Followers

Sunday, March 1, 2020

அம்மன் பூஜை


வணக்கம்!
                       இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள். 
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள். 
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள். 

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள். 

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள். 
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள். 
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள். 

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள். 
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள். 
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள். 

விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள். 
மதுரையை சேர்ந்த திரு முருகன் அவர்கள். 
வழக்கம்போல்                           
திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். 

அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 28, 2020

ஆரா


வணக்கம்!
         நமது வீடியோ பதிவில் ஆராவைப்பற்றி சொல்லிருக்கிறேன். பல நண்பர்கள் இதனைப்பற்றி கேள்வி கேட்டனர். நான் ஆராவை பார்க்கவேண்டும் அதற்கு வழி சொல்லுங்கள் என்றனர். ஒரு சிலர் ஆராவைப்பற்றி நிறைய பதிவை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் என்றும் சொல்லிருந்தனர். எளிமையான ஒரு விசயத்தை வீடியோவிலேயே நான் சொல்லிருக்கிறேன் அதனை வைத்து நீங்களே பார்த்துக்கொள்ளலாம்.

ஒரு ஆன்மீககுருவிடம் நாம் ஆன்மீகம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று அவரை நாடி நாம் சென்றால் அந்த காலத்தில் உள்ள குரு எல்லாம் அவ்வளவு எளிதில் உங்களுக்கு எதுவும் கொடுத்துவிடமாட்டார்கள். உங்களை நன்றாக பரிசாேதனை செய்துக்கொண்டே இருப்பார். உங்களுக்கு தெரியாமல் உங்களை சோதனை செய்துவிட்டு உங்களுக்கு உகந்த காலம் என்பது எது என்பதற்க்காக காத்துக்கொண்டு இருப்பார். எப்படி அவர் சோதனை செய்வார் என்றால் அவர் உங்களின் ஆரா எப்படி இருக்கின்றது என்பதை தான் பார்ப்பார்.

உங்களின் ஆரா உங்களை காட்டிக்கொடுத்துவிடும். நீங்கள் எப்படிபபட்ட ஆள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்பதை காட்டிக்கொடுத்துவிடும். நீங்கள் என்ன தான் பொய் சொன்னாலும் இவர் பொய் சொல்லுகின்றார் என்பதை ஆராவை வைத்தே நாம் தெரிந்துக்கொள்ளமுடியும். நீங்கள் அணுகி குரு உங்களின் ஆரா நன்றாக வளர்ந்து வரும் காலக்கட்டம் வரை உங்களுக்காக காத்துக்கொண்டு இருப்பார்.

உங்களின் ஆரா நல்ல வளர்ச்சியை நோக்கி சென்றால் மட்டுமே அவர் உங்களுக்கு தன்னுடைய கல்வியை கொடுப்பார் அதுவரை அவர் பொறுமையாக காத்துக்கொண்டு இருப்பார். ஆரா நல்ல வளர்ச்சியை நோக்கி செல்லும்பொழுது மட்டுமே உங்களால் ஆன்மீகத்தை கற்றுக்கொள்ளும் நிலை வரும் என்பது அவர்க்கு தெரியும்.

இன்றைய காலத்தில் ஆறுமாதம் கோவில் குளங்களை சுற்றிவிட்டு அடுத்த ஆறு மாதத்தில் நான் சாமியார் என்று சொல்லிக்கொள்ள தான் மனம் நினைக்கின்றது. இந்த காரணத்தால் மட்டுமே ஒருவரால் நல்ல ஆன்மீகவாதியாக ஆவதற்க்கு முடிவதில்லை. மனம் சொல்லுவதை நீங்கள் கேட்டுவிட்டு அதன்படி நடிக்க ஆரம்பித்துவிடுகின்றீர்கள்.

ஒரு குழந்தை பிறக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அதனை ஆரா பார்க்கும் ஒருவர் வந்து பார்த்தால் அந்த குழந்தை இறக்கும் நிலையில் இருந்தால் ஆரா பார்க்கும் நபர் உடனே சொல்லுவார் குழந்தை இறந்துவிடும் என்பார். ஒருவர் இறப்பதை ஆரா பார்க்கும் ஒருவரால் மிக துல்லியமாக சொல்லிவிடமுடியும் அதே நேரத்தில் மருத்துவரால் இதனை சொல்லமுடியாது. 

எல்லோருடைய மனதிலும் நான் பெரிய சாமியார் என்ற ஆணவம் இருந்தால் அப்புறம் அடுத்தவன் சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். முதலில் உங்களை வளர்க்கும் விதத்தை ஆரம்பியுங்கள் அதன்பிறகு ஒரு குருவை நாடி செல்லுங்கள். அவர் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும் என்பதில்லை நீங்கள் நல்ல நிலையில் இருந்தால் அவரின் ஆராவே உங்களை வளப்படுத்திவிடும்.

ஜாதககதம்பத்தில் உள்ள நண்பர்களிடம் நான் அடிக்கடி சொல்லுவது நீங்கள் அடிக்கடி வந்து என்னை பாருங்கள் என்று சொல்லுவேன். எல்லாேரின் மனதிலும் என்ன ஓடுகின்றது என்றால் இவர்க்கு வேலை இல்லை ஏதாவது ஒன்றை சொல்லுவார் என்று இருந்துவிடுவார்கள். ஒரு சிலர் நீங்கள் வேண்டுமானால் எங்க ஊருக்கு வரும்பொழுது சொல்லுங்கள் நான் வந்து சந்திகிறேன் என்று சொல்லுவார்கள். என்னை வந்து சந்திக்கவேண்டும் என்பது அவசியம் கிடையாது ஆனால் உங்களின் ஆன்மீக பயணத்திற்க்கு என்னால் எதையாது செய்யமுடியும் என்றால் அது என்னை சந்திக்கும்பொழுது மட்டுமே அதிக வாய்ப்பு இருக்கும்.

என்னை விடுங்கள் உங்களின் ஆன்மீக குருவை அடிக்கடி சென்று நீங்கள் சந்தித்துக்கொண்டே இருங்கள். நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் அடிக்கடி அவரிடம் செல்லுங்கள். உங்களின் ஆரா வளர்ச்சிக்கு அவர் பெரிதும் உதவுவார். அவர் வெளியூர் இருந்துக்கொண்டு நீங்கள் உங்களின் ஊரில் இருந்துக்கொண்டு போனில் பேசிக்கொண்டு இருந்தால் அவரால் உங்களுக்கு உதவவே முடியாது. ஆரா நன்றாக இல்லை என்றால் ஆன்மீகம் என்பது இல்லை. 

ஆராவைப்பற்றி ஒரு வீடியாே பதிவு வர இருக்கின்றது அதனை தவறவிடாதீர்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 26, 2020

ஆலயமணி


வணக்கம்!
         நாம் வீடியோ பதிவுகளை தயார் செய்வதால் ஜாதககதம்பத்தை எழுதாமல் விட்டுருந்தேன். தற்பொழுது அதன் பணி விரைவில் நடைபெறுவதால் ஜாதககதம்பத்திலும் பதிவுகளை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் தீர்மானித்து இருக்கிறோம். 

உங்களின் ஒத்துழைப்பால் வீடியோ பதிவுகள் நல்ல முறையில் வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றது. அனைவரும் அதனை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். தற்பொழுது கோவிலில் உள்ள ஆலயமணி எதற்க்கு என்பதைப்பற்றி ஒரு வீடியோ வெளியிட்டேன் அதில் ஆலயமணி கோவிலில் தனித்தன்மையாக அதற்கு என்று கோபுரம் வைத்து கட்டும்பொழுது அது தன்னுடயை ஆற்றலை வழங்கும்.

ஆலயமணியின் அடியில் நிற்க்கும்பொழுது அது பாவத்தை போக்ககூடிய தன்மை உடையது. இந்த ஜென்மத்தில் நாம் செய்த எந்த ஒரு பாவமும் ஆலயமணியின் அடியில் நிற்க்கும்பொழுது போய்விடும். மின்னசாரமணியில் நாம் நின்றால் போகாது. ஆலயமணி மனிதர்கள் அடிப்போது போல இருக்கும்பட்சத்தில் மனிதனின் பாவங்கள் போய்விடுகின்றன.

இதனைப்பற்றி முழுமையான வீடியோ பதிவை பார்க்க


நமது அம்மன் பூஜை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளேன். பிரதி மாதம் 4 தேதிக்குள் நடத்தப்படும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் அதற்கு தகுந்தார் போல் தங்களை தயார் செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 21, 2020

மகாசிவராத்திரி


வணக்கம்!
         மகாசிவராத்திரி அன்று அம்மன் வழிபாட்டை மேற்க்கொள்வது நல்லது சிவ வழிபாட்டை செய்ய சொல்லாமல் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ள சொல்லுகிறேன் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் சிவன் வழிபாட்டையும் செய்வேன் அதே நேரத்தில் சிவராத்திரி அன்று அம்மன் வழிபாட்டை செய்யும்பொழுது மிகப்பெரிய நன்மை கிடைக்கும் என்பதால் இதனை செய்ய சொல்லுகிறேன்.

சிவராத்திரி அன்று அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் இருக்கும் அனைத்து ஊர்களிலும் திருவிழா நடைபெறும். சிவராத்திரி என்பது மற்ற அம்மனை விட அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பான ஒரு நாளாக இருப்பதால் தான் அன்று திருவிழா நடைபெறுகின்றது. இந்த நாளில் நீங்கள் அம்மனை வழிபடுங்கள்.

மாதம் மாதம் வருகின்ற சிவராத்திரி அன்று நீங்கள் வழிபட்டாலும் வழிபடலாம். மகாசிவராத்திரி அன்று நிறைய சக்தி அதாவது பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தி பூமிக்கு வருவதால் அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளமுடியும். தியானம் அல்லது வழிபாடு செய்து இந்த சக்தியை உங்களுக்குள் கொண்டு வரமுடியும்.

சிவ வழிபாட்டை மேற்க்கொள்ளும் நண்பர்கள் உங்களின் வீட்டிலேய வழிபாடு செய்துக்கொள்ளலாம் அதனோடு உங்களின் அருகில் இருக்கும் சிவலாயங்களிலும் வழிபாட்டை மேற்க்கொள்ளலாம். உங்களின் வீட்டில் நடராஜர் சிலையை வைத்து வழிபாட்டை மேற்க்கொள்ளலாம். நடராஜருக்கு அபிஷேகம் செய்து உங்களின் சிவராத்திரி பூஜையை மேற்க்கொள்ளலாம்.

மகா சிவராத்திரியை பற்றி ஒரு வீடியோ பதிவை தந்து இருக்கிறேன் அதனை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 19, 2020

வீடியோ பதிவுகள்


வணக்கம்!
          நமது வீடியோ பதிவுகளை பார்த்து இருப்பீர்கள் இதில் என்ன மாற்றங்களை கொண்டு வரலாம் என்பதைப்பற்றி எனக்கு தெரிவிக்கலாம். ஜாதககதம்பம் ஆரம்பித்த காலத்திலேயே முதல் குறைவாக தான் நமக்கு நட்பு வட்டம் கிடைத்தது. தினமும் பதிவுகளை தொடர்ச்சியாக தந்த காரணத்தால் நிறைய நட்பு வட்டம் கிடைத்தது. வீடியோ பதிவுகளில் தினமும் பதிவுகள் வந்துக்கொண்டே இருக்கும். ஒரே நாளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை தரவேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் அது எப்படி சாத்தியப்படுகின்றது என்பதை போக போக தான் தெரியும்.

தற்பொழுது வீட்டில் இருந்து இந்த வீடியோ பதிவுகளை தந்துக்கொண்டு இருக்கிறேன். இனி வரும் காலங்களில் வெளி இடங்களுக்கும் சென்று வீடியோ பதிவுகளை தரவேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். தற்பொழுது இருக்கும் குறைந்தபட்ட உபகரணங்களை கொண்டு வீடியோ தருகிறேன் விரைவில் மாற்றம் ஏற்பட்டு நிறைய உபகரணங்களை வாங்கி உங்களுக்கு தரமான வீடியோ பதிவுகள் தருகிறேன்.

வீடியோ பதிவுகளை தங்களின் நட்பு வட்டத்திலும் பகிருங்கள். நிறைய பேர்கள் வீடியோவை பார்க்கும்பொழுது எனக்கு ஒரு உத்வேகம் கிடைத்து நிறைய கருத்துகளை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளமுடியும். என்னால் முடிந்தளவுக்கு அனைத்து கருத்துகளும் புதுவிதமான கருத்துக்களை தருவதற்க்கு இருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது ஆதரவை மட்டும் தாருங்கள்.

நான் சொல்லுகின்ற கருத்துக்கு நிறைய கேள்விகளை என்னிடம் கேளுங்கள். கேள்வி கேட்கும்பொழுது மட்டுமே நிறைய ஞான கருத்துக்களை உங்களுக்கு என்னால் கொடுக்கமுடியும். ஞானம் என்பதை விட உங்களை உயர்த்திக்கொள்வதற்க்கும் இது வழி வகை செய்யும் என்பதால் கேள்வி கேளுங்கள்.

இன்றைய வீடியோ பதிவு லிங்க்


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 17, 2020

இனிய உதயம்


வணக்கம்!
          இன்று முதல் நமது யூடீப் சேனல் ஆரம்பிக்கப்படுகின்றது. நீங்கள் எல்லாம் எப்படி இந்த ஜாதககதம்பத்திற்க்கு ஆதரவு தந்தீர்களாே அது போல அந்த சேனலுக்கும் ஆதரவை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

முதலில் இந்த சேனலை ஆரம்பிக்க உதவிய நண்பர் திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்பொழுது மொபைலில் தான் வீடியோவை எடுக்கிறேன். உங்களின் ஆதரவு நீங்கள் தந்தால் பெரிய அளவில் நமது வீடியோ பதிவுகள் இருக்கும். படிபடிப்பயாக வீடியோவின் தரமும் உயர்த்தி பல நல்ல வீடியோகளாக உங்களுக்கு வரும் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

சேனலின் பெயர்  Rajeshsubbu

சேனலின் லிங்க்


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 16, 2020

கோவிலுக்கு செல்லும் பழக்கம்


வணக்கம்!
          ஒரு பிரச்சினையில் ஒருவர் சிக்குகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவரின் பிரச்சினை மிகப்பெரிய ஒன்றாக இருக்கும்பொழுது அதில் இருந்து ஒருவர் மீள்வது என்பது கடினமான ஒன்றாக இருக்கின்றது என்று வைத்துக்கொண்டால் அவர் செய்யவேண்டியது நிறைய சிவன் கோவிலுக்கு தொடர்ச்சியாக செல்லவேண்டும். இதனை செய்வதற்க்கு அவரிடம் நிறைய வைராக்கியம் வேண்டும்.

நான் பார்த்தவரையில் பிரச்சினையில் சிக்குபவர்கள் அவர்கள் வெளியில் செல்வதில்லை. அதாவது கோவிலுக்கு செல்வதற்க்கு எல்லாம் பிடிக்காமல் இருப்பார்கள். கோவிலுக்கு செல்வதற்க்கு பிடிக்காத மற்றும் விரும்பாத நபர்களால் தான் இருப்பார்கள். இதற்கு காரணம் அவர்கள் வளர்ந்த முறை அப்படிப்பட்ட ஒன்றாக இருப்பதால் தான் இதற்கு காரணமாக அமைக்கின்றது.

கோவிலுக்கு சென்றால் பிரச்சினை ஒய்ந்துவிடுமா அல்லது பிரச்சினை போய்விடுமா என்று கேட்கலாம். பிரச்சினை வரும் நேரத்தில் சென்றால் ஒய்ந்துவிடாது அந்த நேரத்தில் சென்றால் குறிப்பிட்ட காலத்தில் அந்த பிரச்சினையை தீர்க்கும் வழி தெரிந்துவிடும். நம்மிடமே ஒருவர் வருகின்றால் என்றால் அவர் அந்த நேரத்தில் பிரச்சினையில் இருந்தால் கோவிலுக்கு செல்லுங்கள் என்று தான் முதலில் சொல்லுவோம். கோவிலுக்கு சென்ற பிறகு அதன்பிறகு தான் நாங்கள் வேலை செய்ய ஆரம்பிப்போம்.

எல்லா வழியிலும் ஒருவர் மிக சரியாக இருக்கும்பொழுது தான் நாம் செய்யும் வேலைகள் எளிதில் அவருக்கு கிடைக்கும். பீடையை அதிகமாக வைத்திருக்கும் நபர்களுக்கு ஆன்மீகம் உடனே வேலை செய்வதில்லை. நீங்கள் உங்களின் குழந்தையை வளர்க்கும்பொழுதே நீங்கள் கோவிலுக்கு அழைத்துக்கொண்டு சென்று காட்டிக்கொடுங்கள். இப்படிப்பட்ட கோவிலுக்கு எல்லாம் நீங்கள் சென்றால் உங்களின் எந்த வித பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்று சொல்லிவிட்டால் அவர்களுக்கு பிற்காலத்தில் அது உதவும்.

பல குடும்பங்களில் நான் பார்த்த விசயத்தை தான் உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். பல குடும்பத்தில் கோவிலுக்கு செல்வது என்பது பிடிக்காத ஒரு வேலையாக இருக்கின்றது. அவர்களிடம் நாம் என்ன தான் சொன்னாலும் நடக்கபோவதில்லை. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு