கள் அவ்வப்பொழுது பிறர்க்கு அன்னதானம் செய்துக்கொண்டே வாருங்கள். இது உங்களை உயர்த்தும். நீங்கள் கஷ்டபட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள் என்னால் அன்னதானம் எல்லாம் செய்யமுடியாது என்று நீங்கள் நினைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து கோவிலில் நடக்கும் அன்னதானத்திற்க்கு பணத்தை கட்டிவிடுங்கள் குறைந்தது ஆறு மாதத்திற்க்கு ஒரு முறையாவது இதனை செய்யவேண்டும். 

வருகின்ற தை பூசத்திற்க்கு உங்களுக்கு அருகாமையில் உள்ள கோவில்களில் நீங்கள் ஒரு அன்னதானம் நடப்பதற்க்கு ஏற்பாடு செய்துக்கொள்ளுங்கள். குறைந்தளவு எண்ணிக்கையில் இருந்தாலும் பரவாயில்லை உங்களால் முடிந்ததை அன்னதானத்திற்க்கு என்று கொடுத்து உதவி செய்யுங்கள். அன்னதானத்திற்க்கு பெயர் பெற்றது தை பூச அன்னதானம் என்பதால் இதனை அனைவரும் செய்யுங்கள்.

நான் அவ்வப்பொழுது பல முருகனின் கோவில் மற்றும் என்னால் முடிந்தவர்களுக்கு அன்னதானத்தை செய்துக்கொண்டு இருக்கிறேன். என்னுடையது என்பதற்க்காக அதனை வெளியில் அந்த நேரத்தில் சொல்லுவதில்லை. நீங்களும் இதனை செய்யவேண்டும் என்பதற்க்காக இந்த நேரத்தில் இதனை சொல்லிருக்கிறேன். அனைவரும் தைபூசம் அன்னதானம் செய்யவேண்டும் என்பதை கண்டிப்பாக சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு