வணக்கம்!
நாளை தை அமாவாசை இதனை ஆன்மீகத்தின் தொடக்கம் என்று எடுத்துக்கொண்டு புதியதாக ஆன்ம சாதனை செய்பவர்கள் செய்யலாம். அமாவாசை அன்று நமது முன்னோர்களுக்கு நீங்கள் விரதம் இருந்து விரதத்தை மேற்க்கொள்ளலாம். விரதம் மட்டும் இருந்தாலே போதுமானது. அவர் அவர்களுக்கு சக்தி தகுந்தமாதிரி பூஜைகளை செய்தாலும் விரதம் மட்டும் அனைவரும் இருக்கலாம்.
நான் வெளியிடங்களில் அதுவும் ஏதாவது ஒரு பொது இடத்தில் நின்றுக்கொண்டு இருப்பேன் நான் யாரையும் எதிர்பார்த்த இல்லாத ஒரு நேரத்தில் யாராவது ஒரு நபர் வந்து என்னிடம் பேச்சு கொடுப்பார். நானும் அவருடன் பேசுவேன் அவர் சிறிது பேசியவுடன் அவர் வாருங்கள் ஒரு டீ குடிக்கலாம் என்று கூப்பிடுவார். நான் அவர்க்கு பரிச்சியம் இல்லாத ஆட்களாக இருந்தாலும் அவர் வழிய வந்து இதனை சொல்லுவார்.
பெரும்பாலான இடத்தில் நான் இதனை கண்டுணர்ந்தேன். முன்பின் தெரியாத ஆட்கள் கூட ஏதோ ஒரு நபர் நம்மை நாடி வந்து இப்படி கேட்பது ஒரு ஆச்சரியமாக இருக்கும். அதே நேரத்தில் அவர் எனக்கு இப்படிப்பட்ட பிரச்சினை இருக்கின்றது என்று அவரின் பிரச்சினையை கூறுவார். பல இடத்தில் இப்படி நடந்து இருக்கின்றது. என்னைப்பற்றி எதுவும் கேட்காமல் இதனை சொல்லுவார்கள்.
நான் எந்த ஒரு ஆன்மீக அடையாளங்களோடு இருப்பதில்லை இருந்தாலும் என்னை நோக்கி இப்படிப்பட்ட நபர்கள் வருவார்கள். எனக்குள் இருக்கும் ஆன்மீகம் இதனை ஈர்க்கின்றது என்பது தெரிந்தது. இதனை உங்களிடம் சொல்லுவதற்க்கு காரணம் நீங்கள் பிடித்து இருக்கும் அனைத்தையும் விட ஆன்மீகத்தை விடாமல் பிடித்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்கும் இது நடக்கும்.
புதியதாக ஆன்மீகத்தை ஆரம்பிக்கும் நிகழ்வாகவே நாளை அமாவாசை எடுத்துக்கொள்ளலாம். ஏதாே ஒரு ஆன்ம சாதனையை நீங்கள் ஆரம்பித்து ஆன்ம சக்தியோடு வருவதற்க்கு நான் வாழ்த்துகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment